மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பிரிதிவி-II ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது
- அசாமில் 4 போராளிகள் சுட்டுக் கொலை
- கேரளாவில் மீண்டும் கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமையும்: சீதாராம் யெச்சூரி பேச்சு
- உள்ளம் ஊனப்பட்டா, ஒடம்பிருந்தும் பயனில்லே: படுத்தபடி மேல்நிலை தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவி
- கண்ணூரில் இன்று அதிகாலை ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை: போலீசார் விசாரணை
- இந்தியாவுக்கு எதிராக கோஷம்: டெல்லி பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் இன்று அதிகாலை கைது
- கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை
- ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்தால் ரூ. 1,200 அபராதம்: மும்பை போலீஸ் திட்டம்
- மேக் இன் இந்தியா வார விழாவில் தீ விபத்து: உயிர் தப்பியது பற்றி அமிதாப்பச்சன் உருக்கம்
- நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கைது விவகாரம்: புதிய வீடியோ வெளியீட்டால் பரபரப்பு
- கருணைக் கொலை குறித்து மக்கள் நீதிமன்றம் இறுதி முடிவு செய்யட்டும்: உச்சநீதிமன்றம் கருத்து
- ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி நிறுவப்படும்: மத்திய மந்திரி தகவல்
- சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் ராஜினாமா
- பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கக் கோரி மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
- சாகித்ய அகடாமி சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகள் அறிவிப்பு: தமிழில் கௌரி கிருபானந்தன் தேர்வு
- ரஷ்ய மருத்துவமனை முகாம் தீ விபத்தில் இரண்டு இந்திய மாணவிகள் பலி: சுஷ்மா சுவராஜ் தகவல்
- மேக் இன் இந்தியா வார விழா தீ விபத்துக்கு நாசவேலை காரணமா? விசாரணை தொடங்கியது
- தேசவிரோத முழக்கங்களை எழுப்புவது மன்னிக்க முடியாத குற்றம்: மத்திய பிரதேசம் முதல்-மந்திரி சிவராஜ் சவுகான்
- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை
- தேசப்பற்று குறித்து எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை: அமித் ஷாவுக்கு காங்கிரஸ் பதிலடி
| பிரிதிவி-II ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது Posted: 15 Feb 2016 10:45 PM PST நாட்டின் பாதுகாப்புக்காக பிரிதிவி ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பிரிதிவி-II வகை ஏவுகணை சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்துச் சென்று தாக்கும் சக்தி கொண்டது. பிரிதிவி-II ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்காக ஏற்கனவே சேர்க்கப்பட்டு விட்டது. என்றாலும் அது அடிக்கடி நவீனமாக்கப்பட்டு, |
| அசாமில் 4 போராளிகள் சுட்டுக் கொலை Posted: 15 Feb 2016 10:17 PM PST அசாம் மாநிலத்தின் லோஹிட் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடனான மோதலில் நான்கு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னதாக, அப்பகுதியில் போராளிகள் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, அங்கு விரைந்துசென்ற ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது அவர்களை நோக்கி சிலர் துப்பாக்கிகளால் சுட்டனர். |
| கேரளாவில் மீண்டும் கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமையும்: சீதாராம் யெச்சூரி பேச்சு Posted: 15 Feb 2016 08:56 PM PST கேரளாவில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது. இதுவரை கேரள சட்டசபைக்குள் கால் பதிக்காத பாரதிய ஜனதா கட்சி இம்முறை வெற்றியை ருசித்து விட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் பிரசார யாத்திரை, பேரணி, |
| உள்ளம் ஊனப்பட்டா, ஒடம்பிருந்தும் பயனில்லே: படுத்தபடி மேல்நிலை தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவி Posted: 15 Feb 2016 08:43 PM PST ஆறடிக்கு மேலே வளர்ந்த சில விடலைப் பருவத்தினருக்கு படிப்பு என்றாலே இப்போதெல்லாம் எட்டிக்காயாக கசக்கிறது. மாறாக, லேப்டாப்பில் சினிமா பார்ப்பது, மொபைலில் கேம்ஸ் விளையாடுவது என்றால்.., அல்வாபோல் இனிக்கிறது. வளர்ச்சி அதிகமாக, அதிகமாக.., உடம்பு வணங்கி, முதுகு குனிந்து, மனதும் பாடங்களின்மேல் நாட்டம் கொள்ள மறுத்து விடுகிறது. |
| கண்ணூரில் இன்று அதிகாலை ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை: போலீசார் விசாரணை Posted: 15 Feb 2016 08:36 PM PST கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் அடிக்கடி அரசியல் கொலைகள் அரங்கேறுவது வழக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் இடையே இங்கு எப்போதும் தகராறு நடக்கும். பழிக்குப் பழி வாங்கும் செயல்களும் அரங்கேறும். இதனால் இங்கு எப்போதும் |
| இந்தியாவுக்கு எதிராக கோஷம்: டெல்லி பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் இன்று அதிகாலை கைது Posted: 15 Feb 2016 07:47 PM PST இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்ட நிகழ்ச்சியை நடத்திய டெல்லி பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கிலானி இன்று அதிகாலை தேசத்துரோக குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டார். நாட்டுப்பற்றை வளர்க்க வேண்டிய மாணவ சமுதாயத்தினர், தங்களது தாய்நாட்டை இழிவுப்படுத்தி கோஷமிடுவதும், எதிரிநாட்டையும், |
| கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை Posted: 15 Feb 2016 07:26 PM PST கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஹெப்பால், பீதர் மற்றும் தேவதுர்கா ஆகிய 3 தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. ஹெப்பால் தொகுதியில் 45 சதவீதமும், தேவதுர்காவில் 67.18 சதவீதமும், பீதரில் 61 சதவீதமும் ஓட்டுகள் பதிவாயின. |
| ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்தால் ரூ. 1,200 அபராதம்: மும்பை போலீஸ் திட்டம் Posted: 15 Feb 2016 07:19 PM PST செல்பி மோகம் உலகம் முழுவதும் வேகமாக பரவி விட்டது. ஆபத்தான இடங்களில் நின்றுக் கொண்டு செல்பி எடுப்பதன் காரணமாக உயிருக்கு உலை வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. உலக வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்த நாட்டின் நிதி தலைநகரான மும்பை பெருநகரிலும் இந்த செல்பி மோக உயிரிழப்புகள் தொடங்கி |
| மேக் இன் இந்தியா வார விழாவில் தீ விபத்து: உயிர் தப்பியது பற்றி அமிதாப்பச்சன் உருக்கம் Posted: 15 Feb 2016 07:10 PM PST மராட்டிய அரசு சார்பில் 'மேக் இன் இந்தியா' வார விழா மும்பையில் நடந்து வருகிறது. இதையொட்டி, மும்பை கிர்காவ் கடற்கரையில் நடந்த கலை நிகழ்ச்சியின்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு இருந்த மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பார்வையாளர்களும் |
| நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கைது விவகாரம்: புதிய வீடியோ வெளியீட்டால் பரபரப்பு Posted: 15 Feb 2016 04:22 PM PST பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவனான அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தை(பிப். 9-) டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடைபிடித்தனர். இதனையடுத்து, அந்த நிகழ்ச்சியில் இந்தியாவை எதிர்த்தும் பாகிஸ்தானை |
| கருணைக் கொலை குறித்து மக்கள் நீதிமன்றம் இறுதி முடிவு செய்யட்டும்: உச்சநீதிமன்றம் கருத்து Posted: 15 Feb 2016 03:42 PM PST கருணைக் கொலையை சட்டப் பூர்வமாக்குவது தொடர்பாக பாராளுமன்றமோ அல்லது மக்கள் நீதிமன்றமோ தான் இறுதி நீதிபதியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காமன் காஸ்' என்ற அரசு சாரா அமைப்பு, கருணைக் கொலையை |
| ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி நிறுவப்படும்: மத்திய மந்திரி தகவல் Posted: 15 Feb 2016 03:22 PM PST மத்திய தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில், 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி நிறுவப்படும். மேலும், கோவையில், ரூ.650 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி, தமிழக |
| சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் ராஜினாமா Posted: 15 Feb 2016 02:58 PM PST சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் துஷ்யந்த் தவே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் செயலாளர் கவுரவ் பாட்டியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. |
| பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கக் கோரி மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி Posted: 15 Feb 2016 02:46 PM PST பாராளுமன்ற மக்களவையில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி, 44 எம்.பி.க்களை மட்டுமே கொண்டுள்ளது. மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையில் 10 சதவீத எம்.பி.க்களை (55 பேர்) கொண்டுள்ள கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து அளிக்கப்படும். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து அளிக்க மத்திய அரசு |
| சாகித்ய அகடாமி சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகள் அறிவிப்பு: தமிழில் கௌரி கிருபானந்தன் தேர்வு Posted: 15 Feb 2016 02:25 PM PST சாகித்ய அகாடமி 2015-ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்களுக்கான விருதுகள் மொத்தம் 23 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சாகித்ய அகாடமியின் செயற்குழுக் கூட்டத்தில், |
| ரஷ்ய மருத்துவமனை முகாம் தீ விபத்தில் இரண்டு இந்திய மாணவிகள் பலி: சுஷ்மா சுவராஜ் தகவல் Posted: 15 Feb 2016 02:11 PM PST ரஷ்ய நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் இரண்டு இந்திய மாணவிகள் இறந்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். சுஷ்மா சுவராஜ் இது தொடர்பான தகவலை தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். |
| மேக் இன் இந்தியா வார விழா தீ விபத்துக்கு நாசவேலை காரணமா? விசாரணை தொடங்கியது Posted: 15 Feb 2016 01:41 PM PST மும்பை கிர்காவ் கடற்கரையில் 'மேக் இன் இந்தியா' வார விழாவையொட்டி, நேற்று முன்தினம் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின்போது மேடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, விழா மேடை அருகே அமர்ந்திருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே |
| Posted: 15 Feb 2016 01:05 PM PST தேச விரோத முழக்கங்களை எழுப்புவது மன்னிக்க முடியாத குற்றம் என்று மத்திய பிரதேசம் மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கருத்து தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவனான அப்சல் குரு |
| Posted: 15 Feb 2016 10:56 AM PST சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தடை விதித்தனர். கீழ்க்கோர்ட்டுகளில் சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக தேர்வுக் |
| தேசப்பற்று குறித்து எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை: அமித் ஷாவுக்கு காங்கிரஸ் பதிலடி Posted: 15 Feb 2016 08:35 AM PST பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவனான அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடைபிடித்தனர். அப்போது இந்தியாவை எதிர்த்தும் பாகிஸ்தானை ஆதரித்தும் கோஷமிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர் சங்க தலைவர் உள்பட 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |