மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ரெயில்வே பட்ஜெட் தயாரிக்க திருவனந்தபுரத்தில் 3 நாட்கள் மாநாடு
- டெல்லியிலும் தீவிரவாதிகள் ஊடுருவல்?: உச்சகட்ட பாதுகாப்பு
- பதான்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது
- திருப்பதியில் எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு ஜெயந்தி விழா
- வடகிழக்கு மாநிலங்கள் குலுங்கின: மணிப்பூரில் பூகம்பம் - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
- பஞ்சாபில் தீவிரவாதிகள் வேட்டையில் பலி: கேரள ராணுவ அதிகாரி பற்றி உருக்கமான தகவல்
- நாட்டிற்காக வீரமரணம் அடைந்த நிரஞ்சன் குமாரின் உடல் பெங்களூரு வந்தது: பெருந்திரளான பொதுமக்கள் அஞ்சலி
- ஆந்திர மாநிலம் நெல்லூரில் நிலநடுக்கம்
- சஸ்பெண்டு உத்தரவை கண்டித்து நடிகை ரோஜா சுற்றுப்பயணம்
- சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: பக்தர்கள் தேவையற்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை
- தீவிரவாதிகள் பதுங்கல்: பதான்கோட் விமானப்படை தளத்தில் மூன்றாவது நாளாக இன்றும் துப்பாக்கி சண்டை
- கேரளாவில் சொத்து பிரச்சினைக்கு சமரசம் பேச சென்ற காங்கிரஸ் எம்.பி.யை தாக்கிய கணவன்–மனைவி கைது
- பெங்களூரில் காதல் திருமணம் செய்த 14 வயது சிறுமி மர்மச்சாவு: கணவர் கைது
- கான் மார்க்கெட் என்ற பெயரைக் கைவிடுங்கள்: சல்மானை வலியுறுத்தும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு
- பதன்கோட் தாக்குதல் முறியடிக்கப்பட்டது எப்படி? உள்துறை செயலாளர் விளக்கம்
- இந்திய கிரிக்கெட் வாரிய அமைப்பில் மாற்றம்: லோதா கமிட்டி அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்
- கர்நாடக சிறைகளில் இட பற்றாக்குறையால் கைதிகள் கடும் அவதி
- மராட்டியத்தில் கடந்த ஆண்டில் ஊழல், லஞ்ச வழக்குகளில் 1,593 அரசு ஊழியர்கள் கைது
- பெங்களூருவில் அதிகரித்து வரும் ராக்கிங்: தேசிய ராக்கிங் தடுப்பு உதவி மைய அதிகாரி தகவல்
| ரெயில்வே பட்ஜெட் தயாரிக்க திருவனந்தபுரத்தில் 3 நாட்கள் மாநாடு Posted: 03 Jan 2016 10:50 PM PST மத்திய அரசின் பட்ஜெட் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இது போல ரெயில்வே பட்ஜெட்டும் தாக்கலாகும். பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகள் இப்போதே தொடங்கி விடும். அதன்படி ரெயில்வே பட்ஜெட்டுக்கான தயாரிப்பு பணிகளை ரெயில்வே அமைச்சகம் தொடங்கி உள்ளது. |
| டெல்லியிலும் தீவிரவாதிகள் ஊடுருவல்?: உச்சகட்ட பாதுகாப்பு Posted: 03 Jan 2016 10:47 PM PST பஞ்சாபில் தாக்குதல் நடத்தி வரும் அதே நேரத்தில் தலைநகர் டெல்லியிலும் மிகப் பெரிய தாக்குதலை நடத்த ஜெயத்–இ–முகம்மது இயக்கம் திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் ஜெயத்– இ–முகம்மது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருப்பதாக |
| பதான்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது Posted: 03 Jan 2016 10:43 PM PST பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களில் ஹரியானாவின் அம்பாலாவைச் சேர்ந்த கமாண்டோ படை வீரர் குருசேவக்சிங்கும் ஒருவர். ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே உள்ளது ஹர்நாலா கிராமம். இது பஞ்சாப் மாநில எல்லையையொட்டியது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை |
| திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது Posted: 03 Jan 2016 10:30 PM PST திருப்பதியில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ஆனால் கடந்த 2 நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. நேற்று காலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 4 காத்திருப்பு அறைகளில் மட்டுமே காத்திருந்தனர். தர்ம தரிசனத்தில் 3 மணி நேரமும், நடைபாதை |
| திருப்பதியில் எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு ஜெயந்தி விழா Posted: 03 Jan 2016 10:20 PM PST மறைந்த கர்நாடக இசைக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமி திருப்பதி கோவில் ஆஸ்தான வித்வானாக இருந்தார். அவர் பாடிய வெங்கடேஸ்வர சுப்ரபாதம் திருப்பதி கோவிலில் தினமும் காலை ஒளிபரப்பப்படுகிறது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு ஜெயந்தி விழா திருப்பதியில் இன்று தொடங்கி 6–ந்தேதி வரை 3 நாள் கொண்டாடப்படுகிறது. |
| வடகிழக்கு மாநிலங்கள் குலுங்கின: மணிப்பூரில் பூகம்பம் - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு Posted: 03 Jan 2016 10:14 PM PST இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாக குலுங்கின. மணிப்பூர் மாநிலத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து வட மேற்கே 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமென்ங்லங் மாவட்டத்தில் அதிகாலை 4.36 மணிக்கு பூகம்பம் உருவானது. பூமிக்கு அடியில் 35 மைல் ஆழத்தில் மையம் |
| பஞ்சாபில் தீவிரவாதிகள் வேட்டையில் பலி: கேரள ராணுவ அதிகாரி பற்றி உருக்கமான தகவல் Posted: 03 Jan 2016 10:03 PM PST பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் அமைந்துள்ள இந்திய விமானப்படை தளத்தில் நாசவேலை செய்ய ஊடுருவிய தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வேட்டையின் போது இந்திய ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்களில் ஒருவர் நிரஞ்சன்(வயது32), இவர் தேசிய பாதுகாப்பு படையில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வந்தார். |
| நாட்டிற்காக வீரமரணம் அடைந்த நிரஞ்சன் குமாரின் உடல் பெங்களூரு வந்தது: பெருந்திரளான பொதுமக்கள் அஞ்சலி Posted: 03 Jan 2016 09:46 PM PST பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட தீவிரவாதி ஒருவனின் உடலில் கட்டப்பட்டு இருந்த வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் போது, அது வெடித்ததில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் (வயது 32) பலியானார். |
| ஆந்திர மாநிலம் நெல்லூரில் நிலநடுக்கம் Posted: 03 Jan 2016 09:44 PM PST ஆந்திர மாநிலம் நெல்லூரில் நேற்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. குட்டகூறு, வரி கொண்டா, பாடு, ஜடதேவி, நரசிம்மபுரம் ஆகிய கிராமங்களில் நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். சுமார் 3 முதல் 5 விநாடிகளே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. |
| சஸ்பெண்டு உத்தரவை கண்டித்து நடிகை ரோஜா சுற்றுப்பயணம் Posted: 03 Jan 2016 09:44 PM PST ஆந்திர சட்டசபையில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா 1 ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். முதல்–அமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக கூறி சபாநாயகர் சிவபிரசாத்ராவ் இந்த நடவடிக்கையை எடுத்தார். சபாநாயகர் உத்தரவை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் |
| சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: பக்தர்கள் தேவையற்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை Posted: 03 Jan 2016 09:39 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 15–ந் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. அன்று பகல் 1.27 மணிக்கு நெய் அபிஷேகம் முடிந்ததும் பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் ஜோதி வடிவில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. |
| தீவிரவாதிகள் பதுங்கல்: பதான்கோட் விமானப்படை தளத்தில் மூன்றாவது நாளாக இன்றும் துப்பாக்கி சண்டை Posted: 03 Jan 2016 09:25 PM PST பதான்கோட் விமானப்படை தளத்தில் இன்னும் 2 தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் மூன்றாவது நாளாக இன்றும் அங்கு துப்பாக்கி சண்டை தொடங்கி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 1600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் புகுந்து பெரும் நாசவேலைக்கு திட்டமிட்ட தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. தாக்குதலுக்கு |
| கேரளாவில் சொத்து பிரச்சினைக்கு சமரசம் பேச சென்ற காங்கிரஸ் எம்.பி.யை தாக்கிய கணவன்–மனைவி கைது Posted: 03 Jan 2016 09:13 PM PST கேரள மாநிலம் மாவேலிகரை பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ். இவரது உறவினர்கள் சிலர் கனகநகர் பகுதியில் வசித்து வருகிறார்கள். அங்கு ஒரு சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சமரசம் பேசி தீர்வு காணும்படி உறவினர்கள் கொடிக்குன்னில் சுரேஷ் எம்.பி.யிடம் கூறினர். |
| பெங்களூரில் காதல் திருமணம் செய்த 14 வயது சிறுமி மர்மச்சாவு: கணவர் கைது Posted: 03 Jan 2016 08:46 PM PST பெங்களூரில் காதல் திருமணம் செய்த 14 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூரு எலகங்கா பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகள் |
| கான் மார்க்கெட் என்ற பெயரைக் கைவிடுங்கள்: சல்மானை வலியுறுத்தும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு Posted: 03 Jan 2016 08:10 PM PST டெல்லியில் உள்ள கான் மார்க்கெட் வர்த்தக சங்கம் `முத்திரை மீறல்' தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில் 'கான் மார்க்கெட்' என்ற பெயரைக் கைவிடுமாறு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) சல்மான் கானை நேற்று வலியுறுத்தியுள்ளது. |
| பதன்கோட் தாக்குதல் முறியடிக்கப்பட்டது எப்படி? உள்துறை செயலாளர் விளக்கம் Posted: 03 Jan 2016 07:57 PM PST பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது குறித்து உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி நேற்று விவரித்தார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் நேற்று முன்தினம் நுழைந்து தாக்குதல் நடத்தினர். |
| இந்திய கிரிக்கெட் வாரிய அமைப்பில் மாற்றம்: லோதா கமிட்டி அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் Posted: 03 Jan 2016 07:53 PM PST ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அடுத்ததாக இந்திய கிரிக்கெட் நிர்வா |
| கர்நாடக சிறைகளில் இட பற்றாக்குறையால் கைதிகள் கடும் அவதி Posted: 03 Jan 2016 07:44 PM PST கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, கலபுரகி, பெலகாவி, விஜயாப்புரா, பல்லாரி, தார்வார், துமகூரு (பெண்கள்) ஆகிய இடங்களில் மத்திய சிறைச் சாலைகள் உள்ளன. இந்த சிறைகள் உள்பட மாநிலத்தில் 19 மாவட்ட சிறைகள், 70 கிளை சிறைகள், ஒரு திறந்தவெளி சிறை, ஒரு சிறப்பு கிளை |
| மராட்டியத்தில் கடந்த ஆண்டில் ஊழல், லஞ்ச வழக்குகளில் 1,593 அரசு ஊழியர்கள் கைது Posted: 03 Jan 2016 07:31 PM PST மராட்டியத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டில்(2015) மட்டும் மராட்டிய மாநிலத்தில் 1,234 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் லஞ்சம் வாங்கி |
| பெங்களூருவில் அதிகரித்து வரும் ராக்கிங்: தேசிய ராக்கிங் தடுப்பு உதவி மைய அதிகாரி தகவல் Posted: 03 Jan 2016 07:25 PM PST பெங்களூரு இன்று இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் பெயர் பெற்று விட்டது. காரணம் பெங்களூருவில் பெருகி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களும், தொழில் வளர்ச்சியும்தான். இதனால் பெங்களூருவில் கல்வி நிறுவனங்களும் பெருகி விட்டன. அதிலும் உலகத்தரம் வாய்ந்த ஐ.ஐ.டி., ஐ.ஐ.பி.எம். போன்ற கல்வி நிறுவனங்களும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |