மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருப்பதி மலைப்பாதையில் நடைபாதை பக்தர்கள் மீது கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்
- பட்ஜெட்டுக்கு முன்பு சிகரெட் மீது கூடுதல் வரி விதிக்க கோரிக்கை
- காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. – பி.டி.பி கூட்டணி ஆட்சி
- ஆந்திராவில், 2 ஆண்டில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு
- எம்.எல்.ஏ.க்களை விலைபேச மந்திரிகளை தூண்டுகிறார்: சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் குற்றச்சாட்டு
- ரோஜா சஸ்பெண்டு வழக்கில் சட்டசபை செயலாளருக்கு நோட்டீசு: ஐதராபாத் ஐகோர்ட்டு உத்தரவு
- திருவனந்தபுரம் அருகே காப்பகம் நடத்தி மாணவிகளை கற்பழித்த பாதிரியார் கைது
- சி.பி.ஐ. கண்காணிப்பில் 2,200 ஊழல் அதிகாரிகள்: சி.பி.ஐ. டைரக்டர் தகவல்
- இந்து திருமண மசோதா விவகாரம்: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - சிவசேனா வலியுறுத்தல்
- திட்ட தாமதங்களுக்கு அதிகாரிகளை குற்றம்சாட்ட முடியாது: மத்திய மந்திரி நிதின் கட்காரி
- இந்தியாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விட புகையிலை தயாரிப்புகள் மலிவானவை
- இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடரும் 3-வது சர்வதேச தலைவர் பிரதமர் மோடி
- அருணாச்சல பிரதேசத்தில் புதிய அரசு அமைக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது சுப்ரீம் கோர்ட்டு
- பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய என்ஜினீயரை விடுவிக்க பெற்றோர் வேண்டுகோள்
- டெல்லி காவல்துறையின் புதிய ஆணையராக பதவியேற்கிறார் சிறைத் துறை அதிகாரி அலோக் குமார் வர்மா
- கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை: 6 மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கைது
- டெல்லி விமான நிலைய பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
- உச்ச நீதிமன்ற உத்தரவை டெல்லி போலீஸ் உதாசீனப்படுத்தியுள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால்
- பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் வன்முறை: 6 வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
- ரஷ்ய கல்லூரி தீ விபத்தில் பலியான மாணவிகளின் உடல்கள் மும்பை கொண்டு வரப்பட்டது
| திருப்பதி மலைப்பாதையில் நடைபாதை பக்தர்கள் மீது கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம் Posted: 17 Feb 2016 10:12 PM PST திருப்பதி மலையில் வாகனங்கள் இறங்கும் பாதையில் 2–வது வளைவு அருகே இன்று காலை கார் ஒன்று கீழே இறங்கி கொண்டிருந்தது. அப்போது பிரேக் பிடிக்காமல் கார் தாறுமாறாக ஓடியது. அந்த நேரத்தில் சாலையை கடக்க முயன்ற நடைபாதை பக்தர்கள் மீது கார் மோதி தறிகெட்டு சென்று சாலை தடுப்பில் கவிழ்ந்தது. |
| பட்ஜெட்டுக்கு முன்பு சிகரெட் மீது கூடுதல் வரி விதிக்க கோரிக்கை Posted: 17 Feb 2016 09:53 PM PST இந்தியாவில் சிகரெட், பீடி புகைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. கடந்த 2 பட்ஜெட்களில் சிகரெட் மீதான வரிவிதிப்பு அதிகமாக இருந்தது என்றாலும் சிகரெட் விற்பனை குறையவில்லை. தனி நபர் வருமானம் உயர்ந்ததே சிகரெட் விற்பனை குறையாததற்கு காரணமாக கூறப்படுகிறது. |
| காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. – பி.டி.பி கூட்டணி ஆட்சி Posted: 17 Feb 2016 09:40 PM PST காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவும், மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்தன. முதல் – மந்திரியாக மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) தலைவர் முப்தி முகம்மது சயீது இருந்தார். |
| ஆந்திராவில், 2 ஆண்டில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு Posted: 17 Feb 2016 09:29 PM PST ஆந்திராவில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை 2 ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்து இருப்பதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு தெரிவித்து உள்ளது. முன்பு வயிற்று பசிக்காக பிச்சை எடுத்த காலம் மாறி இன்று பிச்சை |
| எம்.எல்.ஏ.க்களை விலைபேச மந்திரிகளை தூண்டுகிறார்: சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் குற்றச்சாட்டு Posted: 17 Feb 2016 09:02 PM PST ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் நேற்று ஆந்திரா–தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மனை சந்தித்தார். தெலுங்கானா அரசு மேற்கொள்ளும் பாலமோர் ரங்கா ரெட்டி நீர்ப்பாசன திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்பட 4 முக்கிய |
| ரோஜா சஸ்பெண்டு வழக்கில் சட்டசபை செயலாளருக்கு நோட்டீசு: ஐதராபாத் ஐகோர்ட்டு உத்தரவு Posted: 17 Feb 2016 08:56 PM PST ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக கூறி சபாநாயகர் சிவபிரசாத் ராவ் இந்த நடவடிக்கை எடுத்தார். |
| திருவனந்தபுரம் அருகே காப்பகம் நடத்தி மாணவிகளை கற்பழித்த பாதிரியார் கைது Posted: 17 Feb 2016 08:31 PM PST திருவனந்தபுரம் அருகே பெரும்பாவூரில் ஒரு ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. பத்தனம்திட்டை பகுதியை சேர்ந்த ஜோன் பிலிப்போஸ் (வயது 45) என்பவர் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் பாதிரியாராகவும் உள்ளார். |
| சி.பி.ஐ. கண்காணிப்பில் 2,200 ஊழல் அதிகாரிகள்: சி.பி.ஐ. டைரக்டர் தகவல் Posted: 17 Feb 2016 07:34 PM PST ஊழல்வாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில், கடந்த ஓராண்டில், மத்திய அரசு உயர் அதிகாரிகள் 2 ஆயிரத்து 200 பேரை கண்காணிப்பில் வைத்திருந்ததாக சி.பி.ஐ. டைரக்டர் அனில் சின்கா நேற்று தெரிவித்தார். அவர் கடந்த 14 மாதங்களாக இப்பதவியை வகித்து வருகிறார். |
| Posted: 17 Feb 2016 07:25 PM PST பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண சட்டசபையில் கடந்த 15-ந் தேதி இந்து திருமண மசோதா ஒன்று நிறைவேறியது. அதன் உட்பிரிவு 12 (3)-ன்படி, திருமணம் ஆன இந்து தம்பதிகளில் யாராவது ஒருவர் மதம் மாறினால், அந்த திருமணம் ரத்து ஆகிவிடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அங்கு |
| திட்ட தாமதங்களுக்கு அதிகாரிகளை குற்றம்சாட்ட முடியாது: மத்திய மந்திரி நிதின் கட்காரி Posted: 17 Feb 2016 07:11 PM PST மும்பையில் நடைபெற்று வரும் 'மேக் இன் இந்தியா' வார விழாவையொட்டி, நேற்று சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை தொடர்பாக நடந்த கருத்தரங்கம் ஒன்றில், மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- |
| இந்தியாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விட புகையிலை தயாரிப்புகள் மலிவானவை Posted: 17 Feb 2016 04:37 PM PST இந்தியாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விட புகையிலை தயாரிப்புகள் மிகவும் விலை குறைந்தவையாக மலிவானவையாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. |
| இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடரும் 3-வது சர்வதேச தலைவர் பிரதமர் மோடி Posted: 17 Feb 2016 04:19 PM PST புகைப்படம் மற்றும் வீடியோ காட்சி பதிவுகளுக்கான இணையதள பகுதி இன்ஸ்டாகிராம். இதில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் கணக்கு துவக்கினார். உச்சி மாநாட்டில் எடுத்த புகைப்படத்தை முதன்முதலில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். |
| அருணாச்சல பிரதேசத்தில் புதிய அரசு அமைக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது சுப்ரீம் கோர்ட்டு Posted: 17 Feb 2016 03:50 PM PST அருணாசலபிரதேசத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரசில் பிளவு ஏற்பட்டதால், அங்கு கடந்த மாதம் 25-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதற்கு எதிராக அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜே.எஸ்.கேகர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. |
| பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய என்ஜினீயரை விடுவிக்க பெற்றோர் வேண்டுகோள் Posted: 17 Feb 2016 03:46 PM PST மும்பையை சேர்ந்த 31 வயது என்ஜினீயரான ஹமீது அன்சாரிக்கு, பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் தோழியானார். அவரை பார்ப்பதற்காக ஹமீது அன்சாரி கடந்த 2012-ம் ஆண்டு சட்டவிரோதமாக பாகிஸ்தான் சென்றார். பின்னர் அவர் மாயமானார். |
| டெல்லி காவல்துறையின் புதிய ஆணையராக பதவியேற்கிறார் சிறைத் துறை அதிகாரி அலோக் குமார் வர்மா Posted: 17 Feb 2016 02:52 PM PST டெல்லி மாநில காவல்துறையின் புதிய ஆணையராக அலோக் குமார் வர்மா என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை: 6 மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கைது Posted: 17 Feb 2016 02:33 PM PST கேரள மாநிலம், கண்ணணூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில், முதல்-மந்திரி உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கண்ணணூர் மாவட்டத்தில் |
| டெல்லி விமான நிலைய பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை Posted: 17 Feb 2016 12:12 PM PST டெல்லி விமானநிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு உதவி சப்-இன்ஸ்பெக்டராக ராஜ்சிங் (வயது 58) என்பவர் பணியாற்றி வந்தார். |
| உச்ச நீதிமன்ற உத்தரவை டெல்லி போலீஸ் உதாசீனப்படுத்தியுள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால் Posted: 17 Feb 2016 10:43 AM PST டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் மாணவர் சங்க தலைவர் கன்ஹையா குமார் மீது இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை டெல்லி போலீஸ் வெளிப்படையாக உதாசீனப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். |
| பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் வன்முறை: 6 வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் Posted: 17 Feb 2016 10:03 AM PST தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் தலைவர் கண்ணையா குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார். |
| ரஷ்ய கல்லூரி தீ விபத்தில் பலியான மாணவிகளின் உடல்கள் மும்பை கொண்டு வரப்பட்டது Posted: 17 Feb 2016 09:58 AM PST ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்மோலென்ஸ்க் மருத்துவ கல்லூரியில் இந்தியாவைச் சேர்ந்த பூஜா கல்லூர்(வயது 22) கரீஷ்மா போஸ்லே(20) என்ற இருவரும் 4–ம் ஆண்டு படித்து வந்தனர். இருவரும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பூஜாவின் சொந்த ஊர் நவி மும்பை ஆகும். கரீஷ்மா புனே நகரை சேர்ந்தவர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |