Tamil Star |
- கால்சியம் சத்து குறைபாடா? நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!
- ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்துள்ள பிரதமர் குடும்பத்தினரின் கரிபீயன் பயணம்
- TTC பேருந்து மோதியதில் மூவர் காயம்
- ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் தடைப்பட்டுள்ள மின்விநியோகம்
| கால்சியம் சத்து குறைபாடா? நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்! Posted: 11 Jan 2016 08:20 AM PST
உடலில் கால்சியம் சத்து மிகவும் குறைவாக இருந்தால் மூட்டு வலி ஏற்படுகிறது. பொதுவாக கால்சியம் குறைபாடானது, ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். மாதவிடாய் காரணமாக, பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். பிரசவத்தின் போதும் நிறைய கால்சியம் போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள், கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பால் பாலில் கால்சியம் அதிகம் நிறைந்தது. அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம். தயிர் பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும், பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது. மத்தி மீன் மீன்களில் மத்தி மீன் மிகவும் சத்தானது. அத்தகைய மீன், 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது. சீஸ் மற்றும் அத்திப்பழம் பால் பொருட்களில் ஒன்றான சீஸ், பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. அத்திப்பத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும், 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது. பச்சை இலைக்காய்கறிகள் பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. கடல் சிப்பி பொதுவாக கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம். பாதாம் பாதாமில் விட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70- 80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.
இறால் இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும். பற்கள் பிரச்சனை இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் பற்கள் வலிமையாகும். The post கால்சியம் சத்து குறைபாடா? நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்துள்ள பிரதமர் குடும்பத்தினரின் கரிபீயன் பயணம் Posted: 11 Jan 2016 07:44 AM PST
தனிப்பட்ட விடுமுறை பயணமாக மிகச் சிறிய கரிபீயன் தீவான நெவிஸ்(Nevis)ற்கு பிரதமர் குடும்பம் மேற்கொண்டுள்ள இந்த பயணத்திற்கு முக்கியம் கொடுத்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனேடியப் பிரதமர் குடும்பத்தினரின் கரிபியன் தீவுப் பயணத்திற்கு முக்கியம் கொடுத்துள்ள TMZ எனப்படும் அந்த ஊடகம் பிரபலங்களின் செய்திகளை வெளியிட்டுவரும் ஊடகம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பத்து நாட்களை அந்த தீவில் கழித்ததாகவும், அங்கு சில இராஜதந்திர நடவடிக்கைகளிலும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஈடபடக்கூடும எனவும் எனவும், அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக அந்த தீவின் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருடன் கனேடிய பிரதம்ர் பேச்சுக்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த மூன்றுபேரும் கனேடிய அரசாங்க விமானத்தின் முன்பாக நின்று எடுத்துக்கொண்ட நிழற்படத்தினை அந்த நாட்டு ஊடகமும் பிரசுரித்துள்ளது. இதேவேளை பிரதமரின் இந்த பயணம் தனிப்பட்ட பயணம் என்றும், குடும்பத்துடனான தனிப்பட்ட பயணங்களுக்கான செலவினை பிரதமர் ஈடுசெய்வார் எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக உத்தியோக பயணங்கள் மட்டுமின்றி தனிப்பட்ட பயணங்களுக்கும் பிரதமர் விமானப்படை விமானத்தினையே பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும், அது வழமையான ஒன்று என்றும் அது விளக்கமளித்துள்ளது. எனினும் பிரதமர்ரின் இந்த விடுமுறை பயணம் தொடர்பில் தகவல் எதனையும் பிரதமர் அலுவலகம் முன்னதாக வெளியிட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. The post ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்துள்ள பிரதமர் குடும்பத்தினரின் கரிபீயன் பயணம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| TTC பேருந்து மோதியதில் மூவர் காயம் Posted: 11 Jan 2016 07:33 AM PST
நேற்று இரவு ஏழு மணியளவில் ஸ்காபரோவின் Bendale பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்துக் குறித்து தகவல் வெளியிட்ட ரொரன்ரோ காவல்த்துறையினர், குறித்த விபத்து Lawrence Avenue East மற்றும் Brimley வீதிச் சந்திப்புக்கு அருகே இடம்பெற்றதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அவ்வாறே காயங்களுக்கு உள்ளான மூவரும் உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரொரன்ரோ அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக் குறித்த மேலதிக தகவல்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், காவல்த்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். The post TTC பேருந்து மோதியதில் மூவர் காயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் தடைப்பட்டுள்ள மின்விநியோகம் Posted: 11 Jan 2016 06:47 AM PST
ஒன்ராறியோவின் தென் பிராந்தியத்தில் ஏற்பட்ட பலமான பனிப்பொழிவுடன் கூடிய மழை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், மின் வினியோக வடங்கள் அறுந்து வீழந்துள்ளதை காணமுடிந்துள்ள நிலையில், பாவனையாளர்கள் தமக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் அங்கு வீதிகளும் வழுக்கும் தன்மை கொண்டவையாக காணப்படுவதனால் போக்குவரத்திலும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.அதனால் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு அதிகாரிகளால் எச்சரிக்கை விடுககப்பட்டது. இந்த நிலையில் தெற்கு ஒன்ராறியோவின் சில பாகங்களுக்கு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களமும் பனிப்புயல் எச்சரிக்கையை விடுவித்திருந்தது. நேற்று பிற்பகல் ஏற்பட்ட கடுமையான பனி வீழ்ச்சியினை அடுத்தே அந்த எச்சரிக்கையை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கபடப்டிருந்த பகுதிகளாவன Newmarket, Uxbridge, Dufferin – Innisfil, Grey – Bruce, Barrie, Pickering, Oshawa, Cobourg, Peterborough, Lindsay எனினும் ரொரன்ரோவின் பல்வேறு வீதிகளிலும் தேங்கிக்கிடக்கும் பனியினை சுத்தப்படுத்தி, உப்பு பரவும் செயற்பாடுகள் இன்று அதிகாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது. The post ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் தடைப்பட்டுள்ள மின்விநியோகம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும்.







கனேடியப் பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தமது குடும்பத்தினருடன் கரிபீயன் தீவு ஒன்றுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஸ்காபரோ பகுதியில் மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானபோதே அந்த மூவரும் காயமடைந்ததாகவும், எனினும் அவை சிறிய காயங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரொரன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியத்தின் பல்வேறு இடங்களிலும் மின் வினியோக தடைப்பட்டுள்ளது.