ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழ் பரப்ப வாரீர்
- 'பேராசைப் பெருமாட்டி!'- ஜெ.வுக்கு கருணாநிதி பதிலடி கதை!
- அரசியலில் அப்பா, மகன் உறவுக்கு இடமில்லை... கல்யாணத்தில் ஜெ. சொன்ன கதை யாருக்கு தெரியுமா?
- உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.
- 'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா?
- தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)
- பாகுபலி 2'-க்காக உடல் எடையை 150 கிலோவுக்கு கூட்டும் பிரபாஸ் !
- தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்!
- கண்டுபிடிப்பு நாயகன் தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தின சிறப்பு பகிர்வு
- பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்!
- முகங்களும் பாவனைகளும்
- எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன் நினைவு தின சிறப்பு பகிர்வு..
- தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பக்கம்,சென்னை
- இடம் அறிந்து பேசு
- அனுமந்தபுரம் அழகிய கோலங்கள்
- சியாச்சின் பனிச்சரிவில் மீட்கப்பட்ட ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்: நினைவு திரும்பாமலேயே உயிர் பிரிந்தது
- அமைப்புக்கு எதிராக ஒரு குறுக்கு விசாரணை
- [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
| Posted: 11 Feb 2016 11:27 AM PST தமிழ் பரப்ப வாரீர் உறவின் உன்னதத்தை உள்ளே வைத்து அறமென்னும் ஆயுதம் கையிலெடுத்து வரமென வந்திட்ட வார்த்தைகளால் தரமான தமிழ்க் கவிதை தந்திங்கு தரணியில் தமிழ் பரப்ப வாருங்கள் உணர்வோடு சொல்லிடுவோம் உலக மொழிகளில் உன்னதமானது உதட்டில் தேனை ஊற வைப்பது உருக வைத்து உறங்க வைப்பது உண்மைத் தமிழென உலகச் சபைதனில் தமிழ்த் தொண்டு செய்திடுவோம் குமிழ்போல் காற்றில் மறைந்திடாது அமிழ்துபோல் கடலில் கரைந்திடாது உமிழ்நீர்போல் சுவை கூட்டியே தமிழ் உண்டு வாழ்ந்திடுவோம் ச.சந்திரசேகரன் |
| 'பேராசைப் பெருமாட்டி!'- ஜெ.வுக்கு கருணாநிதி பதிலடி கதை! Posted: 11 Feb 2016 11:13 AM PST திருமண விழா ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா கூறிய அப்பன் - மகன் கதைக்கு பதிலடியாக திமுக தலைவர் கருணாநிதி கதை ஒன்றை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், " அ.தி.மு.க. தலைவி வழக்கம் போல "குட்டிக் கதை"களைப் படித்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இது போல குட்டிக் கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்! அடுத்தவர் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறம்" என்று பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில் ... |
| அரசியலில் அப்பா, மகன் உறவுக்கு இடமில்லை... கல்யாணத்தில் ஜெ. சொன்ன கதை யாருக்கு தெரியுமா? Posted: 11 Feb 2016 11:11 AM PST ஒரு செல்வந்தர் பூனை ஒன்றை வளர்த்தார். அந்த பூனை முதல்நாள் எலி ஒன்றை பிடித்து வந்தது. அதைப்பார்த்து அவர் மகிழ்ச்சியடைந்தார். மறுநாள், செல்வந்தர் ஆசையாக வளர்த்த கிளியை பிடித்தது. இதைப்பார்த்து செல்வந்தர் கவலைப்பட்டார். மூன்றாம் நாள் ஒரு குருவியை பிடித்து வந்தது பூனை. ஆனால் செல்வந்தர் கவலையோ, மகிழ்ச்சியோ அடையவில்லை. எதையாவது பிடிப்பது பூனையின் இயல்பு. அது பூனையின் சுபாவம். எனவே மற்றவர் இயல்பை புரிந்து கொண்டால்தான் நாம் வெற்றி பெற முடியும் என்றார். அரசியல் பாடம் கதை அரசியலில் உள்ளவர்களுக்கு ... |
| உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Posted: 11 Feb 2016 11:03 AM PST ஆட்டிசம் பிரச்சனை உள்ள பிள்ளைகள் இருந்தால் நல்ல கர்நாடக இசை CD க்கள் போடுங்கள் வீட்டில். குறிப்பாக சங்கராபரண ராகத்தில். தந்தி வாத்தியமாக இருந்தால் சிறப்பு. 24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்," மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!" அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார். ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான். "அப்பா மேலே பாருங்கள், ' ... |
| 'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா? Posted: 11 Feb 2016 11:00 AM PST காதலர் தினம் வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினத்தை கொண்டாட, உலகம் முழுவதும் காதலர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் அன்பை வெளிப்படுத்தும் காதலர் தினத்தில், யார் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்பது குறித்து கிப்ட்ஈஸ்.காம் எனும் தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தி முடிவினை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் ருசிகரத் தகவல் உங்களுக்காக... காதலிக்கு பரிசு மெட்ரோ நகரங்களில் வசிக்கும் 18 முதல் 45 வயதுடைய 3 ஆயிரம் ஆண்கள், பெண்களிடம் காதலர் தினம் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. ... |
| தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ) Posted: 11 Feb 2016 10:51 AM PST 'இது முற்றிலும் கற்பனையே... யாரையும் குறிப்பிடுவன அல்ல' என சினிமாவுல கேப்ஷன் கொடுக்கிறதைப் பார்த்திருக்கீங்கள்ல? அதுமாதிரி... இந்தக் கருத்துக் கணிப்புக்கும் மனிதர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. முக்கியமாக, இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மேற்கொள்ளப்பட்ட விஷயமே தவிர, எந்தக் கட்சியையும் தாக்குவதற்கு அல்ல! - ஏன் இவ்வளவு பெரிய ட்விஸ்ட்? ஏன்னா, இது வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து, பேய், பிசாசுகளிடம் நடத்தப்பட்ட சர்வே! அரசியல் தலைவர்களுக்குத் 'திகில்' கிளப்ப, ஏராளமான எலெக்ஷன் ... |
| பாகுபலி 2'-க்காக உடல் எடையை 150 கிலோவுக்கு கூட்டும் பிரபாஸ் ! Posted: 11 Feb 2016 09:22 AM PST நடிகர் பிரபாஸ் 'பாகுபலி 2'-ம் பாகத்தில் 150 கிலோ எடையில் நடிக்கவுள்ளார். தற்போது 120 கிலோ எடையிருக்கும் பிரபாஸ் இன்னும் 30 கிலோ எடை கூட இருக்கிறார். 'பாகுபலி' படத்தின் 2-ம் பாக படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இதில் 'பாகுபலி' பாத்திரத்திலும், அவரது மகனான ஷிவுடு பாத்திரத்திலும் பிரபாஸ் நடிக்கிறார். கம்பீரமான ராஜ பரம்பரையைச் சேர்ந்த கதாபாத்திரம் என்பதால் முதல் பாகத்திலேயே அதற்கேற்றவாறு எடை கூடி நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தில் 150 கிலோ எடையில் இன்னும் மிரட்டலாக இருக்க வேண்டும் ... |
| தெய்வத்தின் குரல்: அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்! Posted: 11 Feb 2016 09:17 AM PST எரிந்த மரம் கரியாகிறது. அந்தக் கரியும் முதிர்ந்தால் பளிங்காக, வைரமாக ஆகிறது. உலகம் இருந்தபோதிலும் அதன் மாயை நம்மைத் தொடாமல் எல்லாம் விஷ்ணுமயமாகத் தெரிகிறபோது, நம் அஞ்ஞானம் எரிந்து கரியாகப் போன நிலையில் இருக்கிறோம். திருமாலும் இதனாலேயே கருமாலாக இருக்கிறார். கரி வைரமாகிறது போன்ற நிலைக்கு - ஸ்படிகமாகிற நிலைக்கு சுத்த ஸ்படிக சங்காசமான பரமேசுவரன் தெய்வமாக இருக்கிறார். கரியும் வைரமும் வேறு வேறு அல்ல. இதுவேதான் அதுவாயிருக்கிறது. மகாவிஷ்ணுவும் பரமேசுவரனும் ஒருத்தரேதான். உலகத்தின் ஆசாபாசங்கள், இவற்றுக்குக் ... |
| கண்டுபிடிப்பு நாயகன் தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தின சிறப்பு பகிர்வு Posted: 11 Feb 2016 08:09 AM PST தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது. வீட்டில் அன்னையே எடிசனுக்கு ஆசிரியை ஆனார். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு பள்ளியில் படிக்க லாயக்கில்லை என துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார். உள்நாட்டு ... |
| பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்! Posted: 11 Feb 2016 06:08 AM PST தை பொங்கல்என்பது ஆதவனின் பாதை மாற்றம் மட்டுமல்ல, அது அனைவர்க்கும் பழைய எண்ணங்களைக் களைந்து புதிய பாதைகளை வகுக்கும் ஒரு அற்புத தமிழர் திருநாள் ,, நன்றியைத் தெரிவிக்கும் ஒரு நல்ல நாள் , அனைத்து நண்பர்களுக்கும் எனது உற்சாகமான தை திரு நாள் வாழ்த்து , பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்! அன்புடன் அண்ணாமலை சுகுமாரன் |
| Posted: 11 Feb 2016 04:58 AM PST அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன் நினைவு தின சிறப்பு பகிர்வு.. Posted: 11 Feb 2016 04:46 AM PST எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன் மறைந்த தினம் இன்று . இளம் வயதில் அறிவியலின் மீது தீராத ஆர்வம் கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் . ஜெர்மனியில் பல்வேறு பல்கலைகழங்களில் வேலைபார்த்த அவர், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகத்திற்கு பேராசிரியர் பணி செய்ய டிக்கெட் எல்லாம் எடுத்து கிளம்பும் பொழுது உலகப்போர் வந்து விட்டதால் ஜெர்மனியிலேயே இருந்துவிட்டார் . பேரியம் பிளாடினோ சயனைட் பூச்சு பூசிய திரை,மற்றும் க்ரூக்ஸ் குழாய் ஆகியவற்றை கருப்பு கார்ட்போர்டில் சுற்றி வைத்துக்கொண்டு கேதோட் ... |
| தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பக்கம்,சென்னை Posted: 11 Feb 2016 04:45 AM PST தல சிறப்பு: மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார். லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது. மூர்த்தி சிறியது. கீர்த்தி பெரியது. பொது தகவல்: இக்கோயிலிலுள்ள தூண்களில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. தூணில் சிற்பமாக சரபேஸ்வரர் காட்சி தருகிறார். ... |
| Posted: 11 Feb 2016 03:01 AM PST ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்: என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருருவருடைய மனைவியின் உடன் கழித்த நாட்களே என்று". இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர், யாரும் எதுவும் பேசவில்லை. பேச்சாளர் தொடர்ந்தார்.. அந்த இன்னொருருவருடைய மனைவி, "என் தாய் தான்" என்றார். கூட்டத்தில் பலத்த சிரிப்பும், கரகோஷமும் ஏற்பட்டது. இதை கேட்ட பார்வையாளர்களில் இருந்த ஒருவர், வீட்டிற்கு சென்று இதனை தானும் தன் மனைவியிடம் கூறி வியப்பில் ஆழ்த்த ... |
| Posted: 11 Feb 2016 03:00 AM PST அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், அனுமந்தபுரம் சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு கிழக்கில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனுமந்தபுரம் என்னும் சிறிய கிராமம். சிவபெருமானின் மூத்த புதல்வர் வீரபத்திரரர் சாமி கோவில் இங்கு உள்ளது. தக்கன் நடத்திய வேள்வியை அழிக்கவும் அவனுக்கு துணையாக இருந்த விஷ்ணு,பிரம்மன்,இந்திரன் முதலான தேவர்களைகைக் கொன்று துவசம் செய்யவும் சிவபெருமானால் படைக்கப் பட்டவர் வீரபத்திரர். தக்கன் வேள்வியை அழித்து தேவாதி தேவர்களைக் ... |
| Posted: 11 Feb 2016 01:52 AM PST சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் சிகரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கிருந்த இந்திய ராணுவ காவல்சாவடி பனியில் புதைந்தது. அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ராணுவ அதிகாரி உள்பட 10 வீரர்கள் பனியில் புதைந்தனர். இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் மட்டும் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் ... |
| அமைப்புக்கு எதிராக ஒரு குறுக்கு விசாரணை Posted: 10 Feb 2016 10:38 PM PST கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை பல விதம். காவல் நிலைய விசாரணைக் கைதிகள், நீதிமன்ற விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என இது பல விதமானது. இவர்களில் விசாரணைக் கைதிகளின் நிலை பரிதாபகரமானது. நீதிமன்ற அனுமதியுடன் சிறைகளில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களைவிடவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் காவல் நிலையத்திலேயே விசாரணைக் கைதிகளாக வைக்கப்படுபவர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. இவர்களுக்கு எதிராக ஏதேனும் ஆதாரம் கிடைத்தாலொழிய இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது, குறைந்தபட்சம் ... |
| [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Posted: 10 Feb 2016 08:39 PM PST அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை 1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha 2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas மிக்க நன்றி. |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |