Tamil Star |
| ஒன்ராறியோ முதல்வர் 10 நாட்கள் வர்தகப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார் Posted: 25 Jan 2016 11:04 AM PST
இந்தியாவிற்கான தமது பயணம் குறித்த கருத்து வெளியிட்ட ஒன்ராறியோ முதல்வர், அனைத்து விடயங்களிலும் வளர்ச்சியடைய ஆரம்பித்திருக்கும் இந்தியாவுடனான உறவினை கனடா மேம்படுத்திக் கொள்வதற்கு தகுந்த காலம் இது என்று குறிப்பிட்டுள்ளார். கனடாவுக்கும் இந்தியாவுக்குமான ஆண்டாக இது அமையும் எனவும் அவர் குறிப்பிட்டு்ள்ளார். அத்துடன் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவினை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு புதிய அத்தியஅவசியமாகவும் இது அமையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல தலைமுறைகள் தாண்டிய தொடர்புகள் காணப்பட்டு வரும் நிலையில், அவற்றின் ஒரு பரிணாம வளர்ச்சியாகவே இதனைக் கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ முதல்வரின் இந்த இந்தியப் பயணத்தில், அவருடன் 9 லிபரல் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், 50 வர்த்தகத் தலைவர்கள், 19 post-secondary institutions பிரதிநிதிகள் மற்றும் மூன்று நகர சபைத் தலைவர்களும் பயணம் மேற்கொள்கின்றனர். இதேவேளை பிரதமர் ஜஸ்டின் ரூடோ மற்றும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி ஆகியோரும் விரைவில் இந்தியாவுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கத்தலின் வின் மேலும் தெரிவித்துள்ளார். The post ஒன்ராறியோ முதல்வர் 10 நாட்கள் வர்தகப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ப்ளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் Posted: 25 Jan 2016 12:18 AM PST
பொதுவாக டயட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக் டீ. * ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். * இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய நோய்களைத் தவிர்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு ப்ளாக் டீ உதவுகிறது. * ப்ளாக் டீயிலுள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது. ப்ளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அழிப்பதுடன், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது. * ப்ளாக் டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருட்கள் நோய்கள் உருவாக காரணமான பலவிதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை நம் உடலில் அண்டவிடாமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிரிக்கிறது. * மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதில் ப்ளாக் டீயில் உள்ள குறைந்த அளவிலான காப்ஃபைன் உதவுகிறது. தினமும் ப்ளாக் டீயை தொடர்ந்து பருகுவதன் மூலம், நரம்பு மண்டலங்கள் வலுவாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும். * ப்ளாக் டீயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் எலும்புகளையும், எலும்புத் திசுக்களை வலுவாக்குகின்றன. * ப்ளாக் டீயைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் குறைந்து விடுகிறது, உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. The post ப்ளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஒன்ராறியோவின் முதல்வர் கதலின் வின் பத்து நாட்கள் வர்த்தகப் பயணமாக இந்தியாவிற்கு இந்த வாரம் விஜயம் செய்யவுள்ளார்.
கேமல்லியா சினசிஸ்(Camellia sinensis) என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகிறது.