மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சோலார் பேனல் மோசடி வழக்கு: விசாரணை கமிஷன் முன்பு நேரில் ஆஜரான உம்மன்சாண்டி
- சிறுமியின் காதில் இருந்து சாரை சாரையாக வெளியேறும் எறும்பு கூட்டம்
- வைரல் வீடியோ: சச்சின் சானியாவுடன் தலைசிறந்த இந்திய விளையாட்டு வீரர்கள் இணைந்து பாடும் தேசிய கீதம்
- மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: விஜயவாடாவில் என்ஜினியரிங் மாணவர் தற்கொலை
- வான்வெளியில் அரிதாக ஒரே நேரத்தில் ஐந்து கிரகங்கள்: பிப்.20 வரை வெறும் கண்களால் பார்க்கலாம்
- உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக் மருத்துவமனையில் அனுமதி
- அருணாசலப் பிரதேசத்தில் கவர்னர் ஆட்சி: ஜனாதிபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர சந்திப்பு
- பயணிக்கு திடீர் உடல்நலக்குறைவு: லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானம் அஸர்பைஜனில் அவசர தரையிறக்கம்
- யாருக்கும் பயப்படாமல் தைரியமாக வாக்களிக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும்: சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு
- தலைகளுக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதியர் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலி
- கொச்சியில் கடந்த ஒரு மாதமாக கல்லூரி மாணவியை மிரட்டி கற்பழித்த 7 பேர் கும்பல்
- குடிப்பழக்கத்தை கைவிடுமாறு வற்புறுத்திய தாயை குத்திக்கொன்ற கல்லூரி மாணவர் தலைமறைவு
- திருப்பதியில் குடியரசு தின பாதுகாப்பு: 12 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
- ஐதராபாத் தலித் மாணவர் ரோகித்தின் தாயாருக்கு நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
- ஜெயிலுக்கு போக ஆசைப்பட்டு மின்சார ரெயிலுக்கு தீ வைத்த வாலிபர்
- இலவச கண் சிகிச்சை முகாமால் 32 பேரின் பார்வை பறிபோனது: ம.பி-யில் பரபரப்பு
- ரோகித் தற்கொலை விவகாரம்: ஐதராபாத்தில் மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது
- ஐதராபாத்தில் கைதான ஐ.எஸ். தீவிரவாதிகள் 2 பேருக்கு 13 நாள் காவல்: தேசிய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு
- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காரில் சென்ற 3 பக்தர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி
- ஓடும் ரெயிலில் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி: ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. கைது
| சோலார் பேனல் மோசடி வழக்கு: விசாரணை கமிஷன் முன்பு நேரில் ஆஜரான உம்மன்சாண்டி Posted: 24 Jan 2016 11:28 PM PST கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி நடந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெண் தொழில் அதிபர் சரிதாநாயர், அவரது முன்னாள் கணவர் பிஜுராதாகிருஷ்ணன், நடிகை ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். |
| சிறுமியின் காதில் இருந்து சாரை சாரையாக வெளியேறும் எறும்பு கூட்டம் Posted: 24 Jan 2016 11:27 PM PST குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகில் தீசா என்ற இடத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஸ்ரேயா டார்ஜி. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்ரேயா காதில் எறும்பு ஊருவது போல் அரிப்பு ஏற்பட்டது. உடனே தந்தை சஞ்சய் தார்ஜி அவளை அருகில் உள்ள காது மூக்கு தொண்டை நிபுணரிடம் அழைத்துச் சென்றார். அவர் சிறுமியின் காதில் பெரிய அளவிலான கட்டெறும்புகள் திரிவதை கண்டு பிடித்தார். அப்போது 10 |
| வைரல் வீடியோ: சச்சின் சானியாவுடன் தலைசிறந்த இந்திய விளையாட்டு வீரர்கள் இணைந்து பாடும் தேசிய கீதம் Posted: 24 Jan 2016 11:17 PM PST நாளை 67-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், விளையாட்டுத் துறையின் சாதனையாளர்களான சச்சின் டெண்டுல்கர், சானியா மிர்சா, சுனில் கவாஸ்கர், தமிழகத்தைச் சேர்ந்த தன்ராஜ் பிள்ளை (இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி கேப்டன்), துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங், கால்பந்து வீரர் பாய்சங் புடியா உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த வீரர்கள் |
| மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: விஜயவாடாவில் என்ஜினியரிங் மாணவர் தற்கொலை Posted: 24 Jan 2016 10:48 PM PST ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை, கள்ளக்குறிச்சி சித்த மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை என்று அடுத்தடுத்து அதிர்ச்சி செய்திகள் நாட்டை உலுக்கி வரும் நிலையில், ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| வான்வெளியில் அரிதாக ஒரே நேரத்தில் ஐந்து கிரகங்கள்: பிப்.20 வரை வெறும் கண்களால் பார்க்கலாம் Posted: 24 Jan 2016 10:33 PM PST சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி ஆகிய ஐந்து கிரகங்களையும் இந்தியாவில் வசிப்பவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 20-ம் தேதிவரை தொலைநோக்கிகளின் உதவி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம் என வான்வெளியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். |
| உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக் மருத்துவமனையில் அனுமதி Posted: 24 Jan 2016 10:32 PM PST உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ராம் நாயக் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 8.30 மணிக்கு சன்ஜாய் காந்தி போஸ்ட் கிராஜூவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் மார்புச்சளி அதிகமானதால் நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக |
| அருணாசலப் பிரதேசத்தில் கவர்னர் ஆட்சி: ஜனாதிபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர சந்திப்பு Posted: 24 Jan 2016 09:58 PM PST அருணாசலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய மந்திரிசபை செய்துள்ள பரிந்துரை தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஜனாதிபதியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலபிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்த சட்டசபை |
| Posted: 24 Jan 2016 09:43 PM PST ஏர் இந்தியா நிறுவத்தின் தடம் எண்: AI 130 கொண்ட போயிங் டிரீம்லைனர் (B787-800) ரகவிமானம் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 7 மணியளவில் மும்பை நகரை நோக்கி புறப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் மும்பைக்கு வரவிருந்த அந்த விமானத்தில் பயணிகள் உள்பட மொத்தம் 229 பேர் இருந்தனர். |
| Posted: 24 Jan 2016 09:16 PM PST தேர்தல்களின்போது அரைக்கால் டிரவுசர் அணிந்து, கைகளில் லத்தியுடன் சாலைகளுக்கு வருபவர்களின் மிரட்டலுக்கு பயப்படாமல் தைரியமாக வாக்களிக்க முஸ்லிம் மக்கள் முன்வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம். அஹமதி கேட்டுக் கொண்டுள்ளார். |
| Posted: 24 Jan 2016 08:30 PM PST ஒடிசா மாநிலத்தில் தலைகளுக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு, போலீசாரால் தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் தம்பதியர் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் பலியானார்கள். இங்குள்ள கலிங்காநகர் பகுதியில் மாவோயிஸ்ட் தலைவனாக இயங்கிவந்த சுஷில் என்பவன்மீது பல்வேறு வன்முறைசார்ந்த வழக்குகள் நிலுவையில் |
| கொச்சியில் கடந்த ஒரு மாதமாக கல்லூரி மாணவியை மிரட்டி கற்பழித்த 7 பேர் கும்பல் Posted: 24 Jan 2016 08:23 PM PST கொச்சி துறைமுக நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதி வாடகைக்கு வீடு எடுத்து குடி வந்தனர். இவர்களை அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் மிரட்டி வந்தனர். இதுபற்றி அந்த பெண்ணின் கணவர், நண்பர்களிடம் கூறி அழுதார். அவர்கள் |
| குடிப்பழக்கத்தை கைவிடுமாறு வற்புறுத்திய தாயை குத்திக்கொன்ற கல்லூரி மாணவர் தலைமறைவு Posted: 24 Jan 2016 08:14 PM PST ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இளம்வயதில் குடிப்பழக்கத்தால் சீரழிந்து விடாமல் இருக்கும்படி வலியுறுத்திய தாயை குடிவெறியில் கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு தப்பியோடிய கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள லகிசாப்பல்லி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பாபு(19), கல்லூரி |
| திருப்பதியில் குடியரசு தின பாதுகாப்பு: 12 பேரை பிடித்து போலீஸ் விசாரணை Posted: 24 Jan 2016 08:12 PM PST குடியரசு தினவிழாவையொட்டி திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 12 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினவிழா |
| Posted: 24 Jan 2016 07:37 PM PST ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வுநடத்தி வந்தபோது பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த அரசியல் தலையீட்டின் எதிரொலியால் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தாயார் தனது மகனின் மரணத்துக்கு நியாயம் கேட்டு ஒருவாரமாக பிற மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். |
| ஜெயிலுக்கு போக ஆசைப்பட்டு மின்சார ரெயிலுக்கு தீ வைத்த வாலிபர் Posted: 24 Jan 2016 07:34 PM PST மும்பை சர்ச்கேட்- மெரின்லைன் இடையே நிறுத்தப்பட்டு இருந்த மின்சார ரெயிலில் நேற்று அதிகாலை ரெயில்வே ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயிலின் பெண்கள் பெட்டியில் தீடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து ரெயிலை சுத்தம் செய்து |
| இலவச கண் சிகிச்சை முகாமால் 32 பேரின் பார்வை பறிபோனது: ம.பி-யில் பரபரப்பு Posted: 24 Jan 2016 07:33 PM PST மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாமில் சிகிச்சை செய்து கொண்டவர்களில் 32 பேருக்கு பார்வை முற்றிலும் பறிபோய் உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்னா மாவட்டத்தில் உள்ள சத்குரு கண் மருத்துவமனையில் தன்னார்வத் |
| ரோகித் தற்கொலை விவகாரம்: ஐதராபாத்தில் மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது Posted: 24 Jan 2016 07:19 PM PST ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவரின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிவாரண உதவியாக அளிக்கவும் |
| Posted: 24 Jan 2016 07:02 PM PST ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஐதராபாத்தைச்சேர்ந்த அபுஅகாஷ், நபீஸ்கான் ஆகியோரை மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை டெல்லி கொண்டு சென்று தேசிய புலனாய்வு பிரிவு கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினார்கள். |
| திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காரில் சென்ற 3 பக்தர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி Posted: 24 Jan 2016 06:38 PM PST கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் சூரி என்கிற சுரேஷ். இவரின் நண்பர் நரேன். இருவரும், உறவினர்கள் 4 பேருடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று அதிகாலை காரில் புறப்பட்டனர். அவர்களது கார் திருப்பதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை மெல்லி என்பவர் ஓட்டினார். |
| ஓடும் ரெயிலில் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி: ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. கைது Posted: 24 Jan 2016 06:25 PM PST பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ஜோகிஹத் தொகுதியின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. சர்பராஸ் ஆலம். இவர் தொடர்ந்து 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவரது தந்தை முகமது தஸ்லிமுதீன் அராரியா தொகுதியின் ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. ஆவார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |