Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஹெட்லி கூறுவது கட்டுக்கதையாம்!

Posted: 10 Feb 2016 07:28 AM PST

புதுடில்லி: மும்பையில், 2008ல், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டம் குறித்து, அமெரிக்க சிறையிலிருந்து, இந்திய அதிகாரிகளுக்கு, பயங்கரவாதி ஹெட்லி, 55, அளித்துள்ள வாக்குமூலம் பொய் என்கிறார், பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்.

ஹெட்லி கூறியுள்ளவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை; முழுக்க, முழுக்க கட்டுக்கதை; அதில் உண்மையே இல்லை. பாகிஸ்தானுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் திட்டத்தின் ஒரு பகுதி தான் இந்த வாக்குமூலம் நாடகம். உண்மையில், மும்பை தாக்குதலை, இந்திய உளவுத் துறை தான் திட்டமிட்டு நடத்தியது; அதன் பிறகு ...

அ.தி.மு.க., பேனர்கள் வைக்க ஒரே நாளில் விண்ணப்பம்; அனுமதி

Posted: 10 Feb 2016 08:40 AM PST

சென்னை:அ.தி.மு.க., பொதுக் குழுவுக்காக, பொதுச்செயலர் ஜெயலலிதாவை வரவேற்று, டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு, ஒரே நாளில் விண்ணப்பம் வழங்கப்பட்டு, கட்டணம் செலுத்தப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில், சென்னை மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்த மனுவில், இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.சென்னை, திருவான்மியூரில், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், 2015 டிசம்பரில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவை வரவேற்று, போயஸ் தோட்டத்தில் இருந்து, திருவான்மியூர் வரை, பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன.பொதுக் குழுவுக்கு தடை கோரி, சென்னை ...

சிமென்ட் விலை மீண்டும் உயர்வு: கட்டுமான பணிகள் பாதிக்கும் அபாயம்

Posted: 10 Feb 2016 09:02 AM PST

தமிழகத்தில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் சிமென்ட் விலை, மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மூடைக்கு, 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, 420க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும், வட கிழக்கு பருவமழை துவக்கத்துக்கு முன், செப்., - அக்., மாதங்களிலும், மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு முன், ஜன., - பிப்., மாதங்களிலும் சிமென்ட் விலையை, உற்பத்தியாளர்கள் உயர்த்துகின்றனர். இந்த வகையில், 2015ல் செப்டம்பரில், 390க்கு விற்பனை செய்யப்பட்ட, ஒரு மூடை சிமென்ட் விலை, 40 ரூபாய் உயர்த்தப்பட்டு, 430 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், கட்டுமானப் பணிகள் ...

கருணாநிதியால் திடீர் அதிர்ஷ்டம்: ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு வாய்ப்பு

Posted: 10 Feb 2016 09:21 AM PST

தி.மு.க.,வில் பதவி தராமல் ஓரங்கட்டப்பட்ட பலரையும், உடனடியாக விருப்ப மனு தாக்கல் செய்யும்படி, தி.மு.க., தலைவர் கருணாநிதி உத்தரவிட்டிருப்பது, கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், 'சீட்' கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்கள், உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தரப்பினரால், கட்சி பதவி எதுவும் தராமல் ஓரம் கட்டப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுத்து, பட்டியல் தரும்படி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் ஆதரவாளர் களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட வாரியாக கணக்கெடுக்கப்பட்டு, ...

கூட்டணி குறித்த அ.தி.மு.க.,வின் நிலை சஸ்பென்ஸ்: திருமண விழாவில் ஜெயலலிதா மவுனம்

Posted: 10 Feb 2016 09:40 AM PST

அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் நேற்று பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் அ.தி.மு.க., தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்பதில் 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.

கடந்த 2014 லோக்சபா தேர்தலின் போது அ.தி.மு.க., தனித்து போட்டி என்பதை அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக கட்சியின் பொதுக்குழுவில் ஜெயலலிதா அறிவித்தார். அதனால் 2015 டிச., 31ல் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழுவில்கூட்டணி தொடர்பான முடிவை முதல்வர் தெளிவுபடுத்துவார் என, அனைத்து தரப்பினரும் ...

'கால் -டாக்சி' நிறுவனங்கள் பெருக்கம்: கார் உற்பத்தியாளர்கள் கலக்கம்

Posted: 10 Feb 2016 09:56 AM PST

இந்தியாவில், சர்வதேச, 'கால் -டாக்சி' நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கார் உற்பத்தி நிறுவனங்கள், பெரிதும் கலக்கம் அடைந்துள்ளன.இந்தியாவில், 'கால் -டாக்சி'கள் தற்போது ஆழமாக காலுான்றி விட்டன. அவற்றுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதால், ஒவ்வொரு சிறிய பகுதிக்கும், ஒன்று வீதம், நகரப் பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் டாக்சி நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இவற்றால், ஆட்டோக்கள் துவக்கத்தில் பாதிக்கப்பட்டன. சமீபகாலமாக, 'ஓலா, உபேர், மேரு' போன்ற சர்வதேச நிறுவனங்கள், கால் டாக்சிகளை இயக்கி வருகின்றன. இதனால், உள்ளூர் கால் ...

3 லட்சம் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்': பணிகள் ஸ்தம்பிப்பு

Posted: 10 Feb 2016 09:59 AM PST

மூத்த அமைச்சர்கள் இடம்பெற்ற ஐவர் அணி பேச்சு நடத்தியும் சிக்கல் தீராததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கை துவக்கினர். மூன்று லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால், அரசுப் பணிகள் ஸ்தம்பித்தன.புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் மற்றும் பல துறை சார்ந்த சங்கங்களும் போராடி வந்தன.அப்போது, ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை அரசு ...

ரூ.3,000 கோடி:தமிழக நிறுவனங்கள் ஹரியானாவில் முதலீடு

Posted: 10 Feb 2016 10:11 AM PST

''ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள், 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளனர்,'' என, அம்மாநில முதல்வர் மனோகர் லால் கூறினார்.ஹரியானாவில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. வரும் மார்ச், 7, 8 தேதிகளில், அங்கு முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. அதற்காக, முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அம்மாநில முதல்வர் மனோகர் லால், சென்னையில், நேற்று முதலீட்டாளர்களை சந்தித்தார்.பின், பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் கூறியதாவது:ஹரியானாவில், 57 ...

சியாச்சின் வீரர் ஹனுமந்தப்பா கவலைக்கிடம்

Posted: 10 Feb 2016 10:18 AM PST

புதுடில்லி,: சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி, ஆறு நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் உயிருடன் மீட்கப்பட்ட, ராணுவ வீரர், கர்நாடகாவைச் சேர்ந்த, ஹனுமந்தப்பாவின் உடல் நிலை, நேற்று மோசமடைந்ததை அடுத்து, அவரை காப்பாற்ற, ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். அவர் உயிர் பிழைக்க வேண்டும் என, நாடு முழுவதும் ஏராளமானோர் பிரார்த்தனை செய்த வண்ணம் உள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், கடல் மட்டத்திலிருந்து, 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள, உலகின் மிக உயரமான போர்க்களம் ...

காற்றில் மாசு குறைக்க மத்திய அரசு அதிரடி

Posted: 10 Feb 2016 12:50 PM PST

புதுடில்லி, ": கட்டுமான கழிவுகளால் காற்று மாசடைவதை குறைக்க, புதிய விதிமுறைகளை, மத்திய அரசு, விரைவில் அமல்படுத்த உள்ளது.டில்லியில் நேற்று, வர்த்தக கூட்டமைப்பான, 'அசோசேம்' நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது:கட்டுமானத்தால் ஏற்படும் மாசு, பழைய கட்டுமானங்களை இடிப்பதால் உண்டாகும் கழிவுகள் தொடர்பாக, இந்தியாவில் முதல் முறையாக, விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக், திடக்கழிவு மேலாண்மை குறித்தும் விதிமுறைகள் தயாரிக்கப் பட்டுள்ளன.இவற்றை இறுதி செய்யும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™