Tamil Star |
| காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 25 வயதுப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Posted: 24 Jan 2016 04:37 PM PST
நேற்று காலையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அது கடந்த 10 நாட்களின் முன்னர் காணாமல் போன தனீஷா பிரவுன் என்ற பெண்ணுடையது என நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அந்த பெண் கடந்த 12ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் காற்றுவாங்கப் போவதாக கூறி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டது. பின்னர் காவலத்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் தீவிர தேடுதல் நடாத்தியிருந்தனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் போதே நேற்று காலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு்ள்ளது. அதேவேளை குறித்த அந்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் இதுவரையில் அவரது மரணம் சந்தேகத்திற்கிடமானதாக வகையப்படுத்தப்படவில்லை என விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். The post காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 25 வயதுப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாஸ்காச்சுவான் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவன் கைது Posted: 24 Jan 2016 04:32 PM PST
குறித்த சிறுவன் 13 மற்றும் 17 வயதான தனது இரண்டு சகோதரர்களையும் தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் பாடசாலைககு சென்று அங்கும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் மேலும் இருவர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றமை குறித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் செய்திருந்த முறைப்பாடுகளுக்கு மத்தியில் காவல்த்துறையினர் தீவிர தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர். அங்குள்ள பாடசாலையிலிருந்து, பிரதான வீதி வரையான பகுதிகளில் தீவிர தேடுதல்களை மேற்கொண்ட கனேடிய மத்திய காவல்த்துறையினர், அங்குள்ள வீடு ஒன்றின் முன் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதனைச் சுற்றிவளைத்தனர். குறித்த அந்த வீட்டுக்குள் சிறுவன் ஒருவர் துப்பாக்கியுடன் இருப்பதை கண்ட அதிகாரிகள், சில நிமிட நேர முயற்சிக்குப் பின்னர், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். எனினும் இந்த கைது இடம்பெறுவதற்கு முன்னர், வெறும் எட்டு நிமிடங்களில் அந்த சிறுவன் மோசமான இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபரான சிறுவனின் வயது காரணமாக அவரின் பெயர் விபரங்களை வெளியிட மறுத்துள்ள அதிகாரிகள், குறித்த அந்த சிறுவன் மீது நான்கு முதல்தர படுகொலை குற்றச்சாட்டுகளும், ஏழு கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும், அனுமதி இன்றி ஆயுதம் வைத்திருந்தமை உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். The post சாஸ்காச்சுவான் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவன் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மார்க்கம் பகுதியில் நெடுஞ்சாலை 48 மற்றும் எட்வேர்ட் ஜெஃப்றீஸ் அவனியூ பகுதியில் குளிரில் உறைந்துபோயுள்ள சிறிய குளம் ஒன்றினுள் அந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் அதனை மீட்டுள்ளனர்.
சாஸ்காச்சுவான் பாடசாலை துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் காவலத்துறையினர் 17 வயது சிறுவன் ஒருவனைக் கைது செய்துள்ளதுடன், அவர் மீது நரன்கு படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்துள்ளனர்.