Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


குடியரசு தினவிழாவில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு: தோடர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலித்த தமிழகம்

Posted: 25 Jan 2016 09:53 PM PST

இந்தியாவின் 67-வது குடியரசு தின விழாவையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றி வைத்துவிட்டு, முப்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர், இந்திய மாநிலங்களின் கலாச்சாரத்தை பின்பற்றும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

பிரம்மாண்டமாய் நடைபெற்ற முப்படை வீரர்களின் அணிவகுப்பு

Posted: 25 Jan 2016 09:20 PM PST

இந்தியாவின் 67-வது குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக இன்று காலை புதுடெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், விழாவின் முக்கிய அம்சமான முப்படை வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியது.

ராணுவ வீரர் மோகன் நாத் கோஸ்வாமிக்கு அசோக் சக்ரா விருது: குடியரசு தின விழாவில் ஜனாதிபதி வழங்கினார்

Posted: 25 Jan 2016 09:12 PM PST

நாட்டின் 67-வது குடியரசு தின விழா இன்று தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி அன்சாரி ஆகியோர் முன்னிலையில், ஜனாதிபதி

எனது மகனுக்கும் சரிதா நாயருக்கும் எந்த தொடர்பும் கிடையாது: உம்மன்சாண்டி விளக்கம்

Posted: 25 Jan 2016 08:57 PM PST

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ''சோலார் பேனல்'' தகடுகளை கம்பெனிகள் மற்றும் வீடுகளுக்கு பொறுத்தி தரும் கம்பெனி நடத்தி வந்தவர் கேரள பெண் தொழில் அதிபர் சரிதா நாயர். இவரும் அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணனும் சூரிய ஒளி தகடு

ரோகித் தற்கொலை: மாணவர்கள் போராட்டத்துக்கு அம்பேத்கர் பேரன் ஆதரவு - 27–ந்தேதி பந்த் நடத்த முடிவு

Posted: 25 Jan 2016 08:54 PM PST

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் ரோகித் வெமுலா விவகாரத்தில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார். ரோகித் தற்கொலைக்கு காரணமான மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதிஇரானி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்.

21 குண்டுகள் முழங்க டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

Posted: 25 Jan 2016 08:49 PM PST

இந்தியாவின் 67-வது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் இன்று கோலாகலமாக தொடங்கியது. காலை முதலே விழா நடைபெறும் இடத்திற்கு பல்வேறு பிரமுகர்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் வருகை தந்தனர். அமர்ஜவான் ஜோதிக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு விழா நடைபெறும் இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

டெல்லி இந்திராகாந்தி ஏர்போர்ட்டில் இருந்து 10.30 மணி முதல் 12.15 மணி வரை விமானங்கள் புறப்பட, தரையிறங்க தடை

Posted: 25 Jan 2016 08:47 PM PST

நாட்டின் 67-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை சீர்குலைக்கும் வகையில் சில பகுதிகளில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் மேலும் 5 ஐ.எஸ். தீவிரவாதி ஆதரவாளர்கள் உள்ளனர்: கைதானவர்கள் தகவல்

Posted: 25 Jan 2016 08:46 PM PST

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டது. மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் போலீசார் இணைந்து கர்நாடகம், ஐதராபாத், உத்தரபிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் 13 ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர் கைது

புதுடெல்லியில் குடியரசு தினவிழா: அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி வீரவணக்கம்

Posted: 25 Jan 2016 08:33 PM PST

இந்தியாவின் 67-வது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் கோலாகலமாக தொடங்கியது. இந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே இந்தியா வருகை தந்துள்ளார். குடியரசு தின கொண்டாட்டத்திற்காக டெல்லி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி சுட்டுக்கொலை

Posted: 25 Jan 2016 08:22 PM PST

குடியரசு தினத்தை யொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டனர். தெற்கு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்திலும், கோகெர்னாக் மாவட்டத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவ பதுங்கி இருந்தனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு

ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Posted: 25 Jan 2016 07:39 PM PST

பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய இந்திராணி முகர்ஜி தனது முன்னாள் கணவர் மூலம் தனக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்பு

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவு பிரசாரம் செய்த 94 இணையதளங்கள் முடக்கம்

Posted: 25 Jan 2016 07:25 PM PST

குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில், மும்பை அருகே உள்ள மும்ராவில் கைது செய்யப்பட்ட வாலிபர் முஸ்தாக் சேக் தான்

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு கொண்டுசெல்லப்பட்ட தங்க ஆபரண பெட்டி பந்தளம் திரும்பியது

Posted: 25 Jan 2016 07:20 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்பசுவாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்கள் அனைத்தும் சபரிமலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பந்தளம் வலியகோயிக்கல் கொட்டாரம் பகுதியில் உள்ள அரண்மனையில் இருந்து மகரவிளக்கு பூஜையின் போது கோவிலுக்கு கொண்டு வரப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜை சிறப்

ரெயில் நிலையங்களில் விளம்பர பலகைகள் அமைக்க திட்டம்: வருமானத்தை பெருக்க ரெயில்வே முடிவு

Posted: 25 Jan 2016 06:55 PM PST

ரெயில்வே துறையின் வருமானத்தை பெருக்கும் வகையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன்படி 2,000 ரெயில் நிலையங்களில் பெரியஅளவில் தகவல் மற்றும் விளம்பர பலகைகள் அமைக்க ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளது. ரெயில் நிலைய நுழைவுவாயில், நடைமேடை, ஓய்வு அறை என அனைத்து பகுதிகளிலும் இந்த பலகைகள்

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் பிப்ரவரி 16-ந்தேதி தொடங்குகிறது

Posted: 25 Jan 2016 06:25 PM PST

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்பத் திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 16-ந்தேதி தொடங்கி 7 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான 16-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை கோதண்டராமசாமி அவதாரத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்று வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அருணாசலபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி: மத்திய மந்திரிசபை முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு

Posted: 25 Jan 2016 05:47 PM PST

அருணாசலபிரதேச மாநிலத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல் மந்திரி நபம் துகியின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் தனி அணியாக செயல்பட தொடங்கினர். பின்னர் அவர்கள் பா.ஜ.க மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் நபம் துகியை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தனர்.

சிறப்பான சேவைக்கான போலீஸ் விருது பெறும் தமிழக போலீஸ் அதிகாரிகள் பட்டியல்

Posted: 25 Jan 2016 05:25 PM PST

குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக சேவை புரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் விருது அறிவிக்கப்படுவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டுக்கான சிறந்த சேவைக்குரிய போலீஸ் விருது பெறுவோர் பட்டியல், ஜனாதிபதி ஒப்புதலுடன் நேற்று வெளியிடப்பட்டது.

தலித் மாணவர் தற்கொலை விவகாரம்: டெல்லியில் மாணவர்கள் பேரணி, உண்ணாவிரதப் போராட்டம்

Posted: 25 Jan 2016 04:38 PM PST

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், நாடு முழுவதும்

நான் இந்தியாவில் தான் பிறந்தேன், இங்கு தான் இறப்பேன், ஒருபோதும் வெளியேறமாட்டேன்: அமீர்கான் உருக்கம்

Posted: 25 Jan 2016 04:32 PM PST

சகிப்பின்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்த கருத்திற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாட்டைவிட்டு வெளியேறுவது குறித்து அவர் மனைவி கூறியதாக அமீர்கான் தெரிவித்த கருத்து மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.

திருபாய் அம்பானிக்கான விருது தளர்வுறாத இந்திய தொழிலதிபர்களின் ஆன்மாவுக்கு செலுத்தும் மரியாதை: முகேஷ் அம்பானி

Posted: 25 Jan 2016 04:05 PM PST

நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதுகள், ஒவ்வொரு துறையிலும், சிறப்பான பங்களிப்பை அளிக்கும் பிரபலங்களுக்கு, வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, நடிகர் ரஜினிகாந்த் உட்பட 10


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™