Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு வருகிறது தடை : மத்திய அரசு பரிசீலனை

Posted: 08 Feb 2016 07:50 AM PST

காற்றில் மாசு அளவை குறைக்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட வாகனங்களை தடைசெய்ய, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான வரைவு அறிக்கை, மத்திய அமைச்சரவையில், இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பெரும்பாலான நகரங்களில், வாகனங்கள் வெளியிடும் புகையால், காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதை குறைப்பதற்கான திட்டங்களை, மத்திய அரசு வகுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, டில்லியில் தற்போது, 2,000 சி.சி., திறனுக்கும் மேம்பட்ட டீசல் வாகனங்களை, பதிவு செய்ய மார்ச் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், டில்லி, நொய்டா உள்ளிட்ட தேசிய ...

'வேட்பாளர்களை நானே தேர்வு செய்வேன்': ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு கருணாநிதி 'செக்'

Posted: 08 Feb 2016 08:58 AM PST

தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தானே தேர்வு செய்ய உள்ளதாக, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரிடம், கருணாநிதி கூறியிருப்பது, ஸ்டாலின் ஆதரவாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது. இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகம் முழுவதும், 'நமக்கு நாமே' பயணத்தை நடத்தி வரும் ஸ்டாலின், ஆரம்பத்தில், 'தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதியே' என, கூறி வந்தார். ஆனால், இப்போது, 'கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, தலைவர் கருணாநிதி முடிவு செய்வார்' என, கூற ஆரம்பித்துள்ளார். இதனால், கருணாநிதி கோபம் அடைந்துள்ளார். அதற்கேற்றார்போல, ...

மும்பையை தகர்த்தது பாக்., பயங்கரவாதிகளே உறுதி: அமெரிக்க சிறையிலிருந்து ஹெட்லி வாக்குமூலம்

Posted: 08 Feb 2016 09:26 AM PST

மும்பை: 'மும்பை தாக்குதலை நடத்துவதற்கு முன், பலமுறை இந்தியாவுக்கு வந்து, சதித் திட்டம் தீட்டினோம். தாக்குதலுக்கு, இரண்டு முறை திட்டம் தீட்டி, அது, தோல்வியில் முடிந்தது. மூன்றாவது முறை, திட்டமிட்டபடி தாக்குதலை நடத்தினோம்' என, பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் வாக்குமூலம் அளித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையில், 2008ல், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், தாஜ் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தினர்; இதில், அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் உட்பட, 166 பேர் ...

கடலோர காவல் படை விமான பலம் கூடுது!

Posted: 08 Feb 2016 09:27 AM PST

புதுடில்லி:நாட்டின் மிக நீண்ட கடற்கரையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கடலோர காவல் படைக்கு, விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எண்ணிக்கை, இன்னும் நான்காண்டுகளில் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது, கடலோர காவல் படை வசம், 62 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளன. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல், அண்டை நாடுகளின் வாலாட்டம் போன்ற பிரச்னைகளில்இருந்து கடலோரங்களை பாதுகாக்க, பலத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி,* 38 ஹெலிகாப்டர்கள், விமானங்கள் வாங்கப்பட உள்ளன.* அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், இரட்டை இன்ஜின் ...

கிராம பகுதிகளில் மாற்றம்: இளைஞர்களுக்கு மோடி அழைப்பு

Posted: 08 Feb 2016 09:44 AM PST

புதுடில்லி,:''கிராம பகுதிகளில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்த, பொதுமக்களின் பங்கு மிகவும் அவசியம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பி.எம்.ஆர்.டி.எப்., எனப்படும், பிரதமர் ஊரக மேம்பாட்டு இளைஞர்கள் திட்டத்தில் சேர்ந்துள்ள, 230 இளைஞர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.அப்போது, ''நாட்டின் பிற்பட்டமற்றும் ஊரகப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக, அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இளைஞர்களின் பங்கு பாராட்டுக்குரியது. ஊரகப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு, பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்,'' என,கூறினார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற, 11 ...

எரிவாயு குழாய் பதிப்பில் சுமுக தீர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Posted: 08 Feb 2016 10:21 AM PST

சென்னை: 'கெய்ல் நிறுவன எரிவாயு குழாய் பதிப்பில், சுமுக தீர்வு காண உதவ வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: 'கெய்ல்' நிறுவனம், தமிழகத்தின், ஏழு மாவட்டங்களில், 20 மீட்டர் அகலத்தில், 310 கி.மீ., துாரத்திற்கு, எரிவாயு குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது.

பாதிக்கும்: இந்தத் திட்டம், லட்சக்கணக்கான மாமரம், பலா மரம், தென்னை மரங்களை, கடுமையாக பாதிக்கக்கூடியது. எரிவாயு குழாய் பதிக்க திட்டமிடப்பட்ட பகுதிகளில், நிலத்தை தோண்டும் போது, அந்த வழித்தடத்தில் உள்ள, 1.20 லட்சம் பழ மரங்களை வெட்ட ...

இணைய சமநிலைக்கு அச்சாரம்: மாறுபாடான கட்டணத்திற்கு 'டிராய்' மறுப்பு

Posted: 08 Feb 2016 10:52 AM PST

புதுடில்லி: 'நெட் நியூட்ராலிட்டி' எனப்படும், இணைய சமநிலைக்கு வழிவகுக்கும் வகையில், இணையத்தில் வௌியாகும், 'கன்டென்ட்' எனப்படும், தகவல் தொகுப்பின் அடிப்படையில், மாறுபாடான கட்டணம் வசூலிக்கக் கூடாது; இணையத்தில் அனைத்து இணையதளங்களும் சமமாகவே பாவிக்கப்படும் என, 'டிராய்' நேற்று உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த, 'பேஸ்புக்' சமூக வலைதளத்துடன் சில இணையதளங்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ள, பேஸ்புக் நிறுவனம், 'பிரிபேசிக்ஸ்' என்ற இலவச திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த முன்வந்தது. அதற்கு, டிராய் உத்தரவு, பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ...

அமாவாசை நாளில் மனு செய்தால் தி.மு.க., டிக்கெட் உறுதி? எம்.எல்.ஏ., 'சீட்'டுக்காக நேற்று ஒரே நாளில் 2,000 பேர் மனு

Posted: 08 Feb 2016 10:58 AM PST

தை அமாவாசை நாளில் விருப்ப மனு தாக்கல் செய்தால், தி.மு.க.,வில், 'சீட்' உறுதி என, அக்கட்சியினர் நம்புவதால், நேற்று ஒரே நாளில், 2,000 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்காக, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், அவர்கள் குவிந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அதற்கான பணிகளில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனு பெறுவதும், அனைத்து கட்சிகளிலும் நடந்து வருகிறது.தேர்தல் விவகாரத்தில், எப்போதுமே முன்னிலையில் இருக்கும் அ.தி.மு.க., சில நாட்களுக்கு முன், ...

இந்தியாவில் பயங்கரவாதம் அதிகரிக்கும் ஆபத்து: முன்னாள் ராணுவ அதிகாரி ஜி.பி.ரெட்டி எச்சரிக்கை

Posted: 08 Feb 2016 11:52 AM PST

''இந்தியாவில், வி.ஐ.பி.,க்கள் மற்றும், 'இசட்' பிரிவினருக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விடுத்து, உள்நாட்டு மக்கள் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும்; இல்லையெனில், பயங்கரவாதம் பெரிய அளவில் தலைதுாக்கும்,'' என, முன்னாள் ராணுவ அதிகாரி ஜி.பி.ரெட்டி எச்சரித்துள்ளார். உள்நாட்டு பாதுகாப்புக்கான சர்வதேச கருத்தரங்கம், சென்னை, குருநானக் கல்லுாரி வளாகத்தில், உள்நாட்டு பாதுகாப்பு பாடப்பிரிவு சார்பில் நடந்தது. இதில், இந்திய ராணுவத்தில் நாகாலாந்து பிரிவுக்கு பிரிகேடியர் என்ற தலைமை அதிகாரியாக இருந்து, ஓய்வு பெற்ற ஜி.பி.ரெட்டி பேசியதாவது:பலதரப்பட்ட ...

முதல் வகுப்பு 'ஏசி' பெட்டியில் முதியோர் கட்டண சலுகை ரத்து: ரயில்வே நிர்வாகம் திட்டம்

Posted: 08 Feb 2016 12:36 PM PST

மதுரை :ரயில்வே துறைக்கு ஏற்பட்ட ரூ.1400 கோடி நஷ்டத்தை சமாளிக்க, 'ஏசி' பெட்டியில் முதியோருக்கான கட்டண சலுகையை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்ட நிலையில், முதல் வகுப்புக்கு மட்டும் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ரயில்களில் பயணிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதன்மூலம் இதுவரை ரூ.1400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம்தெரிவித்துள்ளது. இதை சமாளிக்க, 'ஏசி' பெட்டிகளில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைளை ரத்து செய்ய வேண்டும் ...

சியாச்சினில் 6 நாட்கள் மரண போராட்டம்: ஜவான் உயிருடன் மீட்பு!

Posted: 08 Feb 2016 02:28 PM PST

ஸ்ரீநகர்: சியாச்சின் பனிமலையில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்தில், நேற்று ஒரு வீரர் உயிருடன் மீட்கப்பட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த லான்ஸி நாயக் ஹனுமந்தப்பா என்ற அந்த வீரரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். இமயமலைத் தொடரின் உயரமாக பகுதி சியாசன் ஆகும். உலகின் மிகஉயரமான போர்க்களமான இப்பகுதி, இந்திய-பாக்.எல்லையில் 19,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு பிப்ரவரி 3ம் தேதி ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, தவித்து வந்த 10 ராணுவ வீரர்களும் உயிரிழந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது. இவர்கள் 10 பேரும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™