ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ..............நண்டு கொக்கு கதை !
- கந்தர் அலங்காரம்
- சொர்க்கம் வேணாம் !
- மது பாட்டிலில் பூச்சி... நல்ல "சரக்கு" கொடுக்க துப்பு இல்லாத அரசு.. குடிகாரர்கள் குமுறல்!!!!!
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- மூளைக்குணவு
- அபூர்வமான படம் .
- மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்!
- இந்திய கொடியை பறக்க விட்ட விவகாரம்: கோலியின் பாகிஸ்தான் ரசிகரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
- ஆண்கள்
- காதல்
- விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் !
- பேரறிவாளனை விடுதலை செய்தால்... தமிழக அரசை யாரும் தடுக்க முடியாது!
- ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம்!
- “உணவு பழக்கம்" பழமொழி வடிவில்
- மகா லட்சுமி வாசம் செய்யும் இடம் எது தெரியுமா?
- ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1
- எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை
- தலைப்பாகை அணிந்த சீக்கியருக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு
- ச ரி க ம ப த நி!
- நந்திவர்மனின் வண்கை!
| தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ..............நண்டு கொக்கு கதை ! Posted: 10 Feb 2016 10:01 AM PST தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ... |
| Posted: 10 Feb 2016 09:57 AM PST அருணகிரிநாதர் ஒளி சரீரம் அடைந்து கிளியின் ரூபத்தில் சற்குருநாதர் முருகனின் தோளில் அமர்ந்து பாடிய பாடல்கள் கந்தர் அலங்காரம் இவைகளில் சில பாடல்களுக்கு இங்கு விளக்கம் உள்ளது https://www.mediafire.com/folder/uw299kg1e4cde/கந்தர்_அலங்காரம் |
| Posted: 10 Feb 2016 09:34 AM PST சொர்க்கம் வேணாம் ! அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் ஒரு கிராமத்து தேவாலயத்தில் பாதிரியார் சொர்க்கத்துக்கு செல்வது பற்றிச் சிறப்பாக போதித்தார். அவர் பேசி முடிந்ததும், 'யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்?' என்று கேட்க, ஒட்டுமொத்தக் கூட்டமும் கை தூக்கியது. ஆனால், ஓர் ஏழைச் சிறுவன் மட்டும் கையைத் தூக்கவில்லை. அந்தப் பாதிரியார் அவனிடம் வந்து, 'தம்பி சொர்க்கம் வேண்டாமா? அப்படியானால் நரகம் செல்கிறாயா?' என்று கேட்டார். ''பாதர் நான் சொர்க்கத்தையும், நகரத்தையும் விரும்பவில்லை. அமெரிக்க ... |
| மது பாட்டிலில் பூச்சி... நல்ல "சரக்கு" கொடுக்க துப்பு இல்லாத அரசு.. குடிகாரர்கள் குமுறல்!!!!! Posted: 10 Feb 2016 09:02 AM PST திருச்சி: பணம் கொடுத்துதானே மது வாங்குகிறோம். எங்களிடம் கொள்ளை கொள்ளையாக பணத்தை வாங்கிக் கொண்டு பூச்சி மிதக்கும் மதுவை விற்கிறார்கள் என்று திருச்சியில் மது வாங்க வந்தோர் புலம்பி குமுறியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி உறையூர் பகுதியில் உள்ள 10229 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையில் சிலர் மது வாங்கியபோது அதில் பூச்சிகள் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த மது பாட்டிலுக்கு பில் தருமாறு ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் கடைக்காரர்கள் தர மறுத்து விட்டனர். இதையடுத்து ... |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 10 Feb 2016 08:45 AM PST தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| Posted: 10 Feb 2016 08:09 AM PST ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 10 Feb 2016 08:01 AM PST [b]அபூர்வமான படம் [/b]. இசை மேதைகளும் ---இசை குயில்களும் நன்றி ராகவ் நாராயண் ...மின்னஞ்சல் ரமணியன் |
| மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்! Posted: 10 Feb 2016 06:33 AM PST அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகிறார்.பொதுமக்கள் முன்னிலையில் தனது தலைப்பாகையை கழற்றும்படி கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஏரோமெக்ஸிகோவின் விமானத்தில் பயணிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.வாரிஸ் அலுவாலியா எனும் அந்த சீக்கியர் மெக்ஸிகோ சிட்டியிலிருந்து நியூ யார்க் செல்ல விமான நிலையம் வந்தபோது கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அமெரிக்காவில் பிறந்து ... |
| Posted: 10 Feb 2016 05:53 AM PST இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் பாகிஸ்தான் ரசிகர் உமர் டிராசின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணம் ஒகாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமர் டிராஸ் (வயது 22). டெய்லரான இவர் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலியின் தீவிர ரசிகர். கடந்த 26-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடியபோது விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தை டிவியில் பார்த்த இவர், அவர் உற்சாக மிகுதியில் தன் வீட்டின் கூரையில் இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டார். இதனால் அவரை பாகிஸ்தான் போலீசார் ... |
| Posted: 10 Feb 2016 01:22 AM PST ஒரு அழகான கிராமத்து பெண்ணிற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச்சிறப்பாக திருமணம் நடக்கிறது. கனவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராய் நேசிக்கி்ன்றனர். அவளுக்காக தன் உடை. நடை. பேச்சு... இப்படி எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டான் கனவன். தினமும் காலையில் எழுந்தவுடன் அவள் முகத்தில் தான் முழிப்பான். இரவு 7Pm... வீடு வந்துவிடுவான். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவாளி தான். அப்படிதான் கொஞ்சிக்கொண்டு விளையாடுவார்கள். அவளுடன் சேர்ந்து Cupl. Dacs... ஆடுவது வீட்டில் இருவரும் ரோமியோ ... |
| Posted: 09 Feb 2016 11:27 PM PST "காதல் " உயிரை கையில் பிடித்துக் கொண்டு மெய்யாக வந்தால்.. வல்லினம் வேண்டியது அவன் மெய்யை காப்பாற்று என்று... நமண்டி ப இரா |
| விடாக்கண்டன்!... கொடாக்கண்டன் ! Posted: 09 Feb 2016 11:24 PM PST மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் சுதன் என்பவன் இருந்தான். அவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் வல்லவர்கள். ''நாள்தோறும் பத்துப் பேருக்கு அன்ன தானம் அளிக்கிறேன். உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்,'' என்று பலரிடம் வேண்டுவான் சுதன். அதை உண்மை என்று நம்பி சிலர் அவனுக்கு உதவி செய்தனர். ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறும் போட மாட்டான். அன்னதானம் அளிப்பதை அறிந்து அவன் வீட்டிற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ''ஐயா! சற்று முன்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள். வயிறார ... |
| பேரறிவாளனை விடுதலை செய்தால்... தமிழக அரசை யாரும் தடுக்க முடியாது! Posted: 09 Feb 2016 10:36 PM PST பெப்ரவரி இறுதிக்குள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கியமான முடிவை தமிழக அரசு எடுக்கும் என்று தகவல்கள் வருகின்றன. 2014, பெப்ரவரி மாதம் 19-ம் தேதி காலையில், அமைச்சரவையைத் திடீரெனக் கூட்டிய ஜெயலலிதா, "23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று எனது தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இந்த வழக்கு மத்தியப் புலனாய்வு ... |
| ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம்! Posted: 09 Feb 2016 10:11 PM PST ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த, 60 பயங்கரவாதிகளை, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் நியமித்துள்ளதாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, மேற்கத்திய நாடுகளின் புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்தாண்டு நவம்பரில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதி அபு முகம்மது அல் - அட்னானி தலைமையிலான குழுவை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழு அனுப்பி வைத்திருந்தது. இக்குழு, பாரீஸ் நகரின் பல இடங்களில் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில், 130 பேர் ... |
| Posted: 09 Feb 2016 10:06 PM PST காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும். * போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே * பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா * சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது. * எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல * தன் காயம் காக்க வெங்காயம் போதும் * வாழை வாழ வைக்கும் * அவசர சோறு ஆபத்து * ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும் * இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு * ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை *இருமலை போக்கும் வெந்தயக் கீரை * உண்ணா நோன்பு ... |
| மகா லட்சுமி வாசம் செய்யும் இடம் எது தெரியுமா? Posted: 09 Feb 2016 10:05 PM PST புதுமனை கட்டி, காம்பவுண்டு சுவர் எடுத்து, வாசல் பக்கத்து சுவற்றில் சலவைக் கல்லில், "லட்சுமி நிவாஸ்' என்று எழுதிய பெயர் பலகை பதிக்கப்பட்டு விட்டது. அதாவது, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று அதற்கு அர்த்தம். ஆனால், மகாலட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் பற்றி ருக்மணியிடம் சொன்னதாக ஒரு கதை உள்ளது. அந்த கதையை நாமும் தெரிந்து கொள்வோமே! லட்சுமிதேவி கூறுகிறாள்: அழகும், தைரியமும், வேலைத் திறமையுள்ளோர், வேலை செய்து கொண்டிருப்போர், கோபமில்லாதவர், தெய்வ பக்தி உள்ளோர், ... |
| ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Posted: 09 Feb 2016 08:31 PM PST ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை )-1 சமீபத்தில் பெய்த அதிகப்படியான மழையாலும் வேறு காரணங்களாலும் , ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கிளால் பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ளக்காடானது . கீழ்தளத்தில் இருந்த வீடுகளில் இருந்த வீடுகளும் , ஒட்டு வீடுகளும் ,குடிசை வீடுகளும் அத்தனையும் வெள்ளத்தால் சூழ்ந்தது . அவைகளில் இருந்த அனைத்து பொருள்களும் அடியோடு நாசமானது . இத்தகைய நிலை சென்னை போன்ற பெரு நகரில் மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் நிகழ்ந்தது . அனைத்து நிலை மக்களும் அவரவர்கள் வாழ்ந்த ... |
| எந்தக் கடவுளும் சட்டம் போடவில்லை Posted: 09 Feb 2016 05:02 PM PST மனதில் பட்டதை பளிச்சென பேசி பரபரப்பை பற்ற வைப்பது குஷ்பு ஸ்டைல். தீவிர அரசியல்வாதி ஆன பிறகு டி.வி. சேனல் விவாதங்களில் பங்கேற்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர், - போகிற போக்கில் ஆன்மிகத்தைத் தொட்டும் கருத்துச் சொல்லியிருந்தார். அவரிடம் பேசினோம். - தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்க குஷ்புதான் காரணம்னு விஜயதாரணி எம்.எல்.ஏ. குற்றம் சாட்டுகிறாரே? - இதுக்கு சிரிப்பு தான் என்னோட பதில். வேறு எதையும் நான் சொல்ல விரும்பலை. நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்... - நடிகர் ... |
| தலைப்பாகை அணிந்த சீக்கியருக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு Posted: 09 Feb 2016 04:43 PM PST மெக்ஸிகோவில் தலைப்பாகை (டர்பன்) அணிந்து சென்ற சீக்கியருக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. அமெரிக்காவில் வசித்து வரும் சீக்கியர் வாரிஸ் அலுவாலியா ((41). இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். - சில நாள்களுக்கு முன்பு நியூயார்க்கில் இருந்து மெக்ஸிகோவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நியூயார்க் திரும்புவதற்காக ஏரோமெக்ஸிகோ விமானத்தில் முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்திருந்தார். - மெக்ஸிகோ சிட்டி விமான நிலையத்தில் விமான நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் திங்கள்கிழமை, அலுவாலியாவிடம் ... |
| Posted: 09 Feb 2016 04:39 PM PST புலவர் அண்ணாமலையார் அகவையில் இளையோராயினும் பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார். எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன் அளவளாவிக் களித்தார். இதனைக் கண்ணுற்ற ஏனைய புலவர்கள் அண்ணாமலை மீது பொறாமை கொண்டனர். ஜமீன்தார், அவர்களுக்கு அண்ணாமலையின் ஒப்பற்ற அறிவுத் திறனை உணர்த்த விரும்பினார். தம் அரசவைப் புலவர்களை அழைத்து, "சரிகமபதநி' எனும் தொடரினை யமகமாக வைத்து பாடல் ஒன்றினை இயற்றிடுக' எனக் கூறினார். அவைப் ... |
| Posted: 09 Feb 2016 04:34 PM PST - வண்மையால், கல்வியால், மாபலத்தால், ஆள்வினையால், உண்மையால், பாராருள் உரிமையால், திண்மையால் சிறந்து விளங்கும் நந்திமன்னன் மீது கோவைப் பாடலாகப் புலவர்களும் அவரல்லாதோரும் பாட, அதற்கு மகிழ்ந்த மன்னன் அவர்களுக்கு அவர் வேண்டியாங்கு பொன்னும் பொருளும் ஆடைகளும் மணிகளும் நாடும் நகர்களும் அவர் மனம் கொள்ளுமளவுக்கு மகிழ்ந்து கொடுத்துச் சிறப்பு செய்துள்ளான். இதனால் நாட்டில் பெரும்பாலான மக்கள் யாவரும் தனித்தனி அரசர்களாக மாறிவிட்டார்கள். இரவலர், ஏழை மக்கள் என்ற பெயரே நாட்டில் இல்லாது போய்விட்டது. இனி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |