Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சரக்கு வாகனத்தில் தீ விபத்து

Posted: 11 Feb 2016 01:31 PM PST

விருத்தாசலம் அருகே வைக்கோல் போர் ஏற்றிச்சென்ற சிறிய சரக்கு வாகனம் மின்கம்பி மீது உரசியதால் வியாழக்கிழமை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இளைஞர் கொலை: நண்பர் கைது

Posted: 11 Feb 2016 01:30 PM PST

பண்ருட்டி அருகே இளைஞர் கொன்று புதைக்கப்பட்டது தொடர்பாக அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

கூட்டணி குறித்து ஓரிரு வாரங்களில் முடிவு: இல.கணேசன்

Posted: 11 Feb 2016 01:27 PM PST

பாஜக கூட்டணி குறித்து ஓரிரு வாரங்களில் முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் மூத்தத் தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

அதிமுக நல உதவி வழங்கும் விழா

Posted: 11 Feb 2016 01:27 PM PST

காட்டுமன்னார்கோவிலில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை (பிப்.13) மாலை நடைபெறுகிறது என மாவட்டச் செயலர் ஏ.அருண்மொழித்தேவன் எம்பி தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

Posted: 11 Feb 2016 01:26 PM PST

கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி அருகே மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கட்டாய பான்கார்டு உத்தரவுக்கு எதிர்ப்பு: நகைக் கடைகளை மூடி வியாபாரிகள் போராட்டம்

Posted: 11 Feb 2016 01:25 PM PST

மத்திய அரசின் கட்டாய பான்கார்டு உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நகைக் கடைகளை மூடி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெளரவ விரிவுரையாளர்கள் நூதனப் போராட்டம்

Posted: 11 Feb 2016 01:24 PM PST

திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை பிச்சை எடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு நிலத்தில் வளர்ந்த தேக்கு மரங்கள் கூடுதல் விலைக்கு ஏலம்

Posted: 11 Feb 2016 01:24 PM PST

போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் அரசு நிலத்தில் வளர்ந்த தேக்கு மரங்கள் கூடுதல் விலைக்கு ஏலம் போனது.

கோயில் குளத்தில் 4 பேர் இறந்த சம்பவம்: ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று பரிகார பூஜை

Posted: 11 Feb 2016 01:23 PM PST

திருவண்ணாமலை தீர்த்தவாரியின் போது 4 பக்தர்கள் நீரில் மூழ்கி இறந்ததையடுத்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நாலரை மணி நேர பரிகார பூஜை, ஹோமம், கலச அபிஷேகம் நடத்தப்படுகின்றன.

தாய்சேய் நல மருத்துவ முகாம்

Posted: 11 Feb 2016 01:22 PM PST

ஆரணி நகராட்சி சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை தாய்சேய் நல மருத்துவ முகாம் நடைபெற்றது.

சாத்தனூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு

Posted: 11 Feb 2016 01:22 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவையடுத்து, சாத்தனூர் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) பிற்பகல் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

திமுக பொதுக்கூட்டம்

Posted: 11 Feb 2016 01:21 PM PST

ஆரணி அண்ணா சிலை அருகில் திமுக சார்பில் புதன்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மனைவி தற்கொலை: கணவருக்கு 7 ஆண்டு சிறை

Posted: 11 Feb 2016 01:21 PM PST

திருவண்ணாமலை அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசு

Posted: 11 Feb 2016 01:20 PM PST

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், முன்னூர்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெண் கல்வி முன்னேற்றம் குறித்து நடத்தப்பட்ட ஓவிய, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு கலை, இலக்கியப் போட்டிகள்

Posted: 11 Feb 2016 01:20 PM PST

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சுத்தம், சுகாதாரம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான போட்டிகள் தெள்ளாறு வட்டார வளமையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சிறுதானிய பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைப் பயிற்சி

Posted: 11 Feb 2016 01:19 PM PST

போளூரை அடுத்த மேல்நெல்லிமரத்தூரில் சிறுதானிய பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்த் துறையினர் ரகளை: மின்சாரத்தை துண்டித்து அலுவலகங்களையும் பூட்டினர்

Posted: 11 Feb 2016 01:19 PM PST

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களை பணியில் ஈடுபடாமல் வெளியே செல்லக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை ஊழியர்கள் வியாழக்கிழமை ரகளையில் ஈடுபட்டனர். மேலும், மின்சாரத்தை நிறுத்தியதுடன், ஒவ்வொரு அறைகளுக்கும் அவர்கள் பூட்டுப்போட்டதால் ஆட்சியர் அலுவலக பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

கூட்டுறவுப் பணியாளர்கள் சங்க புதிய மாவட்ட நிர்வாகிகள்

Posted: 11 Feb 2016 01:18 PM PST

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்: வேட்டையாட மரத்தில் ஏறிய போது விபரீதம்

Posted: 11 Feb 2016 01:18 PM PST

திருவண்ணாமலை அருகே பறவையை வேட்டையாடுவதற்காக ஆல மரத்தில் ஏறிய போது, துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் கரும்பு வெட்டும் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.

சிட்டி யூனியன் வங்கி: நிகர லாபம் ரூ.332 கோடி

Posted: 11 Feb 2016 12:25 PM PST

சிட்டி யூனியன் வங்கி 3-ஆம் காலாண்டில் நிகர லாபமாக ரூ.332 கோடியை ஈட்டிதாக அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காமகோடி கூறினார்.

அசோக் லேலண்ட்: லாபம் 6 மடங்கு உயர்வு

Posted: 11 Feb 2016 12:25 PM PST

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 6 மடங்கு

இந்தியன் வங்கி: நிகர லாபம் ரூ.42 கோடி

Posted: 11 Feb 2016 12:25 PM PST

இந்தியன் வங்கி 2015-2016 நிதியாண்டின் 3-ஆம் காலாண்டில் ரூ.42.30 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

ரிலையன்ஸ் லைஃபில் நிப்பான் முதலீட்டை உயர்த்த சிசிஐ அனுமதி

Posted: 11 Feb 2016 12:24 PM PST

ரிலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ஜப்பானின் நிப்பான் லைஃப் நிறுவனம் கொண்டுள்ள பங்கு மூலதனத்தை 49 சதவீதமாக அதிகரித்துக்

பாரத ஸ்டேட் வங்கி: லாபம் 67% சரிவு

Posted: 11 Feb 2016 12:24 PM PST

வருவாய் ரூ.13,606 கோடியாக இருந்தது. வாராக் கடனை சமாளிக்க ஒதுக்கிய தொகை 31% அதிகரித்து ரூ.8,483 கோடியாக உள்ளது.

பழச்சாறுடன் கூடிய புதிய குளிர்பானம்: கோக-கோலா விரைவில் அறிமுகம்

Posted: 11 Feb 2016 12:23 PM PST

பழச்சாறுடன் கூடிய புதிய குளிர்பானத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கோக-கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தைவான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 59-ஆக உயர்வு

Posted: 11 Feb 2016 12:22 PM PST

தைவானில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இடிந்த விழுந்த குடியிருப்பில் பலி எண்ணிக்கை 59-ஆக அதிகரித்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய பயனாளர்களை ஈர்க்காத டுவிட்டர்! மவுசு குறைகிறதா?

Posted: 11 Feb 2016 12:22 PM PST

கடந்த ஆண்டின் கடைசிக் காலாண்டில் புதிய பயனாளர்கள் எவரையும் ஈர்க்கவில்லை என்று டுவிட்டர் நிறுவனம் அதன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வட கொரியாவுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடை: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

Posted: 11 Feb 2016 12:21 PM PST

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறி விண்ணில் செயற்கைக்கோளை செலுத்திய வட கொரியாவுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடை

இந்தியாவுக்கான புதிய ஆஸ்திரேலிய தூதர் நியமனம்

Posted: 11 Feb 2016 12:19 PM PST

இந்தியாவுக்கான புதிய ஆஸ்திரேலிய தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரீந்தர் சித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி பேருந்து-லாரி மோதி விபத்து: பிரான்ஸில் 6 சிறுவர்கள் பலி

Posted: 11 Feb 2016 12:18 PM PST

பிரான்ஸில் பள்ளிப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்தில் பயணம் செய்த 6 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரி நாடுகள் நிதி உதவி: தலைமை தளபதி குற்றச்சாட்டு

Posted: 11 Feb 2016 12:17 PM PST

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரி நாட்டு உளவு அமைப்புகள் நிதி உதவி அளித்து வருகின்றன என்று

சிரியாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து விவாதிக்கத் தயார்: ரஷியா

Posted: 11 Feb 2016 12:16 PM PST

சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

யு-19 உலகக் கோப்பை இறுதி சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள்: இந்தியாவை எதிர்கொள்கிறது

Posted: 11 Feb 2016 12:15 PM PST

19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில்

டென்சிங் நார்கே விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 11 Feb 2016 12:14 PM PST

மத்திய அரசின் டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு விளையாட்டு

தேசிய கால்பந்து போட்டி: தமிழக மாணவியர் அபார வெற்றி

Posted: 11 Feb 2016 12:12 PM PST

சேலத்தில் நடைபெற்று வரும் பள்ளி மாணவியருக்கான தேசிய கால்பந்துப் போட்டியின் லீக் போட்டிகளில் மூன்று சுற்றுகளில் தமிழக அணி அதிக

இலங்கையுடன் இன்று 2ஆவது டி20: முதல் வெற்றி முனைப்பில் இந்தியா

Posted: 11 Feb 2016 12:12 PM PST

இலங்கைக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டியின் மூலம் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும்

வேலிக்கருவேல மரம் ஒழிப்பு முகாம்

Posted: 11 Feb 2016 12:11 PM PST

நாகப்பட்டினம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேலிக்கருவேல மரம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீன திருமடத்தின் திருப்பணி தொடக்கம்

Posted: 11 Feb 2016 12:11 PM PST

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத் தலைமை திருமடம், ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் பெரிய பூஜை மடம், ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள், ஸ்ரீ திருமாளிகை தேவர் குருமூர்த்தம் திருப்பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

சந்தோஷ் டிராபி: தெலங்கானாவை வீழ்த்தியது கேரளம்

Posted: 11 Feb 2016 12:10 PM PST

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதிச்சுற்றுப் போட்டியில், வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில்

புணே அணியில் திவாரி, மோர்கெல்

Posted: 11 Feb 2016 12:10 PM PST

கடந்த ஐபிஎல் சீசனில் தில்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்த செளரப் திவாரி மற்றும் அல்பி மோர்கெல், எதிர்வரும் 9ஆவது ஐபிஎல் போட்டியின்போது

அடிப்படை வசதிகள் இன்றி வைத்தீஸ்வரன்கோயில் பேருந்து நிலையம்

Posted: 11 Feb 2016 12:09 PM PST

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாததால் பயணிகள் உள்ளே செல்லாமல் சாலையிலேயே நின்று பேருந்துகளில் செல்கின்றனர்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: தங்கங்களாகச் "சுட்டுத் தள்ளிய' இந்தியா; தடகளத்திலும் தங்கம் குவிப்பு

Posted: 11 Feb 2016 12:08 PM PST

தெற்காசியப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்திய அணியின் குறியில் இருந்து

அரசு ஊழியர் சங்க வேலை நிறுத்தப் போராட்டம்: 70 சதவீதம் பேர் பங்கேற்பு

Posted: 11 Feb 2016 12:08 PM PST

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் 2-ஆம் நாளான வியாழக்கிழமையன்று நடைபெற்ற வேலை நிறுத்தத்தில், நாகை மாவட்ட அரசு ஊழியர்கள் சுமார் 70 சதவீதம் பேர் பங்கேற்றனர்.

கொடியேற்று விழா

Posted: 11 Feb 2016 12:07 PM PST

மனிதநேய மக்கள் கட்சியின் 8-ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.

பயிர்க் கடன் பெறாத விவசாயிகள்: பிப்.15-க்குள் பயிர்க் காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்த வேண்டுகோள்

Posted: 11 Feb 2016 12:06 PM PST

அரசால் பயிர்க் கடன் பெறாத விவசாயிகள், பயிர்க் காப்பீட்டு பிரீமியம் தொகையை பிப்.15-க்குள் செலுத்த வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறியுள்ளார்.

பதான்கோட்டில் நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு

Posted: 11 Feb 2016 12:06 PM PST

பதான்கோட் விமானப் படை தளம் மற்றும் அதனையொட்டிய இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில், நாடாளுமன்ற நிலைக் குழு

அஹோபில மடம் 46-வது ஸ்ரீமத் அழகிய சிங்கர் செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் வழிபாடு

Posted: 11 Feb 2016 12:06 PM PST

நாகப்பட்டினத்தில் அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில், அஹோபில மடம் 46-வது பட்ட ஸ்ரீமத் அழகிய சிங்கர் வியாழக்கிழமை வழிபாடு செய்தார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் இருந்து பாஜக, பிஎஸ்பி வெளிநடப்பு

Posted: 11 Feb 2016 12:06 PM PST

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ், பாஜக ஆகியவை வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பெண் ஊழியர் சாவு

Posted: 11 Feb 2016 12:05 PM PST

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற நாகையைச் சேர்ந்த பெண் ஊழியர் ஏ. அமுதா வியாழக்கிழமை மாரடைப்பால் இறந்தார்.

காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சு: இடதுசாரிக் கட்சிகள் முடிவு

Posted: 11 Feb 2016 12:05 PM PST

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த இடதுசாரிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. மேற்கு வங்க அரசியலில்

நகைக் கடைகள் அடைப்பு

Posted: 11 Feb 2016 12:05 PM PST

நகை வியாபாரிகள் சங்கம் விடுத்த அழைப்பின் பேரில் நாகை நகர்ப் பகுதியில் அனைத்து நகைக் கடைகளும் வியாழக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

உழைக்கும் விவசாயிகளுக்கு மானிய நிதி: ஒடிஸா முதல்வர் உத்தரவு

Posted: 11 Feb 2016 12:04 PM PST

நில உரிமையாளர்களுக்குப் பதிலாக உண்மையாக உழுது வரும் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள் மானியத்தை வழங்க வேண்டும் என்று

பெண்களுக்கு கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு

Posted: 11 Feb 2016 12:04 PM PST

குத்தாலம் அருகே பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முன்னாள் எம்.பி.க்களின் வாடகை பாக்கி ரூ.93 லட்சம்

Posted: 11 Feb 2016 12:04 PM PST

பதவிக் காலம் முடிந்த பிறகு அரசு ஒதுக்கிய வீட்டை காலி செய்யாமல் இருக்கும் 56 முன்னாள் எம்.பி.க்கள் ரூ.93 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

தலைஞாயிறில் ஆட்டோ தொழிலாளர்கள் பிரசாரம்

Posted: 11 Feb 2016 12:03 PM PST

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு கடைவீதியில் மோட்டார் வாகனச் சட்ட மசோதா 2014-க்கு  எதிராக ஆட்டோ தொழிலாளர்கள் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இரு முறை வாய்ப்பு: புதிய வரைவு மசோதா தயார்

Posted: 11 Feb 2016 12:03 PM PST

தேர்தல் நடைபெறும் குறிப்பிட்ட ஆண்டில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்க இரண்டு முறை வாய்ப்பளிக்க

வெள்ள நிவாரணம் வழங்குவதில் முறைகேடு: பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 11 Feb 2016 12:03 PM PST

சீர்காழி அருகே வெள்ள நிவாரணம் வழங்குவதில் முறைகேடு  நடைபெறுவதாகக் கூறி வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

ஆகஸ்ட் முதல் பி.எஃப். பணத்தை இணையவழியில் பெறலாம்

Posted: 11 Feb 2016 12:02 PM PST

வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) தொடர்பான வசதிகளை எளிமைப்படுத்தும் வகையில், இணையவழி மூலம் பி.எஃப். பணத்தைப் பெறும் வசதி,

ஏவிசி கல்லூரியின் வைர விழா இன்று தொடக்கம்

Posted: 11 Feb 2016 12:02 PM PST

கல்விப் பணியில் கடந்த 60 ஆண்டுகளாக சிறந்து விளங்கும் ஏவிசி கல்லூரியின் வைர விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியாவின் மேல்முறையீட்டு மனு; உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை?

Posted: 11 Feb 2016 12:02 PM PST

"நேஷனல் ஹெரால்டு' வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி

அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

Posted: 11 Feb 2016 12:02 PM PST

குத்தாலம் ஒன்றியம், பெரம்பூர் கடைவீதியில் அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  

கூலிப் படையினரிடம் கைப்பற்றிய நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்த நிபுணர்கள்

Posted: 11 Feb 2016 12:01 PM PST

நீடாமங்கலத்தில் கூலிப் படையினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் வியாழக்கிழமை செயலிழப்புச் செய்தனர்.

ஹெட்லியின் வாக்குமூலம் பாகிஸ்தானின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி விட்டது

Posted: 11 Feb 2016 12:01 PM PST

லஷ்கர் பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் வாக்குமூலமானது பாகிஸ்தானின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி விட்டது என்று

தகராறு செய்ததாக இளைஞர்கள் கைது

Posted: 11 Feb 2016 12:00 PM PST

திருத்துறைப்பூண்டி அருகே ஊராட்சித் தலைவரை தரக்குறைவாகப் பேசி தகராறு செய்த இரண்டு இளைஞர்களை முத்துப்பேட்டை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

திருவாரூர் அரசு மருத்துவமனையில் நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி

Posted: 11 Feb 2016 12:00 PM PST

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவியின் பயன்பாட்டை கல்லூரியின் முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

சியாச்சினில் படைக் குறைப்புக்கான நேரம் நெருங்கியுள்ளது: பாகிஸ்தான்

Posted: 11 Feb 2016 11:59 AM PST

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி இந்திய வீரர்கள் உயிரிழந்ததையடுத்து, அந்தப் பகுதியில் ராணுவ வீரர்களை பரஸ்பரம் திரும்பப் பெறுவதற்கான த

தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

Posted: 11 Feb 2016 11:59 AM PST

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வியாழக்கிழமை குடும்ப பிரச்னையில் தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.

வேதாரண்யம்  கூட்டு குடிநீர் பிப்.16, 17-இல்  விநியோகம் இருக்காது

Posted: 11 Feb 2016 11:59 AM PST

திருவாரூர் மாவட்டத்தில் பிப்.16,17 தேதிகளில் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் இரா. வசந்தகுமார் தெரிவித்தார்.

நக்ஸல் மிரட்டல்: ஒடிஸாவில் 35 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த பாலம் கட்டும் பணி தொடக்கம்

Posted: 11 Feb 2016 11:59 AM PST

ஒடிஸாவில் மாவோயிஸ்ட் மிரட்டலால் கடந்த 35 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த பாலம் கட்டும் பணியை மாநில அரசு தற்போது தொடங்கியிருக்கிறது.

யமுனாம்பாள் கோயிலில் இன்று தை கடைசி வெள்ளி

Posted: 11 Feb 2016 11:58 AM PST

மராட்டிய மன்னரின் மனைவி பெயரால் நீடாமங்கலத்தில் அமைந்துள்ள யமுனாம்பாள் கோயிலில்  தை கடைசி வெள்ளி திருவிழா  வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

பேரவைத் தலைவரின் அதிகாரத்தை ஆளுநர் எடுத்துக் கொள்ள முடியாது: அருணாசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

Posted: 11 Feb 2016 11:58 AM PST

சட்டப்பேரவை உறுப்பினர்களை (எம்எல்ஏக்களை) கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்வதா? வேண்டாமா? என்ற

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

Posted: 11 Feb 2016 11:58 AM PST

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்க் காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது ஐஎஸ்ஐ அமைப்புதான்

Posted: 11 Feb 2016 11:57 AM PST

லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயிற்சி அளித்து வருகிறது என்று

அதிவேகத்தில் வந்த கார் மோதி 5 பேர் பலத்த காயம்

Posted: 11 Feb 2016 11:56 AM PST

மன்னார்குடி அருகே புதன்கிழமை இரவு அதிவேகத்தில் சென்ற கார், ஆட்டோ, இருசக்கர வானம் மீது மோதியதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.

காஷ்மீரில் பனிப்பொழிவு: நெடுஞ்சாலை மூடல்

Posted: 11 Feb 2016 11:56 AM PST

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதன் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு முகாமில் அயல்நாட்டு பணிக்கும் பதிவு

Posted: 11 Feb 2016 11:55 AM PST

வேலை வாய்ப்பு முகாமில் அயல்நாட்டு பணிக்கு செல்வதற்கும் பதிவு நடைபெறவுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ் தெரிவித்தார்.

புத்தக வெளியீட்டு விழா: நிதீஷ் குமாருக்கு சத்ருகன் சின்ஹா அழைப்பு

Posted: 11 Feb 2016 11:55 AM PST

பாலிவுட் நடிகரும், பாஜக எம்பியுமான சத்ருகன் சின்ஹா, தனது திரைப்பட அனுபவங்கள் குறித்து தொகுக்கப்பட்ட புத்தகத்தை வெளியிட

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 11 Feb 2016 11:55 AM PST

சென்னையில் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிறப்பு விளையாட்டு விடுதியில் வீரர்கள், வீராங்கனைகள் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

பிரபல பூஞ்சை ஆராய்ச்சியாளர் சி.வி.சுப்ரமணியன் மறைவு

Posted: 11 Feb 2016 11:55 AM PST

நாட்டின் மிக உயரிய அறிவியல் விருதைப் பெற்றவரும், காளான் உள்ளிட்ட பூஞ்சை வகைகள் குறித்த பிரபல ஆராய்ச்சியாளருமான

திருவாரூர் தொகுதியில் வாசன் போட்டியிட 4 பேர் விருப்ப மனு

Posted: 11 Feb 2016 11:54 AM PST

திருவாரூர் பேரவைத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜி.கே. வாசன் போட்டியிட 4 பேர் விருப்பமனு அளித்தனர்.

ரயில்வே ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு

Posted: 11 Feb 2016 11:54 AM PST

தென்னக ரயில்வே ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ரகசிய வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

இந்தியாவில் காலனி ஆதிக்கம்: சர்ச்சை கருத்துக்கு முகநூல் நிறுவனர் விளக்கம்

Posted: 11 Feb 2016 11:54 AM PST

இந்தியாவில் காலனி ஆதிக்கம் குறித்து முகநூல் (ஃபேஸ்புக்) நிர்வாகக் குழு உறுப்பினர் மார்க் ஆண்ட்ரீசன் தெரிவித்த சர்ச்சைக்குரிய

அரசு ஊழியர் சங்கத்தினர் 2-ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்

Posted: 11 Feb 2016 11:53 AM PST

மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வியாழக்கிழமை பணிப் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத் பெரு நகராட்சியின் புதிய மேயராக டிஆர்எஸ் பிரமுகர் தேர்வு

Posted: 11 Feb 2016 11:53 AM PST

ஹைதராபாத் பெரு நகராட்சியின் புதிய மேயராக தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

Posted: 11 Feb 2016 11:51 AM PST

பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஊழியர்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2ஜி: சிஏஜி அறிக்கை அடிப்படையில் சிபிஐ தொடுத்த வழக்கு தவறானது; நீதிமன்றத்தில் ஆ.ராசா வாதம்

Posted: 11 Feb 2016 11:50 AM PST

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில்

பெரியார் பல்கலை. வேதியியல் பேராசிரியர் மீது பிஎச்.டி. ஆய்வு மாணவிகள் பாலியல் புகார்

Posted: 11 Feb 2016 11:48 AM PST

பெரியார் பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாக பிஎச்.டி. ஆய்வு மாணவிகள் செய்த புகார் தொடர்பாக

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

Posted: 11 Feb 2016 11:47 AM PST

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதிமுகவைத் தவிர வேறு கட்சிகளை விமர்சிக்க கூச்சப்படுகிறது திமுக

Posted: 11 Feb 2016 11:47 AM PST

எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று முடிவு செய்ய முடியாத நிலையில், அதிமுகவைத் தவிர வேறு கட்சிகளை விமர்சிக்க திமுக கூச்சப்பட்டுக்கொண்டிருக்கிறது

தேமுதிகவின் கொடிநாள்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

Posted: 11 Feb 2016 11:45 AM PST

தேமுதிகவின் கொடி நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களுக்கு அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோடைக்காலத்தில் மின்வெட்டை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் : அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்

Posted: 11 Feb 2016 11:45 AM PST

கோடைக்காலத்தில் மின்வெட்டை சமாளிக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளதாக

2016-17 ஆம் கல்வி ஆண்டுக்கான தனியார் பள்ளிகளின் கட்டணம் விவரம்: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 11 Feb 2016 11:43 AM PST

கூடும் நட்பாகும் கூடா நட்பு!

Posted: 11 Feb 2016 11:42 AM PST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 8 கட்சிகள் கொண்ட கூட்டணி அமைக்க திமுக தயாராகி வருகிறது.

வாக்குக்கு பணம் அளிப்பதைத் தடுக்க புதிய உத்தி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி

Posted: 11 Feb 2016 11:39 AM PST

தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம், பரிசுப் பொருள், மதுபானம் அளிப்பதைத் தடுக்க புதிய உத்தி கடைப்பிடிக்கப்படும் என்று

நிதிகளை ஒதுக்கி ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்துங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Posted: 11 Feb 2016 11:38 AM PST

கடந்த ரயில்வே நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்காக அறிவித்த திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கி அவற்றை

இலவச இணையச் செயலி சேவையை இந்தியாவில் ரத்து செய்தது "முகநூல்'

Posted: 11 Feb 2016 11:36 AM PST

இணையதளச் சேவைகளுக்கு வேறுபட்ட கட்டணங்களை விதிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தடை விதித்துள்ளதை

பாதுகாப்புப் படைகளுக்கு ஜாமர் கொள்முதல்: மத்திய அரசு அனுமதி

Posted: 11 Feb 2016 11:35 AM PST

ஜாமர் கருவிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் அண்மையில் வெளியிட்ட கொள்கை தற்போது மாற்றியமைக்கப்பட்டு

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: பேராவூரணியில் 700 பேர் பங்கேற்பு

Posted: 11 Feb 2016 11:32 AM PST

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெரும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நகை கடைகள் அரை நாள் அடைப்பு

Posted: 11 Feb 2016 11:31 AM PST

ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமான வர்த்தகங்களுக்கு பான் எண் அவசியம் என்ற மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து தஞ்சாவூரில் நகைக் கடை உரிமையாளர்கள் வியாழக்கிழமை மதியம் 1 மணி வரை கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் நகர காசுக் கடை வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 200 நகைக் கடைகள் வியாழக்கிழமை மதியம் 1 மணி வரை அடைக்கப்பட்டிருந்தன.

தஞ்சாவூரில் விவசாய சுற்றுலா திட்டத்துக்கு நல்ல வாய்ப்பு

Posted: 11 Feb 2016 11:31 AM PST

தஞ்சாவூரில் விவசாயம் மற்றும் கிராமிய சுற்றுலா திட்டத்துக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கத்தில் குறிப்பிடப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™