Tamil News | Online Tamil News |
- போஸ்டர், பேனர் வாசகம் கண்காணிக்க ஜெ., உத்தரவு
- காங்., ஆட்சியில் ரூ.30 லட்சம் கோடி சுருட்டல்?
- இந்தியாவில் தொழில் துவங்குவது இன்னமும் கடினமே: 'மேக் இன் இந்தியா' மாநாட்டில் வெளிநாட்டினர் வருத்தம்
- காங்., எதிர்க்கட்சி அல்ல! சுப்ரீம் கோர்ட் அதிரடி
- தமிழகத்திற்கு வறட்சி நிதியாக ரூ.1,773 கோடி ஒதுக்கீடு
- மதுரையில் 'எய்ம்ஸ்' கிளை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு?
- 'சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவிடுவேன்': சென்னை ஐகோர்ட் நீதிபதி கர்ணன் ஆவேசம்
- இடைக்கால பட்ஜெட்: முடிவுக்கு வருமா அரசு ஊழியர் 'ஸ்டிரைக்?
- இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சி: மைசூரு, சண்டிகாருக்கு அடுத்து 3வது இடம் பெற்றது
- ஐ.டி., ஊழியர் காட்டில் மழை: வாடி வதங்கும் உற்பத்தி துறை
| போஸ்டர், பேனர் வாசகம் கண்காணிக்க ஜெ., உத்தரவு Posted: 15 Feb 2016 07:32 AM PST அ.தி.மு.க.,வில் வெளியில் தெரியாத சட்ட, திட்டங்கள் நிறைய உள்ளன. அக்கட்சி சார்பில், 'டிவி' விவாதங்களில் பங்கேற்போர், முன்கூட்டியே தலைமையிடம் அனுமதி பெற வேண்டும். என்ன தலைப்பில் விவாதம்; அதில் என்ன பேச வேண்டும் என்பது குறித்தெல்லாம், கட்சி தலைமையிடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். சமீபத்தில், கட்சியினரால் ஒட்டப்படும் போஸ்டர், வைக்கப்படும் பேனர்களில் என்னென்ன வாசகங்கள் இடம் பெறுகின்றன என்பதையும், கட்சி தலைமை கண்காணிக்க உத்தரவிட்டு உள்ளது.முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, கட்சியினர் விதவிதமாக போஸ்டர்களை அச்சிட்டு, ஊரெங்கும் ஒட்டி வருகின்றனர். ... |
| காங்., ஆட்சியில் ரூ.30 லட்சம் கோடி சுருட்டல்? Posted: 15 Feb 2016 09:15 AM PST புதுடில்லி கடந்த, 2004 - 2013ம் ஆண்டுகளில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவில் இருந்து, 30 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிமான கறுப்பு பணம், வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, 'பகீர்' தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை தரும்படி, வரிகள் புலனாய்வு இயக்குனரகத்தை, சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கணக்கில் காட்டப்படாத, பல லட்சம் கோடி ரூபாய், ஆண்டுதோறும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழுவை, சுப்ரீம் ... |
| இந்தியாவில் தொழில் துவங்குவது இன்னமும் கடினமே: 'மேக் இன் இந்தியா' மாநாட்டில் வெளிநாட்டினர் வருத்தம் Posted: 15 Feb 2016 09:21 AM PST மும்பை:இந்தியா - அமெரிக்கா வர்த்தக கவுன்சில் தலைவர் முகேஷ் அகி, இந்தியாவில் தொழில் துவங்குவது கடினம் என, நேற்று தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி:இந்தியாவில் தொழில் செய்ய விரும்பும் அமெரிக்க நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்ன?தொழில்களை துவக்குவது எளிதாக இருக்க வேண்டும். 'மாரியட்' போன்ற ஓட்டல்கள், இந்தியாவில் ஓட்டல் துவக்க, 153 இடங்களில் அனுமதி பெற வேண்டியுள்ளது. கொள்கைகளிலும், விதிமுறைகளிலும் ஸ்திரத்தன்மை அவசியம். அதுபோல, இந்தியாவில் உற்பத்திச் செலவு அதிகமாக இருக்கிறது. அதை குறைக்க வேண்டும் என்பதும் அமெரிக்க நிறுவனங்களின் கோரிக்கையாக ... |
| காங்., எதிர்க்கட்சி அல்ல! சுப்ரீம் கோர்ட் அதிரடி Posted: 15 Feb 2016 09:33 AM PST பார்லிமென்டில், எதிர்க்கட்சி அந்தஸ்து கோரி, காங்., தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட், நேற்று தள்ளுபடி செய்தது.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனி மெஜாரிட்டி பெற்ற கட்சியாக உருவெடுத்தது. ஆளுங்கட்சியாக இருந்த காங்., வெறும், 44 இடங்களை மட்டும் பெற்று, படுதோல்வியை சந்தித்தது. லோக்சபாவில் எதிர்க்கட்சியாக திகழ, குறைந்தபட்சமாக தேவைப்படும், 10 சதவீத தொகுதிகளை கூட, காங்கிரசால் வெல்ல முடியாமல் போனது. லோக்சபாவின் முதல் இந்திய சபாநாயகராக, 60 ஆண்டுகளுக்கு முன் பதவி வகித்த, ஜி.வி.மல்வன்கர், எதிர்க்கட்சியாக திகழ, 10 சதவீத இடங்களையாவது வென்றிருக்க ... |
| தமிழகத்திற்கு வறட்சி நிதியாக ரூ.1,773 கோடி ஒதுக்கீடு Posted: 15 Feb 2016 09:38 AM PST வறட்சி நிவாரண நிதி என்ற பெயரில், ஏழு மாநிலங்களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், தமிழகத்திற்கு மட்டும், 1,773 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை, நேரில் பார்வையிட்டு சென்ற மத்திய நிபுணர் குழு, தன் ஆய்வறிக்கையை, கடந்த 25ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. இந்த ஆய்வறிக்கை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ... |
| மதுரையில் 'எய்ம்ஸ்' கிளை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு? Posted: 15 Feb 2016 09:48 AM PST டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் எனப்படும், 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் கிளையை, மதுரையில் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. டில்லியில், அதிநவீன வசதிகளுடன், 'எய்ம்ஸ்' மருத்துவமனை செயல்படுகிறது. 'இதன் கிளை, தமிழகத்திலும் அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, 200 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து தருமாறு, தமிழக அரசிடம் கோரியது. இதன்படி, மதுரை -- தோப்பூர்; ஈரோடு -- பெருந்துறை; காஞ்சிபுரம் - செங்கல்பட்டு; தஞ்சை - செங்கிப்பட்டி; ... |
| 'சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவிடுவேன்': சென்னை ஐகோர்ட் நீதிபதி கர்ணன் ஆவேசம் Posted: 15 Feb 2016 09:52 AM PST சென்னை: ''எனக்கு நீதித்துறை பணிகள் ஒதுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும்படி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட உள்ளேன்,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் கர்ணன். இவரை, கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி, பிப்., 12ல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை தானாக முன்வந்து வழக்காக எடுத்த நீதிபதி கர்ணன், 1993ல், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு ... |
| இடைக்கால பட்ஜெட்: முடிவுக்கு வருமா அரசு ஊழியர் 'ஸ்டிரைக்? Posted: 15 Feb 2016 09:58 AM PST அரசு ஊழியர் சங்கத்தின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' தீவிரம் அடைந்துள்ளது. நேற்று மறியலில் ஈடுபட்ட, 40 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, சட்டசபையில், இன்று தாக்கல் செய்யப்படும், இடைக்கால பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். எனினும், அவர்களின் கோரிக்கைகளுக்கு, அரசு செவி சாய்க்காததால், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும், நேற்று மறியலில் ... |
| இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சி: மைசூரு, சண்டிகாருக்கு அடுத்து 3வது இடம் பெற்றது Posted: 15 Feb 2016 10:22 AM PST புதுடில்லி: 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், சுத்தமான நகரங்கள் குறித்து நடந்த ஆய்வில், தமிழகத்தின் திருச்சி மாநகரம், மூன்றாம் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது. இது, தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாகக் கருதப்படுகிறது. முதல் இடத்தில், மைசூரு, இரண்டாம் இடத்தில் சண்டிகார் நகரங்கள் வந்துள்ளன.ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் நோக்கில், இந்தியாவின் நகரங்கள் மற்றும் கிராமங்களில், துாய்மையை பறைசாற்றும், 'துாய்மை இந்தியா' திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார்.துாய்மைக்கு முக்கியத்துவம் தந்து, நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் இந்திய ... |
| ஐ.டி., ஊழியர் காட்டில் மழை: வாடி வதங்கும் உற்பத்தி துறை Posted: 15 Feb 2016 12:43 PM PST புதுடில்லி,:இந்தியாவில், தகவல் தொழில்நுட்பம் எனப்படும், ஐ.டி., துறையில், அதிகபட்சமாக, மணிக்கு, 346 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது; குறைந்தபட்சமாக, உற்பத்தி துறையில், சராசரியாக, மணிக்கு, 254 ரூபாய் வழங்கப்படுகிறது.எம்.எஸ்.ஐ., எனப்படும், மான்ஸ்டர் ஊதியக்குறியீடு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை விவரம்:ஐ.டி., துறையில் சராசரியாக, மணிக்கு, 346 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில் உள்ள பி.எப்.எஸ்.ஐ., எனப்படும், வங்கி, நிதி மற்றும் இன்சூரன்ஸ் துறையில், சராசரியாக, மணிக்கு, 300 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. நாட்டில் அதிகபட்ச சம்பளம் கிடைத்தாலும், இந்த இரு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 16,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |