Tamil News | Online Tamil News |
- சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு: இளைஞர்களை கவர தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம்
- காவிரி -- வைகை- இணைப்பு திட்டம்மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு?
- இந்தியாவில் திறமையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை 175 'கிகாவாட்' மின் திட்டங்கள் கேள்விக்குறி
- தமிழகத்தின் கனவு திட்டம்: ரயில்வே மனசு வைக்குமா?
- பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலம்: பாக்.,கிற்கு எட்டு போர் விமானங்களை வழங்க முடிவு
- குட்டு வாங்கியும் திருந்தவில்லை- ஸ்டாலின்
- மக்களிடம் தம்பட்டம் அடிக்க தயாராகி வரும் அ.தி.மு.க.,
- தமிழக கட்சிகளால் தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி
- மூன்று ஆண்டுகளுக்குப் பின் காங்கிரசுடன் தி.மு.க., கைகோர்ப்பு: சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி உறுதியானது
- வேலைநிறுத்த அறிவிப்பு: 'ஜாக்டோ'வில் குழப்பம்
| Posted: 13 Feb 2016 06:28 AM PST தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ள, தமிழக அரசியல் கட்சிகள், அதற்காக, 200 கோடி ரூபாய் வரை செலவிட முன்வந்துள்ளன. முன்பு தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தொண்டர்கள் தாங்களாக முன் வந்து, தங்கள் வீட்டு சுவர்களில், தங்களின் அபிமான கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சுவர் விளம்பரம் செய்வர். கட்சி சார்பில், துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்படும். திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்படும். நாளடைவில், வாகனங்களில் ஒலி பெருக்கியை கட்டிக் கொண்டு, 'வாக்காளர்களே! ஆதரிப்பீர், உங்கள் வீட்டு பிள்ளை' என, ஓட்டு கேட்டு சென்றனர்; ... |
| காவிரி -- வைகை- இணைப்பு திட்டம்மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு? Posted: 13 Feb 2016 07:14 AM PST காவிரி - -வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பான அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.காவிரி - வைகை- குண்டாறு; பெண்ணையாறு - பாலாறு உள்ளிட்ட பல ஆறுகள் இணைப்பு திட்டம் குறித்த அறிவிப்பை, 2012ல் தமிழக அரசு அறிவித்தது. இதில், 'காவிரி - -வைகை இணைப்பு திட்டத்திற்கு, 258 கி.மீ., துார கால்வாய் அமைக்க, 5,166 கோடி ரூபாய் தேவை' என, மதிப்பிடப்பட்டது; மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிக்கப்பட்டது. ஆனால், காங்., தலைமையிலான முந்தைய மத்தியஅரசு நிதி வழங்க மறுத்து விட்டது. 2014ல் மத்தியில், பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், இந்த திட்டத்திற்கு நிதி பெற மீண்டும் ... |
| இந்தியாவில் திறமையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை 175 'கிகாவாட்' மின் திட்டங்கள் கேள்விக்குறி Posted: 13 Feb 2016 07:23 AM PST புதுடில்லி,:நாட்டில், திறமையான தொழிலாளர்களுக்கு அதிக பற்றாக்குறை உள்ளது; இக்குறை வரும், 2022க்குள், 175, 'கிகாவாட்' மின் திறனை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறும் திட்டத்துக்கு, பெரும் சவாலை ஏற்படுத்தும் என, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.இந்தியாவில், மிக எளிதாக கிடைக்கக்கூடிய சூரிய ஒளியை பயன்படுத்தி, மின் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022க்குள், நாடு முழுவதும், 100 கிகாவாட் திறன் மின்சாரத்தை, சூரிய ஒளியை கிரகிக்கவல்ல, 'சோலார் பேனல்'களை நிறுவுவதன் மூலம் பெற, மத்திய அரசு ... |
| தமிழகத்தின் கனவு திட்டம்: ரயில்வே மனசு வைக்குமா? Posted: 13 Feb 2016 08:10 AM PST சென்னை - கன்னியாகுமரி இடையே அதிவேக ரயில் சேவைக்கு ரயில்வே துறையுடன் கைகோர்த்து செயல்பட தமிழக அரசு முன்வந்துள்ளது. இதற்கான கட்டமைப்பை உருவாக்க, சென்னை - கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை பணியை விரைவில் முடிக்க வேண்டியது அவசியம். இதற்கேற்ப வரும் ரயில்வே பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். |
| Posted: 13 Feb 2016 08:48 AM PST வாஷிங்டன்: 'பயங்கரவாதத்தை ஒழிக்கும் விஷயத்தில், அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, கூறிவரும் அமெரிக்கா, பயங்கரவாதத்தை துாண்டி விடும் பாகிஸ்தானுக்கு, அதிநவீன, 'எப் - 16' ரக போர் விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளது. 'பயங்கரவாதத்தால், நாங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம், சர்வதேச அமைதிக்கு, மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.அதை ஒழிக்க, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, அமெரிக்க அரசு தரப்பில், அடிக்கடி அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனாலும், ... |
| குட்டு வாங்கியும் திருந்தவில்லை- ஸ்டாலின் Posted: 13 Feb 2016 09:22 AM PST தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அளித்த பேட்டி: கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடந்துள்ளதா என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலையில் தான், அ.தி.மு.க., ஆட்சி நடந்திருக்கிறது. செயல்படாத ஒரு அரசாங்கத்தை நடத்திய பின்னும், அதில் ஏதோ சாதனைகளை புரிந்து விட்டது போல, ஊர் உலகம் முழுக்க, பேனர், போஸ்டர்களை எப்படித்தான் வைக்கின்றனர் என புரியவில்லை. சட்டசபையிலும் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டதால் தான், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீதுகடுமையான தண்டனைகளை மேற்கொண்டனர். அவர்கள் மீதான, 'சஸ்பெண்ட்' நடவடிக்கைகள் தேவையில்லை; விலக்கிக் ... |
| மக்களிடம் தம்பட்டம் அடிக்க தயாராகி வரும் அ.தி.மு.க., Posted: 13 Feb 2016 09:43 AM PST 'கடந்த 2011 சட்டசபை தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை, 100 சதவீதம் நிறைவேற்றி விட்டோம்' என, வரும் சட்டசபை தேர்தலில், பிரசாரம் செய்வதற்கு வசதியாக, நிறைவேற்றப்படாத திட்டங்களை, உடனடியாக நிறைவேற்றும் நடவடிக்கையில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டசபையில், ஜன., 23ம் தேதி, கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து, முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது, 'நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, அதற்கு மேலும் பல்வேறு திட்டங்களை, தமிழக மக்களுக்காக செயல்படுத்தி உள்ளோம்' என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ... |
| தமிழக கட்சிகளால் தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி Posted: 13 Feb 2016 09:51 AM PST 'தமிழக வாக்காளர் பட்டியலில், 40 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு முன், அவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்' என, ஆளும் கட்சி தவிர, அனைத்து கட்சிகளும் வலியுறுத்துவதால், தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஜன., 20ல், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது; அதன்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2011 சட்டசபை தேர்தலின் போது, தமிழகத்தில், 4.75 கோடிவாக்காளர்கள் இருந்தனர். தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.'ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால், ... |
| Posted: 13 Feb 2016 10:37 AM PST மூன்றாண்டுகளுக்கு பின் காங்கிரசுடன் தி.மு.க., கைகோர்த்துள்ளது. இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி உள்ளது.சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை பெற்றுள்ளன; மற்ற கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன.இந்நிலையில் கூட்டணி அமைக்கும் விஷயத்திலும் கட்சிகள் மும்முரமாகி உள்ளன. இதன் துவக்கமாக காங்கிரசுடனான கூட்டணியை நேற்று, தி.மு.க., உறுதி செய்தது.தி.மு.க., தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரம் ... |
| வேலைநிறுத்த அறிவிப்பு: 'ஜாக்டோ'வில் குழப்பம் Posted: 13 Feb 2016 12:53 PM PST சென்னை: ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக, 'ஜாக்டோ' அமைப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ' மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' இணைந்து, 15 ஆண்டுகளாக, பல போராட்டங்களை நடத்தி உள்ளன. இந்த அமைப்புகள், 12 ஆண்டுகளுக்கு முன் நடத்திய வேலைநிறுத்த போராட்டம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; 'டெசோ, டெஸ்மா' சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு பின், இந்த இரு அமைப்புகளும் ஒற்றுமையாக, 2015 பிப்ரவரி முதல், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பேரணி, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 14,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |