Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அரசு மருத்துவமனையில் டாக்டரை சரமாரியாக தாக்கிய பீகார் எம்.எல்.ஏ. மகன்

Posted: 27 Jan 2016 11:30 PM PST

பீகார் மாநிலத்தின் கயா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரை, முதல்வர் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ குந்தி தேவியின் மகன் ரஞ்சித் யாதவ் கடுமையாக தாக்கியுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. லோக்ஆயுக்தா நியமன உத்தரவை திரும்ப பெற்றது சுப்ரீம் கோர்ட்: புதிய நீதிபதியாக சஞ்சய் மிஸ்ரா நியமனம்

Posted: 27 Jan 2016 10:50 PM PST

உத்தரபிரதேச மாநில லோக் ஆயுக்தா தொடர்பான வழக்கை விசாரித்தத உச்ச நீதிமன்றம் 6 மாதத்துக்குள் புதிய லோக்ஆயுக்தா நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இதையடுத்து கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில், முன்னாள் நீதிபதி வீரேந்திர

லஞ்சம் கொடுத்ததாக சரிதாநாயர் புகார்: உம்மன்சாண்டிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியவர்கள் மீது போலீஸ் தடியடி

Posted: 27 Jan 2016 10:41 PM PST

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி கேரள பெண் தொழில் அதிபர் சரிதாநாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோடிக் கணக்கில் பணமோசடி செய்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் சரிதாநாயர், பிஜு ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.

தமிழக மீனவர் பிரச்சனை பற்றி பேச சுஷ்மா சுவராஜ் 5–ந்தேதி இலங்கை செல்கிறார்

Posted: 27 Jan 2016 10:28 PM PST

தமிழக மீனவர்கள் பாக். ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்க செல்லும் போது, எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி அவர்கள் அடிக்கடி சிங்கள கடற்படையினர் பிடித்து சென்று விடுகிறார்கள். சில வார சிறைவாசத்துக்கு பிறகு தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகளை இலங்கை திருப்பி கொடுக்க மறுத்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசை தமிழக

மும்பை ரெயில் நிலையத்தை வண்ணமயமாக்கிய தன்னார்வலர்கள்

Posted: 27 Jan 2016 10:27 PM PST

மும்பையில் உள்ள 2 ரெயில் நிலையங்களை தன்னார்வலர்கள் குழு ஒன்று வண்ணமயமாக மாற்றியுள்ளது. மேட் (Make a Difference) என்ற பெயர் கொண்ட இந்த தன்னார்வலர்கள் குழு மும்பையின் போரிவில்லி மற்றும் கர் ஆகிய ரெயில் நிலையங்களில் புலி

என் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பேன்: நடிகை ரோஜா பேட்டி

Posted: 27 Jan 2016 09:56 PM PST

ரூ.1 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. அனிதாவுக்கு நடிகை ரோஜா பதில் அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– சந்திரபாபு நாயுடுவின் 20 மாத ஆட்சியில் ஊழலை தவிர மாநிலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர் சொன்ன 400 வாக்குறுதிகளில்

நடிகை ரோஜாவிடம் ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு: தலித் பெண் எம்.எல்.ஏ. தொடர்ந்தார்

Posted: 27 Jan 2016 09:52 PM PST

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில் நடிகை ரோஜா மீது ரூ.1 கோடி கேட்டு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பாயகராபேட்டா தொகுதியை சேர்ந்த தலித் பெண் எம்.எல்.ஏ. அனிதா மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார்.

ரெயில் சக்கரத்தில் சிக்கி பலியான மும்பை பெண்: அதிர்ச்சி வீடியோ

Posted: 27 Jan 2016 09:43 PM PST

எச்சரிக்கை: இளகிய மனம் கொண்டவர்களுக்கு இந்த வீடியோ ஏற்றதல்ல கடந்த ஜனவரி 15-ம் தேதி மும்பையில் உள்ள போரிவில்லி ரெயில் நிலையத்திற்கு வந்த 55 வயதுள்ள பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியுள்ளனர். பிற்பகல் 3.50 மணிக்கு நிலையத்திற்கு வந்த ரெயில் 4 மணிக்கு கிளம்பத் தொடங்கியது.

ஒழுங்காக வேலை பார்க்காத அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யுங்கள்: பிரதமர் நரேந்திரமோடி ஆவேசம்

Posted: 27 Jan 2016 09:18 PM PST

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு துறை செயலாளர்கள், மாநில தலைமை செயலாளர்கள் கூட்டம் நடத்தி அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து வருகிறார். இந்த மாதத்துக்கான கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.

சிறைக்கைதிகளுக்கு ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம் கார்டுகள்: மகாராஷ்டிரா அரசு அதிரடி

Posted: 27 Jan 2016 08:15 PM PST

மகாராஷ்டிர மாநிலத்தில் சிறைக்கைதிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாநிலத்திலேயே முதல்முறையாக நாக்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதற்கான ஏ.டி.எம்

ஐதராபாத் மாணவர் ரோகித் மரணத்துக்கு நீதி கேட்டு மத்திய மந்திரி வீட்டுக்கு பேரணியாக சென்ற 60 மாணவர்கள் கைது

Posted: 27 Jan 2016 07:45 PM PST

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதால், இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக நீதிவிசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நீதி கிடைக்க தாமதமாவதாக கூறி டெல்லியிலும் நேற்று மாணவர்களின் போராட்டம் நடந்தது.

ஒடிசாவில் தப்பி ஓடிய மர்ம மனிதர்கள் ஆந்திராவில் கைது: சென்னையில் ஊடுருவும் திட்டம் முறியடிப்பு

Posted: 27 Jan 2016 07:11 PM PST

சிரியாவில் அட்டூழியம் செய்து வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவில் காலூன்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இணைய தளங்கள் மூலம் மத உணர்ச்சியை தூண்டிவிட்டு, படித்த இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளை அவர்கள்

உலக உருக்கு உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடம்

Posted: 27 Jan 2016 06:04 PM PST

கடந்த 2015-ஆம் ஆண்டில் உலக உருக்கு உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சி இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. உருக்கு உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. முந்தைய

மாதந்தோறும் கடைசி புதன்கிழமைகளில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

Posted: 27 Jan 2016 04:37 PM PST

இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய

காஷ்மீரில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

Posted: 27 Jan 2016 03:44 PM PST

காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவான இந்த மிதமான நிலநடுக்கத்தால், வீடுகள், கடைகள்

கோவில் நுழைவு விவகாரம்: பெண்கள் அமைப்பினருடன் மகாராஷ்டிரா முதல்-மந்திரி பட்னாவீஸ் சந்திப்பு

Posted: 27 Jan 2016 02:53 PM PST

மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் புகழ் பெற்ற சனி பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நுழைந்து வழிபட பெண்களுக்கு அனுமதி இல்லை. 500 வருடங்களுக்கு மேலாக இந்த தடை இருப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் மும்பை நிகழ்ச்சி ரத்து

Posted: 27 Jan 2016 12:18 PM PST

இம்மாதம் 29-ம் தேதி மும்பையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மும்பையில் குலாம் அலியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது இது இரண்டாவது முறை.

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: 6 போலீசார் பலி

Posted: 27 Jan 2016 10:01 AM PST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்மஸ்ரீ விருதை விமர்சனம் செய்துவிட்டு தற்போது அதை ஏற்றுக்கொண்ட அனுபம் கெர்ரை வறுத்தெடுக்கும் டுவிட்டர் வாசிகள்

Posted: 27 Jan 2016 08:21 AM PST

பத்மஸ்ரீ விருதை விமர்சனம் செய்துவிட்டு தற்போது ஏற்றுக்கொண்டுள்ள பாலிவுட் நடிகர் அனுபம் கெர்ரை டுவிட்டர் வாசிகள் கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள். கடந்த 2010-ம் ஆண்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டபோது அனுபம் கெர் தனது டுவிட்டர் பக்கத்தில் "நமது நாட்டில் விருதுகள் பரிகாசத்திற்கு உரியவையாக மாறிவிட்டன. விருதுக்கு

ஊழல் குறைவான நாடுகள்: முதல் இடத்தில் டென்மார்க், 76-வது இடத்தில் இந்தியா

Posted: 27 Jan 2016 07:44 AM PST

2015ம் ஆண்டு ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியா 76-வது இடத்தில் உள்ளதாக உலகளாவிய ஊழல் போக்கு குறியீட்டின் தரவரிசைப் பட்டியல் தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக டென்மார்க் முதல் இடத்தில் உள்ளது. 2015ம் ஆண்டு ஊழல் குறைவான நாடுகளில் பட்டியலில் மொத்தம் 168 நாடுகள் உள்ளன. இதில், 9 இடங்கள் முன்னேறி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™