Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சீராய்வு மனு போட வேண்டும்!

Posted: 03 Feb 2016 07:28 AM PST

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக, எரிவாயு குழாய்களைப் பதித்து, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்துமாறு, 2013ம் ஆண்டு, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, கெயில் நிறுவனம் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இரண்டாண்டுகளுக்குப் பின், தற்போது, உச்ச நீதிமன்றம், 'தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்தில் கெயில் நிறுவனம் உத்தேசித்த ...

நாடு முழுவதும் ரயில்வே திட்டங்கள் இனி வேகமெடுக்கும் : மாநிலங்களுடன் கைகோர்க்கிறது மத்திய அரசு

Posted: 03 Feb 2016 09:33 AM PST

புதுடில்லி: நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால், நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் ரயில்வே திட்டங்களை, விரைந்து நிறைவேற்றும் வகையில், மாநில அரசுகளுடன் கைகோர்த்துள்ளது மத்திய அரசு. மாநிலங்களுடன் இணைந்து, கூட்டு நிறுவனங்களை அமைத்து, திட்டங்களை நிறைவேற்ற, ரயில்வே துறைக்கு, நேற்று, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஏராளமான ரயில்வே திட்டங்கள், நிதி மற்றும் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், நிறைவேற்றப்படாமல், நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கின்றன. ரயில்வே துறை, 26 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் ...

வெள்ள நிவாரணம் கிடைக்காமல் 10 லட்சம் குடும்பங்கள் ஏமாற்றம்

Posted: 03 Feb 2016 09:43 AM PST

தமிழக அரசு அறிவித்த வெள்ள நிவாரணம், இரண்டு மாதங்களாகியும் கிடைக்காததால், நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த, 10 லட்சம் குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 2015 நவம்பர் இறுதியிலும், டிச., முதல் வாரத்திலும், பருவ மழை விடாது கொட்டித் தீர்த்தது. நீர் நிலைகள் நிரம்பி, பாதுகாப்பு கருதி திறந்து விடப்பட்டன. தலைநகர் சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களும் வெள்ளக்காடாகின. இதனால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, ஒரு மாதமானது.இந்நிலையில், வெள்ளத்தால் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; நிரந்தர ...

ஐவர் அணியினரை எதிர்க்க விதவைகள் : தி.மு.க.,வின் 'சென்டிமென்ட்' திட்டம்

Posted: 03 Feb 2016 09:47 AM PST

'தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை' என, அறிவித்த அ.தி.மு.க.,வுக்கு, விதவைகள் மூலம், 'சென்டிமென்ட் அட்டாக்' கொடுக்க, தி.மு.க., மேலிடம் திட்ட மிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

'தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை, சில மாதங்களுக்கு முன் தீவிரமடைந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - காங்., உட்பட, பல கட்சி கள் போராட்டங்களை நடத்தின. விஜயகாந்தும், மது விலக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதனால், சமீபத்திய சட்டசபை கூட்டத்தொடரில், மது விலக்கு தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு வெளியிடும் என, அனைத்து ...

நெருங்குகிறது தேர்தல் அடுக்கடுக்காக வெளியாகும் 'டெண்டர்'கள்

Posted: 03 Feb 2016 09:49 AM PST

சட்டசபை தேர்தல் தேதி, எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால், அரசு நிறுவனங்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 'டெண்டர்' வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

தமிழக அரசில், 36 துறைகள் உள்ளன. இவற்றின் கீழ், 70க்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள் செயல்படுகின்றன.
நடத்தை விதிகள்:
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளில் இருந்து, நடத்தை விதி அமலுக்கு வருவதால், புதிய பணிகளை செய்ய முடியாது; டெண்டர் வெளியிடவும் முடியாது. இதனால், அரசு துறைகள் ஒவ்வொன்றும், தங்கள் துறையில் உள்ள பணிகளுக்கு, விரைவாக டெண்டர் கோரும் ...

'சைகா'வுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Posted: 03 Feb 2016 09:51 AM PST

ஐதராபாத்: தென் அமெரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும், 'சைகா' வைரஸுக்கு எதிரான, முதல் தடுப்பூசியை, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள பாரத் உயிரி தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள், இரண்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்து, அதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளனர். தென் அமெரிக்காவின் 20க்கும் மேற்பட்ட நாடுகளில், சைகா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. பகல் நேர கொசுக்களால், இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவாது, அதே நேரத்தில் தாயிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு பரவும். இந்த வைரஸ் ...

விஜயகாந்தின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் தி.மு.க.,வினர் கடுப்பு: சில நாட்களுக்கு 'தண்ணி' காட்டும்படி கருணாநிதி ரகசிய உத்தரவு

Posted: 03 Feb 2016 10:38 AM PST

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதிப்பதால் தி.மு.க.,வினர் கடுப்பாகி உள்ளனர். அவருக்கு சில நாட்களுக்கு 'தண்ணி' காட்டும்படி கட்சியினருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். இதனால் தொடர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிடும் முடிவுக்கு வந்த அவர் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்தார். ...

மின் வாரிய தொ.மு.ச.,வில் பணம் சுருட்டல்? கருணாநிதி, ஸ்டாலின் தலையிட கோரிக்கை

Posted: 03 Feb 2016 11:02 AM PST

தமிழ்நாடு மின் வாரியத்தின் தி.மு.க., தொழிற்சங்கத்தில், உறுப்பினர் சந்தா பணத்தில், கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்து உள்ளது.தமிழ்நாடு மின் வாரியத்தில், தி.மு.க., உட்பட, 16 தொழிற்சங்கங்கள் உள்ளன. இவற்றில் உறுப்பினராக உள்ளவர்களின் சம்பளத்தில் இருந்து, 240 ரூபாய்; தீபாவளி போனசில் இருந்து, 200 ரூபாய் என ஆண்டுக்கு, 440 ரூபாய்; நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கும்போது, 500 ரூபாயை, மின் வாரியம் பிடித்தம் செய்து, சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் பெயரில் வங்கியில் செலுத்துகிறது. இதுதவிர, ஊழியர்கள் விருப்பப்படி, தங்களின் சங்கத்திற்கு, நன்கொடை ...

அ.தி.மு.க.,வில் 21 ஆயிரம் மனு; ரூ.23 கோடி வசூல்

Posted: 03 Feb 2016 11:06 AM PST

அ.தி.மு.க.,வில், நேற்று வரை விருப்ப மனு விற்பனை, 21 ஆயிரத்தை தாண்டியது. இதன் மூலம், 23 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. விருப்ப மனு கொடுப்பதற்கான தேதியை, மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
அ.தி.மு.க.,வில், போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனு வாங்கும் நடவடிக்கை, ஜன., 20ம் தேதி துவங்கியது. விண்ணப்பக் கட்டணம், 11 ஆயிரம் ரூபாய்; பிப்., 3ம் தேதி வரை, மனு வாங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, கட்சியினர் போட்டி போட்டு, விருப்ப மனு கொடுத்து வருகின்றனர்.
ஒவ்வொருவரும், ஜெயலலிதா பெயரில் ஒரு மனு ...

பட்ஜெட் கூட்டத்தொடர் தேதிகளில் மாற்றம்?

Posted: 03 Feb 2016 11:29 AM PST

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக, பார்லி., கூடவுள்ள நிலையில், டில்லியில் இன்று, அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கவுள்ளது. 'தமிழகம் உட்பட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் காரணமாக, பட்ஜெட் கூட்டத்தொடர் தேதிகளில் மாற்றம் செய்வது குறித்து, இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம்' என, தெரிகிறது.பட்ஜெட் கூட்டத்தொடருக்காக, வரும் 23ம் தேதி, பார்லி., கூடவுள்ளதாக, ஏற்கனவே தகவல் வெளியானது. வரும் 25ம் தேதி, ரயில்வே பட்ஜெட்டும், 29ம் தேதி, பொது பட்ஜெட்டும், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படலாம் என, தெரிகிறது. எப்போதுமே, இரு கட்டங்களாக, பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™