Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரூ.25 கோடி 'தண்டம்'10,000 இலவச 'லேப்டாப்'கள் மாயம்

Posted: 05 Feb 2016 07:30 AM PST

தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளில், மாணவர்களுக்கு வழங்காமல் மாயமான, 10 ஆயிரம், 'லேப்டாப்'களுக்கான கணக்கை சரிக்கட்ட முடியாமல், கல்வித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். மாயமான, 'லேப்டாப்'களுக்காக, 25 கோடி ரூபாயை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சொந்த பணத்தில் இருந்து செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், 2011 - 12 முதல், பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, அரசு சார்பில் இலவச, லேப்டாப் வழங்கப்படுகிறது.இதுவரை, 22 லட்சம் மாணவர்களுக்கு, 5,500 கோடி ரூபாய் மதிப்பில், லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால், ஒரு, லேப்டாப்பின் ...

சொல்பேச்சு கேட்காத தமிழக பா.ஜ., தலைவர்கள் :கேள்விக்கணைகளால் விளாசிய அமித் ஷா

Posted: 05 Feb 2016 07:49 AM PST

கேரள மாநிலம் கொச்சிக்கு, சமீபத்தில் வந்த, பா.ஜ., தேசிய செயலர் அமித் ஷா, தமிழக பா.ஜ., தலைவர்களை அழைத்து, சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக, கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர் கூறியதாவது: பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து வைத்துள்ளார். அதனால், அவரின் கேள்விகளுக்கு, சரியான பதிலை தெரிவிக்க முடியாமல், தமிழக பா.ஜ., தலைவர்கள் திணறினர்.

கடும் கோபம்:
சட்டசபை தேர்தலில், 'யாருடன் கூட்டணி அமைக்கலாம் அல்லது தனித்தே போட்டியிடலாமா' என, அமித் ஷா ...

அன்பழகனுக்கு 'சீட்' இல்லை!

Posted: 05 Feb 2016 08:00 AM PST

தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனுக்கு, சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்காமல், அவரை கழற்றிவிட முடிவெடுக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.,வில், காலம் காலமாக, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும், முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே, தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்கப்படுவதாக புகார் உள்ளது. அதனால், கட்சியில் போட்டியிட விருப்பமில்லாமல், இளைஞர்கள் பலரும் ஒதுங்கி உள்ளதாகவும், விருப்ப மனு விற்பனை கணிசமாக குறைந்துள்ளதற்கு, இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது. அதனால், வரும் தேர்தலில், புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்புஅளிக்க, தி.மு.க., ...

'போட்டு' கொடுத்து 'சீட்' வாங்க திட்டம்: குவியும் புகார்கள்

Posted: 05 Feb 2016 08:09 AM PST

தேர்தல் நெருங்குவதால், 'சீட்' பெறுவதற்காக, அனைத்து கட்சிகளிலும், மற்றவர்களை தலைமைக்கு ஆதாரங்களுடன், 'போட்டு' கொடுக்கும் படலம் துவங்கி உள்ளது. தேர்தலில் முன்பெல்லாம், தங்களது தகுதி, திறமை, ஜாதி பலத்தை குறிப்பிட்டு, தலைமையிடம், 'சீட்' பெறுவர். ஆனால், தற்போது தன் தொகுதியில், 'சீட்' கேட்டுள்ளவரின் பலவீனங்களை பட்டியல் போட்டு, தலைமைக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பி, 'சீட்'டை தட்டிப்பறிக்கும் முயற்சிகள், அனைத்து கட்சிகளிலும் பரவலாக நடந்து வருகின்றன.

எதிரிக்கு கிடைக்க கூடாது!
தனக்கு ஒரு கண் போனாலும், எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற ...

வைகோவும் தி.மு.க.,வுக்கு வரலாம்!- ஸ்டாலின்

Posted: 05 Feb 2016 08:28 AM PST

'ம.தி.மு.க.,வில் இருப்பது இனி ஒருவரே; அவரையும் கலைஞர் மன்னிப்பார்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார். ம.தி.மு.க.,விலிருந்து விலகி, சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்த, பாலவாக்கம் சோமுவின் மகன் திருமணம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, அக்கரையில் நேற்று நடந்தது. விழாவில், தன் மனைவி துர்காவுடன் பங்கேற்ற ஸ்டாலின் பேசியதாவது: நான் தொடர்ந்து, சுய மரியாதை திருமணங்களை நடத்தி வைக்கிறேன். 'சுய மரியாதை திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும்' என, அங்கீகாரம் அளித்தவர் அண்ணாதுரை. ம.தி.மு.க.,வில் இருந்தபோதே, தி.மு.க.,வினரோடு தொடர்பில் ...

ஓய்வூதியம் கேட்ட பிரபலங்கள்: உ.பி.,யில் தான் இந்த கூத்து

Posted: 05 Feb 2016 08:59 AM PST

புதுடில்லி, : விருது பெற்றவர்களுக்கு, உ.பி., மாநில அரசு அறிவித்த ஓய்வூதியத்தை பெற, ஏராளமான பிரபலங்கள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் பலர் செல்வந்தர்கள்.உ.பி., மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, அகிலேஷ் முதல்வராக உள்ளார். பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மாநில அரசு, ஐந்து லட்சம் ரூபாயுடன் கூடிய, 'யஷ் பாரதி' விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், உ.பி., மாநிலத்தை சேர்ந்த, இந்த விருதுகளை பெற்றவர்களுக்கு, மாதந்தோறும், 50 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என, முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.யஷ் பாரதி விருது பெற்ற, 141 பேருக்குமாநில ...

முன்னேற்றத்தை தடுக்கிறது காங்., மோடி புகார்; தப்ப நினைக்கக் கூடாது- ராகுல் பதில்

Posted: 05 Feb 2016 09:02 AM PST

கவுகாத்தி: சோனியா குடும்பம் பார்லிமென்டை முடக்குவதாக, அசாமில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய பிரதமர் மோடி கூறினார். இதற்கு பதிலளித்த காங்., துணைத்தலைவர் ராகுல், ஒரு நாட்டின் பிரதமர், இயலாமையை மறைக்க, சாக்கு போக்கு சொல்லி, தப்ப நினைக்கக்கூடாது என கூறியுள்ளார்.அசாமில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை துவக்கி, பிரதமர் மோடி பேசியதாவது: லோக்சபா தேர்தல் தோல்வியை ஜீரணிக்க முடியாத, காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பம், பார்லிமென்ட் நடவடிக்கைகளை முடக்கி, நாட்டின் முன்னேற்றத்தைதடுக்கிறது. பார்லியில், 400 தொகுதிகளை வைத்திருந்த காங்கிரசின் நிலை, இன்று, 40 ...

உலகளவில் 20 கோடி பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பு: இனி பெண்களே இல்லாமல் போவர் என ஐ.நா., அலறல்

Posted: 05 Feb 2016 09:11 AM PST

லண்டன்: 'உலக நாடுகள் பலவற்றில், பெண்கள் மற்றும் சிறுமியரின் பிறப்புறுப்பை சிதைக்கும் கொடூரமான சடங்கு மற்றும் மூட நம்பிக்கை தொடர்வதால், பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை, 20 கோடியைத் தாண்டியுள்ளது' என்ற, அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ள, ஐக்கிய நாடுகள் சபை, இந்த கொடிய பழக்கத்திற்கு எதிராக, அனைத்து தரப்பினரும் போராட முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்த கொடுமைக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை பல முறை தீர்மானம் நிறைவேற்றியும், கடந்த, 2014ல் மட்டும், ஏழு கோடி சிறுமியர் மற்றும் பெண்கள், தங்களின் மதிப்பு மிக்க பிறப்புறுப்பை இழந்துள்ளனர் என்ற, ...

கூட்டணியில் பா.ம.க.,வை சேர்க்க தி.மு.க.,: ராமதாசுடன் செல்வகணபதி சந்தித்து பேச்சு

Posted: 05 Feb 2016 10:35 AM PST

பா.ம.க., நிறுவனர் ராமதாசை, தி.மு.க.,வின் தேர்தல் பணிக்குழு செயலர் செல்வகணபதி, நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். கூட்டணியில், பா.ம.க.,வை சேர்க்க, தி.மு.க., நடத்திய வளைப்பு நடவடிக்கையே, இந்த சந்திப்பு என, கூறப்படுகிறது. மற்ற கட்சிகளுக்கு முன்னதாக, முதல்வர் வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியை அறிவித்து, சட்டசபை தேர்தலை சந்திக்க, பா.ம.க., ஆயத்தமாகி உள்ளது. ஊரெங்கும் பொதுக் கூட்டம் மற்றும் மாநாடுகளை நடத்தி வருகிறது.தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம், கடந்த சில நாட்களாக, விருப்ப மனுக்களையும் வாங்கி வருகிறது. விரைவில் நேர்காணல் நடத்தி, ...

அதிகம் பேருக்கு வேலை: நிறுவனங்களுக்கு சலுகை

Posted: 05 Feb 2016 11:26 AM PST

புதுடில்லி:அதிகமானோருக்கு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு, வருமான வரி சலுகை உட்பட, பல சலுகைகளை வழங்க, மத்திய அரசு தயாராக உள்ளது.நாட்டில், வேலைவாய்ப்பை அதிகளவில் உருவாக்க வழிவகை செய்யும் வகையில், அதிகளவில் வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு, பல சலுகைகள், மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும்.வரும், 2016 - 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, வரும் 29ம் தேதி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் போது, இதற்கான அறிவிப்பு வெளியாகும்.என்னென்ன கிடைக்கும்?* மொத்தம், 2 சதவீதம் கூடுதல் பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு, வருமான வரியில், 30 சதவீதம் விலக்கு ...

காய், கனிகளை உண்பதில் சென்னைவாசிகள் முதலிடம்

Posted: 05 Feb 2016 12:56 PM PST

புதுடில்லி: காய், கனிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்களை சாப்பிடுவதில், இந்திய பெருநகரங்களில், சென்னை முதலிடம் வகிக்கிறது.சர்வதேச பொருளாதார உறவுகள் மீதான, இந்திய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பெங்களூரை சேர்ந்த, இந்திய மேலாண்மை கல்வி மையம் நடத்திய ஆய்வு அறிக்கை விவரம்:* நாள்பட்ட நோய் வராமல் தடுக்கவும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்காகவும், ஒவ்வொருவரும், குறைந்தபட்சம், 400 கிராம் காய், கனிகளை தினசரி உட்கொள்ள வேண்டும் என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது* இந்திய பெருநகரங்களில், சென்னையில் அதிகபட்சமாக, ஒவ்வொருவரும் சராசரியாக, 360 கிராம், காய், பழங்களை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™