Tamil Star |
- தாரை தப்பட்டை வசூல் விவரம் வெளிவந்தது
- கனேடிய டொலரின் பெறுமதி ஓரளவு மீள ஆரம்பித்துள்ளது
- மிசிசாகாவில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி
- Newtonbrook பகுதியில் பெண் கொலை – 73 வயது ரொரன்ரோ நபர் கைது
| தாரை தப்பட்டை வசூல் விவரம் வெளிவந்தது Posted: 22 Jan 2016 09:42 AM PST
The post தாரை தப்பட்டை வசூல் விவரம் வெளிவந்தது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனேடிய டொலரின் பெறுமதி ஓரளவு மீள ஆரம்பித்துள்ளது Posted: 22 Jan 2016 09:39 AM PST நேற்றைய நாள் மசகு எண்ணெயின் விலை பலமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக கனேடிய டொலரின் பெறுமதி ஏறுமுகத்தினை பதிவு செய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, ரொரன்ரோ பங்குச் சந்தை ஆரம்பமாவதற்கு இரண்டு மணிநேரம் முன்னதாக அமெரிக்க டொலருக்கு நிகரான கனேடிய டொலரின் பெறுமதி 70.60 சதங்களாக பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை சந்தை நேர முடிவின் போது 70.03 சதங்களாக பதிவாகியிருந்த கனேடிய டொலர், அரைச் சதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் புதன்கிழமை பெறுமதியுடன் ஒப்பிடுகையில் அது […] The post கனேடிய டொலரின் பெறுமதி ஓரளவு மீள ஆரம்பித்துள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிசிசாகாவில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி Posted: 22 Jan 2016 09:18 AM PST
நெடுஞ்சாலை 401ற்கு வடமேற்கே, டிக்சி வீதி மற்றும் ஷோவ்சண் ட்ரைவ் பகுதியில் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் சிக்குண்ட ரொரன்ரோவைச் சேர்ந்த 59 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதனை பீல் பிராந்திய காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இணைப்பு கொள்கலனுடனான கனரக வாகம் ஒன்றும், கார் ஒன்றும் மோதுண்டுள்ள இந்த விபத்து இடம்பெற்றமைக்கான காரணங்கள் தொடர்பில் உடனடியாக தகவல் கிடைக்கவில்லை. இந்த விபத்தின் போது காரைச் செலுத்திச் சென்ற நபரே சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகவும், கனரக வாகனத்தின் சாரதிக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post மிசிசாகாவில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Newtonbrook பகுதியில் பெண் கொலை – 73 வயது ரொரன்ரோ நபர் கைது Posted: 22 Jan 2016 08:46 AM PST
யங் வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவனியூ பகுதியில், Otonabee அவனியூவில் அமைந்துள்ள வீடொன்றில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினை சென்றடைந்த போது அங்கே 68 வயதான Annunziata Melaragno எனப்படும் பெண் சுய ஊணர்வற்ற நிலையில் காணப்பட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், நேற்று இரவு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்ட காவல்த்துறையினர், மரணத்திற்கான காணரங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. எனினும் சம்பவம் தொடர்பில் ரொரன்ரோவைச் சேர்ந்த 73 வயதான Dario Melaragno என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது இரண்டாம் தர கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 28ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவருக்கும், கைது செய்யப்பட்டவருக்கும் இடையேயான உறவு முறை குறித்த தகவல்களையும் வெளியிடாத காவல்த்துறையினர், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மை 416-808-7400 என்ற இலக்கத்தில் அல்லது குற்றத் தடுப்பு பிரிவினரை 416-222-TIPS (8477) என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். The post Newtonbrook பகுதியில் பெண் கொலை – 73 வயது ரொரன்ரோ நபர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பாலா இயக்கத்தில் சசிக்குமார், வரலக்ஷ்மி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தாரை தப்பட்டை. ஒரு தரப்பு இப்படத்தை பாராட்டியும்
நேற்று இரவு மிசிசாகா பகுதியில் இரண்டு வாகங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரொரன்ரோவின் Newtonbrook பகுதியில் கடந்த வார இறுதியில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ரொரன்ரோவைச் சேர்ந்த 73 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.