Tamil News | Online Tamil News |
- தமிழகத்தின் 7 மாவட்ட விவசாயிகள் மிகுந்த வேதனை : 'கெய்ல்' குழாய் திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியால்
- அரசியலமைப்பு அமர்வில் ஓரினச்சேர்க்கையாளர் மனு
- பா.ஜ., அரசு மீது புகார் உண்டா? காங்கிரசுக்கு மோடி கேள்வி!
- சென்னை வெள்ள பாதிப்புக்கு பெருமழை காரணமல்ல: மத்திய அரசு ஆய்வறிக்கையில் தகவல்
- புறக்கணிக்கப்படும் ரயில்வே திட்டங்கள்!
- 12 அமைச்சர்களுக்கு வாய்ப்பில்லை: ஜெ., அதிரடி முடிவு : புதுமுகங்களுக்கு வாய்ப்பு
- இலவச பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்களுக்கு ரூ.1,200 கோடி அரசு பாக்கி: வட்டிக்காரர்கள் மிரட்டலால் தற்கொலை முடிவில் உரிமையாளர்கள்
- பங்களாவை காலி செய்ய மறுத்த எம்.பி.,: வழிக்கு கொண்டு வந்த அதிகாரிகள்
- அழகிரிக்கு 'நோ என்ட்ரி' ஸ்டாலின் கதவடைப்பு
- 'சைகா' வைரஸ் பாதித்த நாடுகளுக்கு போகாதீங்க!
| Posted: 02 Feb 2016 10:08 AM PST புதுடில்லி: தமிழகத்தின், ஏழு மாவட்டங்கள் வழியாக, 'கெய்ல்' எனப்படும், 'காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' பொது துறை நிறுவனம் சார்பில், இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை தடை செய்ய முடியாது என, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவால், தமிழக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கேரளாவின் கொச்சியில் இருந்து, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக, பெங்களூருவுக்கு, பிரம்மாண்ட குழாய்கள் மூலம், இயற்கை எரி வாயுவை கொண்டு செல்லும் திட்டத்தை, கெயில் நிறுவனம், 2012ம் ஆண்டு துவக்கியது. 'இந்த குழாய்கள் ... |
| அரசியலமைப்பு அமர்வில் ஓரினச்சேர்க்கையாளர் மனு Posted: 02 Feb 2016 10:09 AM PST புதுடில்லி: ஓரினச் சேர்க்கையாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்ற, மூன்று நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, அவற்றை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.இதன் மூலம் தங்களுக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கருத்து தெரிவித்த ஓரினச் சேர்க்கையாளர்கள், சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். வழக்கும் தீர்ப்புகளும்:டில்லி ஐகோர்ட், ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கும் இந்திய தண்டனை சட்டம், 377 பிரிவை ... |
| பா.ஜ., அரசு மீது புகார் உண்டா? காங்கிரசுக்கு மோடி கேள்வி! Posted: 02 Feb 2016 10:10 AM PST கோவை: ''கடந்த ஒன்றரை ஆண்டில், எந்த ஊழல் குற்றச்சாட்டும் என் மீதோ, பா.ஜ., அரசு மீதோ சுமத்த முடியவில்லை. சிறந்த நிர்வாகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரசார், முட்டுக்கட்டை போடுகின்றனர்,'' என, பிரதமர் மோடி, கோவையில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசினார். தமிழக பா.ஜ., சார்பில், தேர்தல் பிரசாரத் துவக்க பொதுக்கூட்டம், கோவை, 'கொடிசியா' வளாகம் அருகில் நேற்று மாலை நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, 'வணக்கம், இன்று கோவை மாநகரம் வந்ததில் மகிழ்ச்சி' என, தமிழில் பேசத் துவங்கி, இந்தியில் தொடர்ந்தார். பா.ஜ., தேசியச் செயலர் எச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்தார். ... |
| சென்னை வெள்ள பாதிப்புக்கு பெருமழை காரணமல்ல: மத்திய அரசு ஆய்வறிக்கையில் தகவல் Posted: 02 Feb 2016 10:12 AM PST 'சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்புக்கு, அதிகபட்ச மழை காரணமல்ல' என, மத்திய புவியியல் அமைச்சகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.சென்னையில், வடகிழக்கு பருவமழை காலமான, 2015 நவ., --- டிச., மாதங்களில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால், நீர் நிலையை ஆக்கிரமிக்காமல், முறையாக அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்த வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.சென்னையை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்த தமிழக அரசு, 'இந்த பாதிப்பை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்' என, ... |
| புறக்கணிக்கப்படும் ரயில்வே திட்டங்கள்! Posted: 02 Feb 2016 10:12 AM PST தி.மு.க., தலைவர் கருணாநிதி மத்திய ரயில்வே அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், தொடர்ந்து பல ஆண்டு களாக, தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கும்பகோணம் - திருவாரூர், ஓமலுார் - மேட்டூர் அணை, ஈரோடு - பழநி, ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி, மதுரை - துாத்துக்குடி, பெங்களூரு - சத்தியமங்கலம், திண்டிவனம் - திருவண்ணாமலை, மதுரை - போடி நாயக்கனுார், சென்னை - கடலுார், திண்டிவனம் - நகரி ஆகிய ரயில் பாதை திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இந்த திட்டங்களை அறிவிப்பதற்கு முன், திட்டங்களை துவங்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் ஆரம்ப கால ... |
| 12 அமைச்சர்களுக்கு வாய்ப்பில்லை: ஜெ., அதிரடி முடிவு : புதுமுகங்களுக்கு வாய்ப்பு Posted: 02 Feb 2016 10:14 AM PST சட்டசபை தேர்தலில், புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. இது, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அ.தி.மு.க., அரசின் பதவிக்காலம், மே மாதம் நிறைவு பெறுகிறது. விரைவில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கான ஆயத்தப் பணிகளை, அ.தி.மு.க., துவங்கி உள்ளது. போட்டியிட விரும்புவோரிடம், ஜன., 20ம் தேதி முதல், விருப்ப மனு வாங்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும், நுாற்றுக்கணக்கானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அதிலும் முக்கியமாக, இந்த தேர்தலில் போட்டியிட, புதுமுகங்கள் அதிகளவில் ... |
| Posted: 02 Feb 2016 10:16 AM PST இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, 1,200 கோடி ரூபாயை தராமல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இழுத்தடித்து வருவதால், இலவச பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், கடும் விரக்தியில் உள்ளனர். மேலும், கடன் வழங்கிய வட்டிக்காரர்கள் மிரட்டல் விடுத்து வருவதால், தற்கொலை முடிவில் இருப்பதாகவும், அவர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர். கடந்த தி.மு.க., ஆட்சியில், ஏழை மக்களுக்கு இலவச கலர், 'டிவி' வழங்கப்பட்டது. அதை பின்பற்றி, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் குடும்பங்களுக்கு, இலவச ... |
| பங்களாவை காலி செய்ய மறுத்த எம்.பி.,: வழிக்கு கொண்டு வந்த அதிகாரிகள் Posted: 02 Feb 2016 10:16 AM PST புதுடில்லி: டில்லியில், அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து, அடம்பிடித்த காங்., - எம்.பி.,யை, வழிக்கு கொண்டு வரும் விதமாக, வீட்டிற்கான தண்ணீர் மற்றும் மின் இணைப்பை, அதிகாரிகள் துண்டித்தனர். மேற்குவங்க மாநிலம், முர்ஷிதாபாத் தொகுதியைச் சேர்ந்தவர் காங்., - எம்.பி., ஆதிரஞ்சன் சவுத்ரி. மத்தியில், காங்., தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.இதனால், அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும், கூடுதல்வசதிகள் உடைய பங்களாவில் வசித்து வந்தார். 2014 லோக்சபா தேர்தலுக்கு பின், அந்த தொகுதியின் எம்.பி.,யாக மட்டுமே அவர் இருக்கிறார். இதனால், ... |
| அழகிரிக்கு 'நோ என்ட்ரி' ஸ்டாலின் கதவடைப்பு Posted: 02 Feb 2016 10:19 AM PST தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, 2014ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சிக்கு விரோதமான செயல்களில், அவர் இறங்கியதாக குற்றஞ்சாட்டிய கருணாநிதி, 'இனி, அவர் எனக்கு மகனே கிடையாது' என்றும், ஆவேசமாக அறிவித்தார். அதன்பின், பலமுறை சென்னைக்கு வந்த அழகிரி, விமான நிலையத்தில், தி.மு.க.,வுக்கு எதிராகவும், குறிப்பாக, ஸ்டாலினுக்கு எதிராகவும் கருத்து கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாக, கட்சிக்கு எதிராக எந்தக் கருத்தும் கூறாமல் அமைதி காத்தார். அதனால், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க, கருணாநிதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் ... |
| 'சைகா' வைரஸ் பாதித்த நாடுகளுக்கு போகாதீங்க! Posted: 02 Feb 2016 01:12 PM PST புதுடில்லி: 'சைகா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு, அவசியம் இல்லாமல் யாரும் செல்ல வேண்டாம்' என, மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. கொசுக்களால் பரவும் சைகா வைரஸ், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ், குறிப்பாக கர்ப்பிணிகளை பாதிக்கிறது. சைகா வைரஸ் பாதிப்புகள் கடுமையாக இருப்பதால், உலக சுகாதார அமைப்பு, உலகளாவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. இந்நிலையில், 'கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பமாகும் சாத்தியம் உள்ள பெண்கள், சைகா பாதித்த நாடு களுக்கு செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தி, மத்திய சுகாதார துறை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 03,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |