Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரை இறக்கி சோதனை

Posted: 22 Jan 2016 11:08 PM PST

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து மும்பை நோக்கி கோஏர் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர். அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கோஏர் விமான நிறுவன மேலாளருக்கு மர்ம டெலிபோன் ஒன்று வந்தது.

உ.பி.யில் வாலிபர்கள் வெறிச்செயல்: துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமி கற்பழிப்பு

Posted: 22 Jan 2016 10:50 PM PST

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை இரு வாலிபர்கள் துப்பாக்கி முனையில் பலவந்தப்படுத்தி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள முசாபர்நகர் மாவட்டம், குடேஸ்ரா கிராமத்தை சேர்ந்த அந்த

ஐ.எஸ்.தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு

Posted: 22 Jan 2016 10:34 PM PST

இந்தியாவின் 67–வது குடியரசு தின விழா வருகிற 26–ந்தேதி நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், பிரான்சு நாட்டு அதிபர் ஹோலண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

அமெரிக்காவை மிரட்டி இந்தியாவுக்கு 200 கோடி டாலர்களை வாங்கித் தந்தேன்: சுப்பிரமணியசாமி திடுக். தகவல்

Posted: 22 Jan 2016 10:01 PM PST

இந்தியா கடுமையான பொருளாதாரச் சிக்கலில் இருந்தவேளையில் அமெரிக்காவை நிர்பந்தத்துக்குள்ளாக்கி சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை நாட்டுக்கு வாங்கித் தந்ததாக மத்திய முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் பஞ்சாயத்து தீர்ப்பு: கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு சாட்டையடி தண்டனை- கிராமத்தில் போலீஸ் விசாரணை

Posted: 22 Jan 2016 09:58 PM PST

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட் பஞ்சாயத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி அருகில் உள்ள ஊரில் பள்ளிக் கூடத்தில் படித்து வந்தாள். சில நாட்களுக்கு முன்பு மாணவி பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் சிறுமியை வழி மறித்து தூக்கிச் சென்றனர். ஒதுக்குப்புறமான இடத்தில்

பதான்கோட் தாக்குதலில் போலீஸ் சூப்பிரண்டு குற்றமற்றவர்: விசாரணை குழு அறிவிப்பு

Posted: 22 Jan 2016 09:50 PM PST

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். குர்தாஸ்பூர் போலீஸ் சூப்பிரண்டு சல்விந்தர் சிங்கின் சைரன் பொருந்திய காரை கடத்தி அவர்கள் பதான்கோட்டுக்குள் ஊடுருவினார்கள்.

குடியரசு தின விழாவில் பங்கேற்க பிரான்சு அதிபர் ஹோலண்டே நாளை இந்தியா வருகை

Posted: 22 Jan 2016 09:43 PM PST

டெல்லியில் வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பிரான்சு அதிபர் ஹோலண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இதையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரள முன்னாள் சபாநாயகர் ஏ.சி.ஜோஸ் மரணம்

Posted: 22 Jan 2016 09:31 PM PST

கேரள சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் ஏ.சி. ஜோஸ், (வயது 79). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், திருச்சூர் தொகுதியின் முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உறவினர்கள் அவரை கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பெண் போலீசை குத்திக்கொன்ற காதலன் கைது

Posted: 22 Jan 2016 09:19 PM PST

உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் வேலை கிடைத்ததும் காதலியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாத வாலிபர் அந்தப் பெண்ணை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திவ்யதரிசன டோக்கன் மூலம் 108 லட்டுகளை கள்ளத்தனமாக விற்க முயன்றவர் கைது

Posted: 22 Jan 2016 09:14 PM PST

திருமலையில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் மலைப்பாதை வழியாக நடைபயணமாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வர். அவர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

கார்பைடு ஒழிப்பில் அலட்சியம்: ஆந்திரா, தெலுங்கானா அரசுக்கு ஐதராபாத் ஐகோர்ட்டு கண்டனம்

Posted: 22 Jan 2016 08:57 PM PST

மாங்காய், பப்பாளி உள்ளிட்ட காய்களை உடனடியாக பழுக்க வைக்க வியாபாரிகள் 'கார்பைடு' என்ற ரசாயணத்தை பயன் படுத்துவதாக புகார்கள் வந்ததையடுத்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் 'கார்பைடு' பயன்படுத்த ஐதராபாத் ஐகோர்ட்டு தடை விதித்தது.

போராட்டத்தை கைவிட மாணவர்கள் மறுப்பு: ரோகித் குடும்பத்துக்கு ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்க கோரிக்கை

Posted: 22 Jan 2016 08:53 PM PST

ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்ட தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிரிதி இரானி ஆகியோர் அளித்த நெருக்கடியால் பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ் மாணவர்

மதுபான விடுதியில் ஒரே நேரத்தில் 10 வகையான ஒயின் குடித்த ஊழியர் சாவு

Posted: 22 Jan 2016 07:54 PM PST

மணிப்பூரை சேர்ந்தவர் அக்தர் உசேன்(வயது35). இவர் கடந்த வாரம் மும்பை, கார் பகுதியில் உள்ள உயர்ரக மதுபான விடுதி ஒன்றில் பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் அக்தர் உசேன் நேற்று முன்தினம் மாலை மதுபான விடுதியில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். அப்போது

ஐதராபாத் மாணவர் தற்கொலை விவகாரம்: பா.ஜனதாவுக்கு சிவசேனா எச்சரிக்கை

Posted: 22 Jan 2016 07:29 PM PST

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ரோகித் வெமுலா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய மந்திரிகள் ஸ்மிருதி இரானி மற்றும் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் ராஜினாமா செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: மத்திய மந்திரி சதானந்த கவுடா குற்றச்சாட்டு

Posted: 22 Jan 2016 07:07 PM PST

மத்திய சட்டத்துறை மந்திரி சதானந்த கவுடா நேற்று முன்தினம் சாம்ராஜ்நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஏராளமான வன்முறை

ஷாருக்கான், சல்மான்கானுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசுக்கு கோர்ட்டு உத்தரவு

Posted: 22 Jan 2016 07:03 PM PST

டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் கவுரவ் குலாத்தி என்பவர் ஒரு மனுதாக்கல் செய்து இருந்தார். அதில் கூறப்பட்டு இருந்தாவது:- 'பிக் பாஸ் 9' தொலைக்காட்சி 'ரியாலிடி ஷோ' தொடருக்காக அமைக்கப்பட்ட காளி கோவில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கா

ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் கைது: பெங்களூரு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 22 Jan 2016 07:02 PM PST

கர்நாடகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, பெங்களூருவில் 4 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, விதான சவுதா உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக,

வனப்பொருட்கள் விற்பனை தொடர்பாக பாபா ராம்தேவுடன் ஒப்பந்தம்: அரசு முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு

Posted: 22 Jan 2016 06:46 PM PST

அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட மராட்டியத்தில், அரிய வகை மூலிகைகள் அதிகளவில் கிடைக்கின்றன. எனினும், இதனை விற்பனை செய்ய பெரிய அளவிலான அங்காடிகள் ஏதும் இல்லை. எனவே, யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி குரூப் மூலம் இவற்றை விற்பனை செய்ய மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகளை ஏற்றி சென்ற பஸ் விபத்தில் சிக்கி 22 பேர் காயம்

Posted: 22 Jan 2016 06:04 PM PST

பிரதமர் நரேந்திர மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையொட்டி அங்கு சுமார் 8 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு, பிரதமர் மோடி நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தலித் மக்களின் வளர்ச்சியில் அரசு உறுதியாக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

Posted: 22 Jan 2016 05:40 PM PST

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் 2 மத்திய அமைச்சர்கள் மீது மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™