Tamil News | Online Tamil News |
- சிறையில் உயிருக்கு ஆபத்து; ஜாமின் கொடுங்கள்: ஜே.என்.யு., மாணவர் மனு
- தொழில்நுட்பம் சாராத துறைகளில் குவியும் வேலைவாய்ப்புகள்
- 'சீட்' பெற கோடிகளுடன் அலையும் பிரமுகர்கள்
- விவசாயிகளுக்கு புதிய திட்டம் ஏப்., 14ல் அறிமுகமாகிறது
- ரூ.251க்கு மலிவு விலை போன் கிடைக்கும் என...சவால்... முன்பதிவு முடங்கினாலும் நிறுவனம் உறுதி
- முதல்வர் ஜெ., 'ஜோக்' 'வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்'
- வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம்... 'நோ!' * ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு அரசு பதிலடி
- சபரீசன் பற்றி பேச்சு: கருணாநிதி ஆதங்கம்
- தேர்தல் அறிக்கை தயாரிப்பு தீவிரம்: இலவச அறிவிப்புகள் வெளியாகுமா?
- 'எல்லாம் தெரியும் என்ற நினைப்பு கூடாது'
| சிறையில் உயிருக்கு ஆபத்து; ஜாமின் கொடுங்கள்: ஜே.என்.யு., மாணவர் மனு Posted: 18 Feb 2016 07:50 AM PST புதுடில்லி,:ஜே.என்.யு., எனப்படும், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், 'சிறையில் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது; அதனால் ஜாமின் அளிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.பார்லிமென்ட் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, 2013ல் துாக்கிலிடப்பட்டான். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், தேசத்துக்கு எதிராகவும் கோஷமிட்டதாக, மாணவர்கள் சிலர் மீது வழக்கு பதிவு ... |
| தொழில்நுட்பம் சாராத துறைகளில் குவியும் வேலைவாய்ப்புகள் Posted: 18 Feb 2016 07:56 AM PST புதுடில்லி:தொழில்நுட்பம் அல்லாத மற்ற தொழில் சார்ந்த துறைகளில், சமீபகாலமாக, வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாக, 'சர்வே' ஒன்று தெரிவித்துள்ளது. ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில், கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக, 'வெப்சைட்' மற்றும், 'ஆண்ட்ராய்டு' சார்ந்த தொழில்நுட்ப பிரிவுகளில் அதிகம் வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்தன. இதனால், அது தொடர்பான படிப்புகளுக்கும் இளைஞர்களிடம் ஆர்வம் காணப்படுகிறது. இந்நிலையில், தொழிநுட்பம் சாராத மற்ற படிப்புகள் படித்தவர்களுக்கு ஆரம்ப நிலைவேலைவாய்ப்புகள் பெருகி ... |
| 'சீட்' பெற கோடிகளுடன் அலையும் பிரமுகர்கள் Posted: 18 Feb 2016 08:45 AM PST சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினர், ஐவரணியினரின் வீடுகளுக்கும், தி.மு.க.,வினர், 'ஒன்மேன் குரூப்' வீடுகளுக்கும், 'சூட்கேஸ்'களுடன் படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, பிரதான கட்சிகள் எல்லாம், விருப்ப மனுக்களை பெற்றுள்ளன. புதிய பட்டியல்:அ.தி.மு.க.,வை பொறுத்தமட்டில், தனியார் துப்பறியும் நிறுவனம், உளவுத் துறை, ஐவரணி, விருப்ப மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரிகள் அணி என, நான்கு தரப்பினர் தரும், வேட்பாளர்கள் பட்டியல் ... |
| விவசாயிகளுக்கு புதிய திட்டம் ஏப்., 14ல் அறிமுகமாகிறது Posted: 18 Feb 2016 08:57 AM PST சீகோர்,: ''விவசாயிகள், தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே, நாட்டில், எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு, தங்களுடைய உற்பத்தி பொருட்களை, ஆன்லைன் மூலம் விற்கக் கூடிய திட்டம், வரும், ஏப்ரல், 14ம் தேதி அறிமுகம் செய்யப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கும் நிகழ்ச்சி, பா.ஜ., ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் சீகோரில்நேற்று நடந்தது.வேளாண் காப்பீட்டு திட்டம், மண்வளப் பரிசோதனை அட்டை உட்பட விவசாயி களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு திட்டங்கள் ... |
| ரூ.251க்கு மலிவு விலை போன் கிடைக்கும் என...சவால்... முன்பதிவு முடங்கினாலும் நிறுவனம் உறுதி Posted: 18 Feb 2016 09:02 AM PST புதுடில்லி: உலகின், மிக மலிவான, 'பிரீடம் 251' என்ற, ஸ்மார்ட் மொபைல் போன் குறித்து, பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், 'திட்டமிட்டபடி, 251 ரூபாய்க்கு மொபைல் போனை வழங்குவோம்' என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நேற்று, போனுக்கான முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே, வினாடிக்கு, ஆறு லட்சம் பேர் முயற்சித்ததால் இணையதளம் முடங்கியது. டில்லியை அடுத்துள்ள நொய்டாவை தலைமையிடமாக வைத்து, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம், 251 ரூபாய் விலை உடைய, ஸ்மார்ட் மொபைல் போனை, நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது.நான்கு மாதத்துக்குள்...: நேற்று காலை, 6:00 ... |
| முதல்வர் ஜெ., 'ஜோக்' 'வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்' Posted: 18 Feb 2016 09:38 AM PST சென்னை,:''கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக, பல நல திட்டங்களை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்றி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சட்டசபையில், 110வது விதியின் கீழ், நேற்று அவர் பேசியதாவது: கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, 'அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மக்கள் நலன் காக்க, எவ்வாறெல்லாம் செயல்படும்' என, தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தோம். *தமிழகம் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போட நடவடிக்கை எடுக்கப்படும்*கல்வி, மருத்துவம், ... |
| வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம்... 'நோ!' * ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு அரசு பதிலடி Posted: 18 Feb 2016 10:13 AM PST தமிழக அரசு ஊழியர்களின் காலவரையற்ற, வேலை நிறுத்தத்தால், அரசுப்பணிகள் முடங்கி உள்ளன. எனவே, 'நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், 'வேலைக்கு வராத நாட்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது' என, அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 68 சங்கங்களை உள்ளடக்கிய, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பிப்., 10 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறது.நிதி ... |
| சபரீசன் பற்றி பேச்சு: கருணாநிதி ஆதங்கம் Posted: 18 Feb 2016 11:01 AM PST சட்டசபையில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் பற்றி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்கண்டேயன் பேசியதால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டனர். 'சபரீசன் குறித்து, அவர் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் கோஷமிட்டபட்டி வலியுத்தினர். சபையில், கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது. இதனால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சட்டசபை நடவடிக்கைகள் குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள், கருணாநிதியிடம் விளக்கினர். அதைத் தொடர்ந்து, 'இனி சபை நடவடிக்கைகளில் தி.மு.க., பங்கேற்காது' என, ... |
| தேர்தல் அறிக்கை தயாரிப்பு தீவிரம்: இலவச அறிவிப்புகள் வெளியாகுமா? Posted: 18 Feb 2016 11:02 AM PST தமிழக அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கைதயாரிப்பில், தீவிரமாக ஈடுபட்டுள்ளன.தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளன. கடந்த சில தேர்தல்களாக, தேர்தல் பிரசாரத்தில், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை, முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றிக்கு, அக்கட்சி தேர்தல் அறிக்கை பெரிதும் உதவியது.அணிவகுத்த இலவசங்கள்குடும்ப அட்டைகளுக்கு, ஒரு ரூபாய்க்கு, ஒரு கிலோ வீதம், 20 கிலோ அரிசி வழங்கப்படும். இலவச, 'டிவி' என அறிவித்தது, மக்களை கவர்ந்தது. அந்த தேர்தல் ... |
| 'எல்லாம் தெரியும் என்ற நினைப்பு கூடாது' Posted: 18 Feb 2016 12:25 PM PST புதுடில்லி:'நமக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில், யாரும் வாழக் கூடாது' என, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி பேசினார். 'இந்தியா - 2016' என்ற புத்தகத்தை, நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, நேற்று வெளியிட்டார். விழாவில், அவர் பேசியதாவது:இந்த புத்தகத்தில், அரசின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கான தகவல்கள் உட்பட, எல்லா விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இதை எல்லாரும் படிக்க வேண்டும்; குறிப்பாக, அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும். ஏனெனில், இதில் இடம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 19,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |