மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 10-ம் வகுப்பு தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தீவிரவாதி அப்சல் குரு மகன் அசத்தல்
- டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்து நெரித்துக்கொலை
- இந்திரா காந்தி குறித்து பீகார் மாநில அரசு இணையதளத்தில் சர்ச்சை கருத்து
- ராம நவமியையொட்டி நாடு முழுவதும் ஒன்றேகால் லட்சம் கிராமங்களில் ராமர் வழிபாடு: விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு
- ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன போக்குவரத்து முறைக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு
- சென்னை வெள்ள மீட்பு நடவடிக்கையில் ராணுவம் முக்கிய பங்களிப்பு: மனோகர் பாரிக்கர்
- முக கிரீம் டியூப்பை விழுங்கி உயிருக்கு போராடிய நல்லபாம்பு: டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினர்
- பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் 45 குண்டுகளை குவித்து வைத்திருந்த தீவிரவாதிகள்
- காஷ்மீரில் ஆட்சி நீடிக்க பா.ஜ.க.வுக்கு மெகபூபா 3 நிபந்தனை
- ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் மனு: நாளை விசாரணை
- மக்கள் குறையை கேட்க ஆந்திராவில் வீடுதோறும் வீடியோ கான்பரன்சிங் வசதி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
- சபரிமலை அய்யப்பன் கோவிலில் சகஸ்ரகலச பூஜை செய்ய 2020–ம் ஆண்டு வரை முன்பதிவு
- பாலக்காடு அருகே விபத்து: 2 வாலிபர்கள் பலி
- மால்டாவில் வன்முறை பகுதியில் நுழைய முயன்ற பா.ஜ.க., எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் கைது
- 14 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்க ஒப்புதல் அளிக்க வேண்டும்: அருண் ஜெட்லிக்கு சட்ட மந்திரி கடிதம்
- பதான்கோட் தாக்குதல் எதிரொலி: இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து
- நடிகர் சஞ்சய்தத் ஜெயிலில் 10 கதைகள் எழுதினார்
- பெங்களூருவில் நகை வியாபாரியிடம் ரூ.1¼ கோடி பணம் கொள்ளை
- வக்கீல்கள் தங்கள் மதிப்பை உயர்த்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர் கருத்து
- உதவி கலெக்டர் பணியை விட்டு ஆசிரியர் பணிக்கு சென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி
| 10-ம் வகுப்பு தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தீவிரவாதி அப்சல் குரு மகன் அசத்தல் Posted: 10 Jan 2016 10:51 PM PST தீவிரவாதி அப்சல் குருவின் மகன் காலிப் குரு 10-ம் வகுப்பு தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளான். பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது அப்சல் குருவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். அப்சல் |
| டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்து நெரித்துக்கொலை Posted: 10 Jan 2016 10:50 PM PST மத்திய டெல்லியில் பழைய ராஜேந்திர நகரை சேர்ந்தவர் சஞ்சய் (50). இவர் டெல்லி அரசின் உணவு மற்றும் சிவில் சப்ளை துறையில் குமாஸ்தா ஆக பணிபுரிந்தார். பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக இவர் 'சஸ்பெண்டு' (தற்காலிக நீக்கம்) செய்யப்பட்டார். |
| இந்திரா காந்தி குறித்து பீகார் மாநில அரசு இணையதளத்தில் சர்ச்சை கருத்து Posted: 10 Jan 2016 10:47 PM PST பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று முக்கிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. நிதிஷ்குமார் பீகார் மாநில முதல்-மந்திரியாக உள்ளார். இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து பீகார் மாநில |
| Posted: 10 Jan 2016 10:21 PM PST ராம நவமியையொட்டி வரும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்குள் நாடு முழுவதும் ஒன்றேகால் லட்சம் கிராமங்களில் ராமர் கோயில்கள் கட்டப்படும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் |
| ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன போக்குவரத்து முறைக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு Posted: 10 Jan 2016 10:19 PM PST ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசின் ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன போக்குவரத்து முறைக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட் மறுத்துள்ளது. டெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை |
| சென்னை வெள்ள மீட்பு நடவடிக்கையில் ராணுவம் முக்கிய பங்களிப்பு: மனோகர் பாரிக்கர் Posted: 10 Jan 2016 10:19 PM PST 66 ராணுவ தினம் தலைநகர் புதுடெல்லியில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் நாட்டுக்காக சண்டையிட்டு உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். |
| Posted: 10 Jan 2016 10:18 PM PST ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் நகரில் வாடகை குடியிருப்பு உள்ளது. இங்கு புகுந்த ஒரு நல்ல பாம்பு முக கிரீம் டியூப்பை விழுங்கி விட்டது. வயிற்றுக்குள் சென்ற அந்த டியூப்பால் பாம்பால் ஊர்ந்து செல்ல முடியவில்லை. உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. |
| பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் 45 குண்டுகளை குவித்து வைத்திருந்த தீவிரவாதிகள் Posted: 10 Jan 2016 10:04 PM PST பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் கடந்த 2–ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். சுமார் 80 மணி நேரம் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகே அந்த 6 திவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்த முடிந்தது. பதான்கோட் விமானப் படை தளம் சுற்றி வேலி அமைத்து பலத்த பாதுகாப்பு |
| காஷ்மீரில் ஆட்சி நீடிக்க பா.ஜ.க.வுக்கு மெகபூபா 3 நிபந்தனை Posted: 10 Jan 2016 10:01 PM PST காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைத்தன. மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த முப்தி முகமது சயீத் முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். |
| ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் மனு: நாளை விசாரணை Posted: 10 Jan 2016 09:45 PM PST ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை சட்டவிரோதமானது என்று தனது மனுவில் விலங்குகள் நல வாரியம் குறிப்பிட்டுள்ளது. விலங்குகள் நலவாரியம், பீட்டா விலங்குகள் அமைப்பு |
| மக்கள் குறையை கேட்க ஆந்திராவில் வீடுதோறும் வீடியோ கான்பரன்சிங் வசதி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு Posted: 10 Jan 2016 09:03 PM PST ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை ஸ்மார்ட் நகரமாக மாற்ற முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு முடிவு செய்து உள்ளார். இது தொடர்பாக ஆய்வு செய்ய கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக்கழகம் ஒரு ஒப்பந்தம் செய்து உள்ளது. |
| சபரிமலை அய்யப்பன் கோவிலில் சகஸ்ரகலச பூஜை செய்ய 2020–ம் ஆண்டு வரை முன்பதிவு Posted: 10 Jan 2016 08:47 PM PST சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் தற்போது பிரசித்திபெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. வருகிற 15–ந்தேதி பகல் மகரசங்கரம பூஜையும் அன்று மாலை 6.30 மணிக்கு மகரவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜையில் பங்கேற்பதற்காக சபரிமலையில் பக்தர்கள் கு |
| பாலக்காடு அருகே விபத்து: 2 வாலிபர்கள் பலி Posted: 10 Jan 2016 08:28 PM PST கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நாகசேரியை சேர்ந்தவர் பிரஜீஸ் (வயது 35). இவரது நண்பர் ரமேஷ் (27). கூலி தொழிலாளிகளான இவர்கள் நேற்று மாலை பட்டாம்பியில் இருந்து கூட்டநடு என்ற இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். |
| மால்டாவில் வன்முறை பகுதியில் நுழைய முயன்ற பா.ஜ.க., எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் கைது Posted: 10 Jan 2016 08:23 PM PST மேற்குவங்க மாநிலம் மால்டாவில் நபிகள் குறித்து பா.ஜ.க., பிரமுகர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பா.ஜ.க., பிரமுகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாம் சமுதாயத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. |
| Posted: 10 Jan 2016 07:13 PM PST இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவு எந்திரமானது ஒரு ஓட்டுப்பதிவு எந்திரத்தையும், ஒரு கட்டுப்பாட்டு அலகையும் கொண்டதாகும். |
| பதான்கோட் தாக்குதல் எதிரொலி: இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து Posted: 10 Jan 2016 07:13 PM PST இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் இடையே வரும் 15-ம் தேதி நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று பாகிஸ்தான் சென்று நவாஸ் ஷெரிப்பை சந்தித்து பேசியதன் விளைவாக, ஜனவரி மாதம் 15-ம் |
| நடிகர் சஞ்சய்தத் ஜெயிலில் 10 கதைகள் எழுதினார் Posted: 10 Jan 2016 06:55 PM PST நட்சத்திர தம்பதி சுனில்தத்-நர்கீஸ் மகனாக பிறந்து இந்தி திரையுலகை கலக்கிய சஞ்சய்தத்தின் சொந்த வாழ்க்கை துயரம் நிறைந்தது. முன்னணி கதாநாயகனாக இருந்த போது 1993-ல் மும்பை வெடிகுண்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வந்து சில மாதங்கள் குடும்பத்தினருடன் இருந்தார். 2007-ல் மீண்டும் இந்த வழக்கில் 6 வருடங்கள் சிறை தண்டனை பெற்று ஜெயிலுக்கு போனார். சுப்ரீம் கோர்ட்டு தண்டனை |
| பெங்களூருவில் நகை வியாபாரியிடம் ரூ.1¼ கோடி பணம் கொள்ளை Posted: 10 Jan 2016 06:29 PM PST கேரளாவை சேர்ந்தவர் லத்தீப். தங்க நகை வியாபாரி. இவர் தங்க நகை வாங்குவதற்காக பெங்களூருவுக்கு வந்தார். கலாசிபாளையா பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அவர் தான் வைத்திருந்த பணத்தில் ரூ.85 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் கலாசிபாளையா மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். |
| வக்கீல்கள் தங்கள் மதிப்பை உயர்த்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர் கருத்து Posted: 10 Jan 2016 06:19 PM PST டெல்லியில் நடந்த இந்திய வக்கீல்கள் சங்க கருத்தரங்கத்தில் பங்கேற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர் பேசும்போது கூறியதாவது:- வக்கீல் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டில் சுமார் 20 லட்சம் வக்கீல்கள் இருக்கிறார்கள் |
| உதவி கலெக்டர் பணியை விட்டு ஆசிரியர் பணிக்கு சென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி Posted: 10 Jan 2016 04:40 PM PST ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ரோமன் சைனி(வயது 24). டெல்லி எய்ம்ஸ் நிறுவனத்தில் மருத்துவ படிப்பை முடித்த இவர், தனது 22-வது வயதில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உதவி கலெக்டராகவும் நியமிக்கப்பட்டார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |