Tamil Star |
- சென் மைக்கல் மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது
- வரலாறு காணாத அளவாக ஒட்டாவாவில் 51.2 சென்ரிமீடடர் பனிப்பொழிவு
- மத போதகரை விடுதலை செய்ய வலியுறுத்தி பேரணி
| சென் மைக்கல் மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது Posted: 17 Feb 2016 06:42 PM PST
இது குறித்து அந்த மருத்துவமனையின் பேச்சாளர் தகவல் வெளியிடுகையில், தமது அந்த பிரிவு தற்போதைக்கு ஆபத்தான நிலையீல் உள்ள நோயளர்கள் அல்லது அவசர சிகிச்சை வாகனம் மற்றும் வானூர்தியில் கொண்டு வரப்படுபவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் நீர் வழங்கல் குழாயில் ஏற்பட்ட உடைப்புக் காரணமாக அவசர மருத்துவ சிகிச்சை அறையில் வெள்ளம் ஏற்பட்டிருந்ததை அடுத்து அந்த பிரிவில் சிகிச்சை வழங்க முடியா நிலைமை ஏற்பட்டிருந்தது. அதனை அடுத்து அந்த சிகிச்சைப் பகுதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அதனை அடுத்து அவசர மருத்தவப் பிரிவில் இருந்த நோயாளர்கள் அருகில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதுடன், அவ்வாறு அவசர மரு்துவ பிரிவுச் சேவையை நாடும் நோயாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. The post சென் மைக்கல் மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வரலாறு காணாத அளவாக ஒட்டாவாவில் 51.2 சென்ரிமீடடர் பனிப்பொழிவு Posted: 17 Feb 2016 07:01 AM PST
அங்கு நேற்று இரவு வரையில் 51.2 சென்ரிமீற்றர் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் இந்த அறிவிப்பினை வெளியிட்ட நேரத்திலும் கூட, மணித்தியாலத்திற்கு நான்கு சென்ரிமீற்றர் என்ற அளவில் பனிபொழிவு ஏற்பட்டுக்கொண்டிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டாவாவின் நேற்றைய இன்நத பனிப்பொழிவு, பெப்ரவரி மாதம் 16ஆம் திகதிகளில் ஏற்பட்ட பனிபொழிவின் அளவுகளில் மிகவும் அதிமான அளவு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது வரலாறு காணாத அளவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதிகளில் ஏற்பட்ட பனிபொழிவு தொடர்பான பதிவுகளில் 1954ஆம் ஆண்டில் ஆகக் கூடிய அளவாக 39.6 சென்ரிமீற்றர் பனிப்பொழிவே ஏற்பட்டுள்ளது. அவ்வாறே இதுவரையான காலப்பகுதியல் ஒட்டாவில் ஒரே நாளில் ஆகக்கூடிய பனிப்பொழிவு அளவாக 40.6 சென்ரிமீற்றர் பனிப்பொழிவு 1947ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவாகியுள்ளது. அந்த அளவே ஒரே நாளில் பொழிந்துள்ள ஆகக்கூடிய பனியின் அளவாகவும் பதிவாகியுள்ளது. The post வரலாறு காணாத அளவாக ஒட்டாவாவில் 51.2 சென்ரிமீடடர் பனிப்பொழிவு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மத போதகரை விடுதலை செய்ய வலியுறுத்தி பேரணி Posted: 17 Feb 2016 06:49 AM PST
மிசிசாகாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மத போதகரான ரொரன்ரோவைச் சேர்ந்த ஹையோன் சூ லிம், வடகொரியாவில் சமய ரீதியிலான தொண்டூளியங்களில் ஈடுபட்டுவந்த வேளையில் அங்கு வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த மத போதகர் தமது நாட்டுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ள வட கொரியா, அவருக்கு ஆயுள்கால கடூழிய சிறைத்தண்டனையையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனால் தற்போது நாளாந்தம் எட்டு மணி நேரங்கள் என்ற வகையில், வாரத்தில் ஆறு நாட்கள் அவர் கடூழிய சேவகம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாக CNN ஊடகம் தகவல் வெளியிட்டள்ளது. அத்துடன் பைபிளை படிப்பதற்காக அவரால் விடுக்ப்பட்ட கோரிககை கூட நிராகரிக்கப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே கனேடியப் போதகர் விடுதலை செய்ய கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று பேரணி ஒன்று நடாத்தப்படவுள்ளதாக மிசிசாகா தேவாலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அந்த பேரணியில் சுமார் 300 பேர் வரையிலான ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும், அவரின் விடுதலையை வேண்டி அங்கே பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். 1,65,000 பேரின் கையெழுத்துகள் அடிங்கிய மனு ஒன்றும் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், அதில் போதகரின் விடுதலைக்காக கனேடிய அரசாங்கம் தனது உயர்மட்ட அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். The post மத போதகரை விடுதலை செய்ய வலியுறுத்தி பேரணி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

சென் மைக்கல் மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவு மீண்டும் இன்று புதக்கிழமை பிற்பகல் திறக்கப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.எனினும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களே அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் நேற்றைய தினம் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடிய மத போதகரை விடுதலை செய்ய வலியுறுத்தும் பேரணி ஒன்று இன்று நாடாளுமன்ற வளாகப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.