Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வாகனத்திலிருந்து கழன்று சென்ற சில்லு மற்றொரு வாகனத்தை மோதியதில் ஒருவர் படுகாயம்

Posted: 27 Jan 2016 07:28 PM PST

u

uKing Township இன் நெடுஞ்சாலை 400 இல் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் ஒன்றின் சில்லு கழன்று சென்று மற்றொரு வாகனத்தை மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

King வீதியின் அருகில் வடக்குத் தட வீதிகளின் நெடுஞ்சாலையில் காலை 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

சரக்குகளை ஏற்றிச் செல்லும் ரக்கர வாகம் ஒன்று நெடுஞ்சாலை 400 இல் தெற்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது அதன் சில்லுகள் கழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழன்று சில்லுகளில் ஒன்று வீதியின் குறுக்கே பாய்ந்து மறு தடத்தில் (வடக்கு நோக்கிய தடத்தில்)இருந்த SUV வாகனம் ஒன்றின் கூரையில் விழுந்தாகவும், அந்த SUV வாகனத்தில் பயணித்த ஒருவர் அதில் படுகாயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.u

படுகாயமடைந்த அந்த நபரை வாகனத்தில் இருந்து மீட்டு அவசர வானூர்தி மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் அந்த SUV வாகனம் மோசமாக சேதமடைந்துள்ளது.

குறித்த ரக் ரக வாகனத்தில் இருந்து கழன்று சென்ற சில்லு நூற்றுக் கணக்கான இறாத்தல் நிறையுள்ள உலோகத்தால் ஆனது என்றும் கூறப்பட்டுள்ளது.

கழன்று சென்ற அந்த வாகனத்தின் சில்லு சுமார் மணியத்தியாளத்திற்கு 100 கிரோமீற்றர் வேகத்தில் சென்றிருக்கலாம் என்றும், எதிரில் வந்த வாகனமும் மணித்தியாளத்திற்கு 100 கிலோ மீற்றல் வேகத்தில் பயணித்திருந்த நிலையில், அந்த சில்லும் வாகனத்துக்குமா இடையிலான மோதுகை மணித்தியாளத்திற்கு 200 கிலோமீற்றர் என்ற அளவில் இருந்திருக்கும் என்று அதிகாரி ஒருவர் விபரித்துள்ளார்.

இதேவேளை சில்லு கழன்ற அந்த ரக் ரக வாகனத்தின் ஓட்டுநருக்கு சில்லு கழன்றமை பற்றி தெரியாத நிலையில், சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் சென்றே நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ரக் ரக வாகனம் சரியாக சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்ததா என்பன உள்ளிட்ட வாகனத்தின் பராமரிப்புத் தகவல்களை விசாரணையாளாகள் ஆராய்ந்து வருகின்றனர்.

The post வாகனத்திலிருந்து கழன்று சென்ற சில்லு மற்றொரு வாகனத்தை மோதியதில் ஒருவர் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

GO தொடருந்தில் கொள்ளையிட முயன்ற சந்தேக நபரை காவல்த்துறையினர் தேடுகின்றனர்

Posted: 27 Jan 2016 08:47 AM PST

GO_Transit_train__-_12032015

GO_Transit_train__-_12032015GO தொடருந்தில் கொள்ளையிட முயன்ற சந்தேக நபர் ஒருவரை ரொரன்ரோ காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

நேற்று இரவு ஸ்காபரோவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் காவல்த்துறையினர் விபரம் வெளியிடுகையில், இரவு 10.40 மணியளவில் GO தொடருந்தில் பயணம் செய்த ஆண் நபர் ஒருவர் அதில் பயணம் செய்த மற்றொரு பெண் பயணியின் பணப் பையை கொள்ளையிட்டுச் செல்ல முயன்றதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்த முயற்சி கைகூடாத நிலையில்,குறித்த அந்த நபர் அவசர தடுப்பை பயன்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்துவி்ட்டு தொடருந்தில் இருந்து தப்பித்து ஓடி விட்டதாக தெரிவித்துள்ளனர்.GO_Transit_train__-_12032015

இந்த கொள்ளைச் சம்பவ முயற்சியின் போது பாதிக்கப்பட்ட அந்த பெண் பயணிக்கு முகத்தில் சிறிய கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தப்பிச் சென்ற குறித்த சந்தேக நபரைக் காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

The post GO தொடருந்தில் கொள்ளையிட முயன்ற சந்தேக நபரை காவல்த்துறையினர் தேடுகின்றனர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈரான் மீதான ஒரு தொகுதி தடைகளை நீக்குகிறது கனடா

Posted: 27 Jan 2016 08:19 AM PST

Foreign_Affairs_Minister_Stephane_Dion-_01272016

Foreign_Affairs_Minister_Stephane_Dion-_01272016ஈரான் மீது விதித்திருந்த தடைகளில் ஒரு தொகுதியை நீக்குவதற்கு கனடா தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான அறிவிப்பை நேற்றைய தினம் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் வெளியிட்டுள்ளார்.

ஈரான் மீதான தடைகள் தொடர்ந்தும் நீடிக்கப்படுமானால், மொன்றியலில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனம் போன்ற கனேடிய நிறுவனங்களே பாதிப்புக்களை எதிர்கொள்ளும் எனவும்,அதனால் ஈரான் மீதான ஒரு தொகுதி தடைகளை கனடா நீக்கவுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அதேவேளை ஈரான் மீது விதிக்கப்பட்ட சில தடைகள் தொடர்ந்து பேணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானுக்கும் ஆறு முக்கிய மேற்குலக வல்லமை நாடுகளுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் மிக்க அணுசக்தி உடன்பாடு இந்த மாத ஆரம்பத்தில் எட்டப்பட்டிருந்தைதையும் கனேடிய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.Foreign_Affairs_Minister_Stephane_Dion-_01272016

அதனைத் தொடர்ந்து ஈரான் அதிபர் ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததுடன், பிரான்சில் இருந்து விமானங்களை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கைகளையும் மேற்கொண்டிருந்தது என்றும் கூறிய அமைச்சர், இந்த நிலையில் கனடாவினால் ஏன் ஈரானுககு விமானங்களை விற்க முடியாது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இதேவேளை ஈரானுக்கு எதிரான முன்னைய அரசாங்கம் பின்பற்றியிருந்த கடுமையான நிலைப்பாட்டினை தற்போதய லிபரல் அரசாங்கமும் பின்பற்ற வேண்டும் என்று பழமைவாதக் கட்சியினர் தொடர்ந்தும் அழுத்தங்களை வெளியிட்டு வருகின்றது.

கனடாவின் முன்னைய பழமைவாதக் கட்சி அரசாங்கம் ஈரானுக்கு எதிராக கடுமையான நிலையப்பாட்டை பிற்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஈரான் மீதான ஒரு தொகுதி தடைகளை நீக்குகிறது கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

புரதச்சத்து குறைபாடா? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!

Posted: 27 Jan 2016 06:37 AM PST

6

6தசைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்து அவசியம், உடலின் எடையில், ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரதம் தேவை.

50 கிலோ எடை கொண்டவர் என்றால், 40 கிராம் தேவை.

தினமும் ஏதாவதொரு வகையில் புரதச்சத்து நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.

முட்டை

முட்டையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது, நன்றாக உடற்பயிற்சி செய்பவர்கள், தினமும் அதிகமாக உடல் உழைப்பு செய்பவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முட்டை சாப்பிடலாம். 100 கிராமில் 13 கிராம் புரதம் இருக்கிறது.2

அசைவ உணவுகள்

சிக்கன் போன்ற அசைவ உணவுகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. சிக்கனை எண்ணெயில் பொறித்து சாப்பிடக்கூடாது. ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்படாத நல்ல நாட்டுக்கோழியை வாரம் 300 - 500 கிராம் அளவுக்கு நீராவியில் வேகவைத்து, மசாலா தடவாமல் சாப்பிடலாம்.

சிக்கன் சாலட் செய்தும் சாப்பிடலாம். 100 கிராம் கோழி இறைச்சியில் 27 கிராம் புரதம் உள்ளது.protein_helath_003

பருப்பு வகைகள்

துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகள் அனைத்திலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. முளைக்கட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிகளவு உள்ளது. எனவே அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தினமும் சிறிதளவு முளைக்கட்டிய பயிர்களை சமைத்து சாப்பிடலாம். பச்சைப் பயிரில் மட்டும் 24 கிராம் அளவுக்குப் புரதம் உள்ளது.5

யோகர்ட், சீஸ்

யோகர்ட் எனப்படும் தயிர், சீஸ் போன்றவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனினும் இதில் கொழுப்பு சத்தும் நிறைந்து காணப்படுவதால், இதனை அளவகாவே உண்ண வேண்டும். பால் பொருட்களில் 10 கிராம் அளவுக்கு புரதம் உள்ளது.6

சோயா பீன்ஸ்

புரதச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு சோயா நல்ல மருந்து. சோயாவை அவ்வப்போது சீரான இடைவெளி விட்டு சமையலில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

சோயா பால், சோயா சீஸ் போன்றவற்றிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் சோயாவில் 28.6 கிராம் புரதம் உள்ளது.7

The post புரதச்சத்து குறைபாடா? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய மருந்து “துளசி”

Posted: 27 Jan 2016 06:29 AM PST

hj

hjஅருமருந்தான துளசியை தினமும் உட்கொண்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து வாழ்நாள் முழுவதும் விடுபடலாம்.

ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம், நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசிச் செடி அதிக அளவில் வளரும் இடங்களில் காற்றில் இருக்கும் புகை கிருமிகள் போன்ற மாசுகள் அழிந்து காற்று மண்டலம் தூய்மை அடையும்.

* துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

* அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.hj

* அதுமட்டுமின்றி டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

* தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும்.

* இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

* துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

* கோடை காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.

* துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

* சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

* துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

* வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

The post சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய மருந்து "துளசி" appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™