Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பொங்கல் - எந்தன் வரிகளில்

Posted: 05 Feb 2016 11:25 AM PST

பொங்கல் - எந்தன் வரிகளில் நாளை மட்டுமல்ல எங்கள் வீட்டில் நாள்தோறும் பொங்கல். எப்படி? உலையில் அரிசி போட்டுவிட்டு உத்தமி உறங்கினால் பொங்கல். பானையில் அரிசி போட்டுவிட்டு பாவை பக்கத்து வீடு போனால் பொங்கல். சாதம் கொதிக்கும் போது என்மேல் கோபம் வந்தால் பொங்கல். சமையல் செய்யச் சொல்லி நான் சமைக்காவிட்டால் பொங்கல். இப்படி எங்கள் வீட்டில் நாள்தோறும் பொங்கல். ச. சந்திரசேகரன்

பூலோகமே எனக்கு சொர்க்கம் மாதிரிதான்!’

Posted: 05 Feb 2016 09:57 AM PST

டீச்சருக்கு படிச்சா டாக்டராக முடியாது; ஆனா டாக்டருக்கு படிச்சா டீச்சராகலாம் (மெடிக்கல் காலேஜ்ல)! – – குமரேஷ் சுப்ரமணியம் – ——————————————– குழந்தை மகிழ்ச்சியுடன் விளையாடுவது உன் பெருமூச்சுகள் நிறைந்திருக்கும் பலூனுடன் – – கலாப்ரியா – ——————————————— – ''2016 நல்லா இருக்கும்…''''எப்படிச் சொல்றீங்க..?'' ''16 நல்ல நம்பர்பா, பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கன்னு வாழ்த்துவாங்க!'' ''இங்கிலீஷ்லகூட ஸ்வீட் சிக்ஸ்டீன்னு சொல்லுவாங்க!'' ''சரிங்க மொதலாளி!'' – – கனவுப் பிரியன் – ——————————————– – புத்தாண்டு ...

சமாதானம் :

Posted: 05 Feb 2016 09:56 AM PST


-
–
உன்னுடைய வட்டமும்,
என்னுடைய வட்டமும்
ஒன்றாகக் கலந்து விட்டாலும்
நாமிருவரும்
இன்னும்
தனித்தனிதான்
–
அறிமுகங்களில்
என்ன
நிகழ்ந்து விடப் போகிறது?
சமாதானப் படுத்திக்
கொள்வோம்.
–
————————
– சங்கரி
குமுதம்
படம்- இணையம்

நீ:

Posted: 05 Feb 2016 09:53 AM PST

- நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் நீ இருக்கின்றாய், நான் கேட்கும் ஒலிகளிலெல்லாம் நீ சிரிக்கின்றாய். என் இரவில் நிலவாகவும் என் கவிதை கனவாகவும் இருக்கின்றாய். – சமயங்களில் நானாகவும் இருக்கின்றாய். இப்படி எல்லாமுமாக நீ இருப்பதால்தான் நான் நானாகவே இருப்பதில்லை எப்போதும். – ———————— – கவிதா இராமகிருஷ்ணன் குமுதம் படம் - இணையம்

மாணவன்

Posted: 05 Feb 2016 09:53 AM PST

பசியை சிறை பிடித்தார்கள்
உன்னிடம் வராத இருக்க..
உறக்கத்தை சிறை பிடித்தார்கள்
உன்னிடம் நிரந்தரமாக இருக்க..

நீ மதுவை சிறைபிடித்தாய்
உன் லட்சியத்தை விடிவிக்க..
நீ மரணத்தை சிறைபிடித்தாய்
இவர்கள் கண்ணீரை விடிவிக்க ..

நமண்டி ப இரா

தடுமாற்றம் - ஒரு நிமிட கதை

Posted: 05 Feb 2016 09:05 AM PST

சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, சவரம் செய்துகொண்டு புத்துணர்ச்சி யோடு யாருக்காகவோ காத்திருந்தார். - அவருக்கு தொந்தி இல்லாததால், டீ ஷர்ட்டை இன் செய்து, லேசாக சென்ட் அடித்துக்கொண்டார். முகத்துக்கு கிரீம் தடவி அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார். - அடிக்கடி எழுந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். இருபது வருஷங்களுக்கு முன் ஆபீஸூக்கு பைக்கில் போகும் போது எப்படி இருந்தாரோ அப்படியே தன் தோற்றம் இருப்பதைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டார். அவருக்கு அறுபத்தி ...

யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க…!

Posted: 05 Feb 2016 08:59 AM PST


-
–
எலெக் ஷன் வருது. யாரும் ஒரே இடத்துல ரொம்ப நேரம் நிக்காதீங்க.
மூஞ்சில சுண்ணாம்பு அடிச்சு 'ரிசர்வுடு'ன்னு எழுதிட்டு
போயிருவாங்க…
–
– சமூக ஆர்வலர் ரவுடி
–
———————————–

கடி’க்க ‘கடி’க்க…… !!

Posted: 05 Feb 2016 08:56 AM PST

கொஞ்சம் பழைய கடிதான்... ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படித்து ரசிக்கலாம் - 1.நாய்க்கு நாலு கால் இருக்கலாம் ..ஆனா அதுலே லோக்கல் கால் , ISD கால் …ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது !!! 2.கங்கை ஆத்துலே மீன் இருக்கலாம் ….ஆனா அதுக்காக கங்கா ஜலத்துடன் மீனையும் காசி செம்பில் அடைக்க முடியுமா !!!! 3.திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும் , அவராலே ஒரே ஒரு குரலில்தானே பேசமுடியும் !!!! 4.என்னதான் உன் தலை சுத்துனாலும் , உன் முதுகை நீ பாக்க முடியுமா !!!! 5.மீன் பிடிக்கிறவன் மீனவன்…அப்போ ...

உதவ முடியுமா? - திருமூலர் திருமந்திரம்

Posted: 05 Feb 2016 08:52 AM PST

அனைவருக்கும் வணக்கம்

திருமூலர் திருமந்திரம் அணைத்து பாடல்களும் (வரிசைப்படி கிடைத்தால் நன்று) ஒலி வடிவில் கிடைக்குமா நண்பர்களே?

நன்றி!

என்னை பற்றி

Posted: 05 Feb 2016 08:48 AM PST

பெயர்:                                  கி. ஸ்ரீனிவாசன்
சொந்த ஊர்:                      சென்னை
ஆண்/பெண்:                     ஆண்
ஈகரையை அறிந்த விதம்:  வலைதளம்  தேடல்
பொழுதுபோக்கு:    தமிழ் புத்தகங்கள் வாசித்தல்  குறிப்பக சரித்திர நாவல்கள்
தொழில்:                      கணணி தொழில் நுட்பம்
மேலும் என்னைப் பற்றி:
பிறந்த நாள்  19-04-1960
தற்போது வசிப்பது  பெங்களூர்

பிப்ரவரி 22 -இல் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை

Posted: 05 Feb 2016 08:43 AM PST

கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு 3 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு வரும் 22 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. பிப்ரவரி 22 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள வங்கிகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - ---------------------

குறள் கூறும் அம்பு

Posted: 05 Feb 2016 08:00 AM PST

சிலபேர் பார்ப்பதற்குக் கரடுமுரடாக இருப்பார்கள்; ஆனால் தங்கமான குணத்தைப் பெற்றிருப்பார்கள் முட்கள் நிறைந்த பலாப்பழத்தின் உள்ளே இனிய சுளைகள் இருப்பதைப்போல ! அதிர்ந்து பேசமாட்டார்கள்; அடுத்தவர் படுகின்ற துன்பத்தைக் காணச் சகியாதவராய் , ஓடிவந்து உதவி செய்வார்கள் ! நம் வீட்டிலே நடக்கின்ற நல்லது கெட்டதுகளில் தவறாமல் பங்கு கொள்வார்கள் ! ஆடை அணிவதில் அவ்வளவாகக் கவனம் செலுத்தமாட்டார்கள் ! இன்னும் சிலரோ நேர்த்தியாக உடை அணிவார்கள் .நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமுமாக வலம் வருவார்கள் ! பகட்டாக இருக்கும் ...

கிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!

Posted: 05 Feb 2016 07:32 AM PST

- எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்! இந்த ஆசை யாருக்குத்தான் இருக்காது? - அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள். - இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா? முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. - கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். - திருப்பரங்குன்றம் ...

காதலாய் :

Posted: 05 Feb 2016 07:20 AM PST

- — உன் மௌனம் எனக்குத் தெளிவாய்ப் புரிகிறது… உன் பேச்சு என்னை மிகவும் குழப்புகிறது… பேசாமல் இரு. – நாம் பேச வேண்டியதை நம் மௌனங்கள் பேசிக் கொள்ளட்டும்… மெள்ள மெள்ள ஆனால் மிகத் தெளிவாய்.. – ————————– – – பா.செந்தாமரை குமுதம் படம்- இணையம்

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

Posted: 05 Feb 2016 07:12 AM PST

திரைப்படம்: தூக்கு தூக்கி இயற்றியவர்: உடுமலை நாராயண கவி பாடியோர்: பி. லீலா, ஏ.பி. கோமளா, டி.எம். சௌந்தரராஜன், வி.என். சுந்தரம் ஆண்டு: 1954 ========================= - குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் - உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது உருவ அமைப்பைக் காணும் போது ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு - பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும் தலையில் பேனும் ஈறும் தேடித் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(414)

Posted: 05 Feb 2016 07:07 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

என் பெயர் ரோஹித் வெமூலா.

Posted: 05 Feb 2016 06:17 AM PST

வாசிப்பில் ரசித்த வைரவரிகள். * என் பெயர் ரோஹித் வெமூலா. * ஒரு விபத்து என் பிறப்பு பின் எனது இருப்பில் எங்கிருந்து இத்தனை வெறுப்பு? சாதி சதி செய்தது மதம் அப்படித்தான் என்றது. பொருளாதாரம் சுரண்டியது கல்வி குருடாய் இருக்கச் சொன்னது இயற்கை தன்னை .இழந்து தவித்தது கடவுள் காணக்கிடைக்கவில்லை அனைத்தும் சந்தை என்றான பின் அன்பும் சந்தைக்குச் சென்றது விலைபோகாத அன்பு அநாதையாய் நின்றது மனிதம் அகதியாய் ஓடியது மனம் ஏங்கித் தவித்தது அன்பை விதைத்தது அன்பை வளர்த்தது அன்பைப் பறிமாறி அன்பின்றி ...

கெயில் வழக்கில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவு

Posted: 04 Feb 2016 11:38 PM PST

- நேற்றுமுன் தினம் விளைநிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்கள் பதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இது தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஜெயலலிதா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கில் எடுத்துரைக்க வேண்டிய ...

கவிஞர்களே கவனியுங்கள்

Posted: 04 Feb 2016 10:14 PM PST

இந்த மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சென்னை நகரின் மிக உயர்ந்த கட்டிடமொன்றின் மீது ஏறிக்கொண்டு கீழே பார்க்கிறேன். எப்படியெல்லாம் பரபரக்கிறார்கள் இந்த மனிதர்கள் குள்ளம் குள்ளமாக இருந்துகொண்டு! எனக்கு ஒரு நிமிடம் சிரிப்புதான் வருகிறது. ஆனால் அடுத்த நிமிடமே என்னால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை. இவ்வளவு உயரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும் இந்த கட்டிடத்தை எழுப்பியது இந்த குள்ளமான மனிதர்கள்தானே? அதோ அந்த பரபரப்பான சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக பறந்து செல்லும் ...

தங்கம் குறித்த செந்திகள் - தொடர் பதிவு

Posted: 04 Feb 2016 06:31 PM PST

- சென்னை : தங்கம் விலை இன்று(பிப். 1ம் தேதி) சவரனுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. - சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நி‌லவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,538-க்கும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.20,304-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.27,140-க்கும் விற்பனையாகிறது. - வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.37.40-க்கும், பார்வெள்ளி மட்டும் கிலோவுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.34,970-க்கும் விற்பனையாகிறது. - ---------------------------- தினமலர் படம் ...

நினைவு...

Posted: 04 Feb 2016 04:39 PM PST

- நீயோ எந்தன் நினைவாக என்று எடுத்துச் சென்று விட்டாய் - நானோ உந்தன் நினைவாக என்று வைத்துக் கொண்டு விட்டேன்... - இருப்பினும், நம் இருவரிடமும் இல்லை நம் மனசு! - ------------ ச.கணபதி சுப்ரமணியன் நம் இருவரிடமும் இல்லை நம் மனசு - தொகுப்பிலிருந்து படம்- இணையம்

அவளுக்கு மட்டும் இரு முகங்கள்!

Posted: 04 Feb 2016 04:34 PM PST


-
மீனுக்குத் தூண்டிலிட்டுக்
கண்டதுண்டு-
இங்கோ மீன்கள்
தூண்டிலிடுகின்றன! -
அவள் கண்களெனப்
பெயர் சூட்டிக்கொண்டு!
-
-----------------


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™