Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பழங்குடி மக்களுக்காக நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுப்பு

Posted: 15 Feb 2016 08:49 PM PST

uy

uyகாணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நீதி கோரும் போராட்டங்கள் நாட்டின் பல நகரங்களிலும் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரின் மத்தியிலும் ஆங்காங்கு திரண்ட ஆதரவாளர்கள் போராட்டங்களை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போயுள்ள மற்றும் கொல்லப்பட்ட பல பழங்குடியின பெண்களின் நிலை தொடர்பில் இன்னமும் உரிய முடிவு கண்டறியப்படாத நிலைமையே காணப்படுவதாக கூறிய போராட்டக் காரர்கள் தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த பேரணியை முன்னெடுப்பதன் மூலம் தீர்க்கப்படாத இந்த விவகாரத்தினை பலரும் அறிந்து கொள்வர் என்றும், இருபது வருடங்களுக்கும் மேலாக தொடரும் இத்தகைய சம்பங்கள் தொடர்பில் நடாத்தப்படும் இந்த பேரணி ஒரு மாற்றத்தினை கொண்டுவரும் என நம்புவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.uy

இதேவேளை புதிய லிபரல் அரசாங்கம் ஆட்சி அமைந்த பின்னர், இந்த விவகாரம் தொடர்பிலான் முதற்கட்ட விசாரணைகள் ஒட்டாவாவில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆட்சியில் இருந்த ஸ்டிபன் ஹார்ப்பர் அரசாங்கத்தினால் இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் மறுக்கப்பட்டு வந்திருந்த நிலையில் லிபரல் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அத்துடன் தற்போதய அரசாங்கத்தின் நீதி அமைச்சரும் பழங்குடியினத்தவர் என்பதுடன், அவரும் வன்கூவரில் நேற்று இடம்பெற்ற பேரணி ஒன்றில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பழங்குடி மக்களுக்காக நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில்

Posted: 15 Feb 2016 09:02 AM PST

Exhibition_grounds_-_02152016

Exhibition_grounds_-_02152016துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை அதிகாலையில் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் காயமடைந்த நபர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exhibition Place இன் வட எல்லையில் உள்ள EMS நிலையத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Manitoba Drive மற்றும் Quebec வீதிக்கு அருகில் அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தாம் நம்புவதாக காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த ஆண் நபரின் கால் பகுதியில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டிருந்தன என்றும், அவர் அவசர மருத்தவ பிரிவின் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.Exhibition_grounds_-_02152016

இதேவேளை அவருக்கு ஏற்பட்டிருந்த காயங்கள் உயிராபத்து அற்றவை என அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

The post இன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோவில் விபத்து

Posted: 15 Feb 2016 08:57 AM PST

crashes_in_to_Scarborough_ravine_-_02152016

crashes_in_to_Scarborough_ravine_-_02152016இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் ஸ்காபரோவின் ravine பகுதியில் ரக் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது.

குறிப்பாக Brimley வீதி மற்றும் Citadel Drive பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின் போது அந்த ரக் ரக வாகனத்தினுள் அகப்பட்டுக் கொண்ட இருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிராபத்தற்ற காயங்களே அவர்கள் இருவருக்கும் ஏற்பட்டிருந்ததாகவும், அவற்றுக்கு சிகிச்சை வழங்குவதற்காக அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் ஆண் என்றும் மற்றையவர் பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.crashes_in_to_Scarborough_ravine_-_02152016

அதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இன்னமும் வெளியாகவில்லை.

The post ஸ்காபரோவில் விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

யோர்தானுக்கு 380 மில்லியன் டொலர்களை வழங்குகிறது கனடா

Posted: 15 Feb 2016 08:52 AM PST

canada_Defence_Minister_Harjit_Sajjan_-_02152016

canada_Defence_Minister_Harjit_Sajjan_-_02152016யோர்தானுக்கு எதிர்வரும் மூன்று வருடங்களில் சுமார் 380 மில்லியன் டொலர்களை நிதி உதவியாக கனடா வழங்க உள்ளது.

அந்த நாட்டின் நிலைத் தன்மையை பாதுகாப்பதற்காக இந்த நிதியை வழங்க உள்ளதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியங்களில் இடம்பெற்றுவரும் மோதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஈடுசெய்யும் மனிதாபிமான உதவித் திட்டங்களுக்காக 1.6 பில்லியன் டொலர்களை வழங்குவதாக கனடா ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தத் தொகையிலேயே ஒரு பகுதியாக யோர்தானுக்கான இந்த உதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் இராணுவ உதவிகளுக்கம் அப்பால்பட்டு மேற்கொள்ளப்படும் இந்த உதவி மூலம், மேலும் பல நன்மையான காரியங்களைச் சாதிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய அகதிகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு யோர்தான் முகம் கொடுத்து வருகின்ற போதிலும், யோர்தான் மன்னர் அவை தொடர்பில் முறைப்பாடுகள் எவற்றினையும் செய்யாது, பாதிக்கப்படடவர்களுக்கு தம்மால் எவ்வாறு இன்னமும் உதவ முடியும் என்பது குறித்தே அதிக கவனம் செலுத்தியதாகவும் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.canada_Defence_Minister_Harjit_Sajjan_-_02152016

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏனைய கனேடிய அமைச்சர்களுடன் சேர்ந்து கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜானும் யோர்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் அவர் யோர்தானில் தங்கியிருந்த நாட்களில் கள நிலைமைகளை நேரில் சென்று அவதானித்திருந்ததார்.

அத்துடன் இந்த மாதத்தினுள் 25,000 சிரிய அகதிகள் என்ற இலக்கின் பிரகாரம், கனடாவினுள் அழைத்துவரப்படுபவர்களுள் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் யோர்தனில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து அழைத்துவரப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post யோர்தானுக்கு 380 மில்லியன் டொலர்களை வழங்குகிறது கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™