Tamil News | Online Tamil News |
- இன்று தாக்கலாகும் மத்திய பட்ஜெட், மக்கள் எனக்கு வைக்கும் பரீட்சை: 125 கோடி பேரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என மோடி நம்பிக்கை
- மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்: ஸ்டாலின்
- 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- தொடரும் விளம்பரங்கள்: ஆணையத்துக்கு அஞ்சும் கட்சிகள்
- அ.தி.மு.க., எதிர்ப்பு நிலை: தக்கவைக்க தி.மு.க., வியூகம்
- பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க தனக்கு தானே தீ வைத்த சிறுமி
- 'யூ - டியூப்'பில் சட்டசபை நிகழ்ச்சி: டில்லி சபாநாயகர் தடாலடி முடிவு
- 'அப்துல்கலாம் வி.ஐ.பி., கட்சி': பொன்ராஜ் துவக்கினார்
- தமிழகத்தில் மின்வெட்டே இல்லை: முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்
- ராகுல், கெஜ்ரிவால், யெச்சூரி உள்ளிட்ட 9 பேர் மீது தேச துரோக வழக்கு
| Posted: 28 Feb 2016 10:10 AM PST புதுடில்லி:''பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மக்கள் எனக்கு வைக்கும் பரீட்சை,'' என கூறிய பிரதமர் நரேந்திர மோடி ''நாட்டின், 125 கோடி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும்,'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் நாட்டு மக்களுடன் 'மன் கீ பாத்' என்ற, வானொலி நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். பார்லிமென்டில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள சூழ்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:நாடு முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை எழுதப்போகும் மாணவர்கள் ... |
| மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்: ஸ்டாலின் Posted: 28 Feb 2016 11:08 AM PST தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்: தமிழக அரசில், எந்தப் பணியாக இருந்தாலும், அதற்குரிய தகுதிகளுடன் விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களைத் தவிர்த்து, பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, நியமனங்கள் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்கும்; சந்தேகங்களுக்கும் வலு சேர்க்கும் வகையில், பிப்., 26ம் தேதி, செய்தி- மக்கள் தொடர்புத் துறையில், 40 உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பணி நியமனம் நடந்துள்ளது. இந்த, 40 பேரில் ஒருவர், ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வளர்மதியின்மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆளுங்கட்சியை சார்ந்தவர்களுக்கே இப்பணி என்ற ... |
| 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் Posted: 28 Feb 2016 11:12 AM PST தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, இன்று நிறைவு பெறுகிறது. இப்பணியில், 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளனர். அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, பிப்., 15 முதல், 29 வரை நடைபெறும் என, தேர்தல் கமிஷன் அறிவித்தது. இப்பணியின் போது, வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்களின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தி.மு.க.,வினர் கொடுத்த போலி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து, நீக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டது.இப்பட்டியல், ... |
| தொடரும் விளம்பரங்கள்: ஆணையத்துக்கு அஞ்சும் கட்சிகள் Posted: 28 Feb 2016 11:14 AM PST தமிழகத்தில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை, தேர்தல் ஆணையம், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. தேர்தல் அறிவிக்கை வந்த பிறகு, விளம்பரச் செலவு உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும், தேர்தல் துறை கண்காணிக்க துவங்கி விடும். அதனால், தமிழக அரசியல் கட்சியினர், முன்கூட்டியே தேர்தல் விளம்பரங்களை, அதிக அளவில் வெளியிடத் துவங்கி உள்ளனர். இதுகுறித்து, அரசியல் கட்சியினர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில், பெரியமாநிலங்களில் போட்டி யிடும் வேட்பாளர்கள், அதிகபட்சம், 28 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட முடியும். இக்காலத்தில், இதெல்லாம் ஒரு பெரிய தொகையே ... |
| அ.தி.மு.க., எதிர்ப்பு நிலை: தக்கவைக்க தி.மு.க., வியூகம் Posted: 28 Feb 2016 11:16 AM PST சென்னையில் வெள்ள சேதத்திற்கு பின், அதிகரித்துள்ள அ.தி.மு.க., எதிர்ப்பு நிலையை தக்கவைப்பதற்கு, தி.மு.க., ரகசிய வியூகம் வகுத்து வருகிறது.கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், சென்னையில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. அதன்பின் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மேயர் பதவி மட்டுமின்றி, கவுன்சிலர்கள் பதவிகளையும் அ.தி.மு.க., அள்ளியது. கவுன்சிலர்களால் அதிருப்தி: ஆனால், கடந்த ஆட்சியில் கவுன்சிலர்கள் தொடர்ந்த, 'பார்முலா'வை, தற்போதைய அ.தி.மு.க., கவுன்சிலர்களும் பின்பற்றி வருகின்றனர். இதனால், மக்கள் மத்தியில், எதிர்ப்பு நிலையை அவர்கள் உருவாக்கி உள்ளனர். அரசு ... |
| பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க தனக்கு தானே தீ வைத்த சிறுமி Posted: 28 Feb 2016 11:17 AM PST ஜெனீவா: ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் காமப்பசிக்கு இரையாகாமல் தப்பிக்க, தனக்கு தானே தீ வைத்து, அழகை அலங்கோலமாக்கியுள்ளார், ஈராக்கைச் சேர்ந்த யாஸிதி சிறுமி.ஈராக்கின் வடக்கு பகுதியில் யாஸிதி என்னும் சிறுபான்மை சமூகத்தினர் அதிகமாக வசிக்கின்றனர். இங்கு, ஆதிக்கம் செலுத்தி வரும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், யாஸிதி மக்கள் வாழும் கிராமங்களை சூறையாடி, அங்கிருந்த ஆண்களை கொன்று குவித்து, பெண்களையும், சிறுமிகளையும், பாலியல் அடிமைகளாக வைத்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்த பெண்களையும், சிறுமிகளையும் மீட்டு, ... |
| 'யூ - டியூப்'பில் சட்டசபை நிகழ்ச்சி: டில்லி சபாநாயகர் தடாலடி முடிவு Posted: 28 Feb 2016 11:18 AM PST புதுடில்லி : சட்டசபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு தனி, 'டிவி' சேனல் துவங்க மத்திய அரசு அனுமதியளிக்காததால், தனியார் கேபிள் 'டிவி' மூலமும், 'யூ - டியூப்'பிலும் சட்டசபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய, டில்லி மாநில சட்டசபை சபாநாயகர் முடிவு செய்துள்ளார். பார்லிமென்ட்டின் லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக, ராஜ்யசபா 'டிவி', லோக்சபா 'டிவி' என இரு 'டிவி'க்கள் இயங்கி வருகின்றன. அதேபோல, டில்லி சட்டசபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு, தனி, 'டிவி' சேனல் துவங்க அனுமதி கோரி, அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு, மத்திய அரசுக்கு ... |
| 'அப்துல்கலாம் வி.ஐ.பி., கட்சி': பொன்ராஜ் துவக்கினார் Posted: 28 Feb 2016 11:25 AM PST ராமேஸ்வரம்: 'அப்துல்கலாம் வி.ஐ.பி.,' (விஷன் இந்தியா பார்ட்டி) என்ற அரசியல் கட்சியை முன்னாள் ஜனாதிபதி கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் ராமேஸ்வரத்தில் நேற்று துவக்கினார். ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பொன்ராஜ், புதிய அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தினார். பச்சை, வெள்ளை, நீல நிற கொடியின் நடுவில் கலாம் படம் உள்ளது. நிகழ்ச்சியில் சென்னை, மதுரை, விருதுநகர் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். கட்சி தலைமை பொறுப்பாளராக பேராசிரியர் பரமாத்மா தேர்வு செய்யப்பட்டார். இணையதளத்தில் உறுப்பினர் சேர்க்கை சில ... |
| தமிழகத்தில் மின்வெட்டே இல்லை: முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் Posted: 28 Feb 2016 11:27 AM PST சென்னை : ''தமிழகத்தில் பல மணி நேரம் மின்வெட்டு என்ற நிலையை மாற்றி, இன்றைக்கு மின்வெட்டே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.சென்னை, ஆர்.கே.நகரில், நேற்று நடந்த அரசு விழாவில், அவர் பேசியதாவது:ஆர்.கே.நகர் தொகுதியை, என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். இத்தொகுதியை சேர்ந்த மக்களும், என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளனர். என்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து, முதல்வராக்கிய ஆர்.கே.நகர் தொகுதியில், 180 கோடி ரூபாய் மதிப்புள்ள, புதிய திட்டங்களை துவக்கி வைப்பதிலும்; 193 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு, அடிக்கல் ... |
| ராகுல், கெஜ்ரிவால், யெச்சூரி உள்ளிட்ட 9 பேர் மீது தேச துரோக வழக்கு Posted: 28 Feb 2016 12:05 PM PST ஐதராபாத்: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 9 பேர் மீது ஐதராபாத்தில் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், அப்சல் குரு நினைவு நாளில் நடந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை எழுப்பியது. இங்கு சில மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டார். ஐகோர்ட் உத்தரவுப்படி சில மாணவர்கள் போலீசில் சரணடைந்தனர். மாணவர்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 29,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |