Tamil Star |
- Whitby-Oshawa தொகுதிக்கான மாநில இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று
- கனேடியப் பிரதமர், ஐ.நா ஆணையாளர் சந்திப்பு
- நெத்திலிமீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
- நெல்லிக்காயில் என்ன உள்ளது?
| Whitby-Oshawa தொகுதிக்கான மாநில இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று Posted: 11 Feb 2016 09:44 AM PST
கடந்த கோடை காலத்தில் பதவி விலகிய கிறிஸ்டின் எலியட்டின் வெற்றிடத்திற்காகவே இந்த இடைத்தேர்தல் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கிறிஸ்டின் எலியட்(Christine Elliott) ஒன்ராறியோவின் முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிட்டிருந்தார். எனினும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டிருந்த பற்றிக் பிரவுனிடம் கிறிஸ்டின் எலியட் தோல்வியடைய நேரிட்டது. தமது அந்த தோல்வியை அடுத்த மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து கடந்த கோடை காலத்தில் கிறிஸ்டின் எலியட் விலகியிருந்தார். இந்த நிலையில் வெற்றிடமாகியுள்ள மாகாணசபை உறுப்பினரின் ஆசனத்தை நிரப்புவதற்கான இடைத் தேர்தல் இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் பழமைவாதக் கட்சியின் சார்பில் லோர்ன் கோவும்(Lorne Coe), புதிய சனநாயக கட்சியின் சார்பில் நிக்கி லன்குயிஸ்ட்டும் (Niki Lundquist) அங்கு போட்டியிடுகின்றனர். இதேவேளை மத்தியில் ஆட்சி அமைத்துள்ள லிபரல் கட்சி, பழமைவாதக் கடசியின் பிடியில் இருந்துவந்த Whitby-Oshawa தொகுதியினை கைப்பற்றும் நோக்கில் எலிசபெத் றோயை அங்கு களமிறக்கியுள்ளது. Whitby-Oshawa தொகுதிக்கான இடைத்தேர்தலின் முற்கூட்டிய வாக்குப் பதிவில், 2014ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகளவானோர் வாக்களித்துள்ளதாக ஒன்ராறியோ தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது The post Whitby-Oshawa தொகுதிக்கான மாநில இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனேடியப் பிரதமர், ஐ.நா ஆணையாளர் சந்திப்பு Posted: 11 Feb 2016 09:22 AM PST
இருவருக்குமிடையிலான இன்றைய பேச்சுக்களில் பருவநிலை மாற்றம், அனைத்துலக அமைதி காப்பு பணிகள் மற்றும் அகதிகள் விவகாரம் என்பன குறித்து ஆராயப்படும் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுடன் முக்கியமானதாக சிரிய அகதிகள் விவகாரம், ஐ.நா அமைதி காக்கும் படையில் கனேடிய படையினர் பங்களிப்பினை அதிகரித்தல், உலக பருவநிலை மாற்றம், பால்நிலை சமத்துவம், பெண்கள் உரிமை உள்ளிட்ட விடயங்கள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில், 1990களில் பல ஆயிரம் கனேடிய இராணுவத்தினர் பணியாற்றி வந்த போதிலும், அந்த எண்ணிக்கை அண்மைய காலங்களில் மிகச் சிறிய அளவாக குறைவடைந்துள்ள நிலையில் கனடாவின் புதிய பிரதமர் ஐ.நா ஆணையாளருடன் பேச்சு நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் முன்னைய ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான அரசாங்கம் ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்துடன் அணுக்கமாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டை ஜஸ்டின் ரூடோ நீண்ட காலமாகவே முன்வைத்து வந்திருந்தார். அதனால் இன்றைய இந்த சந்திப்பு உலக நாடுகளுடனும், ஐக்கிய நாடுகள் அமைப்புடனும் கனடா மிகவும் நெருக்கமாக பணியாற்றுவதனை வெளிப்படுத்துவதாக அமையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. The post கனேடியப் பிரதமர், ஐ.நா ஆணையாளர் சந்திப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நெத்திலிமீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? Posted: 11 Feb 2016 02:51 AM PST
அதுவும், அதில் ஒன்றான நெத்திலி மீனை சொதி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அடங்கியுள்ள சத்துக்கள்: புரோட்டின், விட்டமின் ஈ, செலினியம், ஒமேகா 3 பேட்டி ஆசிட், மினரல்ஸ், விட்டமின் ஏ போன்ற சத்துக்கள் உள்ளன. நெத்திலி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும். செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், பழுது பார்க்கவும் தேவையான புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது. நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்களுடன், விட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும். நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும். The post நெத்திலிமீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 11 Feb 2016 02:46 AM PST
நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது. நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம். 100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ஆகியவை போதிய அளவு அடங்கியுள்ளன. மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும். நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும். நெல்லியை காய வைத்தாலும் அதிலுள்ள விட்டமின் சி சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது, இந்த சக்தி அதிகரிக்கிறது. ஆன்டி ஆக்சிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைப் பாதுகாத்து. முதுமையை விரட்டி, உடலை நல்ல நிலையில், என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது. இது நெல்லிக்கனியில் மிகுந்த அளவு காணப்படுகிறது. பித்தத்தை குறைத்து, உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் தன்மை இக்கனிக்கு உண்டு. ஆப்பிளை விட3 மடங்கு புரதச் சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு விட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது. இருதய வால்வுகள், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது. கார்போஹைட்ரேட், நார் சத்து, இரும்பு சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும். நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால், கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். ரத்தக்கொதிப்பா? நெல்லி வற்றல், பச்சை பயிறு, வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு, 200 மி.லிட்டராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும், மாலையும் அருந்தி வந்தால், தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும்.
The post நெல்லிக்காயில் என்ன உள்ளது? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இன்று Whitby-Oshawa தொகுதிக்கான மாநில இடைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளன.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், கனேடியப் பிதமர் ஜஸ்டின் ரூடோவும் இன்று ஒட்டாவாவில் சந்தித்து பேச்சு நடாத்துகின்றனர்.
கடல் வகை உணவுகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால் வாரம் இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

நெல்லிக்காய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.