Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ. 2,157 கோடி இரட்டை ரயில் பாதை, அகல ரயில் பாதைக்கு நிதி

Posted: 25 Feb 2016 07:27 AM PST

ரயில்வே பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 2,157 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது; இது, கடந்த ஆண்டை விட, 277 கோடி ரூபாய் குறைவு என்ற போதிலும், இரட்டை ரயில் பாதை, அகல ரயில் பாதை பணிக்கு போதிய நிதி ஒதுக்கியிருப்பது, பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

லோக்சபாவில் நேற்று, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லாத போதும், பயணிகள் கட்டணத்தை உயர்த்தாதது, பயணிகளை நிம்மதி அடைய செய்தது.தமிழகத்தை பொறுத்தவரை,* சென்னை - டில்லி இடையே சரக்கு ரயில் பாதைக்கு முன்னுரிமை* நாகை, வேளாங்கண்ணி ...

விவசாயி தற்கொலை அதிகரிக்கும் அதிர்ச்சி தகவல்...அம்பலம் அரசு திட்டங்களால் பயனில்லை என்கிறது ஆய்வு

Posted: 25 Feb 2016 07:44 AM PST

புதுடில்லி: விவசாய பாதிப்பால், நாடு முழுவதும், 50 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகி இருப்பதாகவும், இதனால், விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதாகவும், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயக்கடன் ரத்து போன்ற மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு பயன் கிடைக்கவில்லை என்ற தகவலும் அம்பலமாகியுள்ளது. இதனால், நாட்டின் விவசாய உற்பத்தி பெரிதும் குறைந்து உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை அதிகம் உடைய நம் நாட்டில், விவசாயம் பெரிய சவாலாகவே இருந்து ...

ஸ்மிருதியின் ஆவேச பேச்சு'டுவிட்டரில்' மோடி பாராட்டு

Posted: 25 Feb 2016 07:47 AM PST

புதுடில்லி,: பார்லிமென்டில், எதிர்க்கட்சிகளுக்கு சவால் விட்டு ஆவேசமாக பேசிய, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை பாராட்டி, சமூக வலைதளமான டுவிட்டரில், பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து உள்ளார்.

டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் கைது மற்றும் ஐதராபாத் தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரம் குறித்து, லோக்சபாவில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. அப்போது பேசிய,அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'மாணவர்களை வைத்து, காங்., உள்ளிட்ட கட்சிகள், அரசியல் செய்கின்றன. கல்வி, காவிமயமாவதை நிரூபித்தால், பதவி விலகத் தயார்' ...

'வாட்ஸ் ஆப்'பில் வேட்பாளர் பட்டியல்: அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு

Posted: 25 Feb 2016 08:12 AM PST

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட, தகுதியான நபர்களை தேர்வு செய்ய, அரசியல் கட்சி தலைவர்கள் நேர்காணல் நடத்தி வரும் நிலையில், 'வாட்ஸ் ஆப்' மூலம் பரவும், வேட்பாளர் பட்டியல், அரசியல் கட்சியினரிடம் பதற்றத்தைஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளும், தயாராகி வருகின்றன. அ.தி.மு.க.,வில் இன்னமும் நேர்காணல் துவங்கவில்லை. அதேநேரம் தி.மு.க., - தே.மு.தி.க., - த.மா.கா., - காங்கிரஸ் போன்ற கட்சிகளில், விருப்ப மனு கொடுத்தவர்களிடம், நேர்காணல் நடந்து வருகிறது. அ.தி.மு.க.,வில் யாருக்கு, 'சீட்' என்பதை, யாரும் கணிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு முதல்வர் ...

ராகுல் -கருணாநிதி கைகோர்ப்பு

Posted: 25 Feb 2016 08:17 AM PST

திருச்சியில் அடுத்த மாதம் நடக்கும் சமூக நீதி மாநாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கலந்து கொள்கிறார்.

திராவிடர் கழக தலைவர் வீரமணி ஏற்பாட்டின் பேரில், அடுத்த மாதம், 20ம் தேதி, திருச்சியில் பிரம்மாண்டமான முறையில், சமூக நீதி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை, மதச்சார்பற்ற கட்சிகளின் மாநாடாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், இந்த மாநாட்டிற்கு, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ...

தேய்பிறையால் தேக்கம் காத்து கிடக்கும் கட்சிகள்

Posted: 25 Feb 2016 08:24 AM PST

கூட்டணி பேச்சை, மார்ச் மாதம் வளர்பிறையில் துவக்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. இதே வழிமுறையை மற்ற கட்சிகளும் பின்பற்ற உள்ளதால், மார்ச் இரண்டாவது வாரத்தில், கூட்டணி பேச்சு சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள, அ.தி.மு.க., 2014 லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 37 இடங்களில் வெற்றி பெற்று, சாதனை படைத்தது.எனவே, சட்டசபை தேர்தலிலும், தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க., இம்முறை தி.மு.க., கூட்டணிக்கு செல்ல ...

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் அதிருப்தி பாதி; திருப்தி பாதி

Posted: 25 Feb 2016 08:52 AM PST

ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு, 2,157 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

முந்தைய பட்ஜெட்டை ஒப்பிடுகையில், இது, 277 கோடி ரூபாய் குறைவு என்றாலும், விழுப்புரம் - திண்டுக்கல், மதுரை - மணியாச்சி - துாத்துக்குடி; மணியாச்சி - நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கு, 700 கோடி ரூபாய் ஒதுக்கிஇருப்பது, ரயில் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. அதேபோல், தாம்பரத்தில்,ரயில்வே முனையம் அமைக்கும் பணிக்கு, கணிசமான தொகை ஒதுக்கப்பட்டு, அந்தப் பணி விரைவுபடுத்தப்பட்டு உள்ளது திருப்தி ...

ரயில்வே பட்ஜெட் புதிய அதிவிரைவு ரயில்கள்

Posted: 25 Feb 2016 09:41 AM PST

வழக்கமாக இரண்டு நகரங்களுக்கு இடையே, புதிய ரயில்கள் அறிவிக்கப்படும். ஆனால், இந்த பட்ஜெட்டில், புதுமையாக, பல்வேறு புதிய ரயில் சேவைகளை அறிவித்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாத நிலையில், இந்த புதிய ரயில் சேவைகள் மூலம், கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹம்சபர்: முழுவதும், 'ஏசி' வசதி உள்ளது இந்த ரயில் சேவை. இதில் தேவைப்படுவோருக்கு உணவும் பரிமாறப்படும்.தேஜாஸ்: புல்லட் ரயில்களுக்கு முன்னோடியாக இந்த வகை ரயில் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன், இந்த ரயில் செல்லும் ...

வேகமெடுக்கிறது ரயில்வே: புதுவித எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்;பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் உயர்வு எதுவுமில்லை

Posted: 25 Feb 2016 10:31 AM PST

புதுடில்லி:மத்திய அரசின், 2016 - 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. அதேநேரத்தில், அதிவேக ரயில்கள், முன்பதிவு இல்லாத ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை, ஆண்டுக்கு சராசரியாக, 200 கி.மீ., தொலைவுக்கு மட்டுமே, புதிய வழித் தடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்தாண்டில் மட்டும், 2,800 கி.மீ., தொலைவுக்கு புதிய வழித்தடங்களை அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

பிரதமர் மோடிக்காக "வெயிட்டிங்'; அ.தி.மு.க., எம்.பி.,க்கள் விரக்தி

Posted: 25 Feb 2016 02:03 PM PST

புதுடில்லி : 'கெயில்' விவகாரத்திற்காக, நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக, நேரம் ஒதுக்கித் தரும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்னும் அனுமதி கிடைக்காததால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில், விளை நிலங்கள் வழியாக, எரிவாயு குழாய்களை பதிப்பதற்கு, 'கெயில்' நிறுவனத்திற்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நடவடிக்கை, விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், தமிழக அரசியல் கட்சிகள், இந்த முடிவுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™