Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காதலர் தினம் - தலைப்பு சரிதானா? சொல்லுங்கள்

Posted: 16 Feb 2016 01:01 PM PST

காதலர் தினம்- தலைப்பு சரிதானா? சொல்லுங்கள் காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன் காதில் விழாதது போல் மனைவி இருந்தாள் பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன் பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான் மகளை அழைத்து தேநீர் கேட்டேன். மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை. அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன் நடத்துனர் காதில் விழவே இல்லை அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன் அதிகாரி கண்டும் காணாமல் சென்றார் மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன் கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை மாலையில் ...

வாட்ஸ் - அப் வனிதா!

Posted: 16 Feb 2016 10:52 AM PST

ஞாயிற்றுக்கிழமை காலை, 9:00 மணி - கோயம்பேடு பஸ் நிலையம், வழக்கமான ஜன நெரிசலில் சிக்கியிருக்க, ஸ்கூட்டி ஆன்டிகளும், பார்மல்ஸ் அணிந்து, பவர் கிளாசில் இருந்த ஹீரோ ஹோண்டா அங்கிள்களும், தலையில் வெங்காய சாம்பாரைக் கவிழ்த்தது போல, ஹேர் கலரிங் செய்து, 'ஸ்பைக்ஸ்' வைத்திருந்த இளைஞர்களும், சிக்னலில், வாகன வெள்ளத்தில் ஊர்ந்தனர். அக்கூட்டத்தில், தன் மோட்டார் சைக்கிளை மெதுவாக நகர்த்தியபடி, பின்னால் டிராவல் பேக்கோடு அமர்ந்திருந்த பிரவீணிடம், ''என்னடா... டிராபிக் நகரும் வேகத்த பாத்தா, நாம பஸ் ஸ்டாண்ட் போய்ச் ...

‘‘யப்பா... சீக்கிரம் ஓடிடுப்பா!’’

Posted: 16 Feb 2016 10:40 AM PST

- கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும் மனைவி, ''வந்துட்டீங்களா? உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்!'' ''ஏன்... என்னாச்சு?'' - ''இன்னைக்கு ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான். நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன். இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது. அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி!'' - கணவன் கலவரத்துடன், ''நமக்கெதுக்கும்மா வம்பு? மன்னிச்சு விட்டுட வேண்டியதுதானே!'' ''மன்னிக்கிறதா? அந்தப் பேச்சுக்கே இடமில்ல! எங்கே அந்த உருட்டுக்கட்டை...'' என தேட ஆரம்பிக்கிறாள். - அப்போது ...

ஒரு ஸ்டிக்கரை வாயில் ஒட்டிக்கொண்டாலே இல்லறம் இனிமையாகும்

Posted: 16 Feb 2016 10:37 AM PST

- @jairamguttuvan அ.தி.மு.க. கூட்டம்: பிரியாணி பொட்டலங்களுக்கு பாதுகாப்பு வழங்கிய போலீஸ்! # உளவுத்துறை ரிப்போர்ட்படி கூட்டம் சேர்ந்தது பிரியாணிக்குத்தான்னுதெரிஞ்சிடுத்தாம்... - ----------------------------------- - @RiddleTiger தீவிரவாதி 7 டைம் பேர மாத்திக்கிட்டு இந்தியாவுக்கு வந்து போயிருக்கான். அவனலாம் விட்டுடுங்க. பாண்டில இருந்து ரெண்டு பாட்டில் வாங்கிட்டு வந்தா புடிங்க... - ------------------------------------- - @_thara__ இன்னும் தமிழக மக்கள் டி.என்.ஏவுல மட்டும்தான் ...

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்...

Posted: 16 Feb 2016 10:35 AM PST

-- உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்: 'உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்லவேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்.' அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்: 'இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு, இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது.' ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்: 'இங்கே புதைகுழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப் படுகிறான்.' அரசியல்வாதியின் கல்லறையில்: 'தயவுசெய்து ...

எத்தனை முட்டாள்கள்!

Posted: 16 Feb 2016 10:33 AM PST

பட்டுக்கோட்டை என்னும் கிராமத்தில் செந்தில் என்ற உழவன் இருந்தான். அவன் தாயும், மனைவியும் முட்டாள்களாக இருந்தனர். அவர்களைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். ஆனால் பயன் ஏதும் விளையவில்லை. ஒருநாள், செந்தில் வழக்கம் போல வயலுக்குச் சென்றிருந்தான். வீட்டில் குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. திடீரென்று அவள், ''ஐயோ மகனே! உனக்கு இப்படிப்பட்ட கதியா வர வேண்டும்! நீ இல்லாமல் நான் மட்டும் எப்படி உயிர் வாழ்வேன்!'' என்று அழுது ஒப்பாரி வைத்தாள். அவளுடைய மாமியார் அழுகுரல் ...

எரும மாடு! காலையிலேயே பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு>.!!

Posted: 16 Feb 2016 10:09 AM PST

- @Ani_twits காலையில எழுந்ததும் நல்லதா நாலு வார்த்தை காதுல விழுதோ இல்லையோ... ''எரும மாடு! காலையிலேயே பல்லுகூட விளக்காம போன் பார்க்குது பாரு''னு மட்டும் விழுது! - ------------------------------------ @roflkanth வீட்டில் ஒரே பையனாக வளரும் குட்டீஸ்க்கு பல விளையாட்டுகளில் எதிரணி, சுவர்தான்... - ----------------------------------------- - @shaza_shazu பிரியாணி 'ருசியா' இல்லேனாகூட தாங்கிக்க முடியுது; பிரியமானவங்க 'பிசியா' இருக்குறததான் தாங்கிக்க முடியல! - --------------------------------------------

வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Posted: 16 Feb 2016 09:58 AM PST


வெப் டிசைன் - மின் புத்தகம் தமிழில் !

Posted: 16 Feb 2016 08:48 AM PST

                                                   http://www.ziddu.com/download/7308235/webdesigning.pdf.html free webdesigning ebook  inl .free website manager easy to upload your website

சிறுவர்களிடம் கற்றுக் கொள்கிறார்கள்...!!

Posted: 16 Feb 2016 08:41 AM PST

- @Padithurai_offl வறுமைக்கோட்டை அழிக்க நிறைய சம்பாதித்துக் காட்டுங்கள்; நிறைய சம்பாதிப்பதாக காட்டிக் கொள்ளா(ல்லா)தீர்கள்! - --------------------------------------- - @Jandi_offl   ஒருசிலர் அட்வைஸ் பண்றப்போ செருப்ப எடுத்து குடுத்து, ''இந்தா! நாலு அடி வேணா அடிச்சிக்கோ. அட்வைஸ் மட்டும் பண்ணாத''னு சொல்லத் தோணுது! - ---------------------------------------- - சாலைகளில் பேராசைகளைத் தவழ விடுகிறீர்கள், எங்கள் கனவுகள் மிதிபடுவது தெரியாமல்... - சீதா ஜி - ------------------------------------- - விவசாயிகள் ...

உடல் பருமனுக்கு காரணம் கோகோ கோலா!

Posted: 16 Feb 2016 08:29 AM PST

மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் குண்டானவர்களாக இருக்கின்றனர். இதற்கு காரணம், 'கோகோ கோலா' என்று தெரிய வந்தது. இங்குள்ள மக்கள், காலையில் எழுந்து, வேலைக்கு போவதற்குள், மூன்று லிட்டர், 'கோலா' குடிக்கின்றனர். அத்துடன் குழந்தைகளுக்கு பால் புட்டிகளில், கோலாவை ஊற்றிக் கொடுக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டில், இந்நாட்டின் ஜனாதிபதியாக, தேர்ந்தெடுக்கப்பட்டார் விசின்ட் போக்ஸ். இவர், கோகோ கோலா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்! தினமலர்

பிரச்சனையை தீர்க்க வேண்டிய நேரம்-

Posted: 16 Feb 2016 08:26 AM PST

ஈகரைக்கு,

தற்போது லிங்குகள் பதிவிட்டவுடனே நீக்கப்படுகின்றன.

இதனால் அரிய பல புத்தகங்களை படிக்க இயல முடியவில்லை.

அதற்கு தீர்வு காண முயலுங்கள்.

பொத்திப் பொத்தி வளர்ப்பதா?

Posted: 16 Feb 2016 08:18 AM PST

என் தாத்தாவுடன் பிறந்தவர்கள், எண்ணிக்கையில், மிக அதிகம்; என் தந்தை தமிழ்வாணனுடன் பிறந்தவர்கள், எட்டு பேர்; என்னுடன் பிறந்தவர்கள், மூன்று பேர்; எனக்கு பிறந்தவர்கள், இரண்டு பேர். இப்படி தலைமுறைக்கு தலைமுறை, நம் சமுதாயம், இளைத்துக் கொண்டே போகிறது. நாம் இருவர், நமக்கிருவர் என்பது கூட மாறி, நாம் இருவர்; நமக்கு ஒருவர் என, ஆகி வருகிறது. இப்படி ஒற்றைப் பிள்ளை, மிஞ்சினால் இருவர் என்று ஆகிற போது, பிள்ளைகளின் மீதான, பெற்றோரின் பார்வைப் பதிவு அதிகமாகிறது. இப்போதெல்லாம், குறைவாக குழந்தை பெற்றுக் கொள்ள ...

யார் இவர்? - 'ராஜாஜி!.'

Posted: 16 Feb 2016 08:17 AM PST

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

ச ரி க ம ப த நி!

Posted: 16 Feb 2016 08:10 AM PST

புலவர் அண்ணாமலையார் அகவையில் இளையோராயினும் பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார். எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன் அளவளாவிக் களித்தார். இதனைக் கண்ணுற்ற ஏனைய புலவர்கள் அண்ணாமலை மீது பொறாமை கொண்டனர். ஜமீன்தார், அவர்களுக்கு அண்ணாமலையின் ஒப்பற்ற அறிவுத் திறனை உணர்த்த விரும்பினார். தம் அரசவைப் புலவர்களை அழைத்து, "சரிகமபதநி' எனும் தொடரினை யமகமாக வைத்து பாடல் ஒன்றினை இயற்றிடுக' எனக் கூறினார். அவைப் ...

கதை சொல்ல ஒரு பாட்டி!

Posted: 16 Feb 2016 08:10 AM PST

'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்... ஒரு காட்டுல, சிங்கம் இருந்துச்சாம்...' என, தினமும் ஒரு கதை கூறி, தன் பேரனை தூங்க வைப்பாள் பாட்டி. ஒன்றாம் வகுப்பு படிக்கும் அபிஷேக், கதை விறுவிறுப்பாக இருந்தால், தூங்காமல் விழித்திருப்பான்; இல்லை என்றால் அடுத்த சில நிமிடங்களில் தூங்கி விடுவான். காலையில் பள்ளிக்கு கிளம்பும் அபிஷேக், உணவு ஊட்டும் அம்மாவிடம், பாட்டி கூறிய கதையை, ஒப்பித்தபடியே சாப்பிடுவான். 'ஓ... அப்படியா... சரி அப்புறம் என்னாச்சு...' என்றபடியே தோசையை ஊட்டுவாள் அம்மா மணிமேகலை. பாட்டி கூறும் ...

குவளையின் கர்வபங்கம்

Posted: 16 Feb 2016 08:06 AM PST

அது ஓர் அழகிய தடாகம்.அந்தத் தடாகத்தில் தாமரையும்,அல்லியும்,குவளையும் பூத்துக் குலுங்கின.அருகருகே இருந்த அல்லியும்,தாமரையும் பேசிக்கொண்டன. " தாமரை அக்கா! நேற்று இங்கு வந்து குளக்கரையில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தாயா?" " பார்த்தேன்! அப்பப்பா! என்ன அழகு!! அவளைப் போன்ற அழகியை இதுவரையில் நான் பார்த்ததேயில்லை." "மை தீட்டிய கண்களில்தான் எத்தனை கவர்ச்சி!' " உண்மைதான் அல்லி! "கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான்" என்று கண்களைப் பற்றி வள்ளுவர் கூறியது உண்மைதான் என்று அவளுடைய கண்களைப் பார்த்தபிறகு ...

அரசு ஊழியர் போராட்டம்.

Posted: 16 Feb 2016 07:52 AM PST

தற்போது அரசு ஊழியர்கள் அரசை எதிர்த்து போராடுவது ஞாயமா ஏற்படையதா?.வேலை இல்லாதோர் லட்சங்கணக்கில் இருப்பவர்களை அவர்கள் சிறிதும் கவனம் கொள்ளாமல் போராடுவது எந்த வித்தில் ஏற்றுக்கொள்ள முடியும் ஈகரை அன்பர்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன்.

ஷாக்கை கொற… தமிழகத்தில் இல்ல, பீகாரில்! –

Posted: 16 Feb 2016 03:49 AM PST

முகநூல், ட்விட்டரில் ரசித்தவை…! பிப்ரவரி 16, 2016 இல் 10:00 முப (நகைச்சுவை) · தொகு @MeeraTwits நினைவுகள் எப்பொழுதும் வித்தியாசமானவை… சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்; அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கும்! – —————————————– – @Baashhu தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று காதலியும், தன்னைக் காதலிக்க வேண்டுமென்று மனைவியும் ஆசைப் படுகிறார்கள்! – —————————————- @GOVINDARAJEN நான் சுயம்பு என பெருமை கொள்ளாதீர்கள். காலையில் நீங்கள் அருந்திய ஒரு கோப்பை ...

இவர்கள் பாஸ்வேர்ட் பாவத்தில் சிக்கியிருக்குரார்கள்...!

Posted: 16 Feb 2016 02:43 AM PST

- சபை கூடுகிறது - - எமன்: ஏன் அந்த மானிடர்களை கூட்டமாக நிறுத்தி வைத்திருக்கின்றீர் ? - குப்தர் : அதுவா மகாராஜா ... இவர்கள் பாஸ்வேர்ட் பாவத்தில் சிக்கியிருக்குரார்கள்...! - எமன் : அதில் என்ன பாவம் குப்தரே ? _ குப்தர் : அவர்கள் பாஸ்வேர்ட் களை கேளுங்கள் உங்களுக்கே புரியும் மகாராஜா. ஏய் மானிட புழுக்களே எதற்கு மவுனம் ? உங்கள் பாஸ்வேர்டை கூறுங்கள். - மனிதன் 1 : sithramylove145 மனிதன் 2 : firstlovesujatha99 மனிதன் 3 : latha1sinthu2julee3 - எமன் : என்ன இது இவர்கள் ஏதோ பெண் ...

படுத்தவுடனே வரும் தூக்கம்தான் தீர்மானிக்கிறது!

Posted: 16 Feb 2016 02:22 AM PST

– @_Sangeethaa_ சட்டென்று தீர்ப்பெழுதி வார்த்தைகளால் சாட்டை வீசிச் சென்றுவிடுகிறார்கள், வலியும் வேதனையும் தெரியாத வக்கிரபுத்திக்காரர்கள்… – —————————————— – @DisisPK வாழ்க்கைல கவலையில்லாம சந்தோஷமா இருக்கோம் என்பதை புன்னகை, ஆடை, பணம், படிப்பு, வேலை… இதைவிட படுத்தவுடனே வரும் தூக்கம்தான் தீர்மானிக்கிறது! – ———————————————- —- – @Thilip53 தவிக்கும்போது தண்ணீர் குடிக்கும் மனிதர்கள் மத்தியில், பசிக்கும்போதும் தண்ணீர் குடித்து வாழ்கின்றனர் பலர்! – ——————————————- – @iyyanars இளநியை ...

கடவுள் பங்கு!

Posted: 16 Feb 2016 12:44 AM PST

கொளத்தூர் என்னும் ஊரில் மூன்று கருமிகள் இணை பிரியாத நண்பர்களாக இருந்தனர். அந்த மூவரும் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், ''ஏனப்பா! உன் வீடு தேடி வந்தவர்களுக்கு ஒரு காபியோ, டீயோ கொடுத்து உபசரிக்கக் கூடாதா?'' என்றான். உடனே வீட்டுக்காரன் கருமி, ''டீ, காபியில் காபின் என்ற விஷச் சத்து இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்லியிருப்பதை நீ படிக்கவில்லையா? என் இனிய நண்பர்களுக்கு நச்சுப் பொருள் அடங்கிய பானங்களையெல்லாம் கொடுக்க நான் விரும்பவில்லை,'' என்றான். ''அப்படியானால் பால் கொடுக்கலாமே,'' ...

தெரிஞ்சுக்கோங்க!..

Posted: 15 Feb 2016 10:02 PM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

படித்ததில் பிடித்தது :) --மெகா தொடர்களின் லட்சணம் இதுதான்!

Posted: 15 Feb 2016 09:21 PM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

முன்பதிவு!

Posted: 15 Feb 2016 09:17 PM PST

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில், நாம் மிகவும் சாமர்த்தியசாலிகள்! யாராவது நம்மை நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள் கூறினால், 'அடப்போங்கய்யா...' என அலட்சியப்படுத்துவோம். ஆனால், பிரச்னை வந்தால், 'அடடா... அன்னிக்கே பெரியவர் சொன்னாரே... கேக்காம தப்பு செய்துட்டோமே...' என, புலம்புவோம். மாடுகள் ஓடியபின், பட்டியை மூடுவதிலும், காலம் போன பின், கண்ணீர் விடுவதிலும் என்ன பலன்! பெரும் செல்வந்தர் ஒருவர், கப்பல் நிறைய பொருட்களை ஏற்றி, வியாபாரத்திற்காக கடலில் பயணப்பட்டார். எதிர்பாராத விதமாக, பெரும் புயலில் சிக்கி, ...

யோசிக்கிறாங்கப்பா!

Posted: 15 Feb 2016 08:43 PM PST

- வெளிநாடுகளில் நீருக்கடியில் உள்ள உணவகங்கள் நிறைய இருக்கின்றன. இந்தியாவில் அகமதாபாத்தில் பிப்.1 ஆம் தேதி அப்படிப்பட்ட உணவகம் ஒன்று திறக்கப்பட்டது. பெயர் REAL POSEIDON. - தரை மட்டத்தில் இருந்து 20 அடி ஆழத்தில் அந்த உணவகம் அமைக்கப்பட்டிருக்கிறது. 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள குளத்தின் நடுவில் 1200 ச.அடியில் இந்த உணவகம் அமைந்து உள்ளது. குளத்தில் ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள் விடப்பட்டுள்ளன. - முழுமையான ...

இன் கம்மிங் ஃப்ரீ...!

Posted: 15 Feb 2016 08:37 PM PST

- கண்டது - (சென்னை கே.கே.நகரில் ஒரு செல்போன் கடை வாசலில்) இன் கம்மிங் ஃப்ரீ - அ.யாழினி பர்வதம், சென்னை-78. - ------------------------------------------- - (மதுரையில் ஒரு மயான ஊர்தியில்) - தூங்கா நகரில் துயில் ஊர்தி - டி.செல்வன், நெல்லையப்பபுரம். - ------------------------------------------- - (திருச்சியில் ஆசிரியர் - பெற்றோர் சங்கக் கட்டிடத்தில்) - பென்சில் வாங்குவது - தன்னம்பிக்கை ரப்பருடன் வாங்குவது - முன்னெச்சரிக்கை - எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிபட்டி. - --------------------------------------- - (சிதம்பரத்தில் ...

கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, !!

Posted: 15 Feb 2016 08:27 PM PST

@darlinretha கோதுமை தோசைய சப்பாத்தின்னு நம்ப வைச்சா பொண்டாட்டி, நம்பினா புருஷன்... அவ்ளோதாங்க வாழ்க்கை! - ----------------------------------- _ ஜெயலலிதா வின் ஊழல் வழக்கை உடனே விசாரித்து தீர்ப்பளிக்கா விட்டால் நீதியின் தராசு அறுந்துவிடும் என்கிற அளவிற்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்திடம் ஓவராக ஃபீல் செய்த உச்ச நீதிமன்றம் இப்போது வழக்கை ஏன் இழுத்தடிக்கிறது?! - - ஜோதிமணி சென்னிமலை - ------------------------------------------------------- - புத்தகக் கடையில் வாடிக்கையாளர்: இங்கே ...

மோசமான, அதி பயங்கர, இரக்கமில்லா, அழகான ஆயுதம்...!

Posted: 15 Feb 2016 08:25 PM PST

@itz_catch மோசமான, அதி பயங்கர, இரக்கமில்லா, அழகான ஆயுதம்... அன்புதான்! - -------------------------------------------- - @archanabaluit [color:f45d= #660000] விதவிதமாய் சமையலை டி.வி.யில் பார்த்து விட்டு தோசை மட்டுமே சுடுவது கை வந்த கலை பெண்களுக்கு..! - ------------------------------------------------ - @im_ezhilarasi உள்ளதை உள்ளபடி பேசி நான் சம்பாதித்தது எதிரிகளை மட்டும்தான்! - ------------------------------------------------- -

மார்ச் 9-இல் முழு சூரிய கிரகணம்: நாஸா தகவல்

Posted: 15 Feb 2016 08:23 PM PST

தெற்கு ஆசியாவில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் தென்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாஸா' தெரிவித்துள்ளது. - இதுகுறித்து அந்த அமைப்பு கூறியதாவது: - வரும் மார்ச் 9-ஆம் தேதி, தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல பகுதிகளில் முழு சூரிய கிரணம் தென்படும். சூரியன் மற்றும் நிலவின் நேர்கோட்டுப் பாதையில் அமைந்துள்ள பகுதிகளில் மட்டுமே முழு சூரிய கிரகணம் தென்படும். எனினும், மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் சூரியக் கிரகணத்தைக் காண முடியும். சுமார் ஒரு நிமிடத்துக்கு ...

சியாச்சின் வீரர்களுக்கு வீர அஞ்சலி!

Posted: 15 Feb 2016 08:22 PM PST

புதுடில்லி: சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி பலியான 9 பேர் ராணுவ வீரர்கள் டில்லி வந்தன. இந்த உடல்களுக்கு ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்களின் உடல் இரவு சென்னை வந்தது. தென்னிந்திய ராணுவ பொறுப்பு அதிகாரி ஜெக்பீர் சிங் பெற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு வீரர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. கடந்த 3ம் தேதி சியாச்சினில் நடந்த பனிப்புயலில் 10 ராணுவ வீரர்கள் ...

பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள முதலுதவி மோட்டார் சைக்கிள்

Posted: 15 Feb 2016 07:18 PM PST

- தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சென்னையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலுதவி மோட்டார்சைக்கிளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. - சேவை தொடங்கப்பட்ட நான்கு நாள்களில் 10 வாகனங்களின் மூலம் 101 பேருக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். - ஆம்புலன்ஸ் வாகனங்கள் நுழைய முடியாத இடத்தில் எளிதில் செல்வதற்காகவும், விரைந்து முதலுதவி அளிப்பதற்கு ஏதுவாகவும் மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அண்மையில் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டன. ...

தமிழ் பரப்ப வாரீர்

Posted: 15 Feb 2016 03:48 PM PST

தமிழ் பரப்ப வாரீர் உறவின் உன்னதத்தை உள்ளே வைத்து அறமென்னும் ஆயுதம் கையிலெடுத்து வரமென வந்திட்ட வார்த்தைகளால் தரமான தமிழ்க் கவிதை தந்திங்கு தரணியில் தமிழ் பரப்ப வாருங்கள் உணர்வோடு சொல்லிடுவோம் உலக மொழிகளில் உன்னதமானது உதட்டில் தேனை ஊற வைப்பது உருக வைத்து உறங்க வைப்பது உண்மைத் தமிழென உலகச் சபைதனில் தமிழ்த் தொண்டு செய்திடுவோம் குமிழ்போல் காற்றில் மறைந்திடாது அமிழ்துபோல் கடலில் கரைந்திடாது உமிழ்நீர்போல் சுவை கூட்டியே தமிழ் உண்டு வாழ்ந்திடுவோம் ச.சந்திரசேகரன்

மலரே மலராயோ?

Posted: 15 Feb 2016 03:47 PM PST

மலரே மலராயோ? மலரே நீ ஏன் மறந்தாயோ? மலர நீ ஏன் மறுத்தாயோ? மலரும் உன் முகம் காணாது மலருமோ என்முகம் மலராது. தனியே கிடந்து அழுதிட்டேன் தன்துயர் நானும் எழுதிட்டேன் என்கதை சொல்லி முடித்திட்டேன் உன்பதில் காணத் துடித்திட்டேன் சோக நாளும் செல்லாதோ? சுகராகம் நெஞ்சில் மலராதோ? - கரு மேகம் விலகிச் செல்லாதோ? முகநிலவு மீண்டும் மலராதோ? உந்தன் முடிவைச் சொல்லிவிடு - என் நெஞ்சின் துயரம் அள்ளிஎடு இல்லை என்றால் சொல்லிவிடு நீயே வந்து கொள்ளியிடு ச.சந்திரசேகரன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™