Tamil News | Online Tamil News |
- 1 வாரம் தான் உள்ளது: ஜல்லிக்கட்டு மாடுகள் கதி?
- ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறுவதில் இழுபறி...நீடிப்பு சோனியாவை வெங்கையா சந்தித்தும் பலன் இல்லை
- மீண்டும் பயங்கரவாதிகள்? பஞ்சாப் போலீசார் உஷார்!
- ஜெ.,க்கு எதிரான வழக்கு: நீதிபதி திடீர் மாற்றம்
- திடுக்கிடும் ஊழல் பட்டியல் வெளியிட்டார் இளங்கோவன்
- தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள்... திணறல்: பொங்கல் பரிசு வாங்க குவியும் மக்கள் கூட்டம்
- தமிழகத்தில் ரயில்வே மாநாடு அதிக திட்டங்களுக்கு வாய்ப்பு
- நிவாரண தொகையில் 'கைவைத்த' வங்கிகள்
- வெளிநாடுகளில் இருந்து நிதி கட்சிகள் பெறுவதற்கு 'செக்'
- கடற்படையில் 'ஐ.என்.எஸ்., கட்மட்' நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் சேர்ப்பு
| 1 வாரம் தான் உள்ளது: ஜல்லிக்கட்டு மாடுகள் கதி? Posted: 07 Jan 2016 07:01 AM PST 'இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போட்டி நடக்காவிட்டால், அதற்காக வளர்க்கப்படும் காளைகள், இறைச்சிக்காக விற்கப்படும் அபாயம் உள்ளது' என, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறியுள்ளனர். 'கலித்தொகை, மலைபடுகடாம்' போன்ற சங்ககால நுால்களில் பாடப்பட்ட, ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டுக்கு, விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 2014ல், உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதனால், கடந்த ஆண்டு, போட்டி நடக்கவில்லை. 'இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்' என, மத்தியில் ஆளும், பா.ஜ.,வினர் உறுதி அளித்ததால், உற்சாகம் அடைந்த ... |
| ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறுவதில் இழுபறி...நீடிப்பு சோனியாவை வெங்கையா சந்தித்தும் பலன் இல்லை Posted: 07 Jan 2016 07:49 AM PST புதுடில்லி:'சரக்கு மற்றும் சேவை வரி மசோதா' என, அழைக்கப்படும், ஜி.எஸ்.டி., மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று ஆதரவு கோரினார். ஆனால், வெங்கையாவின் கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்ததை அடுத்து, ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறுவதில் இழுபறி நீடிக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய, ஜி.எஸ்.டி., மசோதா, நீண்ட நாட்களாக பார்லிமென்டில் நிறைவேற்றப்படாமல், நிலுவையில் உள்ளது. ராஜ்யசபாவில், ஆளுங்கட்சியான பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதாவை நிறைவேற்ற ... |
| மீண்டும் பயங்கரவாதிகள்? பஞ்சாப் போலீசார் உஷார்! Posted: 07 Jan 2016 07:51 AM PST குருதாஸ்பூர்: பஞ்சாபில், ராணுவ உடையணிந்த இருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதாக கிராம மக்கள் கூறியதை அடுத்து, மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்; ராணுவ வீரர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழப்பு: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்துக்குள், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், சமீபத்தில் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு படை வீரர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர்; பயங்கரவாதிகள் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டாலும், ... |
| ஜெ.,க்கு எதிரான வழக்கு: நீதிபதி திடீர் மாற்றம் Posted: 07 Jan 2016 09:18 AM PST புதுடில்லி: முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கு எதிரான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை நீதிபதி, திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கை, கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதற்கு, ஜெயலலிதா உட்பட நான்கு பேர் சார்பிலும் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், ... |
| திடுக்கிடும் ஊழல் பட்டியல் வெளியிட்டார் இளங்கோவன் Posted: 07 Jan 2016 09:47 AM PST சென்னை:தமிழக அரசின், 25 துறைகளில் நிலவும் ஊழல்கள் பட்டியலுடன், 40 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை, சென்னையில், நேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வெளியிட்டார். புத்தகத்தை வெளியிட்டு, அவர் அளித்த பேட்டி:'தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கவர்னரிடம் ஏற்கனவே மனு அளித்தோம். ஏழு மாதங்கள் ஆகியும், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த ஊழல் விவரங்களை பட்டியலாக தயாரித்து, 40 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளியிட்டுள்ளோம். இதில், 25 துறைகளில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.இதைத் தவிர, ... |
| தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள்... திணறல்: பொங்கல் பரிசு வாங்க குவியும் மக்கள் கூட்டம் Posted: 07 Jan 2016 09:53 AM PST தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை, பொங்கல் பரிசு, வெள்ள நிவாரண பொருட்கள் என எல்லாமே, ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படுவதால், அவற்றை பெறுவதற்காக மக்கள் குவிந்து வருகின்றனர். ஒரே நேரத்தில், இப்பணிகளை செய்ய முடியாமலும், கூட்டத்தை சமாளிக்க முடியாமலும், கடை ஊழியர்கள் திணறுகின்றனர். பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலுாரில் உள்ள ரேஷன் கடைகளில், வெள்ள நிவாரணமாக இலவச அரிசி மற்றும் வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இதற்கிடையில், 1.91 கோடி ரேஷன் கார்டுகளுக்கு ... |
| தமிழகத்தில் ரயில்வே மாநாடு அதிக திட்டங்களுக்கு வாய்ப்பு Posted: 07 Jan 2016 10:12 AM PST ரயில்வே பட்ஜெட் குறித்து அலசும் வகையில், கால அட்டவணை மாநாடு, சென்னையில் மூன்று நாட்கள் நடக்கிறது. பார்லிமென்டில் ரயில்வே பட்ஜெட், பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அது தொடர்பாக, மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை, ரயில்வே வாரியம் கேட்க உள்ளது.தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை, சென்னை, திருச்சி, மதுரை,சேலம் ஆகிய நான்கு கோட்டங் களுக்கு உட்பட்ட எம்.பி.,க்கள் சந்திப்பு முடிந்துள் ளது; ரயில்வே பட்ஜெட் குறித்து அவர்களின் கருத்து கேட்டறியப்பட்டுள்ளது.புதிய ரயில்கள் அறிவிப்பு, ரயில் சேவையை நீட்டித்தல், வாராந்திர ... |
| நிவாரண தொகையில் 'கைவைத்த' வங்கிகள் Posted: 07 Jan 2016 10:46 AM PST வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, தமிழக அரசு வழங்கிய நிவாரண தொகையை முழுமையாக கொடுக்காமல், வங்கிகள் தங்கள் பராமரிப்பு செலவு தொகையை எடுத்துக் கொண்டன. வங்கி கணக்கு வைத்திருப்போரில் பெரும்பாலானோர், ஏ.டி.எம்., கார்டு வைத்துள்ளனர். அவர்களிடம் ஆண்டு கணக்கு பராமரிப்பு செலவாக, 115 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதன்படி, வங்கி கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகை மற்றும் தொடர் பண பரிவர்த்தனை செய்வோரிடம், ஆண்டு பராமரிப்பு செலவு தொகையை பிடித்தம் செய்வதில் சிக்கல் இருப்பதில்லை. ஆனால், கணக்கில் போதிய இருப்புத் தொகை இல்லாமல் கணக்கை ... |
| வெளிநாடுகளில் இருந்து நிதி கட்சிகள் பெறுவதற்கு 'செக்' Posted: 07 Jan 2016 10:59 AM PST புதுடில்லி:அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து, நிதி பெறுவதை தடுக்கும் வகையில், தேர்தல் கமிஷன் அளித்துள்ள பரிந்துரையை, நடைமுறைக்கு கொண்டு வர, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அரசு சார்பற்ற அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு தற்போது எந்த தடையும் இல்லை. இந்த அமைப்புகள், அந்த நிதியை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கவும் தடையில்லை.அரசியல் கட்சிகளுக்கு, இவ்வாறு வெளிநாட்டு நிதி கிடைப்பதை தடுக்கும் வகையில், 'அரசுசார்பற்ற அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறவும், அவற்றை அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கவும் ... |
| கடற்படையில் 'ஐ.என்.எஸ்., கட்மட்' நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் சேர்ப்பு Posted: 07 Jan 2016 11:43 AM PST
விசாகப்பட்டினம் : உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்., கட்மட்' என்ற அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் இந்திய கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில், கடற்படை தளபதி ஆர்.கே.தோவன், நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலின் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார்; அப்போது, அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது, நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல், 'ஐ.என்.எஸ்., கட்மட்!' நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டுபிடித்து, தாக்கி அழிக்க வல்லது. கோல்கட்டாவைச் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 08,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |