Tamil News | Online Tamil News |
- நீடிக்கிறது அரசு ஊழியர் 'ஸ்டிரைக்' மறியலில் 50 ஆயிரம் பேர் கைது
- வரிவிலக்குகளை குறைக்க மத்திய அரசு அதிரடி: ரூ.2 லட்சம் கோடி இழப்பை தவிர்க்க திட்டம்
- பாகிஸ்தானுக்கு போர் விமானம்: இந்தியா கவலைப்படத் தேவையில்லை- அமெரிக்கா
- 14 மந்திரிகளுக்கு அ.தி.மு.க.,வில் சிக்கல்
- ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மா.செ.,க்கள் 'கூட்டணி': 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்த ரகசிய திட்டம்
- அம்மா குடிநீர் திட்டம்: மோடிக்கு 'அட்வைஸ்'
- சட்டசபை புறக்கணிப்பு: கருணாநிதி அறிவிப்பு
- உலகிலேயே மிக மலிவான 'ஸ்மார்ட் மொபைல் போன்': இன்று முதல் இந்தியா முழுவதும் 'புக்கிங்' ஆரம்பம்
- கோர்ட்டில் மீண்டும் வன்முறை: மாணவர் தலைவர் மீதும் தாக்குதல்
- சீனா அத்துமீறல்: ஏவுகணைகள் தயார்!
| நீடிக்கிறது அரசு ஊழியர் 'ஸ்டிரைக்' மறியலில் 50 ஆயிரம் பேர் கைது Posted: 17 Feb 2016 08:05 AM PST சென்னை:தமிழகத்தில் அரசு ஊழியர்களின், 'ஸ்டிரைக்' நேற்று, எட்டாவது நாளாக நீடித்தது. மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட, 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பட்ஜெட் ஏமாற்றம்: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10ல், ஸ்டிரைக் துவக்கினர். இடைக்கால பட்ஜெட்டில், கோரிக்கைகள் ஏற்கும் அறிவிப்பை அரசு வெளியிடும் என, எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டு நாட்களாக, அரசு எந்த அறிவிப்புகளையும்வெளியிடவில்லை. இதனால், ஆசிரியர்களுடன் இணைந்து, அரசு ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். நேற்றும், தமிழகம் முழுவதும் மறியல் ... |
| வரிவிலக்குகளை குறைக்க மத்திய அரசு அதிரடி: ரூ.2 லட்சம் கோடி இழப்பை தவிர்க்க திட்டம் Posted: 17 Feb 2016 08:27 AM PST புதுடில்லி,: மத்திய அரசு அளித்து வரும் வரி விலக்குகளால், ஆண்டுக்கு, இரண்டு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதை படிப்படியாக குறைத்து, வரி விலக்குகளை முழுமையாக நீக்க வேண்டும் என்றும், நிதியமைச்சகம் கூறியுள்ளது.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 29ல், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களை சேர்ந்த சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முழுவதுமாக அகற்ற...: இதற்கு போதிய நிதியாதாரம் இல்லாமல் சிரமப்பட்டு வரும் அரசு, எரிபொருட்கள் மீதான ... |
| பாகிஸ்தானுக்கு போர் விமானம்: இந்தியா கவலைப்படத் தேவையில்லை- அமெரிக்கா Posted: 17 Feb 2016 08:29 AM PST வாஷிங்டன்:'பாகிஸ்தானுக்கு, அதிநவீன அணுஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய, 'எப்-16' ரக போர் விமானங்களை, நாங்கள் விற்பது குறித்து, இந்தியா, கவலைப்படத் தேவையில்லை' என, அமெரிக்கா கூறியுள்ளது.மிக நவீன வசதிகள் உடைய, 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள, எட்டு, எப்-16 ரக போர் விமானங்களை, பாகிஸ்தானுக்கு விற்க, அமெரிக்கா முன்வந்தது; இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. நேரில் அழைத்து... 'இந்தியாவின் மீது, பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதற்கு, இது உதவும்' என கூறி, இந்தியாவுக்கான அமெரிக்கத்துாதர் ரிச்சர்ட் வர்மாவை, நேரில் அழைத்து, தன் அதிருப்தியையும், கவலையையும் ... |
| 14 மந்திரிகளுக்கு அ.தி.மு.க.,வில் சிக்கல் Posted: 17 Feb 2016 09:12 AM PST ஆளும் அ.தி.மு.க.,வில், 28 அமைச்சர்களும், 51 மாவட்ட செயலர்களும் உள்ளனர். இவர்களில், யார் யாருக்கெல்லாம், 'சீட்' கிடைக்கும் என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில், 14 அமைச்சர்கள் மட்டும் தனியாக ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது. அதனால், மீதமுள்ள, 14 அமைச்சர்களுக்கு, இம்முறை, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற பேச்சு, கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. அ.தி.மு.க., அரசின் இடைக்கால பட்ஜெட், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினம் மாலையில், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், மாவட்டசெயலர்கள் கூட்டம் ... |
| ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மா.செ.,க்கள் 'கூட்டணி': 'டம்மி' வேட்பாளர்களை நிறுத்த ரகசிய திட்டம் Posted: 17 Feb 2016 09:13 AM PST அ.தி.மு.க., - தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளில், 'டம்மி'யான வேட்பாளர்களை நிறுத்த, ரகசிய திட்டம் போடப்பட்டு உள்ளது அம்பலமாகியது. அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில், பலமான வேட்பாளர்களை நிறுத்த தி.மு.க., தரப்பில் தீவிரமாக உள்ளனர். |
| அம்மா குடிநீர் திட்டம்: மோடிக்கு 'அட்வைஸ்' Posted: 17 Feb 2016 10:22 AM PST 'தமிழகத்தில் குறைந்த விலையில், 'அம்மா' குடிநீர் விற்கப்படுகிறது. அதுபோன்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, பொதுஜனம், ஒருவர் அறிவுரை கூறியுள்ளார். பிப்., 29ல் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இடம் பெறச் செய்வதற்கான ஆலோசனைகளை, 'mygov.in' என்ற இணைய தளத்தில், பொதுமக்களை பதிவு செய்ய, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி, குறிப்பிட்ட கால வரையரைக்குள், 6,642 பேர், பல ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.*பெற்றோரைபராமரிக்கும் வாரிசுகளுக்கு வரி விலக்கு தர வேண்டும்* வருமான வரி உச்சவரம்பை, மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்த ... |
| சட்டசபை புறக்கணிப்பு: கருணாநிதி அறிவிப்பு Posted: 17 Feb 2016 10:22 AM PST சென்னை: 'என்னையும், என் குடும்பத்தினரையும் எப்படி பேசினாலும், அதை அனுமதிப்பது என்ற போக்கில், சட்டசபை நடைபெறுவதால், சட்டசபை நடவடிக்கைகளில், தி.மு.க., பங்கேற்காது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவரது நேற்றைய அறிக்கை:கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பேச்சைக் கேட்கும் அளவுக்கு பொறுமை இல்லாமல், அமைச்சர்களும், குறிப்பாக சபாநாயகரும் நடந்துகொண்டுள்ளனர்.இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் துவங்கிய நேற்று, தி.மு.க., சார்பில் பேசுவதற்கு, எ.வ.வேலு காத்திருந்தபோது, அதற்கு முன் பேசிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ... |
| உலகிலேயே மிக மலிவான 'ஸ்மார்ட் மொபைல் போன்': இன்று முதல் இந்தியா முழுவதும் 'புக்கிங்' ஆரம்பம் Posted: 17 Feb 2016 10:37 AM PST புதுடில்லி: கனவிலும் நினைத்துப் பார்க்காத வகையில், உலகிலேயே மிகவும் மலிவான விலையில், 'ஸ்மார்ட் போன்' இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போன், 251 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.என்.சி.ஆர்., எனப்படும், தேசிய தலைநகர் பிராந்தியத்தைச் சேர்ந்த நொய்டாவில், 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம், உலகின் மிக மலிவான ஸ்மார்ட் போனை தயாரித்துள்ளது. 'பிரீடம் 251' எனப் பெயரிடப்பட்ட, இந்த போன், 251 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.டில்லியில், நேற்று மாலை நடந்த விழாவில், பிரீடம் 251 ஸ்மார்ட் போன், அறிமுகப்படுத்தப்பட்டது. ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், பா.ஜ., ... |
| கோர்ட்டில் மீண்டும் வன்முறை: மாணவர் தலைவர் மீதும் தாக்குதல் Posted: 17 Feb 2016 11:35 AM PST புதுடில்லி:ஜவஹர்லால் நேரு பல்கலை விவகாரம் தொடர்பாக, டில்லி கோர்ட்டில், மாணவர்களும், பத்திரிகையாளர்களும் நேற்றும் தாக்கப்பட்டனர்; தேச விரோத வழக்கு தொடரப்பட்டுள்ள, மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரும் தாக்கப்பட்டார். காவல் நீட்டிப்புக்காக, கடந்த திங்கள்கிழமை, டில்லி பாட்டியாலா ஹவுஸ் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாரை ஆஜர்படுத்தியபோது, அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களை, வழக்கறிஞர்கள் உடையணிந்திருந்த சிலர் தாக்கினர்.இதில் காயமடைந்த, முன்னாள் மாணவரான, என்.டி.ஜெயபிரகாஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை ... |
| சீனா அத்துமீறல்: ஏவுகணைகள் தயார்! Posted: 17 Feb 2016 12:44 PM PST பீஜிங்:தெற்கு சீன கடல் பகுதியில், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளும் உரிமை கோரும், சர்ச்சைக்குரிய, வூடி தீவில், விமானங்களை தாக்கக் கூடிய ஏவுகணைகளை, சீன அரசு, தயார் நிலையில் வைத்துள்ளது.தெற்கு சீனக் கடல் பகுதியின், பல்வேறு பகுதிகளை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சீனாவின் முயற்சிக்கு, அப்பகுதிக்கு உரிமை கொண்டாடும், தைவான், புருனே, மலேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.'தெற்கு சீன கடல் பகுதியில், பதற்றத்தை தணிக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறி வருகிறார். இந்தப் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 18,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |