Tamil Star |
- உடல் பருமன் பெண்களுக்கு ஆபத்தா?
- சுற்றுலாக்கால வீடு ஒன்றில் வெடிப்புச் சம்பவம் – மூவர் படுகாயம்
- வன்கூவருக்கு திசைதிருப்ப்ப்பட்டு தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து பயணி ஒருவர் கைது
- சிரிய அகதிகள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்
| உடல் பருமன் பெண்களுக்கு ஆபத்தா? Posted: 10 Jan 2016 06:11 AM PST
இது ஆபத்து தான் என்றாலும், சிலருக்கு நீர் அதிகமாக இருப்பதால் உடல் வீங்கிய நிலையில் இருக்கும். அதற்கு நீரினை குறைக்கும் காய்கறிகளை எடுத்துக்கொண்டு குறைத்துவிடாலாம். ஆனால், அளவுக்கதிமான எண்ணெய் உணவுகளால் சேரும் கரையாத கொழுப்புகளால் இதயநோய்கள் ஏற்படுகின்றன. இந்த உடல்பருமனால் இருபாலருக்கும் ஆபத்துதான் என்றாலும், பெண்கள் கருவுறுதலுக்கு இந்த உடல்பருமன் ஒருவகையில் ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடல் எடை கூடிக் கொண்டே சென்றால், குழந்தை பெறும் பாக்கியம் குறைத்து கொண்டே வருவதை நினைவில் கொள்ளுங்கள். உடல் பருமன், பெண்களின் சினைமுட்டை உற்பத்தியில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால், சினைப் பையில் கட்டிகள் வரும் ஆபத்து அதிகம். இத்தகைய பிரச்னைகளால், 5 சதவீத பெண்கள் குழந்தைப்பேறு அடைய முடியாமல், மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனுக்கு எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துவதால், குழந்தை பாக்கியம் அடைவதில் சிக்கல் நேர்கிறது. இவர்களில் சிலருக்கு, கருவுறுதல் பல காலம் கழித்து நடக்கலாம் அல்லது ஆரோக்கியமான குழந்தைக்கான வாய்ப்பு குறையலாம். அது மட்டுமல்லாமல், உடல் பருமன் உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால், 'ப்ரீகிளாம்ப்சியா (Pre-eclampsia) என்ற பாதிப்பு ஏற்பட்டு, குழந்தைப்பேறு கனவாகவே இருக்கும். 5% கர்ப்பிணி பெண்கள் இந்த ப்ரீகிளாம்ப்சியாவால் பாதிக்கப்படுகின்றன. இதனால் அப்பெண்களுக்கு மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தைக்கும் தீங்கு விளைகிறது. இதற்கு என்ன செய்யலாம்? குழந்தை வேண்டி காத்திருப்பவர்கள், சீரான உணவுப் பழக்கத்தை கடைபிடித்து, உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இதனால், தாமதமின்றி குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், ஆரோக்கியமான குழந்தையும் பிறக்கும். ஆண்களின் உடல் பருமனும் (விந்து உற்பத்தி குறைபாடு) பெண்களின் கருவுறுதலை பாதிக்கும் என்பதால், ஆண்களும் உடல் எடையை பராமரிப்பது அவசியம். The post உடல் பருமன் பெண்களுக்கு ஆபத்தா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுற்றுலாக்கால வீடு ஒன்றில் வெடிப்புச் சம்பவம் – மூவர் படுகாயம் Posted: 10 Jan 2016 06:07 AM PST
வெள்ளிக்கிழமை இரவு பத்து மணியளிவல் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், அதில் மூவர் படுகாயமடைந்ததுடன், குறித்த அந்த கட்டிடமும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீட்டில் வெடிப்புச் சம்பவத்திற்கு முன்னதாக வழமைக்கு மாறான மணம் காணப்பட்டதாகவும், அதனால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் உள்ளூர் வாயு பராமரிப்பு நிறுவனம் ஒன்றினை சேவைக்கு அழைத்திருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த அந்த வாயு நிறுவன பணியாளர்கள் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் ஒருவர் பணியாளர் என்றும், மற்றவர்கள் வீட்டின் உரிமையாளர் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மோசமாக காணப்பட்டதனை அடுத்து, அவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக ரொரன்ரோ மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். The post சுற்றுலாக்கால வீடு ஒன்றில் வெடிப்புச் சம்பவம் – மூவர் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வன்கூவருக்கு திசைதிருப்ப்ப்பட்டு தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து பயணி ஒருவர் கைது Posted: 10 Jan 2016 05:49 AM PST
நேற்று சனிக்கிழமை அலஸ்காவில் இருந்து கொலராடோவின் தலைநகர் டென்வருக்கு பயணித்துக் கொண்டிருந்த 1104 இலக்க யுனைட்டட் எயர்லைன்ஸ் விமானம் திசை திருப்பப்பட்டிருந்தது. 131 பயணிகள் மற்றும் ஆறு விமான சிப்பந்திகளுடன் தரையிறங்கிய அந்த விமானம், பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தியதை அடுத்து சில மணி நேரத் தாமதத்தின் பின்னர் மீண்டும் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தரையிறக்கப்பட்டதை அடுத்து அந்த விமானத்தில் இருந்த ஆண் பயணி ஒருவர் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பயணி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கனேடிய மத்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த அந்த விமானம் பாதுகாப்பு காரணங்களுக்காக வன்கூவரில் தரையிறக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை நான்கு மணியளவில் தாம் அங்கு அழைக்கப்பட்டதாக மத்திய காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். The post வன்கூவருக்கு திசைதிருப்ப்ப்பட்டு தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து பயணி ஒருவர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிரிய அகதிகள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம் Posted: 10 Jan 2016 05:17 AM PST
குடியேறிகள் மீதான இந்த செயல் கடியர்களுக்குரிய நடத்தை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வன்கூவாரில் சிரியாவைச் சேர்ந்த அகதிகளை வரவேற்கும் நிகழ்வை ஒட்டி கனேடிய முஸ்லிம் நிலையத்தில் கூடியிருந்தவர்கள் மீது மிதிவண்டியில் வந்த நபர் ஒருவர் மிளகை தெளித்துவிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் சிறுவர்கள் உட்பட 15 பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினரும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையிலேயே கனேடியப் பிரதமர் சனிக்கிழமை டுவிட்டர் பக்கத்தில் தமது கண்டனத்தை பதிவுசெய்துள்ளார். குறித்த செயல் கனேடியர்களின் பண்பாடு இல்லை எனவும், சிரிய அகதிகளை வரவேற்பதற்கு கனேடியர்கள் பெரும் பிராயத்தனம் எடுத்துள்ள நிலையில், அவர்களின் வரவேற்க்கும் பண்பினை இவ்வாறான சம்பவங்கள் பிரதிபலிக்கவில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். The post சிரிய அகதிகள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

உடல் பருமன் ஆபத்தா என்ற கருத்து பலர் மத்தியில் நிலவி வருகிறது.
மத்திய ஒன்ராறியோவின் Kawartha Lakes பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாக்கால வீடு ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வன்கூவருக்கு திசைதிருப்பப்பட்டு தரையிறக்கப்பட்ட யுனைட்டட் எயர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இருந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் சிரிய அகதிகள் மீது மிளகு தெளித்து தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.