Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உறவாடா உறவுகள்

Posted: 09 Feb 2016 10:59 AM PST

உறவாடா உறவுகள் ஊருக்கு தெரியாமலே உன்னை நான் காண யாருக்கும் தெரியாமலே என்னை நீ காண பாருக்கு தெரியாமலே பார்த்திட்ட நம்முறவு வேருக்குத் தெரியாமலே வெண்மலர் நான்காண நாருக்குத் தெரியாமலே நறுமலர் எனைக்காண பாருக்குத் தெரியாமலே பாதியில் நம்முறவு காற்றுக்குத் தெரியாமலே கார்குழல் எனைத் தீண்ட சோற்றுக்குத் தெரியாமலே சுவையினை நானுணர நாற்றுக்கு நாளின்றி நடவின்றி நம்முறவு ச. சந்திரசேகரன்.

யானைப்பசிக்கு சோளப்பொறி...!

Posted: 09 Feb 2016 10:45 AM PST

- யானைப்பசிக்கு சோளப்பொறி முத்தம் - ----------------------------- - விபத்து - இந்த பேருந்து எங்கே போகிறது? - திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர் மற்றும் சொர்க்கம்! - ----------------------------- - ஒரு துறவியின் படைப்பு மாதவி - ----------------------------- தயவுசெய்து இது போல உள்ளதை இங்கு பகிரவேண்டாம் ராம் அண்ணா .... ---------------------------- - அலுவலகம் தன்னில் என்ன குறை தலையணை இல்லை! - ------------------------- - படித்ததில் பிடித்தது -

தங்கம் குறித்த செய்திகள் - தொடர் பதிவு

Posted: 09 Feb 2016 09:05 AM PST

- சென்னை : தங்கம் விலை இன்று(பிப். 1ம் தேதி) சவரனுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. - சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நி‌லவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,538-க்கும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.20,304-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.27,140-க்கும் விற்பனையாகிறது. - வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.37.40-க்கும், பார்வெள்ளி மட்டும் கிலோவுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.34,970-க்கும் விற்பனையாகிறது. - ---------------------------- தினமலர் படம் ...

குடந்தையில் நீராட குலம் தழைக்கும்!

Posted: 09 Feb 2016 09:03 AM PST

- கங்கையும் காவிரியும் நம் பாரதத் திருநாட்டின் வற்றாத ஜீவ புண்ணிய நதிகளாகும். பண்டை நாள் தொட்டு தென்னகத்திலிருந்து வடக்கும் வடக்கிலிருந்து தெற்கே குடந்தை ராமேஸ்வரம் ஆகிய நகரங்களில் ஓடும் புனித தீர்த்தங்களில் நீராடுவது பழக்கத்தில் இருந்துள்ளதற்கு சான்றுகள் இருக்கின்றன. தமிழக மக்களை வாழ வைக்கும் நதிகளில் ஒன்றானதும் தஞ்சைத் தரணியை வளம்கொழிக்கச் செய்வதுமான காவிரித் தாயும், அரசலாறும் மாலையிட்டது போல் சூழப்பெற்றது தான் குடந்தை மாநகரம். இந்நகரில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகப் ...

தேவதை தேர்தல்...!

Posted: 09 Feb 2016 08:26 AM PST


-

--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V

Posted: 09 Feb 2016 06:48 AM PST

மகா பெரியவா காலுக்கு கீழே உள்ள மூலிகை! பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக  இருந்ததில்லை. ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் ...

இரண்டாம் காதல்

Posted: 09 Feb 2016 06:47 AM PST

நம்பிக்கைகள்தான் உறவுகளை உறுதியாக்குகின்றன..!

Posted: 09 Feb 2016 06:44 AM PST

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு

Posted: 09 Feb 2016 06:32 AM PST


-
காளைகளை அடக்கியதால் கிருஷ்ணரை மணந்த பெண் - நப்பின்னை
-
பொய்கையாழ்வார் பாடிய பிரபந்தம் - முதல் திருவந்தாதி
-
ஆளவந்தாரின் நிஜ பெயர் யமுனாச்சாரியார்
-
மச்சாவதாரத்தில் திருமால் வதம் செய்த அசுரன் - கோமூகாசுரன்
-
கலப்பையால் யமுனை நதியின் போக்கை நிறுத்தியவர் - பலராமர்

அழகிப் போட்டியில் தோற்றது….!!

Posted: 09 Feb 2016 06:15 AM PST

– உலக அழகிப்போட்டி ஜெயித்தது இந்தியப்பெண் தோற்றது இந்தியப் பண்பாடு – ————————– – மது அருந்தப் போவதில்லையென்று சத்தியம் செய்தான் அப்போது கையில் காசில்லை – ———————- – கர்ணன் எவ்வளவு பெரிய வள்ளல் வாரி வழங்கியதென்னவோ துரியோதனன் வீட்டுப் பொருள்! – நேற்று நான் இன்று நாம் நாளை குடும்பம் – ——————— – விலங்குகளாய் மனிதர்கள் இருப்பது வியப்பில்லை எனக்கு அதன் பாலைத்தானே அருந்துகிறார்கள்! – —————————– கவிஞர் மாடப்பள்ளி ஜெயசீலன் சுண்டு விரல் – ஹைகூ கவிதைகள் படம்- இணையம்

ரேசன் கடை எறும்பின் அலுப்பு…!!

Posted: 09 Feb 2016 06:10 AM PST

- கல்லுக்குள் ஈரம் கடலுக்குள் எரிமலை பூமிக்குள் நீரும் நெருப்பும் – —————— – அலுத்துக் கொண்டன ரேசன் கடை எறும்புகள் கல் விலக்க முடியவில்லையென்று! – ———————— – குருவிகள் குதூகலித்தன ரேசன் கடை திறப்பு அரிசியில் அசைவம்! – ——————— – அவள் குணமாக வேண்டுமென ஆண்டவனிடம் வேண்டினான் ஆண்மையின் அவசரம் – ———————– படித்ததில் பிடித்தது

கொடிய விஷமுள்ள பிளாக் மாம்பாவிடம் இருந்து தப்பிய உலகை மிரட்டிய வேகப்பந்துவீச்சாளர்!

Posted: 09 Feb 2016 05:57 AM PST

தென்ஆப்ரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தோள் பட்டை வலி காரணமாக தற்போது கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். அண்மையில் தென்ஆப்ரிக்காவின் புகழ்பெற்ற க்ரகர் தேசிய பூங்காவுக்கு ஸ்டெயின் தனது நண்பருடன் காரில் சென்றுள்ளார். சாலையோரத்தில் கொடிய விஷம் கொண்ட, பிளாக் மாம்பா பாம்பு காரில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளது. அதனை பார்த்த டேல் ஸ்டெயின் விஷமில்லாத பிரவுன் ஹவுஸ் பாம்பு என கருதி,அருகில் சென்று அந்த பாம்பை கையால் தூக்கி சாலையோரத்தில் போடுவதற்கு ...

நேசிக்காவிட்டால் பரவாயில்லை...!!

Posted: 09 Feb 2016 05:45 AM PST


-

-
ப.பி

சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

Posted: 09 Feb 2016 05:44 AM PST

சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களில் ஒருவர் 6 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்திய எல்லையில் உள்ள சியாச்சின் பனிப் பகுதியில் கடந்த 3-ம் தேதி ஏற்பட்ட பனிச் சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டர். அனைவரும் இறந்துவிட்டதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் 6 நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 25 அடி ஆழத்துக்கு கீழ் அவர் புதையுண்டு இருந்த அவரை ராணுவ மீட்புக் குழு மீட்டுள்ளது. ஏற்கெனவே ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் மற்ற வீரர்களை ...

சென்னை: கடற்கரை நகரில் 'காற்று வியாபாரம்'

Posted: 09 Feb 2016 05:43 AM PST

இந்தியாவில் பெருநகரங்களில் காற்று மாசடைந்துவரும் நிலையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மக்களுக்கு விற்கும் வியாபாரத்தை நிறுவனம் ஒன்று சென்னையில் துவங்கியுள்ளது. மருத்துவ சான்றிதழ் எதுவும் தேவைப்படாத இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்று அந்த நிறுவனத்தின் விற்பனை முகவர்கள் கூறுகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு இந்த சுவாசக் காற்று சிலிண்டர்கள் உதவியாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், காற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டதா ...

கனவில் வந்த தனிம அட்டவணை! - மென்டலீவ் பிறந்த நாள் பகிர்வு!

Posted: 09 Feb 2016 05:06 AM PST

பள்ளி வகுப்பறைகள் முதல் பெரிய பெரிய வேதியியல் ஆய்வுக் கூடங்கள் வரை தனிம அட்டவணை எனப்படும் பீரியாடிக் டேபிள் இல்லாமல் இருக்காது. நவீன வேதியியலின் மூலாதாரமான தனிம அட்டவணையை வடிவமைத்த டிமிட்ரி மேண்டலீவின் 182-ம் பிறந்தநாள் இன்று. அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்... 1. பிப்ரவரி 8, 1834-ம் ஆண்டு சைபீரியாவில் பிறந்த மென்டலீவ், தனது பன்னிரெண்டு வயதிலேயே தந்தையை இழந்தார். மேலும் சைபீரியாவில் தரமான கல்வி இல்லாததால், அவரது குடும்பம் மாஸ்கோ நகருக்கு குடிபெயர்ந்தது. இவருக்கு உடன் ...

காரில் ஜெயலலிதா சிலை: கவனம் ஈர்க்கும் அதிமுக தொண்டர்

Posted: 09 Feb 2016 04:59 AM PST

சென்னை, மெரீனா கடற்கரை சாலை. கொதிக்கும் வெயிலில் கூலாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. ரெஜிஸ்ட்ரேஷனுக்காகக் காத்திருந்த காரின் அமைப்புகள் அனைத்திலும் 'ஜெ.' மயம். வெள்ளை நிற வோல்ஸ்வேகனின் அனைத்துப்புறங்களிலும் முதல்வரின் படம். பின்னால், 'நடமாடும் உலக அதிசயமே' என்ற வார்த்தைகளோடு 234 என்ற குறியீடு. எல்லாவற்றுக்கும் மேலாக (நிஜமாகவே மேலேதான்) ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை. அந்தக் காருக்குச் சொந்தக்காரரான அதிமுக தொண்டரின் பெயரும் வித்தியாசமாகத்தான் இருந்தது. பிஸ்கட் பாபு. போனில் அழைத்தால், ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(416)

Posted: 09 Feb 2016 04:57 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

இலவசமாய் ஆபாசக் காட்சிகள்...!

Posted: 08 Feb 2016 10:25 PM PST

சென்ட் வாங்க வேண்டுமாம் புது மனைவிக்கு பரக்க பரக்க விற்றான் மீன் - ----------------------- - கருணை வடிவமாம் கடவுள் கையில் சூலம், வேல்! - ------------------------- - ஆத்திரக்காரனுக்கு உதவும் அகிம்சாவாதி காந்தியார் கையில் தடி - --------------------- - இரண்டு பக்கம் வரவு இல்லாத பொருத்தத்தை இருக்கு என்றான் சோதிடன் - ------------------------ - இலவசமாய் ஆபாசக் காட்சிகள் மெரினா - ---------------------- - எந்நேரமும் எழுதுகிறேன எழுத்தாளன் அல்ல எழுத்தர் (குமாஸ்தா) - --------------------- - நான் ...

இருசக்கர ஆம்புலன்ஸ் வாகன சேவையும் 10 தகவல்களும்

Posted: 08 Feb 2016 10:02 PM PST

சென்னையில் '108' அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்தில் இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட தகவல்களின் 10 முக்கிய அம்சங்கள்: * '108' அவசரகால சேவையை மேம்படுத்தும் வகையில், அவசரகால முதலுதவிக்காக ரூ.70 லட்சம் மதிப்பில் 41 இருசக்கர வாகனங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். * இந்த 41 இருசக்கர வாகனங்களில் 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் உள்ளன. * ஆண்கள் மட்டுமின்றி ...

கடை விரித்தேன கொள்வாரிருந்தார்கள்..!

Posted: 08 Feb 2016 09:42 PM PST

- - கடை விரித்தேன் கொள்வாரிருந்தார்கள் கடனாக...! - ------------------------- - தமிழ்தான் உயிரென்றான் என்னவென்று பார்த்தேன் அவன் காதலி பெயர் தமிழ் - ---------------------- - குயில் அழுகிறது அக்காள் வாழ முடியாததால் தனக்கும் பாதிப்பென்று - -------------------------- - செத்தும் கெடுக்கிறார்கள் தலைவர்கள் சிலைகளாய் இருந்து - -------------------------- எனக்கு மோட்சம் வேண்டாம் அங்கே பெண்கள் இருக்க மாட்டார்கள்! - -------------------------- படித்ததில் பிடித்தது -

பழக்கதோஷம்...!

Posted: 08 Feb 2016 09:39 PM PST

- நாட்டாமையிடம், 'எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது' என்றான். ''யார் மேலயாவது சந்தேகப்படுகிறியா?''_ என்றார் நாட்டாமை! - -------------------------------- - - விதவையை மணந்தவனை ஏன் போலீஸ் கைது செய்யுது? - விதவை ஆக்கியதே அவன்தானாம்..!! - ------------------------------ - உதவித் தொல்லை! -------- - பேப்பர் கட்டுகளை, ஊருக்கு ஊர் போட்டு வர, பின்னால் வந்தவர் சேகரித்து வருகிறார்...! (தவறுதலாக பேப்பர் கட்டு விழுகிறது என்று எண்ணியதால்...) - ----------------------------

உலகை அச்சுறுத்திய 20 நோய்கள்

Posted: 08 Feb 2016 09:28 PM PST

மனிதக் குல வரலாறு முழுவதும் போரால் கொல்லப்படுபவர்களைவிடவும் நோயால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையே அதிகம். சாதி, மதம், இனம், நிறம் என எந்த வேற்றுமையையும் நோய்கள் பார்ப்பதில்லை. பண்டைக் காலம் முதல் தற்போதுவரை உலகை ஆட்டிப்படைத்த 20 ஆட்கொல்லி நோய்கள்: இதயக் கோளாறு இன்றைய தேதிக்கு இதயக் கோளாறுதான் உலகில் மிக அதிக எண்ணிக்கையில் இறப்புக்கான காரணியாக இருக்கிறது. 2012-ல் 1.75 கோடி பேர் பலியாகியுள்ளனர். உலகில் நிகழும் 10 இறப்புகளில் மூன்றுக்கு இதய நோய்களே காரணம். இதயக் கோளாறுகளால் ஏற்படும் ...

காதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி !

Posted: 08 Feb 2016 08:53 PM PST

காதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி ! அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல் ஆதியில் தொடங்கி கணினிக் காலமும் தொடர்வது ! காதலித்தவர்கள் மட்டுமே உணரும் உன்னதம் காதலிக்காதோர் மண்ணின் சொர்க்கம் காணாதோர் ! காதலர்கள் அழிந்தாலும் காதல் அழிவதில்லை காதல் முக்காலமும் எக்காலமும் வாழும் ! ஒரே ஒரு முறை காதல் அனுபவம் உயிருள்ளவரை நினைவில் நிற்கும் ! மூளையின் ஒரு ஓரத்தில் இருக்கும் முதல் காதல் என்றும் வீற்றிருக்கும் ! காதலில் வென்றவர்கள் மறக்கிறார்கள் காதலில் தோற்றவர்கள் ...

நிலாவில் நடந்த 6வது விண்வெளிவீரரான எட்கரின் மரணம்

Posted: 08 Feb 2016 08:31 PM PST

வாஷிங்டன்: நிலாவில் கால் பதித்து நடந்த 6வது வீரர் என்ற பெருமைக்குரிய அமெரிக்க விண்வெளி வீரர் எட்கர் மிட்செல் புளோரிடாவில் காலமானார். கடந்த 1971ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி அப்பல்லோ 14 விண்கலம் மூலம் எட்கர் மிட்செல் (85) நிலாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் ஆலன் ஷெப்பேர்டு என்ற வீரரும் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் நிலாவில் கால் பதித்தனர். அத்துடன் நிலாவில் மிக நீண்ட தூரம் நடந்து சாதனை படைத்தவர்கள் என்ற பெயரும் இவர்களுக்கு உண்டு. இதன்மூலம் நிலாவில் கால் பதித்து நடந்த 6-வது ...

புலால் உண்ணாதவர்கள் சக மனிதனின் துயரங்களை கண்டு கொள்ளாத போது அகிம்சை என்னவாகிறது?- கமல்

Posted: 08 Feb 2016 08:19 PM PST

அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். ''இந்தியாவில் பேச்சு சுதந்திரம் இருக்கிறது . அதற்காக எதை வேண்டுமென்றாம் பேசி விட வாய்ப்பில்லையென்பதால் இங்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சில விஷயங்களை பதிவு செய்கிறேன். ஆனால் ஜனநாயகம் என்றாலே பேச்சு சுதந்திரம் என்பதுதான் என்ற அர்த்தம் தாமாகவே வருகிறது. இப்படி பேசுவதால் இந்திய ஜனநாயகத்தை நான் விமர்சிப்பதாக அர்த்தம் ...

பெங்களூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை 2 பேரை கடித்து குதறிய சம்பவம்

Posted: 08 Feb 2016 08:18 PM PST

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை ஒன்று 2 பேரை கடித்து குதறியது. கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளி வளாகத்தில் ஒரு சிறுத்தை நடமாடுவதை காவலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்து பள்ளிக்குள் ...

ரஜினி, சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் : பழ. கருப்பையா...

Posted: 08 Feb 2016 08:14 PM PST

திருப்பூரில் நடைபெற்ற ஒரு புத்தக விழாவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கலந்து கொண்டு 'அரசியல் அறம்' என்ற தலைப்பில் பேசினார் . அவர் பேசும் போது "இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதனை அறம் உடையவனாக மாற்றியிருந்தால் அவன் ஒழுங்குபட்டிருப்பான். ஆனால் அவனை சட்டத்துக்கு பயப்படுகிறவர்களாகவே உருவாக்கி இருக்கிறோம். இன்றைக்கு அரசியல் என்பது தொழிலாகிவிட்டது. பதவியை பிடிக்க வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வருகிறார்கள். லஞ்சம் இன்றைக்கு வாழ்க்கை முறையாகிவிட்டது. நேர்மையான ...

மறை பொருள் ஞானம் (occultism)

Posted: 08 Feb 2016 05:23 PM PST

மறை பொருள் ஞானம் (occultism) Spirit Art தியானம் செய்யும் பொழுது மனக்கண்ணில் தோன்றிய அகக் காட்சிகளை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அகக் காட்சிகளுக்கு கூடுமானவரை பொருத்தமான தலைப்பு இட்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் மரணம் இல்லா பெருவாழ்வு--- சாகாக்கல்வி.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™