Tamil Star |
| கல்லறை மயானத்தில் வைத்து இருவரை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த நபர் Posted: 03 Jan 2016 08:39 PM PST
இந்த சம்பவம் ஒன்ராறியோவின் Bellevue Momorial Park பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர், மற்றிருவரையும் முதலில் சுட்டுக்கொன்றுவிட்டு பின்னர் அவரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரியவரும் நிலையில்,இந்த சம்பவத்தை படுகொலையுடன் கூடிய தற்கொலைச் சம்பவம் என காவல்த்துறையினர் வகைப்படுத்தியுள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்த அந்த சந்தேக நபர் முன்னராகவே மயானத்திற்கு வந்து தனது காரில் காத்திருந்திருந்ததாக சம்பவத்தினை நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. கொல்லப்பட்ட மற்றைய இருவரும் நேற்றைய நாளில் குறித்த அந்த இடத்திற்கு வருவார்கள் என்பதனை முன்கூட்டியே அந்த சந்தேக நபர் அறிந்திருந்ததுடன், அவர்களுக்காக காத்திருந்து இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர் காரில் இருந்து கைத்துப்பாக்கியுடன் இறங்கி நேரே குறித்த அந்த இருவர் அருகே சென்ற சந்தேக நபர், மிகவும் வேகமாக அவர்கள் இருவரையும் சுட்டுவிட்டு, தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறை அதிகாரி ஒருவர் விபரித்துள்ளார். சந்தேக நபர் சுமார் 60 வயதுடைய ஆண் எனவும், உயிரிழந்த ஏனைய இருவரில் ஒருவர் பெண் என்றும் விசாரணை அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பேருக்கும் இடையே திருமண ரீதியான பிணைப்பு இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடவில்லை. இது தொடர்பில் மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். The post கல்லறை மயானத்தில் வைத்து இருவரை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த நபர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.எஸ் நிலைகள் மீதான தாக்குதல்களில் தொடர்ந்தும் கனேடிய விமானங்கள் Posted: 03 Jan 2016 10:22 AM PST
ஆண்டின் முதல் நாளிலும் கனடாவின் இரண்டு CF-18 ரக போர் விமானங்கள் தாக்குதல்கள் ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளிற்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஈராக்கின் ரமாடி நகரின் மீது அந்த நாட்டு பாதிகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பக்கபலமாகவே கனேடியப் போர் விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டிருந்தன. அத்துடன் இந்த புதிய வருடத்தின் இரண்டாம் நாளான நேற்றும் அந்த பிராந்தியத்தில் இரண்டு வெப்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் கனேடிய போர் விமானங்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஐ.எஸ் அமைப்பின் நிலைகள் காணப்பட்ட மோசுல் நகருக்கு கிழக்கே அமைந்துள்ள பார்ட்டல்லா குடியிருப்பு பகுதி, முகாம்கள் அமைந்துள்ள மோசுல் நகருக்கு தென்கிழக்கே உள்ள கூடில்லா பகுதி என்பவற்றின் மீது இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் அமைப்பின் மீதான அனைத்துலக கூட்டு வான் தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து கனடாவின் போர் விமானங்களை இந்த வருடத்தில் மீட்டுக் கொள்ளப் போவதாக கனடாவின் புதிய லிபரல் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் அதற்கான கால எல்லை எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. The post ஐ.எஸ் நிலைகள் மீதான தாக்குதல்களில் தொடர்ந்தும் கனேடிய விமானங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஒன்ராறியோவில் நபர் ஒருவர் கல்லறை மயானம் ஒன்றில் வைத்து இருவரை சுட்டுக்கொன்று விட்டதன் பின்னராக தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் கனேடிய விமானங்கள் ஈடுபட்டுள்ளன.