Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Whitby பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 82வயது முதியவர் பலி

Posted: 02 Jan 2016 08:50 PM PST

yu

yu82 வயது முதியவர் ஒருவர் செலுத்திச் சென்ற வாகனம் ஒன்று, மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி விபத்துக்குள்ளானதில், குறித்த அந்த வயோதிபர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trent Street West மற்றும் Byron Street South வீதிச் சந்திப்பு பகுதியில் இன்று பிற்பகல் 2.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக டூர்ஹாம் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்த நபர் செலுத்திச் சென்ற வாகனம், வீதியை விட்டு விலகி அருகே இருந்த வேலி ஒன்றுடன் மோதி பின்னர் அங்கிருந்த மரம் ஒன்றுடன் மோதியதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த அவர் உடனடியாகவே உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் Whitby பகுதியைச் சேர்நத 82 வயதான Hendrick Hoogkamp என காவல்த்துறையினர் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.yu

குறித்த அந்த விபத்து சம்பவித்த வேளையில் வீதி சீராகவே காணப்பட்டதாகவும், குறித்த அந்த வயோதிபருக்கு ஏற்பட்ட மருத்துவக் கோளாறுகள் இந்த விபத்துக்கு காரணமாக அமைந்திருக்க கூடும் எனவும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

The post Whitby பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 82வயது முதியவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோவில் இன்றிலிருந்து தொடரூந்து கட்டணம் அதிகரிப்பு

Posted: 02 Jan 2016 08:45 PM PST

l

lTTC எனப்படும் ரொரன்ரோ போக்குவரத்து ஆணையகத்தின் தொடரூந்து கட்டண அதிகரிப்பு இன்று காலையில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

குறித்த இந்த கட்டண அதிரிப்பு குறித்த அறிவிப்புக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை நடைமுறைக்கு வந்துள்ள அந்த கட்டண அதிகரிப்பின் பிரகாரம், ஒற்றை வழி பயணத்திற்கான கட்டணம் 3.00 டொலர்களில் இருந்து 3.25 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியால் வழிவகைகளான அட்டைகள் மூலம் செலுத்தும் கட்டணமும் $2.80 இலிருந்து $2.90ஆக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மொட்ரோ பாசுக்கான மாதாந்த கட்டணம் எந்தவித அதிகரிப்பும் இன்றி 141.50 டொலர்களாகவே பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.l

இந்த கட்டண அதிகரிப்புடன், சேவைத் தரமும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், அனைத்து தொடரூந்து நிலைய சேவைகளும் ஞாயிற்றுக் கிழமைகளில் 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதற்கு பதிலாக எட்டு மணிக்கே ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதேவேளை ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி உறுதியளித்ததன் பிரகாரம், இன்றிலிருந்து போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் எனவும், பெரும்பாலான பாதைகளில் பத்து நிமிடம் அல்லது அதற்கும் குறைவான நேர இடைவெளியில் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

The post ரொரன்ரோவில் இன்றிலிருந்து தொடரூந்து கட்டணம் அதிகரிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவின் மாட்டிறைச்சியை மீண்டும் இறக்குமதி செய்கிறது தென்கொரியா

Posted: 02 Jan 2016 08:49 AM PST

Canadian_beef_-02012016

Canadian_beef_-02012016கனடாவின் மாட்டிறைச்சியை மீண்டும் இறக்குமதி செய்ய தென்கொரியா தீர்மானித்துள்ளதை அடுத்து, கனடாவில் இருந்து மாட்டிறைச்சியினை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை அது நீக்கியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் கனடாவில் மாடுகளுக்கு கோமாரி நோய் பரவியதாக இனங்காணப்பட்டதனை அடுத்து, கனடாவில் இருந்து மாட்டு இறைச்சி மற்றும் கன்று இறைச்சிகளை இறக்குமதி செய்வதற்கு தென் கொரியா இடைக்காலத் தடை விதித்திருந்தது.

கடந்த பத்து மாதங்களாக இந்த தடை நீடித்து வந்த நிலையில்,கடந்த புதன்கிழமை அந்த தடையினை நீக்குவதாக தென் கொரியா அறிவித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் 26 மில்லியன் டொலர்கள் வருமானத்தை கனடா ஈட்டியிருந்ததுடன், அந்த ஆண்டின் ஆறாவது ஆகப்பெரிய ஏற்றுமதியாக மாட்டிறைச்சி ஏற்றுமதி பதிவாகியிருந்தது.Canadian_beef_-02012016

எனினும் பின்னர் தென் கொரிய விதித்த தடையினைத் தொடர்ந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி துறை பாதிப்பினை எதிர்கொண்டிருந்தாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் தென்கொரியாவுக்கான ஏற்றுமதி ஆரம்பமாவதால் மீண்டும் பழை நிலைக்கு மீள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கனடாவின் மாட்டிறைச்சியை மீண்டும் இறக்குமதி செய்கிறது தென்கொரியா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆண் ஒருவர் வீடொன்றில் உயிரிழந்த சம்பவம் தொடாபில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

Posted: 02 Jan 2016 08:39 AM PST

man_found_dead_at_west-end_house_-_02012016

man_found_dead_at_west-end_house_-_02012016ரொரன்ரோ மேற்கில் வீடு ஒன்றில் 32 வயது ஆண் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

வீடு ஒன்றில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளின் பிரகாரம், அதிகாலை 2 மணியளவில் Scarlett வீதி மற்றும் Hill Garden வீதிக்கு அருகில் Yorkleigh Ave இல் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு காவல்த்துறையினர் சென்றிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசியில் யாரோ வீட்டினுள் நுளைவதாக தெரிவிக்க்பபட்ட போதிலும், காவல்துறையினர் அங்கு சென்ற போது அவ்வாறு யாரும் வீட்டை உடைத்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காவல்த்தறையினர் அந்த வீட்டிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சென்றுள்ளதாகவும் பதிவாகியுள்ளது.

எனினும் நேற்று காலை 11 மணியளவில் 32 வயதுடைய நபர் வீட்டின் உள்ளே உயிரிழந்து கிடக்க காணப்பட்டுள்ளார்.man_found_dead_at_west-end_house_-_02012016

இந்த நிலையிலேயே குறித்த விசாரணைகளில் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

மோசமான காயங்கள், மற்றும் மரணங்கள் ஏற்படும் சம்பவங்களில் உள்ளூர் காவல்த்துறையினர் தொடர்பு பட்டிருந்தால் அவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை SIU எனப்படும் ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினரே மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்குமூன்று புலனாய்வாளர்கள், இரண்டு தடய வல்லுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என சிறப்பு விசாரணைப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.

The post ஆண் ஒருவர் வீடொன்றில் உயிரிழந்த சம்பவம் தொடாபில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™