Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சொத்து தகராறில் பெற்ற தாயையே சுட்டுக் கொன்ற பாசக்கார மகன் தலைமறைவு

Posted: 01 Feb 2016 10:18 PM PST

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெற்ற தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள ஷாஜஹான்பூர் மாவட்டம், அலிஜாய் பகுதியில் வசித்துவந்த சந்தோஷ்(50) என்ற பெண்ணை சொத்து பிரச்சனை காரணமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருக்கும் அவரது

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Posted: 01 Feb 2016 10:08 PM PST

சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்ப வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில்(ரெப்போ) எவ்வித மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது மும்பையில் இன்று நடைபெற்ற கடன் கொள்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் ஆளுநர் ரகுராம் ராஜன் இதனை தெரிவித்தார். வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 6.75 ஆக தொடரும் என்று அவர் கூறினார்.

நடன பள்ளி தொடங்குவதற்கு குறைந்த விலைக்கு அரசு நிலம் ஒதுக்கியதில் தவறு இல்லை: நடிகை ஹேமமாலினி பேட்டி

Posted: 01 Feb 2016 10:06 PM PST

நடிகையும் பா.ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினி மும்பையில் நடனபள்ளி தொடங்க திட்டமிட்டு உள்ளார். தேசிய கலாசார திட்டத்தின் கீழ் இதற்கு நிலம் ஒதுக்கீடு செய்து தருமாறு மராட்டிய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஓரினச் சேர்க்கை இந்தியாவுக்கு ஏற்புடையதா?: பரபரப்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை

Posted: 01 Feb 2016 09:35 PM PST

பருவ வயதை அடைந்தவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால், அது குற்றம் ஆகாது என்று கடந்த 2009-ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

திருவனந்தபுரத்தில் பொதுமக்கள் முன்பு கோவில் விழா மோதலில் வாலிபரை அடித்து கொன்ற கும்பல்

Posted: 01 Feb 2016 09:19 PM PST

திருவனந்தபுரம் அருகே சிறையின் கீழ் வைக்கம் பகுதியை சேர்ந்தவர் ஷபீர் (வயது 23). இவரும் அவரது நண்பர் உண்ணிகிருஷ்ணன் என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிள் மூலம் சிறையின்கீழ் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

கடந்த 30 நாட்களில் ராகுல்காந்தி 3–வது முறையாக இன்று ஆந்திரா வருகை

Posted: 01 Feb 2016 09:18 PM PST

ஆந்திர மாநிலத்தில் வறட்சியின் பிடியில் இருந்த அனந்தபுரம் மாவட்ட விவசாயிகள் நலனுக்காக காங்கிரஸ் ஆட்சியில் வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடந்த 2006–ம் ஆண்டு பிப்ரவரி 2–ந் தேதி இந்த திட்டத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பிரதமர் நரேந்திரமோடி இன்று கேரளா வருகை: ஆயுர்வேத மருத்துவ கல்லூரி விழாவில் பங்கேற்பு

Posted: 01 Feb 2016 09:07 PM PST

பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பகல் கேரளா வருகிறார். எர்ணாகுளம் அருகே உள்ள கரிப்பூர் விமானபடை விமான தளத்தில் அவரது விமானம் தரை இறங்குகிறது. விமான நிலையத்தில் நரேந்திரமோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இடஒதுக்கீடு போராட்டம்: வன்முறைக்கு நீங்களே காரணம் என சந்திரபாபு நாயுடுவுக்கு சிரஞ்சீவி கடிதம்

Posted: 01 Feb 2016 09:03 PM PST

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துனி பகுதியில் காபு சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நேற்று முன்தினம் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் வன்முறை

மதுபார் ஊழல் விவகாரம்: ரமேஷ் சென்னிதலா– சிவகுமார் மீது ரூ.2¼ கோடி லஞ்ச புகார்- பார் உரிமையாளர் சங்கத்தலைவர் பேட்டி

Posted: 01 Feb 2016 08:38 PM PST

கேரளாவில் முழு மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டமாக மாநிலம் முழுவதுமுள்ள 700–க்கும் மேற்பட்ட மதுபார்கள் மூடப்பட்டன. இதற்கு மதுபார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மூடப்பட்ட மதுபார்களை திறக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். என்றாலும் மதுபார்களை திறக்க கூடாது என்று கோர்ட்டு திட்டவட்டமாக அறிவித்து

பெண் சிசுக் கொலையை கண்டறிய பாலின சோதனை மிகவும் அவசியம்: மேனகா காந்தி கருத்து

Posted: 01 Feb 2016 08:32 PM PST

பெண் சிசுக் கொலையை கண்டறிய பாலின சோதனை மிகவும் அவசியம் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார். பிராந்திய பத்திரிகைகள் ஆசிரியர்கள் மாநாடு ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்: பலத்த பாதுகாப்புகளுக்கிடையே வாக்குப்பதிவு தொடங்கியது

Posted: 01 Feb 2016 07:47 PM PST

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தேர்தலைப் போல் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக ஆளும்

இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்கும் பாகிஸ்தானின் கனவு பலிக்காது: பரூக் அப்துல்லா திட்டவட்டம்

Posted: 01 Feb 2016 07:41 PM PST

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் அருகேயுள்ள சிரோஹி பகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்க பாகிஸ்தான் எவ்வளவுதான் முயன்றாலும் அந்த எண்ணம் ஈடேறாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அரசு துறைகளை போல தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு: ராம்விலாஸ் பஸ்வான் வலியுறுத்தல்

Posted: 01 Feb 2016 07:27 PM PST

மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சி தலைவரும் ஆன ராம்விலாஸ் பஸ்வான் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு தலித் மக்களின் நலனுக்கு கடமைப்பட்டிருக்கிறது. அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு

மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Posted: 01 Feb 2016 07:20 PM PST

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த 'இந்தியாவில் தயாரிப்போம்' (மேக் இன் இந்தியா) திட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இத்திட்டத்தை மேற்கொண்டு பிரபலப்படுத்தும் வகையில், 'மேக் இன் இந்தியா வாரம்' என்ற நிகழ்ச்சி மும்பை கிர்காவ் கடற்கரையில் வருகிற 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 6

சாலைகளில் குழிகளை நிரப்பி மகனுக்கு அஞ்சலி: நெகிழ வைக்கும் தள்ளுவண்டி வியாபாரி

Posted: 01 Feb 2016 06:41 PM PST

சாலைகளில் எங்கு குழிகளை பார்த்தாலும் ஒருவரின் கால்கள் தானாக நிற்கின்றன. ஓடிச்சென்று குழிகளை அவரது கைகள் நிரப்புகின்றன. அந்த வேலை முடிந்த பின் ரோட்டில் வேறு எங்கும் குழிகள் உள்ளதா? என இவரது கண்கள் தேடுகின்றன.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் 5-ந் தேதி இறுதி விசாரணை

Posted: 01 Feb 2016 06:25 PM PST

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்துள்ள பரிசுப் பொருள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி நீதிபதி சி.நாகப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் அவர் இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மத்தியபிரதேசத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஏஜெண்டு கைது

Posted: 01 Feb 2016 05:56 PM PST

மத்தியபிரதேச தலைநகர் போபாலில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஏஜெண்டு கைது செய்யப்பட்டார். அவர் பெயர் அசார் இக்பால் (வயது 24). அவர் தன் தாய்மாமாவும், வக்கீலுமான லைக் அகமதுவின் வீட்டில் தங்கி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மன்மோகன்சிங்கிடம் தெரிவித்தே முடிவுகளை எடுத்தேன்: ஆ.ராசா

Posted: 01 Feb 2016 05:44 PM PST

மன்மோகன்சிங் அரசில், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்தபோது, 122 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கியதில், அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 984 கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 17 பேர் மீது இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில், இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் தீவிரம்: கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Posted: 01 Feb 2016 05:26 PM PST

ஆந்திராவில் கணிசமாக வாழும் காபு இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துனி பகுதியில் நேற்று முன்தினம் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. காபு சமூக தலைவரும், முன்னாள் மந்திரியுமான முத்ரகடா பத்மநாபம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிராவில் கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவ-மாணவிகள் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Posted: 01 Feb 2016 05:13 PM PST

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஆபேதா இனாம்தார் என்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருந்தனர். 143 மாணவ, மாணவிகள் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™