Tamil News | Online Tamil News |
- புல்லட் ரயில் சேவை: தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
- நிழல் அமைச்சராக லாலு: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
- சும்மா கிடக்கும் சுற்றுலா பஸ்கள்
- குமரி, கோவைக்கு அதிவேக ரயில் சாத்தியமே!
- உள்ளாட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் எரியாத விளக்குகள்: மின் வாரியம் கவலை
- இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சு ரத்து? பதன்கோட் விமானப்படை தளத்தில் 3வது நாளாக சண்டை
- கடிதம் எழுதினால் போதுமா: கருணாநிதி கேள்விக்கணை
- அடுத்த முதல்வராகும் வாய்ப்பு கருணாநிதிக்கா ஸ்டாலினுக்கா?
- 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் பெறுவோர் எண்ணிக்கை 30 லட்சம் : இன்று முதல் ஆளுக்கு ரூ.5,000 பணம் வங்கி கணக்கில் சேர்ப்பு
- காவிரியில் 34 டி.எம்.சி., நீர் கிடைக்கவில்லை!
| புல்லட் ரயில் சேவை: தனியாரிடம் ஒப்படைக்க முடிவு Posted: 04 Jan 2016 07:11 AM PST புதுடில்லி :மும்பை - ஆமதாபாத் இடையேயான, நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதையை, ஐந்தாண்டுகளுக்கு பின், தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன், மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை - குஜராத்தின் தொழில் நகரமான ஆமதாபாத் இடையே, நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்தப் பாதையில், புல்லட் ரயில் சேவை துவங்கிய, முதல் ஐந்தாண்டுகளுக்கு, அது, ரயில்வேயின் பராமரிப்பில் இருக்கும். அதன்பின், புல்லட் ரயில் சேவைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். |
| நிழல் அமைச்சராக லாலு: எதிர்க்கட்சிகள் விமர்சனம் Posted: 04 Jan 2016 07:14 AM PST பாட்னா: பீஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு, திடீரென விஜயம் செய்த லாலு பிரசாத் யாதவ், அங்கிருந்த நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு உள்ளது. இந்த அரசில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் சுகாதார துறை அமைச்சராக உள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம், பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, லாலு பிரசாத் யாதவ், திடீரென விஜயம் செய்ததால், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் ... |
| சும்மா கிடக்கும் சுற்றுலா பஸ்கள் Posted: 04 Jan 2016 07:24 AM PST சுற்றுலா கழகத்திற்கு சொந்தமான 4 பஸ்கள் பழுதான காரணத்தால், பராமரிப்பின்றி ஒரங்கட்டப்பட்டுள்ளதால், தனியார் பஸ்கள் வாடகைக்கு எடுத்து இயக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகமான, டி.டி.டி.சி., சார்பில், 15க்கும் மேற்பட்ட சுற்றுலா திட்டங்கள் நடத்தப்படுகின்றன; அதற்காக, 40 சொகுசு பஸ்கள் பயன்பாட்டில் இருந்தன. சுற்றுலாபஸ்கள் முறையான பராமரிப்பின்றி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டன. தற்போது, 22 பஸ்கள் தான் உள்ளன; அதிலும், நான்கு பஸ்கள் பழுதாகி, பல ஆண்டுகளாக பணிமனையில் உள்ளன. குறிப்பிட்ட ஆண்டுகள் ஓடிய பின் தான், பஸ்சைஏலம் விட முடியும். இந்த ... |
| குமரி, கோவைக்கு அதிவேக ரயில் சாத்தியமே! Posted: 04 Jan 2016 07:25 AM PST 'தற்போதுள்ள தண்டவாளத்திலேயே, சென்னை - கன்னியாகுமரி, சென்னை - கோவை இடையே, மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் செல்லும், அதிவேக ரயில்களை இயக்க முடியும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர். சென்னை - கன்னியாகுமரி இடையே, 702 கி.மீ., துார ரயில் பாதையில், சென்னை - செங்கல்பட்டு - விழுப்புரம் வரை, இரட்டை ரயில் பாதை உள்ளது; விழுப்புரம் - மதுரை இரட்டை ரயில் பாதை பணி நடக்கிறது. சென்னை - கோவையை பொறுத்தவரை, 497 கி.மீ., துாரத்திற்கு, ஏற்கனவே இரட்டை பாதை உள்ளது. தற்போது உள்ள தண்டவாளத்தில் அதிகபட்சம், 100 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே தண்டவாளத்தில், சில மாற்றங்களை ... |
| உள்ளாட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் எரியாத விளக்குகள்: மின் வாரியம் கவலை Posted: 04 Jan 2016 07:27 AM PST தமிழகத்தில், தெரு விளக்கு பராமரிப்பு, உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ளது. சென்னை, காஞ்சி, கோவை உட்பட பல நகரங்களில், இரவில் தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை என்றும், அதனால், குற்ற சம்பவங்கள் அதிகரிக்கின்றன என்றும், புகார்கள் வந்துள்ளன. தற்போது, தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி இருப்பதால், தெரு விளக்குகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், உள்ளாட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், இரவில், தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன; பகலில் எரிகின்றன. இதற்கு, மின் வாரியம் தான் காரணம் என, புகார் வருகிறது.இதனால் கவலை அடைந்துள்ள மின் வாரியம், தெரு விளக்கு ... |
| இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சு ரத்து? பதன்கோட் விமானப்படை தளத்தில் 3வது நாளாக சண்டை Posted: 04 Jan 2016 08:22 AM PST புதுடில்லி:'பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சு ரத்தாகும்' என்ற, தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த அமைதி பேச்சு, எல்லை பகுதியில் நிகழ்ந்த அசம்பாவித சம்பவங்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாத வரை, பாகிஸ்தானுடன், காஷ்மீர் உட்பட, எந்த பிரச்னை குறித்தும் பேச்சு நடத்தப்படாது' என, மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது. இந்நிலையில், கடந்த நவம்பரில் திடீர் ... |
| கடிதம் எழுதினால் போதுமா: கருணாநிதி கேள்விக்கணை Posted: 04 Jan 2016 08:59 AM PST சென்னை,:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: 'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குவது சரியாக இருக்காது' என, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்ஹி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர் தலைமையிலான குழுவினர், டில்லி சென்று ஏமாற்றத்தோடு, மதுரை திரும்பியுள்ளனர். 'ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றி, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது' என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆனால், தமிழக அரசு, மத்திய அரசுக்கு, ஒரே ஒரு கடிதம் எழுதிவிட்டு, தன் பணி முடிந்து விட்டதாக கருதி, வழக்கம் போல துாங்கிக் ... |
| அடுத்த முதல்வராகும் வாய்ப்பு கருணாநிதிக்கா ஸ்டாலினுக்கா? Posted: 04 Jan 2016 09:22 AM PST சென்னை: அடுத்த முதல்வராகும் வாய்ப்பு, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கா அல்லது அவர் மகனும், கட்சியின் பொருளாளருமான ஸ்டாலினுக்கா என்பதை, தனியார் கருத்துக் கணிப்பு நிறுவனம் கணித்து, பரபரப்பான முடிவுகளை வெளியிட்டுள்ளது. சட்டசபை தேர்தல் தொடர்பாக, பண்பாடு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பைச் சேர்ந்த, வேலுார் மாவட்ட வழக்கறிஞர் திருநாவுக்கரசு மற்றும் குழுவினர் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள, 234 தொகுதிகளிலும், 5,176 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து, அந்த அமைப்பினர் கூறியதாவது:அ.தி.மு.க., ... |
| Posted: 04 Jan 2016 11:18 AM PST சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் ஆகிய நான்கு மாவட்டங்களில், வெள்ள நிவாரணம் பெறுவோர் எண்ணிக்கை, 30 லட்சத்தை தாண்டி உள்ளது. இதில் முதல் கட்டமாக, 14 லட்சம் பேருக்கு, ஆளுக்கு, 5,000 ரூபாய் பணம், இன்று முதல், அவர்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்; மீதமுள்ள, 16.42 லட்சம் பேருக்கு, 11ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.'மழை வெள்ளத்தால் இறந்தவர் குடும்பங்களுக்கு, நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம்; குடிசை இழப்புக்கு, 5,000 ரூபாய், சிறப்பு நிவாரணம், 5,000 ரூபாய் என, மொத்தம், 10 ஆயிரம் ரூபாய்; நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்பு ... |
| காவிரியில் 34 டி.எம்.சி., நீர் கிடைக்கவில்லை! Posted: 04 Jan 2016 12:36 PM PST கர்நாடக அரசு, காவிரியில், ஜூன் முதல், டிசம்பர் வரை, 145 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே, தமிழகத்திற்கு வழங்கியுள்ளது; 34 டி.எம்.சி., நீர் வழங்கவில்லை.தமிழகத்திற்கு, காவிரியில் இருந்து ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஜூன் முதல், அடுத்தாண்டு மே வரை, மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை, காவிரி நடுவர் மன்றம் வரையறை செய்துள்ளது. அதன்படி, 2015 ஜூன் முதல், டிசம்பர் வரை, 179 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்திற்கு, கர்நாடகா வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்த காலக்கட்டத்தில், 145 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஜூன் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 05,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |