Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'சீட்' கனவில் மூட்டை பணத்துடன் கவுன்சிலர்கள் தயார்

Posted: 16 Feb 2016 07:25 AM PST

'உங்களோடு ஓட்டுக் கேட்டு போனால், கிடைக்கும் ஓட்டும் கிடைக்காத நிலை உள்ளது. தேர்தல் வரும் இந்த நேரத்திலாவது, மக்களிடம் சென்று, அவர்களின் தேவையை அறிந்து சேவை செய்யுங்கள்' என, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, கடந்த மாதம், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், ஆலோசனை வழங்கப்பட்டது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பற்றிய, 'இமேஜ்' இப்படி இருக்க, அவர்களில் பலரோ, தற்போதே எம்.எல்.ஏ., ஆகிவிட்டதை போன்ற மிதப்பில் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள, 169 அ.தி.மு.க., கவுன்சிலர்களில், 90 சதவீதம் பேர், எம்.எல்.ஏ., 'சீட்' கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் சிலர், ...

ஓட்டுச்சாவடி தோறும் தி.மு.க., ரகசிய 'சர்வே'

Posted: 16 Feb 2016 07:31 AM PST

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் தங்கள் கட்சியின் பலம், பலவீனம் குறித்த விவரங்களையும், மற்ற கட்சிகள் தொடர்பான விவரங்களையும், தி.மு.க., சேகரித்து வருகிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் உட்பட்ட பகுதிகளில், குறைந்தது, 50 ஓட்டுகளை, தி.மு.க.,விற்கு பெற்று தரக் கூடியவர்கள் யார் என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. தி.மு.க., உட்கட்சி தேர்தலில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் யார்; ம.தி.மு.க., - வி.சி., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளில் உள்ள, 10 உறுப்பினர்களின் பெயர்கள், அக்கட்சிகளில் அதிருப்தியில் உள்ளவர்களின் பெயர்கள் உள்ளிட்ட ...

நாட்டுக்கே தலைவராக திகழ பிரதமர் மோடி உறுதி

Posted: 16 Feb 2016 08:09 AM PST

புதுடில்லி:''ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல், நாட்டின் தலைவராக திகழ்வேன்,'' என, எதிர்க்கட்சி தலைவர்களிடம், பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்து உள்ளார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், அதை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் நேற்று அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை யில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, தேச விரோத சட்டத்தின் கீழ், கன்னையா குமார் உள்ளிட்ட எட்டு பேர் கைது ...

கடன் பாக்கி செலுத்தாதது யார் யார்?

Posted: 16 Feb 2016 08:12 AM PST

புதுடில்லி:கடந்த, ஐந்து ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளுக்கு, 500 கோடி ரூபாய்க்கு மேல், கடன் பாக்கி செலுத்தத் தவறியோர் பட்டியலை, ஆறு வாரத்தில் சமர்ப்பிக்கும்படி, ரிசர்வ் வங்கிக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வாராக்கடன் உயர்வு:
பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் சுமையால் தத்தளித்து வருகின்றன. டிசம்பருடன் முடிந்த காலாண்டில், பல பொதுத்துறை வங்கிகள், பெரியளவு நஷ்டத்தை சந்தித்ததாக, கணக்கு தாக்கல் செய்துள்ளன. வங்கிகளின் வாராக்கடன் தொகை, ஏழு லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுஉள்ளது. இதில், பொதுத்துறை வங்கிகளின் பங்கு, 85சதவீதம். இப் பிரச்னைக்கு, ...

லண்டன் தொழிலாளர் காங்., கூட்டத்தில் ஈராக் பெண் நாடியா கதறல்: பயங்கரவாதிகளிடம் சிக்கிய யாஸிடி பெண்களை மீட்க கண்ணீர்

Posted: 16 Feb 2016 08:41 AM PST

லண்டன்:ஈராக்கில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பிடியில், 'செக்ஸ் அடிமை'யாக இருந்த, 21 வயது யாஸிடி பெண், நாடியா முராட், 'பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள, யாஸிடி இனப்பெண்களை காப்பாற்றுங்கள்' என, உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். லண்டனில் உள்ள, தொழிலாளர் காங்., அமைப்பில் உரையாற்றிய அவர், 'பயங்கரவாதிகளை ஒடுக்க, உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.ஓராண்டுக்கும் மேலாக, பயங்கரவாதிகளிடம் செக்ஸ் அடிமையாக இருந்து, 2015ல் அங்கிருந்து தப்பி, எகிப்திற்கு சென்ற நாடியா முராட், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலிலும், தங்கள் ...

அழகிரியின் ஆட்டத்தை சமாளிப்பேன்': கருணாநிதியிடம் கனிமொழி உறுதிமொழி

Posted: 16 Feb 2016 09:13 AM PST

'தென்மாவட்ட தி.மு.க., வெற்றிக்கு நான் பொறுப்பு; அழகிரி எதிர்ப்பை சமாளிப்பேன்' என, அக்கட்சித் தலைவர் கருணாநிதியிடம், மகளிர் அணி செயலர் கனிமொழி உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், தி.மு.க.,வில் நடந்த உள்கட்சி தேர்தல் பிரச்னைகளைத் தொடர்ந்து, தலைமையை கடுமையாக விமர்சித்தார், தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலராக இருந்த அழகிரி.கட்சியில் நீக்கம்இதையடுத்து, அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அழகிரி, மீண்டும் கட்சியில் இணைய குடும்ப உறுப்பினர்கள் மூலம் தலைமையிடம் பேச்சு நடத்தினார். அது பலிக்கவில்லை. இந்நிலையில், ...

தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்!

Posted: 16 Feb 2016 10:07 AM PST

சென்னை:''தவறான பிரசாரத்தை நம்பி, தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்,'' என, சட்டசபையில் நேற்று, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். சட்டசபையில், அவர் பேசிய தாவது: அனைத்து தரப்பு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை, தொடர்ந்து பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, அனைவருடைய தேவைகளையும், நிறைவு செய்யும் வகையில், ஐந்து ஆண்டுகளாக நல்லாட்சி தந்துள்ளார். தமிழகத்தை வலிமையான, முற்போக்கான, வளமான மாநிலமாக மாற்றியுள்ளார். இதை முழுமையாக அறிந்துள்ள மக்கள், தவறான பிரசாரத்தால் ஏமாற மாட்டார்கள்.பாலையும், நீரையும் பிரித்துண்ணும் அன்னப் பறவையைப் போல, நம் ...

இந்திய வளர்ச்சியை பார்த்து வயிறெரியும் சீனா: மோடியை மோசமாக விமர்சித்து கட்டுரை வெளியீடு

Posted: 16 Feb 2016 10:10 AM PST

புதுடில்லி: பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்திக் கூறுவதாகவும், இந்தியா போன்ற பெரிய நாட்டை நிர்வகிக்கும் வகையில் தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை என்றும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து, சீன அரசு கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகை ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதும், அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இயல்புநிலையை உருவாக்க முயன்று வருகிறார். இந்தியாவுடன் அடிக்கடி உரசல் போக்கை கையாண்டு வரும் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களுடன் ...

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பற்றாக்குறை ரூ.9,155 கோடி: இலவசங்களால் கடன் அளவு அதிகரித்துள்ளதாம்: வரி வருவாயும் படுத்து விட்டது என்கிறார் பன்னீர்

Posted: 16 Feb 2016 10:34 AM PST

சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், 'பற்றாக்குறை, 9,155 கோடி ரூபாய்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ''இலவச திட்டங்கள் உட்பட, பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தியதே, பற்றாக்குறை மற்றும் கடன் அளவு அதிகரிக்க காரணம். அதேநேரத்தில், வரி வருவாய் படுத்து விட்டது,'' என, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.அ.தி.மு.க., அரசின் பதவி காலம், மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. எனவே, வரும் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: ...

முதலீடுகளை குவிக்க நிறுவனங்கள் ஆர்வம்

Posted: 16 Feb 2016 10:37 AM PST

மும்பை:'மேக் இன் இந்தியா' எனப்படும், இந்தியாவில் தொழிற்சாலை உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தும், ஒரு வார கண்காட்சி மற்றும் மாநாடு, மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், 60 நாடுகளின் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன; 8,000 இந்திய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.இதில், நேற்றைய முக்கிய அம்சங்கள்:* இந்தியாவிலிருந்து, ஆயுதங்கள், விமானங்கள், 'ஆர்டர்' கிடைக்கும் என, பல ஆண்டுகளாக, அமெரிக்காவின், 'போயிங்' விமான நிறுவனம் காத்திருந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின், 'ரபேல்' விமானங்களை இந்தியா வாங்க உள்ளதால், அதன் அதிருப்தியை, போயிங் இந்தியா தலைவர் பிரதியுஷ்குமார் ...

8 மாநில சட்டசபை இடைத்தேர்தல் உ.பி., கர்நாடகாவில் பா.ஜ., அபாரம்: காங்கிரசுக்கு பின்னடைவு

Posted: 16 Feb 2016 12:50 PM PST

புதுடில்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், எட்டு மாநிலங்களில், 12 சட்டசபை தொகுதிகளுக்கு, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முசாபர் நகர் தொகுதியில், பா.ஜ., வென்றது. கர்நாடகாவில், இரண்டு தொகுதிகளில் வென்று அசத்தியது.அதே நேரத்தில், இந்த, 12 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்., ஆளுங்கட்சியாக உள்ள கர்நாடகாவில், மூன்றில் ஒரு தொகுதியில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது.பீஹாரிலும், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™