Tamil News | Online Tamil News |
- மோடியின் பாஸ்போர்ட் விவரம் கேட்கிறார் மனைவி ஜசோதா
- பிரதமர் மோடிக்கு கடிதம் ரயில்வேயுடன் இணைந்து செயல்பட ஜெ., நிபந்தனை
- தேர்தல் கமிஷனர் பேட்டி மே 22க்குள் தேர்தல் நடத்தப்படும்
- பட்ஜெட்டில் என்ன வேண்டும்?'டுவிட்டரில்' தெரிவிக்கலாம்!
- முதல்வரின் 'கே' பிளான்: மூத்த அமைச்சர்கள் கலக்கம்
- அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ஜெ., குட்டிக்கதைக்கு கருணாநிதி பதிலடி
- தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இல்லை: ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு
- நகை கடைகள் அடைப்பால் தங்கம் விற்பனை பாதிப்பு...ரூ.500 கோடி!
- 'பேஸ்புக்' அதிகாரிக்கு அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்... சூடு இந்தியாவை பற்றி அவதூறாக பேசியதால் கடும் கோபம்
- டில்லியில் வாகன கட்டுப்பாடு; ஏப்ரல் மாதத்தில் மீண்டும் அமல்
| மோடியின் பாஸ்போர்ட் விவரம் கேட்கிறார் மனைவி ஜசோதா Posted: 11 Feb 2016 07:56 AM PST ஆமதாபாத்: பிரதமர் மோடியின், 66, பாஸ்போர்ட் விவரங்களை கேட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், அவர் மனைவி ஜசோதாபென், 64, பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு, ஆட்டோவில், தன் உறவினர் அசோக் மோடியுடன் வந்த ஜசோதா, பாஸ்போர்ட் அதிகாரியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.அதில், 'பிரதமர் மோடி, குஜராத்தில் முதல்வராக இருந்ததுமுதல், பிரதமர் ஆகும் வரை அவருக்கு எத்தனை முறை பாஸ்போர்ட் வழங்கப் பட்டது என்ற விவரம் வேண்டும்' என, கோரியிருந்தார்.அடுத்த, 10 நிமிடங்களில் வெளியே வந்த அவரிடம், ... |
| பிரதமர் மோடிக்கு கடிதம் ரயில்வேயுடன் இணைந்து செயல்பட ஜெ., நிபந்தனை Posted: 11 Feb 2016 08:34 AM PST சென்னை:தமிழக அரசும், ரயில்வே அமைச்சகமும் பங்குதாரராகி செயல்படுத்தும், மூன்று சிறப்பு திட்டங் களுக்கு, சில நிபந்தனைகள் விதித்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அவரது கடித விவரம்: தொழில்மய மாநிலங்களில் முதன்மையானது தமிழகம். தொழில் மயமாதல் விரைவாக வளர்ச்சியடைய, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு அவசியம். இதை உணர்ந்து, 'தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் - 2023' துவக்கப்பட்டுள்ளது. பத்து திட்டங்கள்:இந்தத் திட்டத்தில், தமிழகத்தின் உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தவும், ரயில் போக்கு வரத்தை வளர்ச்சி அடையச் செய்யவும், 10 ... |
| தேர்தல் கமிஷனர் பேட்டி மே 22க்குள் தேர்தல் நடத்தப்படும் Posted: 11 Feb 2016 08:36 AM PST சென்னை: ''ஐந்து மாநில சட்டசபைகளுக்கும், மே, 22ம் தேதிக்குள், தேர்தல் நடத்தி முடிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தெரிவித்தார். சென்னையில் நேற்று நசீம் ஜைதி கூறியதாவது:தமிழகத்தில், ஜன., 20ல் வெளியிடப்பட்ட, இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அனைவரின் புகைப்படமும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள் பெயர், இடம் மாறி சென்ற வர்கள் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்கள் ... |
| பட்ஜெட்டில் என்ன வேண்டும்?'டுவிட்டரில்' தெரிவிக்கலாம்! Posted: 11 Feb 2016 08:47 AM PST புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில், எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை, மக்கள், சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' கருத்து தெரிவிக்கும் வசதி, முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட்டை, வரும், 29ம் தேதி, தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இதற்காக பல்வேறு தரப்பினருடன், ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இதற்கிடையே, முதன்முறையாக, பொதுமக்களின் கருத்தையும் கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு இணையதளத்தில், மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க லாம் என்று ... |
| முதல்வரின் 'கே' பிளான்: மூத்த அமைச்சர்கள் கலக்கம் Posted: 11 Feb 2016 09:04 AM PST 'கே' பிளான் என, அரசியல் கட்சிகளால் அழைக்கப்படும், காமராஜர் திட்டத்தை, அ.தி.மு.க.,வில் செயல்படுத்த, முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பதால், அமைச்சர்கள் பலர் கலக்கம் அடைந்துள்ளனர். காமராஜர் திட்டம்: காமராஜர் முதல்வராக இருந்த போது, காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு குறைந்தது. அப்போது, 'கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சிப் பணிக்கு செல்ல வேண்டும்; புதியவர்களுக்கு வழிவிட வேண்டும்' எனக்கூறி, காமராஜர் தான் வகித்த முதல்வர் பதவியை துறந்தார். இத்திட்டம் அரசியல் வரலாற்றில், 'கே' பிளான் என, அழைக்கப்படுகிறது.இந்தத் திட்டத்தை, காங்கிரஸ், பா.ஜ., போன்ற ... |
| அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ஜெ., குட்டிக்கதைக்கு கருணாநிதி பதிலடி Posted: 11 Feb 2016 09:11 AM PST அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில், நேற்று முன்தினம் பங்கேற்ற, அக்கட்சியின் பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டு, குட்டிக்கதை ஒன்றை கூறினார். அப்பா - மகன் கதை:அந்தக் குட்டிக்கதைக்கு, புதிய குட்டிக்கதை மூலம் நேற்று விளக்கம் அளித்துள்ளார், தி.மு.க., தலைவர் கருணாநிதி. அவர் கூறியுள்ள குட்டிக்கதை விவரம்: சென்னையில், 14 திருமணங்களை நடத்தி வைத்த, முதல்வர் ஜெயலலிதா, வழக்கம் போல, 'குட்டிக்கதை'களை படித்திருக்கிறார். அந்தக் காலத்தில் ... |
| தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இல்லை: ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு Posted: 11 Feb 2016 09:48 AM PST ''பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார். அதனால், காங்., உடனாவது கூட்டணி வருமா என, தி.மு.க., தொண்டர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் 'தமிழகத்தில், வரும் சட்ட சபை தேர்தலில், பா.ஜ., - தே.மு.தி.க., - தி.மு.க., இடையே கூட்டணி ஏற்படும். இந்த கூட்டணி வெற்றி பெற்ற பின், ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி, சமீபத்தில், 'டுவிட்டர்' மூலம் கருத்து தெரிவித்திருந்தார்.இதையடுத்து, தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது என, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு ... |
| நகை கடைகள் அடைப்பால் தங்கம் விற்பனை பாதிப்பு...ரூ.500 கோடி! Posted: 11 Feb 2016 10:15 AM PST தங்கம் வாங்கும் போது, 'பான் கார்டு' நகல் பெறும் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நகை கடைகள், நேற்று மூடப்பட்டதால், 500 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 35 ஆயிரம் நகை கடைகளில், தினமும் சராசரியாக, 1,000 - 1,200 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன. மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, 'இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், தங்க நகை வாங்குவோரிடம், பான் கார்டு நகல் பெற வேண்டும்' என, 2015ல் அறிவித்தது. இது, ஜன., மாதம் முதல் அமலுக்கு வந்தது.தொழிற்கூடங்களும் மூடல்: ஆனால், நகை ... |
| Posted: 11 Feb 2016 11:45 AM PST வாஷிங்டன்,: இந்தியாவில் நிலவும் இணைய சமநிலையை சீர்குலைக்கும் வகையில், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து,'ப்ரீ பேசிக்ஸ்' என்ற பெயரில், இலவச இணையதள சேவை வழங்க முன்வந்த, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் முயற்சியை, 'டிராய்' தடை செய்ததால், அதன் அதிகாரிகளில் ஒருவர் கோபமடைந்து, இந்தியா பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்தார். அதையறிந்த இந்தியர்கள், அந்த அமெரிக்கரை, சமூக வலைதளங்களில் வசை பாடியதை யடுத்து, அவர்மன்னிப்புக் கேட்டுள்ளார்; பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்கும், அந்த நபரை கண்டித்து, 'இனிமேல் இதுபோல் கருத்து தெரிவிக்கக் கூடாது' என்றார். இந்த ... |
| டில்லியில் வாகன கட்டுப்பாடு; ஏப்ரல் மாதத்தில் மீண்டும் அமல் Posted: 11 Feb 2016 01:59 PM PST
புதுடில்லி :'ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்களுடைய வாகனங்கள், தனித்தனி நாட்களில் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கும் திட்டம், டில்லியில், ஏப்., 15 முதல், 30ம் தேதி வரையில், மீண்டும், அமல்படுத்தப்படும்' என டில்லி அரசு அறிவித்துள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுற்றுச்சூழல் மாசை தடுக்க, கடந்த மாதம், 1 - 15ம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு, பொதுமக்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் அந்தந்த பகுதியில் நடத்திய கூட்டத்தில், மக்கள், இந்த திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 12,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |