Tamil News | Online Tamil News |
- டில்லியில் 2 சட்டசபை தேர்தல் ரூ.900 கோடிக்கு கட்சிகள் வசூல்
- மஹாராஷ்டிரா முதலிடம்ஐந்தாவது இடத்தில் தமிழகம்
- நானும் ஐ.எஸ்.ஐ., ஏஜன்ட் தான்! ஹெட்லி திடுக்கிடும் வாக்குமூலம்
- காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., நிபந்தனை: 25 சீட்; ஆட்சியில் பங்கு கிடையாது என பேரம்
- தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியா? : இன்று அறிவிக்கிறார் ஜெயலலிதா
- தேர்தல் நிதியை கட்டு; இல்லையேல் மூட்டைய கட்டு!: தி.மு.க., தலைமை கறார்
- நிலக்கரி இறக்குமதி செய்வதில் சிக்கல்: கோடையில் மின் தடை ஏற்படும் அபாயம்
- அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் தமிழக அரசு சமரசம்?'ஸ்டிரைக்' நெருக்கடியை தவிர்க்க பேச்சுக்கு அழைப்பு
- சியாச்சினில் மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பா நலம் பெற பிரார்த்தனை: டில்லி ராணுவ மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை
- சாமியார் மந்திரம்: பட்நாவிஸ் மனைவிக்கு நெக்லஸ் கொடுத்ததால் சர்ச்சை
| டில்லியில் 2 சட்டசபை தேர்தல் ரூ.900 கோடிக்கு கட்சிகள் வசூல் Posted: 09 Feb 2016 07:18 AM PST கடந்த, 2014 மற்றும் 2015ல் நடைபெற்ற, டில்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அங்கு போட்டியிட்ட முக்கிய கட்சிகள், 900 கோடி ரூபாய் அளவுக்கு, பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை வசூலித்துள்ளன. இதில், அதிகமாகவசூலித்தது, பா.ஜ., தான். அக்கட்சி, 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான நன்கொடை பெற்றுள்ளது.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம்ஆத்மியின் வசூல், இரண்டு ஆண்டுகளில், 275 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்த தகவல்களை, தேர்தல் கமிஷனிடம் இருந்து பெற்ற, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. - நமது டில்லி ... |
| மஹாராஷ்டிரா முதலிடம்ஐந்தாவது இடத்தில் தமிழகம் Posted: 09 Feb 2016 07:19 AM PST புதுடில்லி:இணையதளம் மூலம் அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்கு தயாராக உள்ள மாநிலங்களின் பட்டியலில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகம், குஜராத், தெலுங்கானா, தமிழகம் உள்ளன.இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சேவையளிப்போர் சங்கம் நடத்தியஆய்வில் இது தெரிய வந்துள்ளது.மின்னணு கட்டமைப்பு, இணையதள வசதி, பொதுமக்களின் ஆர்வம், அரசின் தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.பட்டியலில்முன்னணியில் மாநிலங்கள்1 - மஹாராஷ்டிரா2 - கர்நாடகா3 - குஜராத் 4 - தெலுங்கானா5 - தமிழகம்6 - ... |
| நானும் ஐ.எஸ்.ஐ., ஏஜன்ட் தான்! ஹெட்லி திடுக்கிடும் வாக்குமூலம் Posted: 09 Feb 2016 07:24 AM PST மும்பை:''பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் ஏஜன்ட்டாக, நானும், சில காலம் பணியாற்றியுள்ளேன்,'' என, பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, வாக்குமூலம் அளித்துள்ளான். கடந்த, 2008ல், மும்பையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி, அமெரிக்க போலீசாரிடம் சிக்கியுள்ளான்; அவனுக்கு, 35 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அங்கிருந்து, 'வீடியோ கான்பரன்சிங்' முறை மூலமாக, மும்பை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடக்கும் வழக்கில், நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்தான்; ... |
| காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., நிபந்தனை: 25 சீட்; ஆட்சியில் பங்கு கிடையாது என பேரம் Posted: 09 Feb 2016 07:54 AM PST 'சட்டசபை தேர்தலில், எங்கள் கூட்டணியில் சேர்ந்தால், 25, 'சீட்'கள் மட்டுமே தரப்படும்; ஆட்சியில் பங்கு என்ற பேச்சே கூடாது' என, காங்கிரசுக்கு தி.மு.க., நிபந்தனை விதித்துள்ளது. பீஹார், 'பார்முலா'வை இங்கு பின்பற்ற காங்., நினைத்தால், அது நடக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. 'மெகா' கூட்டணி: கடந்த ஆண்டு, பீஹாரில் சட்டசபை தேர்தல் நடந்த போது, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, 'மெகா' கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் ... |
| தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியா? : இன்று அறிவிக்கிறார் ஜெயலலிதா Posted: 09 Feb 2016 07:57 AM PST சென்னையில், இன்று நடைபெறும் திருமண விழாவில், தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது. இதற்கான அறிவிப்பை, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதேபோல, வரும் சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்பதை, டிசம்பரில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், முதல்வர் அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அப்படி எதையும் அறிவிக்கவில்லை. 'தேர்தலின் போது ... |
| தேர்தல் நிதியை கட்டு; இல்லையேல் மூட்டைய கட்டு!: தி.மு.க., தலைமை கறார் Posted: 09 Feb 2016 08:05 AM PST 'தேர்தல் நிதி, 2 கோடி ரூபாயை, முழுமையாக கட்சி தலைமையிடம் செலுத்தாத மாவட்ட செயலர்கள், வேட்பாளர் நேர்காணலுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்' என, தி.மு.க., தலைமை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால், பல மாவட்ட செயலர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, சில மாதங்களுக்கு முன், தி.மு.க., தலைமை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தேர்தல் நிதியாக, 2 கோடி ரூபாய் நிதி வசூலிக்க உத்தரவிட்டது.தேர்தல் நிதியை வசூலித்த, பல மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், முழுமையான கணக்கை காட்டாததோடு, தேர்தல் நிதி, 2 கோடி ரூபாயை, இன்னும்தலைமையிடம் செலுத்தாமல் உள்ளனர். ... |
| நிலக்கரி இறக்குமதி செய்வதில் சிக்கல்: கோடையில் மின் தடை ஏற்படும் அபாயம் Posted: 09 Feb 2016 08:51 AM PST தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதியை செய்வதில் சிக்கல் நிலவுவதால், வரும் கோடை காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு, மின் தடையை அமல்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மின் வாரியம், வரும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த, 45 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய, 2015 டிசம்பரில் டெண்டர் கோரியது. வழக்கமாக, ஐந்து - ஆறு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கும். ஆனால், இந்த டெண்டரில், தமிழகத்தை சேர்ந்த, ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றது.அந்த நிறுவனமும், ஆறு லட்சம் டன் நிலக்கரியை ... |
| அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் தமிழக அரசு சமரசம்?'ஸ்டிரைக்' நெருக்கடியை தவிர்க்க பேச்சுக்கு அழைப்பு Posted: 09 Feb 2016 10:24 AM PST தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் சங்கத்தினர், இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதனால், போராட்டத்தைத் தவிர்க்க, அரசு ஊழியர்கள் சங்கங்களை, நேற்று, அமைச்சர்கள், அவசர அவசரமாக பேச்சுக்கு அழைத்து, சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.கோரிக்கைகள் பலவற்றை வலியுறுத்தி, 68 சங்கங்கள் ஒன்றிணைந்த, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும், தமிழக அரசு, அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. எனவே, இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ... |
| Posted: 09 Feb 2016 11:06 AM PST புதுடில்லி: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய, 10 வீரர்களில் ஒருவரான, கர்நாடகாவைச் சேர்ந்த ஹனுமந்தப்பா, உறைய வைக்கும் பனியில், ஆறு நாட்கள் இருந்த நிலையில், நேற்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், உயிர் பிழைக்க வேண்டும் என, நாடு முழுவதும் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. 'உலகின் மிக உயர்ந்த போர்க்களம்' என வர்ணிக்கப்படும், 20 ஆயிரம் அடி உயரமுள்ள, இமய மலையில் இயற்கையாக அமைந்துள்ள, சியாச்சின் பனி மலை பகுதியில், கடந்த 3ம் தேதி, திடீரென வீசிய பனிப்புயலில், அங்கு ... |
| சாமியார் மந்திரம்: பட்நாவிஸ் மனைவிக்கு நெக்லஸ் கொடுத்ததால் சர்ச்சை Posted: 09 Feb 2016 01:02 PM PST மும்பை, :மஹாரஷ்டிரா மாநில முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் மனைவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், சாமியார் ஒருவர், அவருக்கு, மந்திரத்தில் நெக்லஸ் வரவழைத்து கொடுத்ததும், அதை அவர் பெற்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.புனே நகரில், கல்வி நிறுவனம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மனைவியும், வங்கி அதிகாரியுமான அம்ருதா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சாமியார் குருவானந்தா என்பவர், மந்திரத்தில், நெக்லஸ் ஒன்றை வரவழைத்து, அதை அம்ருதாவிடம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 10,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |