Tamil News | Online Tamil News |
- பொய் செய்திகளை கண்காணிக்க புதிய திட்டம்
- ஓட்டளித்ததை உறுதி செய்யும் வசதி நாடு முழுவதும் அமல்! 2019 பொதுத் தேர்தலில் செயல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு
- வறுமையை ஒழிப்பதே குறிக்கோள்: பார்லி.,யில் ஜனாதிபதி உரை
- கேட்டது வெண்ணெய்; தருவது சுண்ணாம்பு
- ஜெ., படத்தை பச்சை குத்திய அ.தி.மு.க.,வினர்: நாசூக்காக நழுவிய அமைச்சர்கள்
- தேர்தல் கமிஷன் நடவடிக்கை: நான்கு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?
- ஜெ., தீர்ப்பை எதிர்த்த அப்பீல் வழக்கில் விசாரணை ஆரம்பம்; நீதிபதி குமாரசாமி உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடகா வாதம்
- பல்கலை விவகாரம்: நள்ளிரவில் சரணடைந்த மாணவர்களால் பரபரப்பு
- பிரதான சாலைகளை மறித்து கூட்டம்: கட்சிகள் மீது பொதுமக்கள் காட்டம்
- மன உளைச்சலால் தவறான உத்தரவு பிறப்பித்தேன்: நீதிபதி கர்ணன் கடிதம்
| பொய் செய்திகளை கண்காணிக்க புதிய திட்டம் Posted: 23 Feb 2016 08:03 AM PST புதுடில்லி:சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் வெளியிடப்படும் செய்திகள், கருத்துகள், விமர்சனங்கள் போன்றவற்றில், எதிர்மறையான, பொய்யான கருத்துகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் இணையதளம் மற்றும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இணையதளங்கள், பத்திரிகை - தொலைக்காட்சிகளின் இணைய செய்தி தளங்கள், 'பிளாக்' எனப்படும் வலைப்பூ, டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் - ஆப் போன்ற சமூக வலைதளங்களில், கருத்து பரிமாற்றம் மிக வேகமாக நடந்து வருகிறது.இதை பயன்படுத்தி, பலர், தங்களுடைய சொந்தக் கருத்து என்ற பெயரில், ... |
| Posted: 23 Feb 2016 08:50 AM PST புதுடில்லி : ''மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுகளை, வாக்காளர்கள் உறுதி செய்யும் வகையிலான புதிய கருவியின் பயன்பாடு, அடுத்த பொதுத் தேர்தலில், நாடு முழுவதும் பரவலாக்கப்படும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி தெரிவித்தார். இதற்காக, 14 லட்சம் கருவிகள், 1,500 கோடி ரூபாயில் வாங்கப்படும்.பொதுத் தேர்தலில், 10 ஆயிரம் டன் காகிதம் பயன்படுத்துவதை தடுக்கவும், தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தும் வகையிலும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திர நடைமுறை அமல்படுத்தப்பட்டது. கடந்த, 1998ல், கேரள மாநிலம், வடக்கு பரவூர் சட்ட சபை இடைத் தேர்தலின் போது, சில ஓட்டுச் ... |
| வறுமையை ஒழிப்பதே குறிக்கோள்: பார்லி.,யில் ஜனாதிபதி உரை Posted: 23 Feb 2016 08:51 AM PST "நாட்டின் வளத்தை பெறுவதில், ஏழைகளுக்கே முன்னுரிமை உள்ளது. அவர்களது வாழ்க்கை தரம் முன்னேற வேண்டும். எனவே, வறுமையை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவது தான், மத்திய அரசின் ஒரே குறிக்கோள்,'' என, பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று உரை நிகழ்த்தினார். இந்தாண்டின் முதல் கூட்டத் தொடரான, பட்ஜெட் கூட்டத் தொடர், நேற்று துவங்கியது.இதையொட்டி, பார்லிமென்ட் மைய மண்டபத்தில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் மத்தியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிகழ்த்திய உரையின், முக்கிய அம்சங்கள்:*'ஜன்தன்' திட்டத்தின்படி, 21 கோடி வங்கிக் ... |
| கேட்டது வெண்ணெய்; தருவது சுண்ணாம்பு Posted: 23 Feb 2016 09:21 AM PST தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை : தமிழகத்தில், தற்போது, 3.5 கோடி பெண்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே, 'டாஸ்மாக்' கடைகளை இழுத்து மூட வேண்டும்; மதுவினால் சீரழியும் குடும்பங்களை காப்பற்ற வேண்டும்; மதுவிலக்கை, உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என, அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிராக அறப் போராட்டம் நடத்தினர். அறப்போர் நடத்திய பெண்களை, அ.தி.மு.க., அரசின் போலீசார், அவமானப்படுத்தும் வகையில், மனித உரிமைகளுக்கு மாறாக நடந்து, கைது நடவடிக்கை வரை சென்றனர். இவையனைத்தும், தமிழக மகளிர் மனதில், நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. இதிலிருந்து, மகளிர் கவனத்தை திசை திருப்பவே, ... |
| ஜெ., படத்தை பச்சை குத்திய அ.தி.மு.க.,வினர்: நாசூக்காக நழுவிய அமைச்சர்கள் Posted: 23 Feb 2016 09:38 AM PST தமிழக முதல்வரின், பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் தொண்டர்கள் என, 668 பேரின், வலது கையில் முதல்வரின் திருவுருவ படத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி, சென்னை, வேளச்சேரியில் நேற்று நடந்தது.வேளச்சேரி தொகுதி, எம்.எல்.ஏ., அசோக், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். தாமதமாக துவக்கம்காலை, 8:00 மணிக்கு, அமைச்சர்களான பன்னீர்செல்வம், நந்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனிச்சாமி, வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர், நிகழ்ச்சியை துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் மதியம், 2:00 மணிக்கு கோகுல இந்திரா தவிர, மற்ற அமைச்சர்கள் அனைவரும் அங்குவந்தனர். பின், ... |
| தேர்தல் கமிஷன் நடவடிக்கை: நான்கு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? Posted: 23 Feb 2016 10:23 AM PST சென்னை: தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, பிப்., 15ல் துவக்கப்பட்டது. அதன்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்கள் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர் விவரங்கள் தயாரிக்கப்பட்டன.இதுதவிர, 51 சட்டசபை தொகுதிகளில் உள்ள போலி வாக்காளர் விவரங்களை, தி.மு.க., வழங்கி உள்ளது.இவற்றின் அடிப்படையில், ஓட்டுச்சாவடி வாரியாக, நீக்கப்பட வேண்டியவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது; அதில், நான்கு லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர். இப்பட்டியல், இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், ஓட்டுச்சாவடி அலுவலர் மூலமாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் ... |
| Posted: 23 Feb 2016 10:51 AM PST புதுடில்லி : தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான, 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதம், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று துவங்கியது. 'கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என, கர்நாடக அரசு வாதிட்டது.சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், பா.ஜ., ... |
| பல்கலை விவகாரம்: நள்ளிரவில் சரணடைந்த மாணவர்களால் பரபரப்பு Posted: 23 Feb 2016 11:08 AM PST புதுடில்லி: இந்தியாவிற்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் தேடப்பட்ட டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர்களில் 2 பேர் இன்றுநள்ளிரவி்ல போலீசில் சரணடைந்தனர்.கடந்த 9-ம் தேதி பார்லி. தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கு தண்டனை நினைவு நாளையொட்டி, மாணவர் தலைவர் கன்னையாகுமார் தலைமையில் மாணவர்கள், இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து பேசியதாக புகார் கூறப்பட்டது. டில்லி போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மாணவர் தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமின் மனு கோர்ட்டில் ... |
| பிரதான சாலைகளை மறித்து கூட்டம்: கட்சிகள் மீது பொதுமக்கள் காட்டம் Posted: 23 Feb 2016 11:16 AM PST பிரதான சாலைகளை மறித்து, அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்துவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து கட்சிகள் சார்பிலும் தெருமுனை, செயல்வீரர் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், பேரணி நடக்கின்றன. இரண்டு நாட்கள்அவற்றில் பெரும்பாலான நிகழ்ச்சிகள், பிரதான சாலைகளை மறித்து நடக்க துவங்கி உள்ளன. இதற்காக, முதல் நாளே ஏற்பாடுகள் துவங்கி விடுவதால், குறைந்த பட்சம், இரண்டு நாட்களாவது பகுதிவாசிகள் கடும் அவதிப்பட நேரிடுகிறது. அந்த வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தையும், அண்ணா சாலையையும் ... |
| மன உளைச்சலால் தவறான உத்தரவு பிறப்பித்தேன்: நீதிபதி கர்ணன் கடிதம் Posted: 23 Feb 2016 11:18 AM PST புதுடில்லி, :மனஉளைச்சல் பாதிப்பால் தான், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தடை விதித்து தவறான உத்தரவு பிறப்பித்தாக, சென்னை ஐகோர்ட் நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருப்பவர், கர்ணன். இவரை, கோல்கட்டா ஐகோர்ட்டுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சமீபத்தில் உத்தரவிட்டார். தடை விதித்தார்இந்த உத்தரவை, தானாக முன் வந்து வழக்காக எடுத்த நீதிபதி கர்ணன், தன்னை பணிமாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தார்.இதையடுத்து, சென்னை ஐகோர்ட் பதிவாளர் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 24,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |