Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


'இவரு ரஜினி படத்தில் நடிச்சவர் தானே..!'- விபத்தில் சிக்கியவருக்கு கைகொடுக்காத 108

Posted: 25 Feb 2016 09:05 AM PST

ஒளிப்பதிவாளர் ஒருவருடன் பேட்டியை முடித்துக் கொண்டு வடபழனியில் இருந்து நானும் புகைப்படக்காரரும் திரும்பிக் கொண்டிந்தோம். வடபழனி பேருந்து நிலையத்துக்கும் விஜயா மருத்துவமனைக்கும் இடையில் காலை 11 மணி அளவில் ஒரு விபத்து நடக்கிறது. முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவரை பின்னால் வந்து கொண்டிருந்த வேன் ஒன்று மோதிவிட,  நிலைகுலைந்து  கீழே விழுகிறார் அந்த பெரியவர். அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நாங்கள்,  எங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு அவரை தூக்கி நிறுத்த ...

நூல்கள் தேவையா !!!!!

Posted: 25 Feb 2016 08:13 AM PST

நண்பர்களே

கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன.
எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன்.
இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில்.

நன்றி

கி.ஸ்ரீநிவாசன்

ஜெயகாந்தனின் நாவல்கள்

Posted: 25 Feb 2016 05:43 AM PST

நண்பர்களே ஜெயகாந்தனின் இரண்டு நாவல்கள் உங்களுக்காக கங்கை எங்கே போகிறாள் http://www.mediafire.com/view/k87xb7ifcai3tkr/Jeyakanthan-Gangai_enge_pogiraal.pdf ஒரு நடிகை நாடகம் பார்கிறாள் http://www.mediafire.com/view/5a1tqv7s0a8lt7s/Jeyakanthan-Oru-Nadigai-Naadagam-Paarkkiraall.pdf நன்றி

வால்கா முதல் கங்கை வரை .. மின்னூல் கிடைக்குமா ?

Posted: 25 Feb 2016 05:03 AM PST

வால்கா முதல் கங்கை வரை .. மின்னூல் கிடைக்குமா ?

என் அம்மாவும் மனைவியும் சிரிச்சுப் பேசிட்டிருந்தாங்க…

Posted: 25 Feb 2016 02:44 AM PST

- என் அம்மாவும் மனைவியும் சிரிச்சுப் பேசிட்டிருந்தாங்க. அப்படியா? எங்கே? என் அம்மா எதிர்வீட்டுக்காரிகிட்டேயும், மனைவி பக்கத்துவீட்டுக்காரிகிட்டேயும்! – ——————— – இவங்க ரெண்டும் எனக்குப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள். ரொம்ப சந்தோஷம். அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு? – ———————————— – என்ன டாக்டர், அந்த பேஷண்டுக்கு ஆஸ்பத்திரில கொடுத்த உடைமுழுக்க ஏதேதோ கம்பெனி விளம்பரமா இருக்கு? அந்தக் கம்பெனிகள் எல்லாம் சேர்ந்துதான் அவரோட அறுவை சிகிச்சைக்கு ஸ்பான்சர் பண்றாங்க…! – —————————————- – என்னது ...

நட்டநடு நிசியில்.....

Posted: 25 Feb 2016 12:48 AM PST

வழக்கம்போல என்னுடைய அறையில் அமர்ந்து இன்டர்நெட்டில் மேய்ந்துகொண்டு இருந்தேன் . அப்போது மணி இரவு 11-45 இருக்கும். நான் எப்போதும் விழித்துக்கொண்டு இருக்கும் நேரம்தான் அது . ஏனென்றால் எனக்கு இரவின் அமைதி பிடிக்கும்; இரவின் சலனமற்ற தன்மையும், இருட்டும் எனக்கு மிகவும் பிடித்தமானவை . ஆனால் இந்த இரவு வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தது . சுற்றுப்புறத்தில் மட்டுமல்லாது என் மனதின் உள்ளேயும் ஒரு மயான அமைதி நிலவியது. நான் வலைதளத்தில் மேய்ந்துகொண்டு இருந்தாலும் என் எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருந்தன.தொலை ...

நான் கண்டுபிடிச்ச உண்மை – மாதவன் ஓபன் டாக்

Posted: 25 Feb 2016 12:38 AM PST

- 'இறுதிச் சுற்று' படம் ஹிட்டான உற்சாகத்தில் இருந்தார் மாதவன். தமிழ் சினிமா விதம்விதமான காதல்களில் கரைந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில், பெண்கள் குத்தச் சண்டை மற்றும் விளையாட்டில் கலந்திருக்கும் அரசியலைக் களமாகக் கொண்ட வித்தியாசமான இப்படம் மூலம் மாதவனுக்கு அடுத்த ரவுண்ட் ஆரம்பம். – 2012ல் வேட்டை வெளியானது. அதற்குப்பின் நீண்ட இடைவெளி ஏன்? – டைரக்டர் சுதா, என்னிடம் இந்த கதையைச் சொல்லி ரொம்ப நாளாச்சு. நான் ஒப்புக் கொண்டாலும், அதற்காக என்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. ...

இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?

Posted: 25 Feb 2016 12:15 AM PST

வில்லடிச்சான் கோயிலிலே கோயிலிலே! விளக்கேத்த யாருமில்லே யாருமில்லே! குடமடிச்சான் கோயிலிலே கோயிலிலே! குத்துவிளக்கேத்த நாதியில்லே நாதியில்லே! – ஒருநாள் மஹா பெரியவாள் தரினத்துக்குச் சென்றிருந்த சமயம், அவர் இந்தப் பாட்டு வரிகளை சொல்லிவிட்டு, 'இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?' என்று கேட்டார். – வில்லடிச்சான், குடமடிச்சான் என்ற வார்த்தைகள் வில்லுப்பாட்டைக் குறிப்பவையோ? என்ற சந்தேகம் இருந்தாலும், நானறிந்த வரையில் வில்லுப்பாட்டு பாடும்போது இதைப் பாடிக் கேட்டதில்லை; – எனவே, ...

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 24 Feb 2016 09:04 PM PST

உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன்

2016 தவளை போல் தாவும் ஆண்டு

Posted: 24 Feb 2016 08:25 PM PST

- 2016-ம் ஆண்டுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது 366 நாட்களைக் கொண்ட லீப் ஆண்டு என்பதுதான். - நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்த விநோத நாள் குறித்து, மேலும் சில சுவையான தகவல்கள்: - * ஜூலியஸ் சீசர் காலம்வரை ஓர் ஆண்டுக்கு 355 நாட்கள்தான் இருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 22 நாட்களைக் கொண்ட கூடுதல் மாதம் ஒன்று சேர்க்கப்பட்டு வந்தது. - தன்னுடைய அரசவை வானியலாளர் சோசிஜீன்ஸிடம் நாட் காட்டிகளை எளிமைப்படுத்தும்படி கி.மு. 45-ல் ஜூலியஸ் சீசர் ஆணையிட்டார். அப்போதுதான் 365 நாள் கொண்ட ...

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்

Posted: 24 Feb 2016 06:24 PM PST

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்

முகங்களும் பாவனைகளும்

Posted: 24 Feb 2016 05:53 PM PST



அனுமந்தபுரம். செங்கல்பட்டு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™