மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நுரையீரல் அழற்சி நோய்க்கு கடந்த ஒரே ஆண்டில் 9.22 லட்சம் குழந்தைகள் பலி: உலக சுகாதார அமைப்பு கவலை
- ஒரே நேரத்தில் தீவிரவாதமும், அமைதி பேச்சுவார்த்தையும் பயணிப்பது சாத்தியமற்றது: சிவசேனா கருத்து
- டெல்லி - கான்பூர் இடையிலான ரெயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் காசியாபாத்தில் நிறுத்தம்
- குஜராத்தில் சுரங்க மாபியாக்களுக்கு எதிராக போராடிவந்த சமூக ஆர்வலர் சுட்டுக் கொலை
- பதன்கோட் விமானப்படை தளத்தில் இன்று மீண்டும் குண்டு வெடித்ததால் பரபரப்பு
- விமானப்படை அதிகாரி கைதுக்கும் பதன்கோட் தாக்குதலுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை: போலீஸ்
- விபத்தில் பலியானவர் உடலை 20 கி.மீ. தூரம் இழுத்துச் சென்ற கார்
- டிக்கெட் வாங்கியும் தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க 2 ஆயிரம் பேருக்கு அனுமதி மறுப்பு: மத்திய மந்திரி தலைமையில் ஆலோசனை
- காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று பதன்கோட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்
- துபாயில் இருந்து கொச்சிக்கு கப்பலில் கடத்தி வந்த ரூ.10 கோடி சிகரெட் பறிமுதல்
- ரெயில்களில் விரைவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவு விற்பனை
- பதன்கோட் தாக்குதலுக்கு முன் தாயுடன் பேசிய தீவிரவாதி
- இந்திய கல்விமுறையை வெள்ளையர் ஆட்சி பாழ்படுத்தி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் குற்றச்சாட்டு
- பாகிஸ்தானில் இருந்து செல்போனில் பேசி தீவிரவாதிகளுக்கு கார் அமர்த்தி தந்த தலைமை
- பிரதமர் மோடியின் கார் முன்பு பாய்ந்த இளைஞரால் பரபரப்பு
- டெல்லி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
- இமாச்சலின் பியாஸ் ஆற்றில் 24 என்ஜினியரிங் மாணவர்கள் இறந்த சம்பவம்: பெற்றோர்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு
- பதன்கோட் தாக்குதல் சம்பவம்: முப்படை தளபதிகளுடன் ராணுவ மந்திரி அவசர ஆலோசனை
- ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வருவதில் சிக்கல்: மத்திய மந்திரி ஆலோசனை
- கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
| நுரையீரல் அழற்சி நோய்க்கு கடந்த ஒரே ஆண்டில் 9.22 லட்சம் குழந்தைகள் பலி: உலக சுகாதார அமைப்பு கவலை Posted: 02 Jan 2016 11:18 PM PST உலகம் முழுவதும் கடந்த ஒரே ஆண்டில் நுரையீரல் அழற்சி நோய்க்கு 9 லட்சத்து 22 ஆயிரத்து குழந்தைகள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உயிரைக் கொல்லும் தொற்று நோய்களில் ஒன்றாக விளங்கிவரும் நுரையீரல் அழற்சி நோயானது, பிறரது இருமல், தும்மல் ஆகியவற்றால் தெறிக்கும் உமிழ்நீர் துணுக்குகளின் மூலமாக மற்றவர்களுக்கும் பரவி |
| ஒரே நேரத்தில் தீவிரவாதமும், அமைதி பேச்சுவார்த்தையும் பயணிப்பது சாத்தியமற்றது: சிவசேனா கருத்து Posted: 02 Jan 2016 10:43 PM PST பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்தின்மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா, '' தீவிரவாதமும், அமைதி பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் பயணிப்பது சாத்தியமற்றது'' என்று கூறியுள்ளது. |
| Posted: 02 Jan 2016 10:08 PM PST டெல்லி - கான்பூர் இடையே செல்லும் ரெயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சோதனைக்காக காசியாபாத்தில் சதாப்தி ரெயில் நிறுத்தப்பட்டது, இதனால் பிறரெயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. |
| குஜராத்தில் சுரங்க மாபியாக்களுக்கு எதிராக போராடிவந்த சமூக ஆர்வலர் சுட்டுக் கொலை Posted: 02 Jan 2016 10:03 PM PST குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் பீங்கான் பொருட்கள் செய்ய தேவைப்படும் வெளிர்நிற களிமண் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த சுரங்கங்களுக்கான அனுமதியைப் பெற்ற அதிபர்கள் அருகாமையில் இருக்கும் மேய்ச்சல் நிலங்களிலும் பள்ளம் தோண்டி, உரிய அனுமதியின்றி களிமண்ணை வெட்டி எடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து |
| பதன்கோட் விமானப்படை தளத்தில் இன்று மீண்டும் குண்டு வெடித்ததால் பரபரப்பு Posted: 02 Jan 2016 09:55 PM PST பஞ்சாப் மாநிலத்தில் விமானப்படை தளத்துக்குள் புகுந்து பெரும் நாசவேலைக்கு திட்டமிட்ட தீவிரவாதிகளின் முயற்சி நேற்று முறியடிக்கப்பட்டது. தாக்குதலுக்கு வந்த 5 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, |
| Posted: 02 Jan 2016 09:52 PM PST விமானப்படை அதிகாரி கைது மற்றும் பதன்கோட் தாக்குதல் இடையே தொடர்பு இருப்பதாக இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த உரிய |
| விபத்தில் பலியானவர் உடலை 20 கி.மீ. தூரம் இழுத்துச் சென்ற கார் Posted: 02 Jan 2016 09:43 PM PST தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நாற்கட் பள்ளியைச் சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி (40). விவசாயி. இவர் நேற்று வயலுக்கு சென்று மதியம் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். சாமினேனி – ஒய்– ஜங்சன் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. |
| Posted: 02 Jan 2016 09:24 PM PST உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 73 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதியன்று கிறிஸ்துமஸ் தினம் |
| காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று பதன்கோட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் Posted: 02 Jan 2016 09:12 PM PST பஞ்சாப் மாநிலத்தில் விமானப்படை தளத்துக்குள் புகுந்து பெரும் நாசவேலைக்கு திட்டமிட்ட தீவிரவாதிகளின் முயற்சி நேற்று முறியடிக்கப்பட்டது. தாக்குதலுக்கு வந்த 5 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, |
| துபாயில் இருந்து கொச்சிக்கு கப்பலில் கடத்தி வந்த ரூ.10 கோடி சிகரெட் பறிமுதல் Posted: 02 Jan 2016 08:38 PM PST துபாயில் உள்ள ஜபல் துறைமுகத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள வல்லார்பாடம் துறைமுகத்துக்கு கப்பல் புறப்பட்டது. இந்த கப்பலில் ரூ. 10 கோடி மதிப்பிலான வெளி நாட்டு சிகரெட்டுகள் கன்டெய்னர்களில் கடத்தி வரப்படுவதாக கேரள மாநில சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் அவர்கள் |
| ரெயில்களில் விரைவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவு விற்பனை Posted: 02 Jan 2016 08:25 PM PST ரெயிலில் பயணம் செய்பவர்கள், இனி மகளிர் சுய உதவிக் குழுவினரால் செய்யப்பட்ட உணவு வகைகளை ருசிக்கும் வகையில், இந்திய ரெயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகமான ஐ.ஆர்.சி.டி.சி இ-கேட்டரிங் துறையில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கை கோர்க்கிறது. |
| பதன்கோட் தாக்குதலுக்கு முன் தாயுடன் பேசிய தீவிரவாதி Posted: 02 Jan 2016 07:53 PM PST பதன்கோட்டில் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகளில் ஒருவன், தனது தாயுடன் நேற்று பகல் 2 மணிக்கு செல்போனில் 70 வினாடிகள் பேசி உள்ளான். |
| இந்திய கல்விமுறையை வெள்ளையர் ஆட்சி பாழ்படுத்தி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் குற்றச்சாட்டு Posted: 02 Jan 2016 07:44 PM PST சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையர் ஆட்சி இந்திய கல்விமுறையை பாழ்படுத்தி விட்டதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப்பிரதேசம் மாநில தலைநகர் இந்தூரில் நடைபெற்ற |
| பாகிஸ்தானில் இருந்து செல்போனில் பேசி தீவிரவாதிகளுக்கு கார் அமர்த்தி தந்த தலைமை Posted: 02 Jan 2016 07:35 PM PST பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகள், பாகிஸ்தானில் உள்ள தங்களது தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களது தலைமைதான், அங்கிருந்து இங்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, தீவிரவாதிகளுக்கு வாடகைக்கார் அமர்த்தி தந்துள்ளது. |
| பிரதமர் மோடியின் கார் முன்பு பாய்ந்த இளைஞரால் பரபரப்பு Posted: 02 Jan 2016 07:27 PM PST கர்நாடக மாநிலம் மைசூரில் பிரதமர் நரேந்திர மோடி சென்ற காரின் முன் இளைஞர் ஒருவர் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு நாள் பயணமாக நேற்று மைசூருக்கு வருகை தந்த பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, சாமுண்டிமலை அருகே உள்ள |
| டெல்லி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 02 Jan 2016 07:09 PM PST பஞ்சாப் தீவிரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி ரெயில் நிலையத்திற்கு சற்று முன் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 02 Jan 2016 07:01 PM PST ஐதராபாதைச் சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 24 பேர் இமாசலப் பிரதேசத்தில் உள்ள பியாஸ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. |
| பதன்கோட் தாக்குதல் சம்பவம்: முப்படை தளபதிகளுடன் ராணுவ மந்திரி அவசர ஆலோசனை Posted: 02 Jan 2016 06:57 PM PST பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்துக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது பற்றிய தகவல் கிடைத்ததும் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ராணுவ மந்திரி மனோகர் |
| ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வருவதில் சிக்கல்: மத்திய மந்திரி ஆலோசனை Posted: 02 Jan 2016 03:52 PM PST ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்குவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து அட்டார்னி ஜெனரலுடன் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஆலோசனை நடத்தினார். |
| கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் Posted: 02 Jan 2016 12:01 PM PST இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான ஏ.பி.பரதன் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. ஏ.பி.பரதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |