Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கல்லூரி மாணவிகளை காப்பாற்ற கடலில் குதித்து பிணமாக கரை ஒதுங்கிய சிவசேனா பிரமுகர் குடும்பத்தினருக்கு உத்தவ் தாக்கரே ஆறுதல்

Posted: 11 Jan 2016 11:12 PM PST

கல்லூரி மாணவிகளை காப்பாற்ற கடலில் குதித்த சிவசேனா பிரமுகர் பிணமாக கரை ஒதுங்கினார். அவரது குடும்பத்தினரை சந்தித்து உத்தவ் தாக்கரே ஆறுதல் கூறினார். மும்பை கோவண்டி பைங்கன்வாடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தருண்(வயது18). இவர் தன்னுடன் பயிலும் தோழிகள் இருவருடன் கடந்த சனிக்கிழமை பாந்திரா கடற்கரைக்கு சென்றிருந்தார். அங்கு தோழிகளுடன்

பதான்கோட் விமானப்படை தளம் தாக்குதல்: 3 முக்கிய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் கைது

Posted: 11 Jan 2016 10:54 PM PST

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த 2–ந்தேதி 6 பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். சுமார் 80 மணி நேர துப்பாக்கி சண்டைக்குப் பிறகு 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த வெடிப்பொருட்கள் குவியல், குவியலாக கண்டு பிடிக்கப்பட்டன.

முன்னாள் காதலர் மீது ஆசிட் வீசியதாக பெண் கைது

Posted: 11 Jan 2016 10:47 PM PST

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னூரை சேர்ந்தவர் அப்ரீன் (வயது 19) இவரும் ஹரித்துவாரில் பணியாற்றி வந்த அதே ஊரை சேர்ந்த சுராஜ் (வயது 22) என்ற வாலிபரும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுராஜ் தனது வீட்டில் பார்த்த அதே கிராமத்தை சேர்ந்த

சபரிமலைக்கு ஐயப்பனை காண மாளிகைபுரத்து அம்மன் 15–ந்தேதி புறப்பட்டு

Posted: 11 Jan 2016 10:44 PM PST

சபரிமலை அய்யப்பன் பக்தர்களுக்கு வருகிற 15–ந்தேதி ஜோதி வடிவில் தரிசனம் அளிக்கிறார். மகர விளக்கு என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு வருகிற 15–ந்தேதி மாலையில் நடைபெறுகிறது. இதனை காணவும், அய்யப்பனை தரிசிக்கவும் இப்போதே சபரிமலை எங்கும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கி வருகிறார்கள். மகர விளக்கு முடிந்த பின்பு அய்யப்பனை காண மாளிகைபுரத்து அம்மன்

பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: சபரிமலை ஆச்சாரத்தை ஒரு நாளும் மீற மாட்டோம்- அறநிலையத்துறை மந்திரி தகவல்

Posted: 11 Jan 2016 10:42 PM PST

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி இல்லை. இதை அறியாமல் செல்லும் பெண்கள், பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள். இதனை கண்டித்தும், பெண்களுக்கும் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க

தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: குடியரசு தினவிழாவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு

Posted: 11 Jan 2016 10:38 PM PST

டெல்லியில் 26–ந்தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜபாதையில் கொடி ஏற்றி வைக்கிறார். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் கோயிஸ் ஹோலன்டே கலந்து கொள்கிறார்.

சனி சிங்னாப்பூர் கோவிலுக்கு தலைவராக முதன் முறையாக இளம்பெண் தேர்வு

Posted: 11 Jan 2016 10:33 PM PST

சனி பகவானுக்கு மராட்டிய மாநிலம் சனி சிங்னாப்பூரில் புகழ் பெற்ற ஆலயம் உள்ளது. சாய்பாபாவை வழிபடுவதற்காக சீரடி செல்பவர்கள் தவறாமல் இந்த சனிபகவான் ஆலயத்துக்கும் சென்று வருவதுண்டு.

வீட்டை விட்டு ஓடிய வாலிபரை 21 ஆண்டுக்கு பிறகு பெற்றோருடன் இணைத்த பேஸ்புக்

Posted: 11 Jan 2016 10:22 PM PST

இளைஞர்கள் பலர் எப்போதும் செல்போனில் முகம் புதைத்து 'பேஸ்புக்', 'வாட்ஸ்அப்' என தேடி தேடி குடும்ப அங்கத்தினர்களிடம் தனிமைபட்டு போகிறார்கள். இந்த நிலையில் சிறுவயதில் குடும்பத்தில் இருந்து பிரிந்த வாலிபன், 21 ஆண்டுகளுக்கு பிறகு 'பேஸ்புக்' மூலம் பெற்றோருடன் இணைந்த சம்பவம் ஆந்திராவில் நடந்து உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் வேறு அமர்வுக்கு மாற்றம்

Posted: 11 Jan 2016 09:50 PM PST

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக விலங்குநல வாரியம் உள்ளிட்ட தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. "காட்சிப்படுத்தப்படும் விலங்குகள்" பட்டியலில் உள்ள காளையை

மாமியாரை சரமாரியாக தாக்கிய மருமகள்: ரகசிய கேமராவில் சிக்கிய அவலக்காட்சி - வீடியோ இணைப்பு

Posted: 11 Jan 2016 09:37 PM PST

உத்தரபிரதேசம் மாநிலம், பிஜ்னூர் பகுதியில், தனது மாமியாரை ஒரு பெண் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களின் மூலம் வைரலாக பரவி வருகின்றன. அதில், மாமியாரை தாக்குவது, எலக்ட்ரிக் சாதனம் உள்ளிட்டவை கொண்டு துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவாகி இருக்கிறது. இந்த காட்சிகள் கடந்த

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்: பாகிஸ்தானுக்கு சென்று வாலிபரை திருமணம் செய்த இந்திய பெண்

Posted: 11 Jan 2016 09:08 PM PST

இந்தியாவைச் சேர்ந்த மெகருன்னிசா (வயது22) என்ற இளம்பெண் 2 மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு சுவாத் மாவட்டத்தில் கலாம் பள்ளத்தாக்கில் உள்ள இஜஸ்கான் (24) என்பவர் வீட்டில் தங்கினார். சமீபத்தில் இஜஸ்கானும், மெகருன்னிசாவும் முறைப்படி திருமணம் செய்து

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: இளைஞர்கள் மத்தியில் மோடி இன்று உரை

Posted: 11 Jan 2016 08:55 PM PST

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் வலைதளத்தில் மோடி தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார். விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கரில் நடைபெறும் தேசிய இளைஞர் தின விழாவில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று உரையாற்ற உள்ளார்.

புத்தூரில் போலீஸ் சீருடை அணிந்து செம்மரக்கட்டை கடத்தல்: 2 பேர் கைது

Posted: 11 Jan 2016 08:29 PM PST

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் செம்மரக் கட்டை கடத்தலை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். புத்தூர் அருகே உள்ள கொல்லப்பள்ளி சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் அனுமந்தப்பா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மராட்டியத்தை பின்பற்றி அனைத்து மாநிலங்களும் பசுக்களை கொல்ல தடை விதிக்க வேண்டும்: மத்திய மந்திரி பேச்சு

Posted: 11 Jan 2016 08:21 PM PST

மராட்டிய மாநிலத்தை பின்பற்றி பசுக்களை கொல்ல அனைத்து மாநிலங்களும் தடை விதிக்க வேண்டும் என மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆஹிர் வலியுறுத்தியுள்ளார். மராட்டிய மாநிலம், அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற

பள்ளிக்கூடங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் - மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

Posted: 11 Jan 2016 06:51 PM PST

மும்பை ஐகோர்ட்டில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் நரேஷ் பாட்டீல், அம்ஜத் செய்யது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜி மீண்டும் சிறையில் அடைப்பு

Posted: 11 Jan 2016 06:44 PM PST

ஷீனா போரா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அவரது தாயார் இந்திராணி (வயது 43), சஞ்சீவ் கன்னா மற்றும் டிரைவர் ஷாம்ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, இந்திராணியின் தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜி (59) கடந்த நவம்பர் மாதம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு

56 ரெயில்பெட்டிகள் கடந்து சென்ற போதும் தண்டவாளத்திலிருந்து உயிரோடு எழுந்த பெண்

Posted: 11 Jan 2016 03:59 PM PST

எதிர்பாராத விதமாக ரெயில்வே தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட ஒருவர் உயிர் தப்புவதே அரிதான சம்பவமாக இருக்கும் நிலையில், அரிதினும் அரிதான சம்பவம் ஒன்று மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

இந்திரா காந்தி குறித்த சர்ச்சைக்கருத்து: பீகார் மாநில அரசு இணையதளத்தில் இருந்து நீக்கம்

Posted: 11 Jan 2016 03:06 PM PST

பீகார் அரசு இணையதளத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி குறித்து இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தை விட, இந்திரா காந்தியின் ஆட்சிக் காலம் மோசமானது என்று பொருள்படும் வகையிலான கருத்துகள் பீகார் அரசு இணையதளத்தில் இடம்பெற்றிருந்தன.

பதான்கோட் தாக்குதல் விசாரணையில் இன்டர்போல் உதவியை நாடும் இந்தியா

Posted: 11 Jan 2016 01:24 PM PST

பதான்கோட் விமானப்படை தளத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஏ.கே.47 ரக துப்பாக்கி, செல்போன், பைனாகுலர் ஆகியவை சிக்கின. பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்துக்குள்

கால்நடைகளை பலியிடும் விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Posted: 11 Jan 2016 12:44 PM PST

சுற்றுச்சூழல் ஆர்வலரும், வக்கீலுமான அஸ்வினிகுமார் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:- ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™