ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
- படித்ததில் பிடித்தது :) --உணவை வீணடிக்க வேண்டாம்!
- இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016
- காதல் தானோ
- விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??
- b][u]நீங்கள் யாராவது கேட்டீர்களா ?[/u] [/b]
- ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
- ஒழுக்கம் துறந்த இரவு
- கறிவேப்பிலை!
- இறைவனின் அன்பு
- அனுபவத் துளிகள்
- ரமணி ஹைக்கூ
- பாமரர் தேவாரம்
- சட்டம்
| மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Posted: 28 Feb 2016 10:58 AM PST மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸ்ன் ஒரு அற்புதமான போட்டோ நம் தளத்தில் இருந்து, என்னுடைய பல கதைகள், மற்றும் இந்த ட்ரிப் (போடோவுடன்) வேறு ஒரு தளத்தில் பார்த்தேன், மற்றும் பலருடைய பதிவுகளையும் அங்கே பார்த்தேன் ..........அது யார் என்று எனக்குத் தெரியலை, ரொம்ப shocking ஆகவும் வருத்தமாகவும் போச்சு எனக்கு.............அதனால் ... |
| படித்ததில் பிடித்தது :) --உணவை வீணடிக்க வேண்டாம்! Posted: 28 Feb 2016 10:53 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 Posted: 28 Feb 2016 10:51 AM PST இனிய 40 TH பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! ஈகரையின் இதயம் எனப்படுபவர் இவர் ஈகரையின் சுத்த இரத்த ஓட்ட காரணி இவர் .என்பதாலா ? இல்லை ஈகரையை உயிர்ப்புடன் கொண்டு செல்வதாலா ? உன்னத அணுகு முறையாலா ? [color:fb9e= #009900]உடல் நலம் உள்ள நலம் உனதாக ! செல்வமும் செழிப்பும் உனதாக ! சீரும் சிறப்பும் உனதாக ! Naughty forty ஆனாலும் Knotty ஆகாத நற்குணம் உனதன்றோ ! . இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! ரமணியன் |
| Posted: 28 Feb 2016 10:41 AM PST காதல் தானோ காதல் தானோ எழுதுகோலுக்கு காகிதத்திடம், அழுது தீர்த்தது காதல் தானோ மெழுகுவர்த்திக்கு தீயிடம், ஒழுகித் தீர்த்தது. காதல் தானோ இமைக்கு கண்களிடம், படர்ந்து மேய்ந்தது காதல் தானோ மேகத்துக்கு நிலவிடம், மறைத்து ரசித்தது காதல் தானோ வானுக்கு வையகத்திடம், மழையால் நனைத்தது காதல் தானோ மலருக்கு வண்டிடம், தேனை வார்த்தது காதல் தானோ தென்றலுக்கு தேகத்திடம், உரசி மகிழ்ந்தது. காதல் தானோ கவியெனக்கு கன்னியிடம், கவிதை மலர்ந்தது ச. சந்திரசேகரன் |
| விவாதிக்கலாம் தமிழர்கள் யார்?? Posted: 28 Feb 2016 09:37 AM PST உருது பேசுகிற முஸ்லிம் மதத்தினர் தமிழர் அல்ல? என கூறுகிறார் சீமான். இது சரியா? தமிழன தலைவர் கலைஞர் கருணாநிதி தெலுங்கு பேசும் தெலுங்கு மொழிகாரர். தமிழர் அல்ல! கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட கன்னட மொழிகாரர் செல்வி ஜெயலலிதா!? அவரும் தமிழர் அல்ல பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள் அல்ல என்பது அவரது வாதம். சரியா? தவறா? அப்படியானால் தமிழர்கள் யார்? தந்தி தொலைகாட்சியின் நேர் காணலில் சீமான் கூறியது. விவாதத்திற்காக ஈகரையில் பதிவு செய்து உள்ளேன். |
| b][u]நீங்கள் யாராவது கேட்டீர்களா ?[/u] [/b] Posted: 28 Feb 2016 08:27 AM PST நீங்கள் யாராவது கேட்டீர்களா ? விஜயகாந்த் பேச்சை சமீபத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் பேசியது குறித்து கொஞ்சம் சேம்பிள் பார்ப்போம்....நான் உங்களையெல்லாம் பார்க்க வர்றேன்னு நினைக்கல. ஏன் அப்படி என்ன நடந்தது? அவங்கள பார்த்து கையெல்லாம் ஆட்டுனேன். அதை நீங்க கவனிக்கல. ஏன்னா நான் வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. எந்த வண்டியில வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா நீங்களும் கையாட்டி இருப்பீங்க பதிலுக்கு. நீங்க கையை ஆட்டி இருப்பீங்க… பதிலுக்கு டங்கு… ... |
| Posted: 28 Feb 2016 04:47 AM PST ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் #ரமணி_Clerihew_வாழ்நகை 20/01/2016 8. வயிறு சுத்தம் ஆச்சு டாய்லட் குப்பை ஆச்சு கழுவப் பறந்தேன் ஆலா கிடைத்தது கோக்கா கோலா! #ரமணி_Balliol_rhyme_நகைத்துளி 8. தகடூர்ப் போரில் அதியமான் அஞ்சி பகையில் மாளக் கதறும் நெஞ்சு நெல்லிக் கனியைத் தானே உண்டிருந்தால் தில்லியில் நம்மை ஆண்டு கொண்டிருப்பான்! ***** |
| Posted: 28 Feb 2016 04:26 AM PST ஓலைக்குடிசையிலே ஓரிரவுக்குடித்தனம்தான் ஏழை மகளொருத்தி எனை ஏங்கவைத்து அழைத்தாள் காமம் தலைக்கேற கயமைத்தனம் புரிய அவள் பின்னால் இறுக்கிப் பிடித்தேன் ஓலைப் படுக்கையிலே ஒட்டிப்படுத்திருந்தோம் காலை விடியும் மட்டும் கட்டிப் பிடித்திருந்தோம் முத்தம் நூறு வைத்து முங்கிப் பார்த்தேனே அவள் முந்தானை விலகையிலே மூர்ச்சையானேனே அவள் மாம்பிஞ்சு முலையழகில் மயக்கிடந்தேனே செவ்வாழைத்தொடை நடுவே என் சிந்தை சாய்த்தேனே ஒழுக்கம் உயர்ந்ததென்றே நானும் உரக்கப்படித்தவன்தான் ஒட்டுத்துணியுருவி தூர எறிந்துவிட்டேன் ஒழுக்கமும்கூடப் ... |
| Posted: 28 Feb 2016 12:37 AM PST கறிவேப்பிலையை, தொடர்ந்து, 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள்... * காலையில் வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். மேலும், செரிமான பிரச்னைகள் நீங்குவதுடன் முடி நன்கு கருமையாக வளரும். * ரத்தசோகை உள்ளவர்கள், காலையில், ஒரு பேரிச்சம் பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்தசோகை நீங்கும். * ... |
| Posted: 27 Feb 2016 10:00 PM PST கண்ணெடுத் தப்பினார் கண்ணப்ப நாயனார் அண்ணலோ ஆங்கே அமைதிகொள – கண்ணம்மாள் கண்ணப்ப நாயனார் கண்ணெடுத்துக் கண்கொள கண்ணப்பா நில்லென்றார் காப்பு (விளக்கம் - கண்ணப்ப நாயனார் கண்ணெடுத்து அப்பிய நிகழ்வு நாம் அறிந்ததே. ஒரு கண்ணை பிடுங்கி எடுக்கும்போது இறைவன் அமைதி காத்தார். மற்றொரு கண் துணைவியான இறைவியின் கண். அதனால் மற்றொரு கண்ணை எடுக்கும்போது கண்ணப்ப நில் என்றார். இன்னிகழ்வை விளக்கும் ஒரு வெண்பா. ) |
| Posted: 27 Feb 2016 09:44 PM PST அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 ***** |
| Posted: 27 Feb 2016 09:31 PM PST ரமணி ஹைக்கூ 03/11/2015 1. ஓவியக் கண்காட்சி அகலும் விழிகள் நடுவே கறுப்புக் கண்ணாடி 2. அடைமழை அழிக்கதவு ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார் காற்றில் குழந்தையின் முகம் 3. விண்வெளியில் பம்பரம் சாட்டை எது? அப்பா ஆய்வு மகன் கையில் பட்டம் ***** |
| Posted: 27 Feb 2016 09:24 PM PST பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| Posted: 27 Feb 2016 05:15 PM PST தற்காலத்திற்கு ஏற்றவாறு சட்ட திருத்தம் வேண்டும். ஆரினகஞ்சி பழங்கஞ்சி என்பதுபோல் வெகுகாலம் கடந்து அளிக்கப்படும் தீர்ப்பு ஏற்புடையதாக அமைவதில்லலை. ஒவ்வோர் சட்டப்பிரிவிற்கும் துணைப் பிரிவு வேண்டும். @ தீர்ப்பு வழங்க வேண்டிய காலம் நிர்ணயம் குறிப்பிட வேண்டும். அக்காலத்திற்குள் தீர்ப்புவழங்கப்பட்டு மேல்முறையீட்டிற்கு உகந்த அல்லது மக்கள் நீதி மன்றதீர்ப்பு போல் மேல்முறையீட்டிற்கு இடமளிக்க கூடாததாக. இருந்துட வேண்டும். நீதி மன்றத்திற்கு வழக்கு என்று வந்தாலே தண்டனை இன்றி தீர்ப்பே இருக்க கூடாது. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |