Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இனி நாட்டுக்குத்தேவை மூத்த முதல் குடிமகன்ஆட்சி.

Posted: 23 Feb 2016 03:03 PM PST

என்னங்க இதற்கு முன் ஆரம்ப பள்ளிகளை அந்தந்த ஊராட்சி தலைவர்களே கண்காணித்து பராமரித்தார்கள். அதில் விருப்பு வெறுப்பு படி நடவடிக்கைஎடுத்து சில நேர்மையானவர்களுக்கு பாதகம் விளைவித்தார்கள் என்பதால் >>அரசு ஊழியராக பலநாள் போராடி ஒன்றிய ஆணையர்கள் மேற்பார்வையில் கொணர்ந்து பிறகு தனியாக ஓர் துறை ஏற்படுத்தி உதவி சொடக்க கல்வி அலுவலர் என்றவரிடம் ஒப்படை செய்தது, அதிலும் ஆசிரியரே அவர்களை மேற்பார்வையிட வைத்ததால் தற்போது ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இல்லாமல் ஓர் அதிதீவிரவாதிகள் கூட்டமாக உருவாகி தன் பணியின் தன்மையை ...

சசியின் குட்டி கவிதைகள்

Posted: 23 Feb 2016 09:27 AM PST

விரக்தியில் இருந்தேன்  வெளியே வந்தாய்  சன்னியாசி ஆனேன்!!  _____________________________ மறைத்தாய்  முகம்தனை  மரமானேன்!!  ________-_____-_- காய்ந்த சருகாய்  காணப்பட்டேன் புன்னகைத்தாய்  மலர்ந்தேன்!!!!  _----___-________-----_- கரம்பிடிப்பாயா?  கைக்கெட்டா தூரத்தில்  காகித பூவாய் நான்!!  ____-----________ வார்த்தைகளால்  அல்ல வலி  உன் மௌனத்தால்!!

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Posted: 23 Feb 2016 09:21 AM PST





தளிஞ்சி கூட்டம் குல தெய்வம்

Posted: 23 Feb 2016 09:15 AM PST

எனக்கு கொங்குவேளாளர் தளிஞ்சி கூட்டம் குல தெய்வம் எது என்பது தெரிய வேண்டும்?

தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பக்கம்,சென்னை

Posted: 23 Feb 2016 09:04 AM PST

தல சிறப்பு: மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார். லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது. மூர்த்தி சிறியது. கீர்த்தி பெரியது. பொது தகவல்: இக்கோயிலிலுள்ள தூண்களில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. தூணில் சிற்பமாக சரபேஸ்வரர் காட்சி தருகிறார். ...

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

Posted: 23 Feb 2016 08:35 AM PST

36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளது. லண்டனில் நடைபெறும் யூரோ ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டிகளில் ஸ்பெயினை இங்கிலாந்து வீழ்த்த, நெதர்லாந்து அணி ஜெர்மனியை வீழ்த்த, இறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற நிலையில் ஒரு அணிக்கு தகுதி பெற கிடைத்த வாய்ப்பை இந்திய மகளிர் ஹாக்கி அணி பெற்றுள்ளது. கடந்த மாதம் பெல்ஜியம், ஆண்ட்வெர்ப்பில் நடந்த உலக ஹாக்கி ...

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி

Posted: 23 Feb 2016 08:34 AM PST

பதின் பருவம்.  பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!!  வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும்  வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!!  இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!!  விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!!  ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்!  பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!!  வாலிப ...

தமிழ் இலக்கணம் - அசைகள்

Posted: 23 Feb 2016 08:27 AM PST

அசைகள் தமிழ்மொழிஅமைப்பில்அசைக்கோட்பாட்டுக்குஒருதனிஇடம்உண்டு.உயிரும்உயிர்மெய்யும்குறிப்பிட்டநெறியில்சேர்ந்தசேர்க்கைக்குஅசைஎன்றுபெயர்.ஒருஅசையில்இரண்டுக்குமேற்பட்டஉயிர்கள்அமைவதில்லை.அசைகள்அவற்றின்அமைப்புக்கேற்பநேரசை, நிரையசைஎனஇருவகைப்படும். நேரசை குறில்தனித்தோஒற்றடுத்தோவரும்போதுநெடில்தனித்தோஒற்றடுத்தோவரும்போதுநேரசைஅமையும். எடுத்துக்காட்டு : உல– கு(குறில் தனித்து வந்தது) உல-கம்(குறில்ஒற்றடுத்துவந்தது) பா(நெடில்தனித்துவந்தது) பால்(நெடில் ஒற்றடுத்து வந்தது) குறிலுக்குப்பின்இன்னொருகுறில்இருந்தால்இரண்டும்இணைந்துநிரையசையாகும்.அப்படிஇன்னொருகுறில்இல்லாதபோதுகுறில்தனித்துநின்றுநேரசையாகும். நிரையசை இருகுறில்கள்இணைந்தோஇணைந்துஒற்றடுத்தோவரும்போதுஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்தோசேர்ந்துஒற்றடுத்தோவரும்போதுநிரையசைஅமையும். எடுத்துக்காட்டு படி(இருகுறில்கள்இணைந்துவந்தது) படம்(இருகுறில்கள்இணைந்துஒற்றடுத்துவந்தது) நிலா(ஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்துவந்தது) விளாம்(ஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்துஒற்றடுத்துவந்தது) நெடிலும்குறிலும்சேர்ந்துஒருஅசைஅமைவதில்லைஎன்பதுகுறிலோநெடிலோஒற்றுஇடையிடாமல்பின்தொடரும்போதுஅதன்முன்னிற்கும்குறில்நேரசையாகாதுஎன்பதுஇங்கேநன்குகவனிக்கத்தக்கசெய்திகள்.அதாவதுஆடு,பாடுஎன்பனஓரசையல்ல.அவைஇரண்டும்நேரசைசேர்ந்தசொற்கள்.உலகு,பழகுஎன்பனவற்றில்உ,பஎன்பனநேரசையாகா.உல,பழஎன்பனநிரையசையாகிஎஞ்சித்தனித்துநிற்கும்குறில்மட்டும்நேரசையாகும்.நிரையசைகளில்நெடிலீற்றுநிரையசையும்(நிலா)குறிலீற்றுநிரையசையும்(பிடி)உண்டுஎன்பதைகவனித்துநினைவில்இருத்தத்தக்கது.

அதிகத்தைக் குறைப்போம், அதிக நாள் வாழ்வோம்

Posted: 23 Feb 2016 08:20 AM PST

புத்தகம் வேண்டி

Posted: 23 Feb 2016 06:21 AM PST

அகிலனின் வெற்றித்திருநகர் மின் புத்தகம் கிடைக்குமா

ரயில்வே பாதுகாப்புப் படைக்கு 2030 பெண் கான்ஸ்டபிள்கள் தேவை 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 23 Feb 2016 06:04 AM PST

ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.), ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை (ஆர்.பி.எஸ்.எஃப்.) பிரிவுகளில் பெண் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2030 பெண் கான்ஸ்டபிள்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதில், ஆர்.பி.எஃப். பணிக்கு 1827 பேரும், ஆர்.பி.எஸ்.எஃப். பணிக்கு 203 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் கான்ஸ்ட பிள்களுக்கு தெற்கு ரயில்வே உள்பட 9 மண்டலங்களில் உள்ள பெண்கள் பட்டாலியனிலும், ஆர்.பி.எஃப் படைப் பிரிவிலும் பணி ...

ஒரு போன் விற்றால் 31 ரூபாய் லாபம் 'ரிங்கிங் பெல்' நிறுவனம் கூறுகிறது

Posted: 23 Feb 2016 05:54 AM PST

'ரிங்கிங் பெல்' நிறுவனம், 'பிரீடம் 251' என்ற பெயரில், 251 ரூபாய்க்கு, அதிரடியாக ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. அந்த நிறுவனத்தின் இணையதளத்தில், இதற்காக, ஏழு கோடி பேர் முன்பதிவு செய்தனர். வருமான வரி சோதனை, தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் குடைச்சல், உ.பி., அரசின் சந்தேகம் என, அடுத்தடுத்து பல பிரச்னைகளை, அந்நிறுவனம் சந்தித்து வருகிறது. 'இந்த விலையில், ஸ்மார்ட் போனுக்கு வாய்ப்பில்லை' என, முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களும் புகார் தெரிவித்தன. இந்நிலையில், அந்நிறுவன உரிமையாளரான ...

பேஜ்மேக்கர் பாடம் தமிழில் எளிய முறையில்

Posted: 22 Feb 2016 11:53 PM PST

பேஜ்மேக்கர் பாடத்தினை உள்ளடக்கிய வீடியோ பதிவு எனது யுடியுப் தளத்திலும் வலைப்பக்கத்திலும் உள்ளது.



This posting includes an audio/video/photo media file: Download Now

படித்ததில் இடித்தது

Posted: 22 Feb 2016 11:42 PM PST

. "ஆமை புகுந்த  வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது " என்ற ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு. அருப்புக்கோட்டை திரு .பொன் . சரவணன் அவர்கள் இப்பழமொழி தவறு என்று கூறுகிறார் . " ஆம்பி பூத்த வீடு உருப்படாது " என்ற பழமொழிதான் காலப்போக்கில் " ஆமை புகுந்தவீடு உருப்படாது " என்று மாற்றம் பெற்றுவிட்டது என்று கூறுகிறார். " ஆம்பி " என்றால் காளான் ; அதாவது ஒருவீட்டில் காளான் வளர்ந்தால் அந்த வீடு உருப்படாது என்பது ஆசிரியரின் கருத்தாகும் . ஆசிரியரின் வாதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . ' ஆமை ஒரு வீட்டிற்குள் ...

நடிகர் ரஜினிக்கு ‘மியாட்’ டில் சிகிச்சை

Posted: 22 Feb 2016 10:02 PM PST

ரஜினிக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மணப்பாக்கத் தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு நேற்று காலை 9.45 மணிக்கு வந்தார். அவருடன் மகள் ஐஸ்வர்யா உள்ளிட்ட குடும்பத்தினரும் வந்திருந்தனர். தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மாலை 6.30 மணி அளவில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ரஜினி வருவதை அறிந்த ரசிகர்கள், மியாட் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் ...

மறை பொருள் ஞானம் (occultism)

Posted: 22 Feb 2016 06:57 PM PST

மறை பொருள் ஞானம் (occultism) Spirit Art தியானம் செய்யும் பொழுது மனக்கண்ணில் தோன்றிய அகக் காட்சிகளை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அகக் காட்சிகளுக்கு கூடுமானவரை பொருத்தமான தலைப்பு இட்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் மரணம் இல்லா பெருவாழ்வு--- சாகாக்கல்வி.

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 22 Feb 2016 06:39 PM PST

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...

Posted: 22 Feb 2016 06:11 PM PST

நன்றி - https://www.facebook.com/groups/haikusenryuworld/ Rajan Raj -  செரிமானமாகவில்லை புகைப்படம் ஒட்டிய நிவாரண உணவு (சென்ரியு) Jothi Jothi - வெள்ளப்பெருக்கு துளித்துளியாய் சேர்கிறது நிவாரணநிதி Jothi Jothi -நடுரோட்டில் தொழுகை அன்பு மழையில் பள்ளிவாசல். Tkeshav Tkeshav - வெள்ளத்தில் அனாதை பிணம் உரிமையாய் 100பேர் வெள்ள நிவாரணம் (சென்ரியு) விஜயகுமார் வேல்முருகன் - பத்திரமாக சேகரிக்கப்படுகிறது நிவாரணப் பொருட்கள்.. விற்பனைக்கு...! (சென்ரியு) மகிழ்நன் மறைக்காடு - வரலாறு ...

பேஜ்மேக்கர்

Posted: 22 Feb 2016 06:06 PM PST

பேஜ்மேக்கர் முழுவதுமாக கற்றுக்கொள்ள எனது வலை தளத்திற்கு வாருங்கள்...
pagemaker, Photoshop, Coreldraw, Indesign, Mathtype, etc சாப்ட்வேர்கள் இலவசமாக டுடோரியல் மற்றும் வீடியோ டுடோரியல் ஆக உள்ளது...

பேஜ்மேக்கர் 7.0 கற்றுக்கொள்ள

Posted: 22 Feb 2016 06:04 PM PST

DTP கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு அருமையான வீடியோ பதிவு இதன் வழியாக எளிமையாக டிடிபி சாப்ட்வேர் பேஜ்மேக்கர் 7.0 கற்றுக்கொள்ள முடியும். நன்றி... நல்ல கருத்துகளுக்கும் குறைகளை சுட்டிக்காட்டும் பதிவுகளும் வரவேற்கப்படுகிறது... அனைவருக்கும் வாழ்த்துகள்...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™