Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எல்.கே.ஜி.,க்கு ரூ.42 ஆயிரம் 'பீஸ்': சிங்காரவேலர் கமிட்டி அறிவிப்பு

Posted: 19 Feb 2016 07:43 AM PST

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய, அரசு சார்பில், நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் சார்பில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயித்து, அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படுகிறது.ஒவ்வொரு பள்ளிக்கும், உள்கட்டமைப்பு, நில அளவு, அங்கீகார நிலை, அரசு விதிமுறைகளை பின்பற்றுதல், மாணவர், ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதி அமைத்தல் போன்ற பல அம்சங்களை கருத்தில் கொண்டு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.இதன்படி, முதல் கட்டமாக, கடந்த ஆண்டுடன் கட்டண ...

2,000 'டாஸ்மாக்' கடைகளை மூட முடிவு?

Posted: 19 Feb 2016 07:49 AM PST

சட்டசபை தேர்தல் நெருக்கடியால், கோவில், பள்ளி அருகிலுள்ள, 2,000, 'டாஸ்மாக்' கடைகளை மூட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின், டாஸ்மாக் கடைகளால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால், மதுவிலக்கை அமல்படுத்துமாறு, எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், 'அண்டை மாநிலங்களில் மது விற்பனை இருப்பதால், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது' என, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில், சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், பள்ளி, கல்லுாரி, கோவில்களுக்கு அருகிலுள்ள கடைகள், மது ...

உலகை திரும்பி பார்க்க வைத்த மளிகை கடைக்காரர் மகன்

Posted: 19 Feb 2016 08:06 AM PST

புதுடில்லி: சில ஆண்டுகளுக்கு முன், உலகிலேயே, மிகவும் விலை குறைவான, 'நானோ' காரை, டாடா நிறுவனம் அறிமுகம் செய்த போது, பல நாடுகள் வியப்புடன் பார்த்தன.தற்போது, உலகிலேயே மிகவும் மலிவான, ஸ்மார்ட் மொபைல் போனை, 251 ருபாய்க்கு அறிமுகம் செய்வதாக, டில்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது, பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.'இது சாத்தியமில்லை, ஏமாற்று வேலை' என, சில தரப்பினர் கூறி வரும் நிலையில், 'இந்த மொபைல் போனை வேண்டி, முன்பதிவு செய்யும் அனைவருக்கும், ஜூன் மாதத்திற்குள் அளிப்போம்' என, 2015 செப்டம்பரில் ...

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு கடும் நிதி நெருக்கடி: அமெரிக்க தாக்குதலால் ஒடுங்குகிறது கொட்டம்

Posted: 19 Feb 2016 08:24 AM PST

பெய்ரூட்,:உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தற்போது, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பாதி சம்பளமே வழங்கப்படுவதோடு, சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு ஆசிய நாடுகளான, சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உலகையே அச்சுறுத்தி வருகின்ற, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு. இணையதளம் மூலம் விளம்பரம் செய்து, பணம் மற்றும் பெண் ஆசை காட்டி, பல நாடுகளைச் சேர்ந்த வாலிபர்களை தங்கள் அமைப்புக்கு சேர்த்து வருகிறது; அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சியும் ...

'வெள்ளம் பாதித்த தொகுதிகள் எங்களுக்கே': தி.மு.க., முடிவால் காங்., கடும் அதிர்ச்சி

Posted: 19 Feb 2016 09:32 AM PST

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.,வே போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், காங்., நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்தாண்டு அக்., மாதம் துவங்கி டிச., மாதம் வரை பெய்த பெரு மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது; நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களிலும் சேதம் ஏற்பட்டது.நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களிலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு செய்திருந்தால், இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது என்ற கருத்து, பொதுமக்கள் மத்தியில் பரவலாக ...

குடிநீர், மின்சார கட்டணம் பாக்கி இருந்தால்...தேர்தலில் போட்டியிட முடியாது

Posted: 19 Feb 2016 09:36 AM PST

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், 'மின்சாரம், குடிநீர், தொலைபேசி கட்டண பாக்கி ஏதுமில்லை' என, பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதை கட்டாயமாக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, கருத்தை தெரிவிக்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது. கட்சிகளுக்கு கடிதம்: நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலர்களுக்கு, தேர்தல் கமிஷன் அனுப்பிய கடிதம்:உச்ச நீதிமன்றம், 2003ல் பிறப்பித்த உத்தரவின்படி, 'பார்லிமென்ட் மற்றும் சட்டசபை ...

வியாபாரிகளுடன் அரசு பேச்சு: மளிகை பொருட்கள் விலை குறையுமா?

Posted: 19 Feb 2016 09:57 AM PST

சட்டசபை தேர்தல் நெருக்கடியால், மளிகை பொருட்கள் விலையை கிலோவுக்கு, 10 ரூபாய் வரை குறைப்பது குறித்து, வியாபாரிகளுடன் பேச்சு நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், பருவம் தவறிய மழை, பதுக்கல் உள்ளிட்ட காரணங்களால் மிளகாய், தனியா, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள், மளிகை பொருட்கள் விலையை, கடந்த காலத்துடன் ஒப்பிட்டு, அரசுக்கு எதிராக புகார் கூறி வருகின்றன. சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், வியாபாரிகளுடன் பேச்சு நடத்தி, விலையை குறைக்க அரசு ...

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜெ., அறிவித்த சலுகைகள் போதாது: போராட்டத்தை தொடர அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு

Posted: 19 Feb 2016 10:26 AM PST

சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்களுக்கான பல சலுகைகளை அறிவித்தார். ஆனால், 'முதல்வர் அறிவித்த சலுகைகள் போதாது' என, அறிவித்துள்ள அரசு ஊழியர் சங்கங்கள், போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளன.புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட, தொகுப்பூதியத்தில் உள்ள பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பிப்., 10 முதல் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வருகிறது. மறியலை தொடர்ந்து, கலெக்டர் ...

'ஜாட்' இட ஒதுக்கீடு போராட்டத்தில் பயங்கர வன்முறை: 3 பேர் பலி; அமைச்சர் வீட்டுக்கு தீ

Posted: 19 Feb 2016 10:34 AM PST

ரோதக்: ஹரியானாவில், இடஒதுக்கீடு கோரி, 'ஜாட்' சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில், பயங்கர வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.; 21 பேர் காயமடைந்தனர். அமைச்சரின் வீடு மற்றும் காருக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.ஹரியானா மாநிலத்தில் பெருமளவு உள்ள ஜாட் சமூகத்தினர், இடஒதுக்கீடு கோரி கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில், அவர்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இருந்தும், ஹரியானா மாநில அரசு இறங்கி வராததால், நேற்று, அவர்கள் போராட்டத்தை ...

ஐகோர்ட் கேள்விசோலார் ஒப்பந்தத்தில் சந்தேகமாம்

Posted: 19 Feb 2016 10:53 AM PST

சென்னை: சூரிய சக்தி மின் கொள்முதலுக்கான ஒப்பந்தம் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என, மனு தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த, 'ராசி கிரீன் எர்த் எனர்ஜி' நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், 'ராமநாதபுரம் மாவட்டத்தில், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி நிலையம் அமைத்துள்ளோம். எங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. 'மின் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தையும், மின் வாரியம் மேற்கொள்ளவில்லை. இதற்கான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, கூறப்பட்டது.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™