மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: டெல்லியில் 21–ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்
- கார்வேட்டிநகரம் வனப்பகுதியில் தங்கப்புதையல் வேட்டை: 5 பேர் கைது
- காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக மூடல்
- ஐதராபாத்தில் தெருநாய் கடித்து 7 வயது சிறுமி பலி
- இரு மாநிலங்களில் காங்கிரஸ்–கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம்: ராஜ்நாத் சிங் பேச்சு
- ராணுவத்தில் சேர முடியாமல் 8 முறை நிராகரிப்பு: அனுமந்தப்பா பற்றி அண்ணன் உருக்கம்
- 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு செல்லாது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
- எம்.பி.க்கள் சம்பளம் இரண்டு மடங்காகிறது: பாராளுமன்ற குழு பரிந்துரை
- மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கம்யூனிஸ்டு முடிவு: கேரள காங்கிரசார் எதிர்ப்பு
- சபாநாயகரின் சஸ்பெண்டு உத்தரவை எதிர்த்து நடிகை ரோஜா வழக்கு
- கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்: உம்மன்சாண்டியை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி–வெளிநடப்பு
- பத்திரிகையாளர் ஜேடே கொலை வழக்கு: சோட்டா ராஜனிடம் குரல் மாதிரி பரிசோதனை - சி.பி.ஐ.க்கு கோர்ட்டு அனுமதி
- இஸ்ரத் ஜகான் ஒரு அப்பாவி: குடும்பத்தினர் உருக்கமான பேட்டி
- கடலுக்கு அடியில் கேபிள் பதித்து எலிபெண்டா தீவிற்கு மின் சப்ளை செய்ய திட்டம்
- கர்நாடகத்தில் வரி வசூல் திருப்திகரமாக உள்ளது: சித்தராமையா பேட்டி
- பனிச்சரிவில் சிக்கி பலியான கர்நாடக ராணுவ வீரர் நாகேஷாவின் உடலை ஒப்படைப்பதில் தாமதம்
- பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பச்சோரியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நிறுத்திவைப்பு
- அரசு துறைகளில் இயங்கி வரும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் பரிசீலனை
- பிரதமர் மோடி, அபுதாபி பட்டத்து இளவரசர் முன்னிலையில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- கேரளாவில் பஸ் கட்டணம் குறைப்பு: டீசல் விலை குறைந்ததால் நடவடிக்கை
| பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: டெல்லியில் 21–ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் Posted: 11 Feb 2016 10:39 PM PST பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 23–ந்தேதி தொடங்குகிறது. ரெயில்வே பட்ஜெட் 25–ந்தேதியும் பொது பட்ஜெட் 29–ந்தேதியும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக விவாதம் நடத்த டெல்லியில் வருகிற 21–ந்தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. |
| கார்வேட்டிநகரம் வனப்பகுதியில் தங்கப்புதையல் வேட்டை: 5 பேர் கைது Posted: 11 Feb 2016 10:23 PM PST காளஹஸ்தி அடுத்த கார்வேட்டிநகரம் மண்டலம் கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் எபிநேசர் (வயது 45). இவருக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ரத்தினரவிக்குமார் என்பவருக்கும் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். கார்வேட்டிநகரம் மண்டலம் |
| காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக மூடல் Posted: 11 Feb 2016 10:14 PM PST காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்து வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக அம்மாநிலத்தின் லடாக் பகுதியை காஷ்மீருடன் இணைக்கும் 300 கிலோமீட்டர் நீளமுள்ள ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. |
| ஐதராபாத்தில் தெருநாய் கடித்து 7 வயது சிறுமி பலி Posted: 11 Feb 2016 10:08 PM PST ஆந்திராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரு நாய் விரட்டியதில் 3 வயது சிறுமி பலியானாள். இப்போது ஐதராபாத்தில் இது போன்ற சோக சம்பவம் நடந்து உள்ளது. ஐதராபாத் சுப்ரா பகுதியைச் சேர்ந்த அனுராதா–சங்கரெட்டி தம்பதிகளின் ஒரே மகள் சோனி (வயது 7). |
| இரு மாநிலங்களில் காங்கிரஸ்–கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம்: ராஜ்நாத் சிங் பேச்சு Posted: 11 Feb 2016 10:00 PM PST கேரள சட்டசபைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து கட்சியினரும் பேரணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். |
| ராணுவத்தில் சேர முடியாமல் 8 முறை நிராகரிப்பு: அனுமந்தப்பா பற்றி அண்ணன் உருக்கம் Posted: 11 Feb 2016 09:52 PM PST சியாச்சின் பனிப்பாறையில் சிக்கி 6 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் அனுமந்தப்பா நேற்று காலை மரணம் அடைந்தார். டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் 3 நாட்கள் டாக்டர்கள் போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை. நினைவு திரும்பாமலேயே உயிர் பிரிந்தது. |
| 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு செல்லாது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Posted: 11 Feb 2016 09:36 PM PST 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தினகரன், சந்திரகுமார், பார்த்திபன், மோகன்ராஜ், சேகர் ஆகியோர் கடந்த 2015–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி தமிழக சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டசபையில் சபையின் மரபுக்கு குந்தகம் விளைவிக்கும் |
| எம்.பி.க்கள் சம்பளம் இரண்டு மடங்காகிறது: பாராளுமன்ற குழு பரிந்துரை Posted: 11 Feb 2016 09:30 PM PST பாராளுமன்ற மற்றும் மேல்–சபை எம்.பி.க்கள் தற்போது ரூ.50 ஆயிரம் ஊதியம், ரூ.45 ஆயிரம் தொகுதிப்படி, ரூ.45 ஆயிரம் அலுவலகப்படி என மொத்தம் மாதந்தோறும் ரூ.1.40 லட்சம் சம்பளமாக பெறுகின்றனர். இந்த நிலையில் எம்.பி.க் களுக்கு ஊதியம் மற்றும் படியை இரண்டு மடங்காக உயர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ரூ.1 லட்சம் ஊதியம், தொகுதிப்படி ரூ.90 ஆயிரம், |
| Posted: 11 Feb 2016 09:28 PM PST மேற்கு வங்காள மாநில கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்க சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு கம்யூனிஸ்டு தலைவர் பிமன்போஸ் நிருபர்களிடம் கூறியதாவது:– |
| சபாநாயகரின் சஸ்பெண்டு உத்தரவை எதிர்த்து நடிகை ரோஜா வழக்கு Posted: 11 Feb 2016 09:21 PM PST ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை ரோஜா நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். சட்டசபை விவாதத்தின் போது, முதல்– அமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக கூறி சபையில் இருந்து அவர் 1 ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். சபாநாயகர் கோடல சிவபிரசாத்ராவ் இந்த நடவடிக்கை எடுத்தார். |
| கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்: உம்மன்சாண்டியை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி–வெளிநடப்பு Posted: 11 Feb 2016 08:53 PM PST கேரள சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அங்கும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. கேரளாவில் தற்போது உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. இதன் இறுதி பட்ஜெட் கூட்டம் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நாளன்று கவர்னர் சதாசிவம் உரை நிகழ்த்திய போது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. |
| Posted: 11 Feb 2016 07:35 PM PST மும்பையை சேர்ந்த பத்திரிகையாளர் ஜேடேவை கடந்த 2011-ம் ஆண்டு நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் ஆட்கள் சுட்டுக்கொலை செய்தனர். இந்த கொலையில் தொடர்புடையவர்கள் மோக்கா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த |
| இஸ்ரத் ஜகான் ஒரு அப்பாவி: குடும்பத்தினர் உருக்கமான பேட்டி Posted: 11 Feb 2016 07:31 PM PST குஜராத்தில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட மும்பை இளம்பெண் இஸ்ரத் ஜகான், 'தற்கொலைப்படை தீவிரவாதி' என்று மும்பை கோர்ட்டில் டேவிட் ஹெட்லி நேற்று வாக்குமூலம் அளித்தார். இதனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது. இந்தநிலையில், ஹெட்லியின் வாக்குமூலம் குறித்து இஸ்ரத் ஜகானின் சகோதரி முஸாரத் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:- |
| கடலுக்கு அடியில் கேபிள் பதித்து எலிபெண்டா தீவிற்கு மின் சப்ளை செய்ய திட்டம் Posted: 11 Feb 2016 07:22 PM PST கடலுக்கு அடியில் கேபிள் பதித்து எலிபெண்டா தீவிற்கு மின் சப்ளை செய்யப்படும் என மின்சாரத்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே கூறினார். மும்பை, கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து கடலுக்குள் 10 கி.மீ. தொலைவில் எலிபெண்டா தீவு அமைந்துள்ளது. இங்குள்ள எலிபெண்டா குகை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் ஆகும். |
| கர்நாடகத்தில் வரி வசூல் திருப்திகரமாக உள்ளது: சித்தராமையா பேட்டி Posted: 11 Feb 2016 06:53 PM PST முதல்-மந்திரி சித்தராமையா ராய்ச்சூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். ராய்ச்சூர் செல்லும் வழியில் பல்லாரியில் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பட்ஜெட்டை தயாரிப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகளை நான் இன்னும் |
| பனிச்சரிவில் சிக்கி பலியான கர்நாடக ராணுவ வீரர் நாகேஷாவின் உடலை ஒப்படைப்பதில் தாமதம் Posted: 11 Feb 2016 06:48 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் வடக்கு சியாச்சின் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கிருந்த ராணுவ நிலை பனியில் புதைந்தது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் தேஜூரைச் சேர்ந்த நாகேஷா, தார்வார் மாவட்டம் பேட்டாதூரைச் சேர்ந்த ஹனுமந்தப்பா, மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையைச் சேர்ந்த |
| பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பச்சோரியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நிறுத்திவைப்பு Posted: 11 Feb 2016 04:05 PM PST எரிசக்தி வளமைய கழகத்தின் இயக்குனர் ஜெனரலாக இருந்தவர் சுற்றுப்புறச்சூழல் விஞ்ஞானி ராஜேந்திர குமார் பச்சோரி. இவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பெண் ஊழியர் ஒருவர் டெல்லி போலீசில் புகார் அளித்தார். |
| அரசு துறைகளில் இயங்கி வரும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் பரிசீலனை Posted: 11 Feb 2016 03:55 PM PST தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்துவதற்காக அங்கு புதிதாக டீசல் வாகனங்களை பதிவு செய்யவும், 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்களுக்கு புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு தடை விதித்தது. |
| Posted: 11 Feb 2016 03:05 PM PST அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான், 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்தார். அவரை விமான நிலையத்துக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். |
| கேரளாவில் பஸ் கட்டணம் குறைப்பு: டீசல் விலை குறைந்ததால் நடவடிக்கை Posted: 11 Feb 2016 02:01 PM PST சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இதன் பயனை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பஸ் கட்டணத்தை குறைக்க கேரள அரசு முடிவு செய்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |